மன்மதன் 48
அத்தியாயம் : 48
முன்பே இவனது புத்தியை பத்தி தெரிந்தவளுக்கு அச்சம், மடம் ,நாணம் எல்லாமே போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்ய கொண்டை போட்டு கொண்டு குளித்தவளின் ஒரு கற்றை முடியில் இருந்து நீர் ஒழுகி அவளது முதுகை இதமாக வருடி கொண்டே ஓடி செல்ல அதை கண்டவனின் மனம் அந்த சிறு துளி நீராக மாறி விட மாட்டேனா என துடித்தது...
அவளை கண்ட நொடி வார்த்தைகள் தட்டுப்பட கோபங்கள் தூரே செல்ல மெல்ல அவள் அருகே நெருங்கியவன் அவளது தோளை மெதுவாக வருடி கொண்டே பிடிக்க மிக மிருதுவாக இருந்தது..
அவளோ கூசி சிலிர்த்தவள் அவனை விட்டு விலக முற்பட அவனோ விடாமல் ஒரு கையை அவளது இடையில் கொடுத்து அழுத்தி தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டவன் மீண்டும் அவளை அவளது கழுத்து வளைவில் புதைந்தான்..
ஆனால் அவனுக்கு ஏதோ பஞ்சு போன்ற மென்மையை கொடுத்தாலும் அவனது நாவும் பஞ்சை தான் ருசித்து இருந்தது..
எப்படி என கண் விழித்து அவன் பார்க்கும் போது, "அது நிஜ பஞ்சு தான் சீ தூ "..என துப்பியவன் அப்போது தான் சுற்றும் முற்றும் கண்களை கசக்கி கொண்டு பார்க்க அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது அவளுக்காக அவளது நினைப்பிலே உறங்கிய போது கனவில் தான் அவள் வந்ததும் அவள் என்று நினைத்து தலையணையை சுவைத்தும் என்று நினைவுக்கு வர தன் தலையில் தானே கொட்டியவன் மீண்டும் தன்னவள் நினைவு வாட்ட அவளை அவன் கண்கள் தேடவும் அவள் இன்னமும் பாத்ரூமிலே இருப்பது தெரிய வந்தது..
"என்ன செய்யறா இவ்வளவு நேரம்" என்று பார்க்கும் போது அவன் அந்த அறைக்கு வந்தே அரை மணி நேரத்துக்கு மேல் ஆகி இருக்க இன்னும் தண்ணீர் கீழே விழும் சத்தம் கேட்கவும் ஏதோ விபரீதம் என அவனது உள்மனம் உரைக்க வேகமாக குளியல் அறை கதவை தட்டினான்..
அவளிடம் இருந்து எந்த சத்தமும் வரவில்லை கூடவே தண்ணீர் விழும் சத்தம் வேறு கேட்டுக் கொண்டே இருக்க மீண்டும் அவன் பலமாக தட்டி, " நிலா "என்க
"ம்ம் "..என்ற முனகல் சத்தம் மட்டுமே வெளிவந்தது..
"நிலா எவ்வளவு நேரமா நிப்ப கதவை உள்ளே என்ன செய்யற"..
"நான் வரேன் நீங்க போங்க".. என்று நிலா முனக
அவளது குரல் ஈன சுரத்தில் வருவதை கேட்டவன், " என்ன டி ஆச்சு "..என்று கேட்க
"நீங்க போங்க "..என்ற முனகல் மட்டுமே
"நீ கதவை தொற"... என்க
அதற்கும் பதில் இல்லாமல் போகவே மனு சற்றும் தாமதம் செய்யாமல் கதவை இடித்து திறந்தான்..
ஒரு முறை முடியாமல் போகவே மீண்டும் ஒரு தடவை இடிக்க அங்கே, " அவளோ உள்ளே வராதீங்க "..என்ற குரல் அவள் வாயில் இருந்து வரும் போது அவன் கதவை உடைத்து இருந்தான்..
அங்கே அவன் கண்ட காட்சி அவன் மூளையை மழுங்கடித்து இருந்தது..
ஆம் அங்கே நிலா சற்று முன் அவன் கண்ட கனவு போல சிறு தூவலையில் நின்று கொண்டு இருந்தாள்..ஆனால் சற்று வித்தியாசமாக அவனது மோக உணர்வுகளை மீட்டும் விதத்தில் எழில் ஓவியமாக காட்சி தந்தாள் நிலா..அவள் அணிந்து இருந்து தூவாலை முழுவதும் நனைந்து அவளது பளிங்கு உடல் அவனது கண்களுக்கு விருந்தாகி கொண்டு இருந்தது..
ஆம் அங்கே ஷவரில் பைப் உடைந்து தண்ணீர் அருவியாக கொட்டி கொண்டு இருந்தது...
"எப்படி உடைந்தது நீ ஏன் நிற்கிறாய் என்னை அழைக்க வேண்டியது தானே" என்ற கேள்விகள் எல்லாம் அவனுக்கு உரைத்தாலும் அவன் கண்களோ அதை கேட்க விடாமல் சற்று முன் நடந்த கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கினான் மனு..
அதில் வேறு நிலாவோ அந்த பைப்பை நிறுத்தும் வழி அறியாது அதை தனது சிறு கையை கொண்டு கொட்டும் நீரை வர விடாமல் அடக்க முயற்சி செய்து முடியாமல் தோற்று கொண்டு இருந்தாள்..
அதிலும் அவளின் கோலம் தான் அவனை மதி மயக்கி இருந்தது பிரம்மன் படைத்த அழகில் இவள் ஒரு மாஸ்டர் பீஸ் என்றே அவனுக்கு தோன்றியது..
அந்த சிறு தூவலையால் அவளின் அழகை அடக்கி விட முடியுமா பருவ வயதின் தாக்கம் அவளின் எழில் அழகை பறை சாற்ற மனு மதி மயங்கினான் என்றே கூற வேண்டும்..சித்தம் கலங்கி நிலா பித்தன் ஆகி இருந்தான்..
அதிலும் இவனை கண்டதும் ஒரு நொடி அதிர்ந்த நிலா தன்னை இந்த நிலையில் கணவனே என்றாலும் கண்டு விட்டானே என்று அதிர்ச்சி அடைந்து திரும்பி நின்று மார்பில் கையை கட்டி தூவலை இறுக்கமாக பிடித்து கொண்டு , "நீங்க போங்க".. என்க
எங்கே அதெல்லாம் மனுவிற்கு கேக்கிறது..மனு தான் எப்போதோ அவள் அழகில் பித்தாகி அவள் அழகை கண்காளாலே விழுங்கி கொண்டு இருந்தானே..
அவளின் கார் கூந்தல் அவளின் முதுகை அவனுக்கு காட்டாமல் மறைத்து இருந்தது..அதில் அவனுக்கு சிறிய சுணக்கம் மனதில் ஏற்பட்டாலும் அவளின் வெண் பளிங்கு காலே அவனுக்கு மயக்கம் கொடுக்க மீண்டும் ஒரு அடி எடுத்து வைத்து முன்னேறுவோமா என்று மூளை அவனுக்கு அறிவுரை செய்தது..
அவன் தன் நிலையை தொலைத்து இருக்க மெல்ல ஒவ்வொரு அடியாக அவளை நோக்கி எடுத்து வைத்தான்..ஏனெனில் அவன் சற்று முன் கண்ட கனவிலே தன்னை தொலைத்தவனுக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பை அவன் அவ்வளவு எளிதாக விட்டு விட மாட்டானே..
இவனுக்கே இப்படி என்றால் வெண்ணிலாவின் நிலையை சொல்லி மாளாது..
ஆம் அவன் முன்னே இப்படி காட்சி பொருளாக நிற்கிறோமே என்று நெனைத்தவளுக்கு கை கால்கள் உதற கூட முடியாமல் இவ்வளவு நேரம் நீரில் நின்றதுக்கு அவள் உடல் மரத்து போய் இருந்தது.. அதும் அவனது ஊசி குத்தும் பார்வை வேறு அவளது அடி வயிற்றில் அமிலத்தை உருவாக்க அதில் வேறு அவன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கவும் அவள் பீதியில், " பைப்பை ஆப் பண்ணுங்க".. என்று கூற
அவன் மூளையில் அதுவும் ஏறவில்லை குளிர் நீரில் நின்றதன் பலன் அவள் கை கால்கள் விரைத்து நிற்க தன் கண் முன்னால் நீர் தன் மேல் விழாதவாறு பைப்பையும் அணைக்காமல் அவள் முன்னே வந்து நின்றவனை கண்டவளுக்கு சப்தமும் அடங்கியது..
முன்பே மஞ்சள் கயிறு மேஜிக் அவளுக்கும் வேலை செய்து இருந்தது என்னவோ உண்மை தான் ..
அதை இவன் முன் காட்டாமல் அவனுடன் இருக்கும் காலம் ஒன்றாக இருப்போம் என்று நினைத்து தன் மனதை மறைத்து அவள் அவனுடன் வாழ்ந்து கொண்டு இருக்க இன்று மாயா முன் இவள் என் மனைவி என்று மனுவே கூறியது அவளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியை தான் அளித்தது என்றே கூற வேண்டும்..
ஆனாலும் உள்ளூற வருத்தமும் எழுந்ததை அவளால் அடக்க முடிய முடியவில்லை மாயா என்ன நினைத்து இருப்பாளோ என்று எல்லாம் தன்னை குழப்பி இருந்தவளுக்கு தன் முன்னே தன்னை விழுங்கி கொண்டு இருப்பவனுக்கு தன் மனதை அவளால் உணர்த்த முடியவில்லை..
அதனால் மெல்ல வெளியே செல்லலாம் என எத்தனிக்கும் முன் அவன் அவள் தோளில் கை வைத்து அவள் கண்களை பார்த்தான்..தண்ணீர் வேறு அருவியாக கொட்டி கொண்டு இருந்தது..அதை நிறுத்த வேண்டும் என்று இருவரும் முயற்சி செய்யாமல் ஏதோ அருவியில் நின்று குளிப்பது போல நின்று கொண்டு இருந்தனர்..
அவளால் அவன் கண்ணை ஏறிட்டு பார்க்க முடியவில்லை..இருந்தும் அவன் விடப்படியாக அவள் கண்களை பார்த்தான் அவனுக்கு இப்போது தெரிய வேண்டும் அவள் கண்ணில் தன் மீதான காதல் உண்டா என்று அவளோ அவன் முன் இப்படி நிற்கிறோமே என்ற பரிதவிப்பில் நிற்க அவன் அந்த நொடி அவள் கண்கள் வழியாக அவளை ஊடுருவி பார்க்க முனைந்தான்..
அவள் கண்ணில் அவனுக்கான காதல் வழிந்தோடியது அவள் மனம் இன்னும் கூறவில்லை என்றாலும் அவள் கண்கள் அவனுக்கு பறைசாற்ற இது போதுமடி எனக்கு என்று நெனைத்தவன் அவள் முகம் நோக்கி குனிந்தான்..
முதலிலே நீரின் குளுமையில் நடுங்கி கொண்டு இருப்பவளுக்கு அவனது அருகாமை தந்த இதத்தில் அவனது கண்களை பார்க்கவும் அவனது கண்கள் கூறிய மொழி அவளுக்கு புரிவது போல இருக்க இது சரி தானா என்று அவள் யோசிக்கும் முன் அதற்குள் அவளை யோசிக்க விடாமல் அவளது இதழை சிறை செய்து இருந்தான்..
தடைப்பட்டு தடைப்பட்டு போன அவன் தேடிய இதழ் முத்தம் அவனுக்கு இரு வழியாய் கிடைக்க அவன் அதில் மூழ்க தொடங்கும் வேளையில் நிலா அவனிடம் இருந்து விலக முற்பட்டாள்..
ஆனால் முடியவில்லை அவளது முயற்சிகளை எல்லாம் தூசி போல கலைந்தவன் அவளை வாரி எடுக்கும் வேளையில் அவள் அணிந்து இருந்து தூவாலை வழுக்கி கொண்டு போனது..
அவனது ஒற்றை இதழ் முத்தத்தில் நிலா மதி மயங்கி இருக்க பெண்ணவளின் மென் தேகத்தை கண்டவனின் சிந்தையும் மழுங்க இந்த நிமிடம் அவள் வேண்டும் என்று அவன் மனம் துடிக்க பிறகு ஒன்று அவன் யோசிக்கவில்லை ..
அவன் மனைவி அவனுக்கு உரிமையானவள் என் காதலை அவளுக்கு நான் கூற விழைகிறேன் என நினைத்தவன் அவளை அப்படியே தூக்கியவன் அவளை மஞ்சத்தில் கிடத்தி அவனும் சரிந்தான்..
அவளோ ஏதோ மயக்கத்தில் இருந்தவளுக்கு தன் மேல் சரிந்தவனின் மோகத்தை கண்டவள் "வேண்டாம் ப்ளீஸ்".. என்று கூறுவது எல்லாம் அவளுக்கு கேட்கவில்லை அவன் எப்போதோ அந்த நிலையை எல்லாம் கடந்து விட்டானே..
மோகம் என்பது காட்டாற்று வெள்ளாமமே அது போல அவள் மேல் மோகம் கரை புரண்டு ஓட நிலாவின் மெல்லிய எதிர்ப்பு எல்லாம் அவன் சட்டை செய்யாமல் மேலும் அவளுள் புதைய நிலாவால் மேற்கொண்டு அவனை தடை செய்ய முடியவில்லை..
அவளும் அவனுள் புதையுண்டாள்.. கிராமத்தில் வளர்ந்த பெண்ணான அவளுக்கும் கணவன் ,மனைவி பந்தம் பற்றி எல்லாம் அவளது பாட்டி கூறியது நினைவில் வர அந்த நொடி மாயாவை சற்று ஒதுக்கியவள் கணவனுடன் இயைந்து கொடுத்தாள்..அவளுக்கு அது மட்டுமே அவனிடம் இருந்து அனுமதி வந்தது ஏனெனில் அவளது விலகலுக்கு எல்லாம் அவன் தடை விதித்து இருந்தானே..
மனு அந்த நேரம் ஒன்றை மறந்து விட்டான் தன் தந்தைக்கு கொடுத்த வாக்கை படிப்பு முடிந்த பின்னே வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று அவர் கூறியதை மறந்து அவளுள் புதைந்து விட்டான்..அங்கே நிலா மற்றும் மனுவிற்கு அழகிய கூடல் சங்கமம் உருவானது...
மல்லிகை மணம் வீசும்…
