Share:
Notifications
Clear all

மன்மதன் 47

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 47

மன்மதன் தேசத்து மல்லிகை

      மனு காரில் ஏறியது முதல் அழுது கொண்டே இருப்பவளை பார்த்து கடுப்பான மனு, " எதுக்கு இப்போ அழுதுட்டே இருக்க ?? அப்படி என்ன இப்போ நடந்துடுச்சு"..என்று காய

"செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு கேள்வி கேக்காதிங்க.." என்றாள் பட்டென்று

"நான் என்ன டி செஞ்சேன்"...
என்று எதிர் கேள்வி கேட்க

"ஏன் நீங்க என்ன செஞ்சீங்கன்னு உங்களுக்கு தெரியாதா??"...

"எனக்கு தெரியும் ஆனால் நீ இப்படி அழுதுட்டே இருக்கிற அளவுக்கு நான் என்ன பண்ணினேன்னு புரியல "..என்று மனு கூற

"நான் எவ்வளவு தடவை சொன்னேன் போலாம்ன்னு நீங்க கேட்கவே இல்லை".. என்க

"அதுனால தான் அழறயா??"...

"என்ன நீங்க கிண்டல் பண்றீங்களா??"

யாரை கேட்டு நீங்க உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் ஆனதை சொன்னீங்க???" என்று வெடித்தாள் அவளுக்கு ஆறவே இல்லை..

"யாரை டி கேட்கணும் உன் அண்ணனையா???..உண்மையை தானே சொன்னேன் பொய் எல்லாம் சொல்லலயே"...என்று மனுவும் அவன் பங்கிற்கு எகிற

"எல்லோரும் என்னை பத்தி என்ன நினைச்சு இருப்பாங்க"...அதை கூறும் போதே நிலாவின் குரல் உடைந்து போனது

"என் பொண்டாட்டின்னு நினைச்சு இருப்பாங்க.." என்று அவன் அசால்ட்டாக ஒரு கையால் காரை ஓட்டி கொண்டே சாலையில் கவனம் பதிக்க,

"இத்தனை நாள் சொல்லாமல் இப்போ சொன்னா தப்பா நினைக்க மாட்டங்களா..உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது"...

"யார் தப்பா நினைப்பாங்க.. இப்போ சொல்லணும்னு தோணுச்சு சொன்னோம்..இதுல கண்டவன் நெனைக்கிறதுக்கு எல்லாம் ஒண்ணுமே இல்லை" என்று மனு அவளை சமாதானம் செய்ய முயல

"சும்மா ஏதாவது சொல்லிட்டே இருக்காதீங்க உங்களுக்கு எல்லாமே உங்க இஷ்டம் தான் உங்களுக்கு முக்கியம் ...எல்லோரும் என்னை தான  தப்பா நினைச்சு இருப்பாங்க "...என்று மாயாவை நினைத்து இவள் மீண்டும் அழ

"யார் தப்பா நினைப்பாங்கனு சொல்ற.."அவனுக்கு சத்தியமாக அவள் எதற்காக இவ்வளவு தூரம் தன்னை வருத்திக் கொள்கிறாள் என்று புரியவில்லை அதுவும் அவள் மனதில் அசோக் இல்லாத வேளையில் எதுக்கு இப்படி சீன் போடுறா என்றே அவன் யோசித்தான்..

அவளோ வெடுக்கென்று, "எல்லோரும் தான்"..என்று அழுது கொண்டே கூற

"என்ன என்னை கல்யாணம் பண்ணி இருக்கிறது தப்புன்னு சொல்ல வரியா?? இல்லை நான் தான் உன்னை கல்யாணம் பண்ணி இருக்கேன்னு சொன்னதை தப்பு சொல்ல வரியா ..எவன் உன்னை தப்பா சொல்ல போறான் இல்லை உனக்கு என்னை புருஷன்னு வெளில சொல்ல அசிங்கமா இருக்கா"..என்று மனு மெல்ல மெல்ல அவளது தொடர் அழுகையில் மூளை சூடாகி கோபத்துடன் கேட்கவும் அதற்குள் வீடு வரவும் சரியாக இருந்தது..

அவன் காரை நிறுத்தவும் இவளோ அவனை விட்டுவிட்டு சட்டென்று காரில் இருந்து இறங்கியவள் நடக்க தொடங்கி விட்டாள்...

"ஹே நில்லு டி"...என்று அவனது குரலை கூட அவள் கேக்கும் நிலையில் இல்லை என்ன வார்த்தை அவளை பார்த்து கூறி விட்டான்..

நான் இவனை தன் கணவன் என்று வெளியே சொல்ல அசிங்கப்படுகிறேனா??..இவனுடைய காதலுக்காக தானே நான் இவனை விட்டு கொடுக்க துணிந்தேன்..

இப்போது இவனே எல்லோர் முன்னிலையில் சொன்னதும் இல்லாமல் குதர்க்கமாக பேசி வருகிறான் இவனை என்ன சொல்வது இதில் வேறு அந்த மாயா அக்கா பார்த்துட்டாங்க என்று நினைத்து கொண்டே செல்ல அவனும் அவள் பின்னே சென்றான்..

இருவரும் வீட்டை அடைந்தும் ஒரு மணி நேரம் கடந்த பின்னும் அவளது அறைக்குள் இருந்து வெளியே வராதவளை எண்ணி குழம்பியவன் கதவை தட்ட கதவை திறக்க வில்லை இவனும் அவள் வேறு அழுது கொண்டே இருந்தாளே ஏதாவது ஆகி இருக்குமோ என பயப்பட்டு கதவை திறக்க மீண்டும் முயல  திறக்க இயலாமல் போகவே அவன் கையில் வைத்திருந்த மாற்று சாவி மூலம் லாக்கை திறந்தான்...

அவன் கால்கள் அவளை காணாமல் அவள் குரல் கேட்காமல் பதட்டத்தில் இருந்தவன் கதவு திறந்ததும் அவளது அறைக்குள் நுழைந்தவன் அவளை தேட அவளை காணவில்லை கூடவே, " நிலா நிலா".. என்று கத்த அவளை எங்கேயும் இல்லாமல் இருக்க பாத்ரூமில் தண்ணீர் வரும் சத்தம் கேட்டவன் சற்று ஆசுவாசம் அடைய அப்படியே  உடை கூட மாற்றாமல் அவளுக்காக அவளது அறையின் படுக்கையில் படுத்து இருந்தான்..அவளது அறைக்கு வந்ததும் அவனுக்கு அவளது நியாபகம் ..சற்று முன் ஏற்பட்ட சண்டையில் அவள் மீதான கோபத்தை எல்லாம் சிறிது ஒதுக்கி கூட வைத்து விட்டான் என்றே கூற வேண்டும்

மனு கண்களை மூடினாலே அவள் இன்று கசிந்த விழிகளோடு, " அசோக்கை காதலிக்கவில்லை "..என்று அவள் கூறியதே அவனுக்கு மனக்கண்ணில் வந்து போக இதழ்களில் மென்னகை கூட வந்து போனது..,

அந்த சமயம் பார்த்து பாத்ரூம் கதவை திறந்த நிலா சிறு துண்டை மட்டும் கட்டி கொண்டு முகத்தில் மற்றும் கழுத்தில் வழிந்த நீர் அப்படியே அவளின் முதுகில் வழிந்து ஓட அவளது இளமை ததும்பும் தனங்கள் அவனை காந்தமாக இழுக்க இவனை கண்டதும் அதிர்ச்சியில் தன் முட்டை கண்களை விரித்து பார்த்தவள் செந்நிற உதடுகள் மேலும் சிவந்து அவனை இம்சைக்கு உள்ளாகியது..

இவனை சட்டென்று அங்கு எதிர்பாராத நிலா அதிர்ச்சி அடையவும் அப்படியே அவளது இடுப்பில் அணிந்து இருந்த துண்டு இலேசாக விலகவும் சரியாக இருக்க மனுவின் கண்களோ அவளை  மொய்த்து கொண்டு இருந்தது..

அவளோ இவனை கண்டு பதட்டப்பட்டவள் வேகமாக தன்னை சரி செய்து கொண்டு , "இங்கே என்ன செய்யறீங்க "...என்று கேட்கவும் அவன் எங்கே செவி சாய்த்தான் அவன் பார்வை எல்லாம் அந்த பதினெட்டு வயது பாவையின் மீது அல்லவா இருந்தது..

அவளோ உடை விலகியதும் வேகமாக துண்டோடு தன்னை சேர்த்து பிடித்து மறைத்தவள் வேறு ஏதாவது தெரிகிறதா என்று அந்த சிறிய தூவலையால் அவள் உடலை மறைக்க பாடுபட்டு கொண்டு இருந்தாள்..

அவனை ஏறிட்டு பார்க்காமல் தலை குனிந்து நின்றவளின் எலுமிச்சை நிற உடலை கொண்டவள் செந்நிறமாய் சிவந்து போனாள்...

அவனது பார்வையோ இஞ்ச் பை இஞ்ச் ஆக அளவெடுத்து கொண்டு இருக்க இங்கே நிலாவின் இதயம் தடக் தடக் என்று துடித்து வாய் வழியே வெளியே வர வில்லை அவ்வளவே ..அதும் அவனது ஊசி குத்தும் பார்வையை தாங்கி  கொள்ள இயலாத வெண்ணிலா திரும்பி நிற்க அவனோ மெல்ல எழுந்தான்..

இவ்வளவு தூரம் அவள் அழகை கண்டவன் கண்ணை கட்டி சாரி என்று ஒரு வார்த்தையில் கூறி விட்டு அறையை விட்டு வெளியேற மனு ஒன்றும் தியாகி இல்லையே அவனே ஒரு மன்மதன் இதோ தன் மன்மதனின் வேலையை காட்ட துவங்கி விட்டான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top