Share:
Notifications
Clear all

மன்மதன் 46

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 46

நாளடைவில் அவர்கள் இருவரும் அவர்களது பதினைந்தாவது வயதில் ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொண்டனர் எப்போது இருவருக்குள்ளும் இந்த காதல் என்ற உணர்வு வந்தது என்று தெரியாது ஆனால் காதலர்கள் போல தான் அவர்கள் இருந்து வந்தனர்..

இதனிடையே அசோக்கின் வீட்டில் அசோக்கிற்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட மாயாவின் குடும்பமும் வர அப்போது பிறந்த நாள் கேக் முறித்து கொண்டாடிய பின் பெரியவர்கள் கீழே அமர்ந்து இருக்க இளையவர்கள் மேலே விளையாடி கொண்டு இருந்தனர்..

விளையாடி கொண்டு இருக்கிறார்கள் என்று தான் பெரியவர்கள் நினைத்து கொண்டு இருந்தனர்..

"ஹே அஷூ என்ன டா அப்படி பார்க்கிற"...

"யூ லுக் ப்ரீட்டி மாயா ..அதும் இந்த ஹாப் சாரியில் செம்மையா இருக்க".. என்று கூற

அவனது விழுங்கும் பார்வையில் தன்னை தொலைத்தவள் கன்னம் செம்மையுற்று தலை கவிழ மீசை அரும்பி நிற்கும் இந்த பருவத்தில் ஹார்மோன் மாற்றங்களின் விளைவில் இந்த புதிய உணர்வு இருவருக்குள்ளும் நல்ல உணர்வுகளை கொடுக்க அது கொடுத்த தைரியத்தில் அசோக் முதல் அடி எடுத்து வைத்து மாயாவின் அருகே வந்தான்..

மாயாவோ வெட்கப்பட்டு கொண்டே தடக் தடக் இதயத்துடன் நிற்க இது தான் சமயம் அவள் அருகே வந்தவன் கண்ணிமைக்கும் நேரத்தில் மாயாவின் கன்னத்தில் மாறி மாறி தன் இதழ்களை பதித்தான்..

பால வயதில் கொடுக்கும் முத்தத்திற்கும் பருவ வயதை அடைந்த பிறகு கொடுக்கும் முத்தத்திற்கும் வித்தியாசம் உண்டவல்லவா இருவரும் அந்த நிலையில் நின்று கட்டி பிடித்து கொண்டு இருக்கும் போது மிக சரியாக மாயாவின் அப்பா அறைக்குள் வர இந்த காட்சி அவர் கண்களுக்கு மிக சரியாகப்பட்டது..

இருவரும் கட்டி பிடித்து கொண்டு இருப்பது மட்டுமின்றி இருவரும் மீண்டும் முத்தத்தில் மூழ்க ஒரு மகளை பெற்ற தந்தை என்ன செய்வாரோ அதை தான் அவரும் செய்தார்..

அசோக்கை அடி வெளுத்து விட்டார் கூடவே மாயாவையும் அவர் அடித்து வெளுக்க சத்தம் கேட்டு ஓடி வந்த அசோக்கின் குடும்பத்தினர் மற்றும் மாயாவின் அம்மா அனைவரும் ஒரு சேர சண்டையிட்டு பிரிந்தனர்..

அதன் படி மாயாவின் அப்பா உடனே ட்ரான்ஸ்பர்  வாங்கி கொண்டு சென்னைக்கு வர அசோக் பெங்களூருவில் படிப்பை தொடர்ந்தான்..

பதினொன்றாம் வகுப்பில் தான் மாயாவுக்கு மனுவின் நட்பு கிடைக்கிறது..அன்று முதல் இன்று வரை நல்ல நண்பர்களாக இருந்து வர ஒரே கல்லூரியிலும் சேர அப்போது தான் அசோக் அதே கல்லூரியில் மெரிட் சீட்டில் சேர்ந்தான்..

ஆரம்பத்தில் இருவரும் இருவரையும் கண்டாலும் அன்று நடந்த கசப்பான சம்பவத்தால் இருவரும் பேசி கொள்ளாமல் கிட்டத்தட்ட ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளாமல் இருக்க இருவர் மனதிலும் பழைய நேசம் இருந்தது என்னவோ உண்மை தான் அதை இருவரும் வெளிப்படுத்தி கொள்ளவில்லை....

அதற்கு இடையே அசோக் மற்றும் மனுவின் இடையே யார் பெரிய ஆள் என்ற பிரச்சனை தலை தூக்கவும் மனு மற்றும் அசோக் ஒருவரை ஒருவர் விரோதியாக எண்ண தொடங்கி இருந்தனர்..

அதற்கு முக்கிய காரணம் மாயா தான் மாயா அசோக்கிடம் முகம் கொடுத்து பேசாமல் மனுவின் பின்னால் சுற்றுவதை கண்ட அசோக்கிற்கு  மனுவின் மீது கோபம் எழ வேண்டும் என்றே மனுவை சீண்ட தொடங்கினான்..

மனு சும்மாவே ஆடுவான் அதில் அசோக் கொம்பு சீவி கொடுக்க கூறவா வேண்டும் இந்த ஆறு வருட காலமாக அவர்களுக்குள் போட்டி போட்டி மட்டுமே..சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போனது..

நிலா மற்றும் மனுவின் நிலைமை தான் இங்கேயும் அசோக் மாயா தன்னை மறந்து மனுவை காதலிக்கிறாள் என நினைக்க மாயாவோ நிலாவின் பின்னால் சுற்றுகிறாள் என நினைத்து கொண்டாள்...

அதில் மாயாவை விட சற்று கூடுதலாக அசோக் சென்று, " அன்னிக்கு அவன் உன்கிட்ட என் கண் முன்னாடியே காதலை சொன்னான் உன்னை என் முன்னாடி கிஸ் பன்றான் நீ பார்த்துட்டு இருக்க இனி எனக்கு நீ வேணாம் போடி "..என்று நினைத்து தன் மனதை மாற்ற முயற்சி செய்து தோழியாக நினைத்த வெண்ணிலாவை காதலியாக பார்க்க முயற்சி செய்தான்..

அதற்கான முதல் படியை தான் காதல் என்ற வார்த்தையை வெண்ணிலாவின் முன் இறக்க அது எல்லோர் மனதிலும் வெடித்து விட்டது...

இப்படி இருக்க பழைய நினைவுகளில் உழன்ற மாயாவை பார்த்து அசோக், " உனக்கு தான் நான் வேணாமே அன்னைக்கு உன் அப்பா என்னை அடிச்சுட்டு உன்னை கூட்டிட்டு போகும் போது கூட நீ எப்படி இருந்தாலும் என்னோட மாயா யாருக்கும் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன்னு நினைச்சேன் ஆனால் நீ என்னை இந்த காலேஜ்ல பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்த இப்போ காலேஜ் முடியும் போது வந்தா என்னை என்னனு நினைக்க சொல்ற இதுல அவன் என் கண் முன்னாடி கிஸ் பண்றான்..

நீயே உனக்கு பிடிச்ச லைஃப்பை தேர்ந்தெடுக்கும்  போது எனக்கு என்ன நானும் தேர்ந்தெடுக்கலாம்னு தான் வெண்ணிலா கிட்ட ப்ரொபோஸ் பண்ணினேன் இதுல எனக்கு எந்த தப்பும் தெரியல "...என்க

அவன் கூறியதை கேட்டு வருத்தத்தில் அவனை பார்த்து, "மாயா நீயும் தான என்கிட்ட பேசல..மனு என்னோட பிரெண்ட்".. என்க

"பிரெண்ட்ஸ் தான் கட்டி பிடிச்சு காதலை சொல்லி கிஸ் பண்ணுவாங்களா??"...

"அவன் என்னை காதலிக்கல"..

"பொய் சொல்லாத என் கண் முன்னாடி அவன் உன்னை தொட்டு பேசும் போதெல்லாம் எனக்கு எரியுது டி"..

"எனக்கும் தான் டா  நீ என்னை கண்டுக்காமல் போகும் போது அழுகை வருது ..உன்னை இந்த காலேஜ்ல பார்த்ததும் நீ கண்டுக்காமல் போகும் போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா நீ என்னை மறந்துட்டேன்னு தான் உன்னை நெனைச்சுட்டு இருந்தேன்..யார் என்ன சொன்னாலும் நாம காதலிச்சது இல்லைன்னு ஆகிடுமா"... என்று அழுது கொண்டே கூற

தன்னை போல தான் அவளும் நினைத்து கொண்டு இருக்கிறாள் என்று நினைத்த அசோக்கிற்கு  மாயா மீது அவனது பழைய ஆழ் மனது நேசம் துளிர் விட ,

விட்டு போனதோ என நினைத்து மறுகிய இருவரும் இணைந்தனர்..

ஆழ் மனதில் நேசம் இருக்கும் போது கண்ணீரோடு சிறிய சிரிப்பு போதுமே இருவரையும் இணைக்க..அது போல இருவரும் வேகமாக இணையவும் செய்தனர்..

இருவரும் பருவ வயதில் காதலா ஈர்ப்பா என்று பிரித்து அறிய முடியா வயதில் காதலித்தது தவறு இல்லை ஆனால் அந்த வயதில் அவர்கள் எல்லை மீறியதே தவறு என்பதை இருவரும் இத்தனை வருடங்களுக்கு பிறகு புரிந்து கொண்டனர்..

"மாயா இப்போ உன்னை எனக்கு தருவாரா உன் அப்பா".. என்று சந்தேகமாக அவன் கேட்க

"அவர் உனக்கு என்னை தராட்டியும் நாம ஒன்னு சேர்ந்து சம்மதிக்க வைப்போம் அதுக்கு நமக்கு ஒரு வேலை வேணும் அதுக்கு அப்புறம் இந்த கொஞ்சலை வெச்சுக்கோ".. என்று தன் தோளில் கை போட்டு பேசி கொண்டு இருந்தவனின் கையை தட்டி விட்டு ஓட,

"ஹே உன் பிரெண்ட் உன் தோளில் கையை போட்டா ஒன்னும் சொல்ல மாட்டேங்கிற நான் செஞ்சா தப்பா"..

"அவன் என் நண்பன்".. என்று அவனுக்கு பதில் அளித்தாள் பத்து அடி தொலைவில் இருந்து ,

"அப்போ நான் "..என்று அசோக்கின் இயல்பான அவள் மீதான உரிமை பொறாமையாக  மாற

"நீதான் நான் டா இதுக்கு மேல என்ன கேட்கணும்னாலும்  கல்யாணத்துக்கு பின்னாடி வெச்சுக்கோ".. என்று கூறி சிரிக்க

"ஹே எங்கே ஓடி டி போற வெயிட் பண்ணு நானும் வரேன்"..என்றான் அசோக் தன் இருந்து அடைத்து வைத்திருந்த பாரத்தை இறக்கி வைத்தபடி

"வேணாம் நான் வீட்டுக்கு போறேன் பஸ்ல போயிப்பேன் அதெல்லாம் கல்யாணத்துக்கு பின்னாடி தான்"... என்க

"ஹே உன்னை கூட்டிட்டு விடுற டிரைவர் வேலையாவது தா டி  "..என்று கூறியவன் அவள் மறுத்தும் அவளை அவள் வீட்டுக்கு விட தன்னுடன் அவளை அழைத்து  சென்றான்..

இங்கே ஒரு ஜோடி சுமூகமாக வீட்டுக்கு செல்ல மறு ஜோடியோ காரில் ஏறியது முதல் அடிதடியில் இறங்கியது...

மல்லிகை மனம் வீசும்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top