Share:
Notifications
Clear all

மன்மதன் 45

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 45

மன்மதன் தேசத்து மல்லிகை

   அசோக் திரும்பி பார்க்கவும் அசோக்கின் கன்னம் பழுத்து இருந்தது அடித்தது வேறு யாருமல்ல மாயாவே தான்...

இதை அசோக் மட்டுமல்ல மனு
கூட சற்றும்  எதிர் பார்க்கவில்லை..மனுவுக்கும் அசோக்கின் மீது அளவு கடந்த கோபம் இருந்தது என்னவோ உண்மை ஆனால் இப்போது கோபம் இல்லாமல் எல்லாம் இல்லை ஆனால் அவன் மூலம் தானே அவன் மனைவியின் மனதை அறிய முடிந்தது..

அதனாலே அவனுக்கு மனு கொடுத்த இந்த அதிர்ச்சிகளே போதும் என்று மனு நினைத்து இருக்க எதிர்பாராத விதமாக அசோக்கின் கன்னம் மாயாவால் பழுக்க இங்கே அசோக்கை தவிர மீதம் உள்ளவர்கள் அதிர அதற்குள் மாயா வேகமாக அசோக்கின் சட்டையை பிடித்து இருந்தாள்..

அவளது தீ பார்வைக்கு பதில் அளிக்க முடியாமல் தடுமாறி நின்றான் அசோக்..கன நேரம் மட்டுமே அவனுக்கு தடுமாற்றம் இருக்க பின் அசோக்கும் தைரியமாக மாயாவை எதிர் கொண்டான்...

மனு வேகமாக ஓடி வந்து மாயாவை பிடித்து தன் பக்கமாக இழுத்து , "என்ன செய்யற எதுக்கு அவனை அடிச்ச இப்போ இங்கே வா"...என்க

மாயா மனுவின் கையை உதறி தள்ளி, " இது உனக்கு தேவையில்லாத விஷயம் மனு"... என்க

"என்ன தேவையில்லாத விஷயம் நீ வா என்கூட.. டேய் நீ போடா"..
என்று மனு அசோக்கை விரட்ட அசோக் அசையாமல் நின்று கொண்டு இருந்தான் அவனது பார்வைக்கு எதிர் பார்வை பார்த்து ஓங்காரமாக நின்றாள் மாயா..

"மாயா இது எனக்கும் அவனுக்குமான பிரச்சனை இதுல நீ எதுக்கு தலையிடுற"...என்று மனு மாயாவை கடிய

"யாரு உன் பிரச்சனைல தலையிட்டா இது எனக்கும் இவனுக்குமான பிரச்சனை சோ நீ உன் வேலையை பார்த்துட்டு கிளம்பு"...என்றாள் மாயா ஆத்திரமாக அவள் கோபம் இன்னும் அடங்கவில்லை..

"மாயா என்னை பார்த்து சொல்லு இவன் உன்கிட்ட ஏதாவது வம்பு செஞ்சானா அதுக்கு தான் நீ அடிச்சியா "..என்று மனு கேள்வியாக மாயாவை பார்த்து கேட்க

இந்த முறை அசோக் எழுந்து நின்று மனுவை பார்த்து நக்கல் குரலில், " ஹ்ம்ம் காதலிச்சேன் டா வேற ஒன்னும் உன் பிரெண்ட்டை பண்ணல ஏறி போனா இரண்டு கிஸ் பண்ணி இருப்பேன் ,ஒரு நாலு தடவைக்கு மேலே கட்டி பிடிச்சு இருப்பேன்"...என்று கூறவும் அதை கேட்டு மனு மட்டுமின்றி ராம் ,குமார் என அனைவரும் அதிர்ந்தனர்..

அந்த அதிர்ச்சி அசோக்கிற்கு அப்போது தேவை பட்டது என்றே கூற வேண்டும்..எவ்வளவு தான் அவனும் பொறுத்து போவான் எதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா..

இதை ஏதும் கண்டுகொள்ளாமல் ஒருத்தி காரிலேயே குளம் கட்ட துவங்கி இருந்தாள் அவள் இந்த காட்சிகளை கண்டு இருந்தலாவது பின்னால் நடக்கும் அசௌகரியம் நடக்காமல் இருந்து இருக்கும் ஆனால் அவள் தான் ,தன் அழுகையிலே குளம் கட்டுவதில் முனைப்பாக இருந்தாளே..

தன் தோழி கூறிய ஆழ் மனது காதலன் இவன் தானா அப்போ கடந்த  ஆறு வருடமாக என்னுடன் பழகியும் இவனை பற்றி ஒரு நாள் கூட அவள் கூறியது இல்லையே என்று மனு பேய் முழி முழித்தவன்,

" என்ன மாயா என்கிட்ட சொல்லவே இல்லை ...அப்போ இவன் தான் நீ சொன்ன ஆளா ".. என்று மனு கூறவும் மாயாவுக்கு எரிச்சல் ஆனது..

ஒன்று மாயாவுக்கும் அசோக்கிற்கும் நடந்த அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியது அதையே தாங்கி கொள்ள இயலாமல் நின்றவளுக்கு அந்த நேரம் மனுவின் கேள்வி எரிச்சலையே கொடுத்தது..

"இவ்ளோ பெரிய விஷயத்தை என்கிட்ட இருந்து மறைச்சில அப்போ நான் எதுக்கு டா உன்கிட்ட சொல்லணும்..இதெல்லாம் என்னோட பர்செனல் அதுல நீ தலையிடாத "...என்று கூறவும்,

மனுவுக்கு பதில் இல்லை அவள் கூறுவது உண்மை தனே இருந்தாலும் தன் தோழியின் காதல் பிரச்சனையை அவளே தீர்த்து கொள்ளட்டும்  இந்த நேரத்தில் நான் இங்கே நிற்பது சரி இல்லை என்று உணர்ந்தவன் அவளிடம் வேறு எந்த கேள்வியும் கேட்காமல்,

அங்கே இருந்து கிளம்ப எத்தனிக்கும் போது அசோக்கை ஒரு பார்வை பார்த்து , "மாயா பத்திரம்".. என்பது போல கூறி விட்டு அங்கே ஒன்றும் புரியாமல் பாவமாக நின்று கொண்டு இருந்த நண்பர்களை அழைத்து கொண்டு அவ்விடம் நகர்ந்தான்..பின் மனு நண்பர்களையும் ஏதேதோ சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தான்...அவர்களும் ஏதாவது நல்லது நடந்தால் சரி என்பது போல கிளம்பினர்..

எல்லோரும் சென்றதும் கண்களில் நீரோடு நிற்கும் மாயாவை பார்த்து அவள் அருகே வந்த அசோக், "என்ன ஜான்சி ராணி மாதிரி என்னோட பல்லை ஆட வெச்ச இப்போ அழற".. என்று கன்னத்தை தடவிய படி கூற அவளோ கொஞ்சமும் கோபம் குறையாமல் திரும்பி நடக்க தொடங்கினாள்..

"ஹே மாயா".. என்று அவள் பின்னால் சென்று அவள் கையை பிடிக்க அவளோ முறுக்கி கொண்டு , "என்ன டா இப்போ உன் பயம் எல்லாம் போயிடுச்சா தைரியமா கையை பிடிச்சு நிற்கிற..யாராவது பார்த்துட்டா என்ன பண்ணுவா "...என்று நக்கலாக கேட்க

"எல்லாம் இந்த அடி கொடுத்த தைரியம் தான் இனி யாராவது வந்தா நேருக்கு நேர் நிப்பேன்"... என்று அதே நக்கல் குரலில் சற்று தைரியமாகவே கூறினான்..

ஆம் அசோக் மற்றும் மாயா குடும்ப நண்பர்கள் இருவரும் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்து கொண்டு இருந்தனர்...அசோக்கின் அப்பாவும் மாயாவின் அப்பாவும் பள்ளி கால நண்பர்கள் ..அதனால் சிறு வயது அவர்கள் குடும்பமும் ஒன்றாக ஒரே குடும்பம் போல பழக இவர்களும் நல்ல நண்பர்களாக இருவரும் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்து வந்தனர்..

அப்போது தான் மாயா தனது 13 வயதில் பருவ வயதை அடைய அதுவரை தோழியாக தெரிந்த மாயா அன்று பாவாடை தாவணியில் தன் நீண்ட முடியில் பூ எல்லாம் வைத்து மிக அழகாக இருக்க அசோக்கும் அந்த பருவ வயதில் இருக்க அவனுள்ளே மாயாவின் மீது ஈர்ப்பு வந்தது..

மாயாவுக்கும் அவளுக்கு நடக்கும் சடங்கு சமயத்தில் அசோக்கின் பார்வை அவளுக்கும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மை தான் ..

இப்படி அவள் சடங்கு எல்லாம் முடிந்து பத்து நாட்கள் கழித்து பள்ளிக்குள் அவள் அப்பாவுடன் காரில் வந்தவள் இறங்கி பள்ளிக்கூடத்துக்குள் அவள் நுழையும் போதே அசோக் அவள் முன் வந்து நின்றான்..அவளும் அவனை தான் எதிர்பார்த்து பள்ளிக்குள் வந்தாலோ தெரியவில்லை ஆனால் அவள் கன்னம் சட்டென்று சிவந்தது காரணம் அவளுக்கே புரியவில்லை...

அவளோ அவனை பார்த்து சிரிக்க அசோக் முறைத்தான் , "என்ன இத்தனை நாள் லீவ் போட்டு உன் இஷ்டத்துக்கு  வர "..என்று கேட்க

"அஷூ உனக்கு நான் லீவ் ஏன் போட்டு இருந்தேன்னு தெரியாதா??"...என்று பாவமாக மாயா கேட்க

"அதெல்லாம் தெரியும் ஆனால் நீ என்னை மறந்துட்ட"...

"இல்ல அஷூ நானும் உன்னை எப்போ பார்ப்பேன்னு காத்துட்டு தான் இருந்தேன்"... என்று கூற

மாயாவை தலை முதல் கால் வரை அளவிட்ட அசோக்கின் கண்கள் அவள் அணிந்து இருந்த யூனிபார்ம் மீது நிலைத்து , "ஏன் டி வேற ட்ரெஸ் போட்டுட்டு வர மாட்டியா பார் உன் கால் தெரியுது "..என்க

"இல்ல அஷூ இது இந்த வருஷம் எடுத்தது தான் இப்போ குட்டியா போச்சு.."..

"சரி இதை மாத்து இதை இனிமேல் போடாத "..என்று உரிமைக்காரன் போல கூறியவன்,

மேலும், " அண்ட் இனி நான் உன்னை நல்லா பார்த்துக்கனும்னு உன்னோட மம்மி சொல்லி இருக்காங்க நீ என் கூடயே இரு வேற யார் கூடவும் பேசாத".. என்க

அவளும் ஏன் என்ற கேள்வி எழுந்தாலும் அவனது அக்கறையில் அவள் நெகிழ தான் செய்தாள்.. அதே போல அசோக்கும் அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டான் என்றே கூற வேண்டும்..

அவளை எங்கேயும் தனியாக விட மாட்டான் இதெல்லாம் எப்போதும் அவன் செய்வது தான் என்றாலும் இப்போது இந்த சமயத்தில் அவனது அக்கறை அவளுள் பெரிய மாற்றத்தை உருவாக்கி இருந்தது என்னவோ உண்மை தான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top