Share:
Notifications
Clear all

மன்மதன் 44

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 44

காலேஜ் முடிந்ததும் நண்பர்களிடம் முக்கியமான வேலை இருக்கிறது என்று கூறி அவளுக்காக வேகமாக வந்தவனுக்கு தூரே இருந்தே  பார்த்தவனுக்கு அந்த காட்சி கோபத்தை கொடுக்க அதுவும் கையில் பூவை வைத்து கொண்டு அவன் பேசி கொண்டு இருப்பதை பார்த்து மனுவின் மனதுக்குள் எரிகலனை கொளுத்தி விட்டு கொண்டு இருந்தது..

அதற்குள் அசோக் நிலாவின் கண்களை நேருக்கு நேர் சந்தித்து ," வெண்ணிலா இந்த பூவை மட்டும் நான் உனக்கு தரல அதோடு என்னையும் சேர்த்து தான் ஐ லவ் யூ..என்னை ஏத்துப்பியா"... என்று அசோக் கூற,

அவன் என்ன கூறுகிறான் என்று அவள் மூளையை சென்றடைவதற்குள் அசோக் வெண்ணிலாவின் கையை பிடித்தபடி கூறி முடித்து அவன் அவளுக்காக வாங்கி வைத்து இருந்த மோதிரத்தை அவள் விரலில் அணிய போகும் முன் வெண்ணிலா அவளது கையை அவள் பக்கம் இழுக்கும் முன் மனு வெண்ணிலாவின் கையை பிடித்து தன் அருகே இழுத்து கிட்டத்தட்ட அவளை தன்னுடைய தோள் வளைவுக்குள் கொண்டு வந்து நின்று அசோக்கை பார்த்தான்..

அசோக்கோ இவன் எதுக்கு இப்படி செய்கிறான் என்று புரியாத பார்வை பார்த்தவனுக்கு வெண்ணிலா மனுவின் கைக்குள் அகப்பட்டு கிடப்பது கோபத்தை கொடுக்க,

"மனு அவளை விடு"..

"ஏன் "..என்று தன் புருவத்தை நக்கலாக தூக்கி கேட்டவன் இன்னும் ஒரு கையை இடையில் வைத்து அழுத்தி தன் அருகே சேர்த்து நிறுத்த வெண்ணிலாவோ ஒரு அடி கூட நகராமல் தலையை குனிந்து கொண்டு நின்று கொண்டு இருந்தாள்..

அவள் மனதிலோ அசோக் அவனுடைய காதலை தன்னிடம் கூறியது பெரிய அதிர்ச்சி என்றால் அதை மனு பார்த்து விட்டான் என்பது பேரதிர்ச்சி...

அதுவும் தன்னை அவன் அருகே இழுத்த விசையில் அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது அவனுடைய கோபத்தின் அளவை..

காலையில் தான் அவளுடைய அண்ணன் செழியனிடம் உரிமை போராட்டம் செய்தவன் மாலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் என்ன செய்ய காத்து இருக்கிறானோ என்ற பயம் அவளுள் எழுந்து அவளது முதுகு தண்டு சில்லிட்டது...

"மனு ஐ டோல்ட் யூ அவளை விடு"...

"அப்படியா... நீ சொன்னா இவளை விட்டடுணுமா"..

"மனு நீ என்னை கோபப்படுத்திட்டு இருக்க"..

"அப்படியா நீயும் தான் டா என்னை எரிச்சல் படுத்திட்டு இருக்க"...

"மனு அவ என்னோட காதலி ..அவளை விடு  "...என்று கூறி வெண்ணிலாவின் கையை பிடித்து தன் பக்கம் இழுக்க போகும் முன் மனு தடுத்து இருந்தான்..

அதற்குள் காலேஜ் முழுவதும் பார்க்கிங்கில் கூடி விட்டது...மனுவின் நண்பர்களுக்கும் விஷயம் தெரிவிக்க பட மாயா,ராம் மற்றும் குமார் அனைவரும் ஓடி வந்தனர்..

" அப்படியா இவ உன்னோட காதலியா??..நான் யார்னு தெரியுமா??"..

அஷோக்கோ சிரித்து தனக்குள் எழுந்த கோபத்தை அடக்கி சிரித்த அசோக், " மனு நான் நல்ல மூடில் இருக்கேன் எனக்கு சண்டை போட ஐடியா இல்லை லீவ் ஹெர்"... என்க

"என் கேள்வி அது இல்லையே".. என்று கூறிய மனு அசோக் சற்று முன் மனுவிடம் பேசிய அதே நக்கல் குரலில் கூறியவன்

மேலும் , "உனக்கு எல்லாமே இடையில மறந்து போயிடும் போல நான் நியாபகப்படுத்துறேன் '...என்று கூறும் போது அடுத்த சில நொடிகளில் ஒரு சண்டை உருவாக கூடிய எல்லா சுப லட்சணங்களும் அங்கே காணபடுவதாலும் தன் நண்பன் எதுக்கு வெண்ணிலாவை அணைத்து பிடித்து நிற்கிறான் என்று மனுவின் நண்பர்களுக்கு மாயாவை தவிர புரியவில்லை என்றாலும் நட்புக்காக மனுவின் பின்னால் அரண் போல வந்து நின்றனர்..

மனுவோ நேருக்கு நேர் அசோக்கை பார்த்து, " நான் இவளுக்கு யார்னு தெரியுமான்னு கேட்டேன்"... என்க

அஷோக்கோ மனுவின் புரியாத பார்வை ஒன்றை வீசினான் ..

அசோக் மட்டுமின்றி அவர்கள் மூவரை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் அனைவரும் அதே மனநிலையில் தான் இருந்தனர்..

மனு கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலையை இழந்து கொண்டு இருக்கிறான் என்பது அருகில் அவனிடமே கோழி குஞ்சு போல அவனது அணைப்பில் அவனுக்கு பயந்து அவனிடமே தஞ்சம் கொண்டுள்ள அவளுக்கு நன்றாக அவனது பிடியின் அழுத்தத்தின் தீவிரம் நொடிக்கு ஒரு தடவை அவளுக்கு உணர்த்தி கொண்டு இருந்தது..

அசோக் முழிப்பதை பார்த்து, " அவ உனக்கு காதலியா ??"...என்று கேட்டவன்..

தன்னோடு ஒன்றி நிற்பவளை முகத்தை ஒரு கையால் நிமிர்த்தி, " நிலா என்னை பார் "..என்று அதிகாரமாக கூறிய மனுவை ஏறிட்ட நிலாவின் விழிகள் இறைஞ்சியது," பிளீஸ் போகலாம் "...என்று கண்களாலே இறைஞ்ச ,

ஏனெனில் அருகில் தான் மாயா அதிர்ச்சியோடு மூவரையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருப்பதை காண்கிறாளே அவனிடம் அவள் கெஞ்சுவதை கூட அவன் பொருட்படுத்தாமல், " நீ அவனை காதலிக்கிறியா"... என்ற கேள்வியை கேட்டான் மனு..

மனுவுக்கு இப்போது தெரிய வேண்டும் அவன் மனதில் அவன் இருக்கிறானா என்று..அவர்கள் காதலர்கள் என்ற பிம்பம் தானே அவனை நித்தம் அரிக்கிறது...அதை களையவே அவன் முயல்கிறான்..

இப்போது அசோக் காதலை கூறுகிறான் என்றால் நிலாவுக்கே இப்போது தான் இந்த விஷயம் தெரிகிறதா என நினைத்தவன் அசோக் ஒரு அடி எடுத்து வைக்கும் முன்னே மனு நூறு அடி எடுத்து வைத்து விட்டான்...

அவளோ மீண்டும் தலை கவிழ முயல, " நான் உன்கிட்ட கேட்டுட்டு இருக்கேன்".. என்று கடுமையான குரலில் மனு கேட்கவும்

தேவையில்லாமல் அவனுடைய கோபத்தை கிளற வேண்டாம் என்று நினைத்தவள், " இல்லை".. என்று தலை ஆட்ட அப்போது மனுவை அடைத்து வைத்திருந்த பாரம் இறங்கியது போல உணர்வை பெற்றான்..

எப்படி இருந்தாலும் அவள் மனதை மாற்ற வேண்டும் என்று காத்து இருந்தவனுக்கு இப்போது அவள் இல்லை என்று கூறவும் தன் மனைவியை அள்ளி எடுத்து பருக துடித்தவனுக்கு உன்னை எப்படி சரி கட்டணும்னு எனக்கு தெரியும் அதுக்கு முன்னாடி இந்த பங்காளியை ஒரு கை பார்க்கிறேன் டி என நினைத்தவன் நிலாவிடம், " அப்போ அவன் கையிலே அந்த பூவை திருப்பி கொடுத்துட்டு நான் சொல்றதை எல்லாம் சொல்லு"... என்க

வெண்ணிலாவுக்கு கொஞ்சம் அசிங்கமா தான் இருந்தது எல்லோரும் கூடி இருக்கிறார்களே என நினைத்து, " என்னங்க போலாம்"... என்று அவனுக்கு மட்டும் கேக்கும் குரலில் கூற , "போலாம் டார்லிங் நீ சொல்லிடு சொன்ன உடனே போலாம் "...என்று அவளுக்கு மட்டுமல்ல எல்லோர்க்கும் கேக்கும் விதமாக கூற அனைவர் முகமும் குழப்பத்தின் சாயல் என்னதான் நடக்கிறது இருவருக்குள்ளும் என அனைவரும் குழம்பியபடி நின்றனர்..

மனு தன்னை வைத்து அவன் சொன்னதை செய்ய விடாமல் இருக்க மாட்டான் என அவளுக்கு புரிந்ததால் அவள் தான் அவனை காதலிக்கவில்லையே அதனால் தைரியமாக அசோக்கிடம் அவன் கொடுத்த பூவை வெண்ணிலா நீட்ட அவன் பின்னால் அவளின் தோள் மீது கை வைத்த படி நின்ற மனு , "நான் உங்களை காதலிக்கல".. என்று கூற

அவளும் ,"அசோக் நான் உங்களை காதலிக்கல "..என்றாள்.. அவள் மனு கூறுவதை எல்லாம் கிளி பிள்ளை போல கூறுவதை பார்த்து அசோக்கிற்கு அவமானமாக இருந்தது...

"இதெல்லாம் என்னோட புருசனுக்கு பிடிக்காது".. என்று மனு அடுத்த வாக்கியத்தை கூறவும் அங்கே கூடி இருந்தவர்கள் அதிர அசோக்கின் முகம் கூறவே வேண்டாம் வெண்ணிலா திருமணம் ஆனவளா என்று அதிர அதற்குள் மனுவின் அருகே இருந்த மாயாவுக்கு எங்கோ ஏதோ இடிப்பது போல இருந்தாலும் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என அமைதியாக நின்றாள் ..

"ம்ம் சொல்லு நிலா"... என்க

அவளும் திக்கி கொண்டே," இதெல்லாம் என்..னோட ..புரு..சனு..க்கு பிடிக்காது"... என்று தலை குனிந்த படி கூற

"அவர் யாருன்னா".. என்று மனு அடுத்து கூற அவளோ மனுவை ஏறிட்டு , "ப்ளீஸ்".. என்க

"சொல்லு நிலா"..என்றான் அழுத்தமாக அதற்குள் வெண்ணிலாவிற்கு இங்கே நடப்பதை எல்லாம் பார்த்து இப்போவோ அப்போவோ என்று விழ இருந்த கண்ணீர் கீழே எகிறி குதிக்க

குமார் கூட அவள் அழுது கொண்டு இருப்பதை பார்த்து , "மனு அவளை விடு "..என்க

மனு தன் நண்பர்களை ஒரு தீ பார்வை பார்த்து அமைதியாக இருக்கும் படி கூறியவன்

அவள் தோளில் அழுத்தம் கொடுத்து, " ம்ம் சொல்லு "..என்க

"அ..அ..வர் யா..ரு...ன்..னா"...

"மனு பரதன்னு சொல்லு "...என்க

அனைவருக்கும்  அதிர்ச்சி சுற்றி நின்ற அனைவருக்கும் அதிர்ச்சி என்ன மனு, நிலா கணவன் மனைவியா என அனைவரும் பார்க்க அவளை மீண்டும் இழுத்து தன்னருகே நிறுத்தியவன் , " என்ன டா குழப்பமா இருக்கா ...அவ புருஷன் பேரு மனு பரதன் தான் அது நான் தான்...இப்போ சொல்லு டா.. அவ கிட்ட உன் காதலை".. என்று அசோக்கை பார்த்து கூறும் போதே மனுவின் முகத்தில் அவ்வளவு தீவிரம் விட்டால் அசோக்கை அடித்து நொறுக்கி விடுவான் போல அது போல தான் நின்று கொண்டு இருந்தான்..

இதை கேட்ட குமாரோ , "என்ன டா சொல்ற"..என்று அதிர்ச்சியாகி கேட்க,

"என்ன பக்கத்தில் தான நின்னுட்டு இருந்த உனக்கு கேக்கலயா இதோ இரண்டு அடி தள்ளி நின்னவனே பேய் முழி முழிச்சிட்டு நிற்கிறான் "..என்று குமாரை பார்த்து கூறியவன் ,

அவனை சுற்றி நின்றவர்களை பார்த்து, " எஸ் என்னோட மனைவி தான் இவ.. என்னோட நிலா..இனியும் யாருக்காச்சும் என்னோட மனைவிக்கிட்ட ப்ரபோஸ் பண்ணனுமா ?? "...என்று கேட்க

மனுவை சைட் அடித்து கொண்டு இருந்த சில பெண்களும் நிலாவை ஒரு தலையாக சைட் அடித்து வந்த இதயம் முரளிகளும் அதிர்ந்து தான் போயினர்..

வேடிக்கை பார்ப்பவர்களுக்கே அதிர்ச்சி என்றால் அவனுடைய உயிர் நண்பர்களுக்கும் மேலும் அசோக்கும் பேரதிர்ச்சி என்றே கூற வேண்டும்...

வெண்ணிலாவோ யாரையும் ஏறெடுத்து பார்க்காமல் தலை கவிழ்த்தே இருக்க மேலும் அவளை உசுப்பேற்றும் விதமாக, " என்ன பேபி போலாமா "...என்று கேட்டவன் அவளை மனுவின் கார் இருக்கும் இடத்திற்கு அவள் தோளில் கையிட்டு அணைத்தபடியே அழைத்து சென்றான்...

அவளோ இங்கே நடந்ததை எல்லாம் பார்த்து இறுகி போய் இருந்தாள்...அவளை காரில் அமர வைத்து விட்டு , "நீ இங்கேயே உக்கார்ந்து அழுதுட்டு இரு இதோ இப்போ வந்திடறேன்".. என்று மூக்கு நுனி சிவந்து அழுது கொண்டு இருக்கும் அவளது கன்னத்தை கிள்ளி விட்டு கார் கதவை அடைத்தவன் அடுத்த நிமிடம் இன்னும் அதிர்ச்சி மாறாமல் அங்கேயே நின்று கொண்டு இருக்கும் அசோக் மற்றும் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு விரைந்தான்...

எல்லோர் முன்னிலையில் அசிங்கப்பட்ட அசோக் மனுவின் வரவை பார்த்து மேலும் இங்கே இருந்து அசிங்கப்பட வேணாம் என நினைத்து அசோக் செல்ல எத்தனிக்கும் சமயம் , "ஒரு நிமிஷம்".. என்ற குரல் அசோக்கை தடுத்து நிறுத்த அசோக் திரும்பி பார்த்த அடுத்த நொடி அங்கே அசோக்கின் கன்னம் தெறித்து விடும் அளவுக்கு ஒரு அறை ஒன்று அசோக்கின் கன்னத்தில் விழுந்தது...

மல்லிகை மணம் வீசும்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top