Share:
Notifications
Clear all

மன்மதன் 42

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 42

முதலில் பார்த்தது வெண்ணிலா தான், " என்னங்க கொஞ்சம் நிறுத்துங்க அண்ணா நிற்கிறாங்க"... என்று கூற அவனும் நிறுத்தினான்..

ஆனால் இருவர் இடையே பேச்சுவார்த்தை இல்லாதலால் அவன் இறங்காமல் அவளுக்காக காத்து இருக்க இருவரும் ஜோடியாக வருவதை கண்டு உள்ளூற மகிழ்ந்த செழியனோ தன் அருகே ஓடி வந்த தன் தங்கையிடம் , "என்ன பாப்பா எப்படி இருக்க?"..

"நல்லா இருக்கேன் அண்ணா..

நீ என்ன இங்கே அண்ணா அண்ணியை பார்க்க வந்தியா?"..

"இல்ல பாப்பா சென்னை வரதுனா உன் அண்ணியை பார்க்க தானா நான் பார்க்க வந்தாலும் உன் அண்ணி நின்னு பேசிட்டு தான் போவா "..என்று கூறியவன் முகத்தில் அத்தனை வேதனை பதிந்து இருந்தது..

வெண்ணிலா முகம் வாடுவதை கண்ட செழியனோ," நான் உன்னை பார்க்க தான் வந்தேன் கண்ணு "..என்று மலர்ந்து கூற

"சொல்லு அண்ணா என்ன விஷயம்?"..

"இந்தா பாப்பா".. என்று கொஞ்சம் பணத்தை அவளிடம் கொடுக்க அவளும் எதற்கு என்று கேட்காமல் வாங்கியள்,

"எதுக்கு அண்ணா இவ்ளோ பணம்".. என்க

இந்த காட்சியை பார்த்து கொண்டு இருந்த மனுவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை ஆனாலும் அவர்கள் உரையாடுவது தெளிவாக அவனுக்கு கேட்பதால் என்ன நடக்கிறதென்று வேடிக்கை பார்க்க அதற்குள் செழியன் , "உனக்கு தான் பாப்பா இந்த செமஸ்டர் பீஸ் பாப்பா "..என்க

அவளும்," ஓ".. என்க

"உன்னோட அக்கோவுண்ட்க்கு பணம் போட்டேன் ஆனால் என்னவோ பிளாக் ல இருக்கும் போல பணம் வரல அது தான் நேர்ல வந்து கொடுத்தேன் இதுல செலவுக்கும் இருக்குது பாப்பா".. என்று கூற

இதை எல்லாம் கேட்ட மனுவுக்கு ஜிவ்வென்று ஏறியது..இதுவரை இருந்த மென்மை போய் கோபத்தில் முகம் சிவந்தது..ஏனோ செழியனின் இந்த விஷயம் அவனுக்கு சரியாகப்படவில்லை நான் இங்கே இருக்கும் போது இவன் எதற்கு செய்கிறான் என்றே மனுவுக்கு தோன்றியது..

அவளும் ஏதோ நியாபகத்தில் எப்போதும் செழியன் தானே வெண்ணிலாவுக்கு இது போன்ற பீஸ் எல்லாம் கட்டுவது என்ற ரீதியில் வாங்க இங்கே ஒருவனுக்கு கோபம் சுடர் விட்டு எரிந்து கொண்டு இருந்தது..

செழியனோ ஓரக்கண்ணால் மனுவை பார்க்க மனுவோ அவனை கண்டு கொள்ளாமல் , "நிலா ஒரு நிமிஷம் இங்கே வா".. என்க

அவளும் வர," அந்த பணத்தை உன் அண்ணன் கிட்ட திருப்பி கொடு".. என்றான் கோபத்தை உள் அடிக்கிய படி

"இல்ல பீஸ் கட்ட தான் அண்ணா பணம் தராங்க "..என்க

"உனக்கு என்ன செய்யணும்னு எனக்கு தெரியும் அதை உன் அண்ணன் கிட்ட திருப்பி கொடு "..என்க

அவளும் செழியனை பார்க்க அதற்குள் செழியன் இவர்கள் அருகே வந்தான்..

"என்ன பாப்பா என்ன விஷயம்"..

"அண்ணா இந்த பணம் வேணாம் அண்ணா "..என்று தயங்கியபடி திருப்பி கொடுக்க

"ஏன்?"..

"நான் தான் திருப்பி கொடுக்க சொன்னேன்..அவளுக்கு தேவையானதை எனக்கு செய்ய தெரியும் "..என்று மனு கோபத்துடன் கூற

செழியனோ விடாமல் , "மனு நீயும் படிச்சிட்டு தான் இருக்க உன்னோட பீஸ் கூட உன் அப்பா தான் கட்டுவாரு"..

"இதோ பாருங்க என்னோடது என் அப்பா கட்டறார் இல்லை கட்டாமல் போறார் அந்த கவலை உங்களுக்கு வேணாம் அதே போல இவ என்னோட மனைவி அவளுக்கு வேண்டியது நான் பார்த்துக்கறேன்".. என்க

"நான் சொல்றதை நீ கொஞ்சம் கேளு மனு நீ என்ன வேலைக்கா போற?".. என்று கேட்க

செழியன் என்னமோ சாதாரணமாக தான் கேட்டான் ஆனால் மனுவுக்கு அவனது தன்மானம் சீண்டபட்டதாக தோன்ற அந்த நேரம் பார்த்து மிக சரியாக மாலதியின் வாகனம் வந்தது மனு காரை எடுத்தால் தான் மாலதிக்கு போக முடியும் என்பது போல இருக்க மாலதியின் மனதுக்குள்ளோ , "என்ன எல்லோரும் வந்து இருக்காங்க "..என்று தோன்றினாலும் எதுவும் பேசாமல் இருக்க மாலதியை கண்டும் , "நீங்க உங்க மனைவியை படிக்க வெச்சத்தோட நிறுத்திக்கோங்க என்னோட பொண்டாட்டிக்கு செய்யற வேலை எல்லாம் வேணாம்".. என்று முகத்தில் அடித்தது போல கூற அதை கேட்ட வெண்ணிலா அதிர்ந்தாள் என்றால் மற்றொரு புறம் மாலதி அதிர்ந்தாள்..

என்னதான் மனு அந்த வீட்டு மாப்பிளை என்றாலும் செழியனை விட வயதில் சிறியவன் அவன் எடுத்தெறிந்து பேசியது மாலதி விருப்பமின்மையை கொடுத்தது அதே நேரம் செழியனோ , "அப்போ என்னோட தங்கச்சிக்கு எதுவும் செய்ய வேணாம்னு சொல்ற "..என்று விடாமல் கேட்க

"உங்க தங்கச்சிக்கு நீங்க தராளாமா செய்ங்க ஆனால் என்னோட மனைவிக்கு செய்ய வேணாம் "..என்று கூறி , "நிலா கார்ல ஏறு "..என்று கூற அவளும் இனியும் அங்கே நின்றால் ஏதாவது நடந்து விட போகிறது என்று பயந்து வேகமாக காரில் ஏறி அமர்ந்தாள்..

கார் சீறி பாய மாலதி செழியனை ஏறிட்டு பார்க்க அதே நேரம் செழியனின் கண்கள் மாலதியின் கைகளில் நிலைத்தது...

காரில் ஏறியதும் அவளது கையை அழுத்தத்துடன் பிடித்த மனு , "நான் இனியும் உன் புருஷன் தான் நிலா".. என்று கூறியவன் , "இனி உனக்கு ஏதாவது வேணும்னா என்னை கேளு".. என்று கூறியவன் மேலும் அவள் கண்களை பார்த்து," என்னை மட்டும் தான் கேக்கிற "..என்று ஒரு வித அழுத்தத்துடன் கூற அவளோ அவனின் தீவிரத்தை கண்டு சரி என்று தலையை ஆட்டினாள்..

அவளுக்கு வருத்தமே மனு தன் அண்ணனிடம் அப்படி பேசியது ஆனால் கோபத்தில் இருப்பவனிடம் என்னவென்று பேசுவது என்று அமைதியை கடை பிடித்தாள்...

அதற்குள் கல்லூரி வந்து விட ஒரு சிலர் ஒரு மாதிரியாக பார்த்தாலும் கண்டு கொள்ளலாமல் மனு அவளுடன் இறங்க வெண்ணிலாவுக்கு தான் என்னவோ போல இருந்தது அதிலும் மனு இப்போது மலை இறங்கி இருக்க இன்னும் மலை ஏற்ற விருப்பமின்றி என்ன செய்யலாம் என யோசிக்கும் முன் வனிதா கல்லூரிக்கு நுழைவதை கண்டவள், " நான் போறேன் வனிதா வரா".. என்று கூறியவள் அவனை ஏறிட்டு பாவமாக பார்க்க அவளின் பதட்டத்தை உணர்ந்தவன் ,

"சாயந்தரம் இங்கேயே வெயிட் பண்ணு நான் வந்து பிக் பண்ணிக்கறேன்".. என்று கூறினான் அவளோ விட்டால் போதுமென்று வேகமாக தலையை ஆட்டி விட்டு ஓடி விட்டாள்..

அதற்குள் மனுவின் நண்பர்களும் வர மனு பிஸியாகி விட்டான்...ஆனால் அவனது மூளைக்குள் வெண்ணிலாவின் செமஸ்டர் பீஸை எப்படி அடைப்பது என்ற யோசனை ஓடி கொண்டு இருந்தது..

ஆனால் வெண்ணிலா மற்றும் மனு ஒன்றாக வந்தது அவனது நண்பர்கள் யாரும் பார்க்கவில்லை மாயாவை தவிர ..மாயா இவர்கள் இருவரையும் கண்டு விட்டாள், " என்ன மனு கூட இந்த பொண்ணு வரா".. என்று யோசித்தவளை அவளது ஹெச்ஓடி அழைப்பதாக கூற அவளும் திரும்பி திரும்பி பார்த்து கொண்டே குழப்பத்துடன் சென்றாள்.. இதை அறியாத மனு நண்பர்களுடன் ஐக்கியம் ஆகி விட்டான்...

மாலை வேறு ஒரு களேபரம் நடக்க போகிறது என்று அறியாமல் மனு தன் நண்பர்களுடன் சிரித்து மகிழ்ந்து கொண்டு இருந்தான்..

நிலாவின் அண்ணனிடமே விட்டு கொடுக்காதவன் வேறு ஒருத்தனிடம் விட்டு கொடுப்பானா???..இதில் மாயா வேறு இவர்கள் இருவரையும் பார்த்து விட்டாள்.. என்ன நடக்க இருக்கிறதோ??..

மல்லிகை மணம் வீசும்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top