மன்மதன் 41
அத்தியாயம் : 41
மன்மதன் தேசத்து மல்லிகை
விடியல் யாருக்கும் காத்திருக்காமல் அழகாக விடிந்தது காலையில் எழுந்ததுமே வெண்ணிலா அரக்கப்பறக்க தயாராகிக் கொண்டிருந்தாள்..
இன்று கல்லூரியின் தொடக்க நாள்..அவள் எதிர்பார்த்து காத்திருந்த நாள்..அது வந்து விடவே நண்பர்களை காணும் ஆவலோடு அவள் தயாராகினாள்..
ஒரு பக்கம் மதியத்துக்கு வேண்டிய உணவை தயாரித்துக் கொண்டும் ஒரு பக்கம் காலையில் உண்ணக்கூடிய உணவை தயார் செய்து கொண்டும் அரக்கப்பறக்க தயாராகிக் கொண்டிருந்த அவளை பார்த்து குளித்து தலையை துவட்டியபடியே வந்த மனு , "எதுக்கு இதெல்லாம் பண்ணிட்டு இருக்க?? கேன்டீன்ல சாப்பிட வேண்டியது தானே".. என்று கேட்க,
" இல்ல உங்களுக்கு தான் செய்யறேன்"..
"நான் கொண்டு போக மாட்டேன்"..
"அப்புறம் எப்படி சாப்பிடுவீங்க??"..
"அது கேன்டீன்,ஹோட்டல் பிரெண்ட்ஸ் யாராவது கொண்டு வருவாங்க வாங்கி சாப்பிடுவேன்"..
"பரவாயில்லை இன்னிக்கு ஒரு நாள் கொண்டு போங்க நான் சமைச்சுட்டேன் "...என்று கூற அவனோ அவளை ஆழ பார்க்க அவளது கன்னங்கள் இலேசாக சூடேறியது..அவளது செய்கையில் அவனின் மனம் உள்ளுக்குள் ரசித்தது..
அவளோ மேற்கொண்டு ஒன்றும் கூறாமல் அவளுக்கும், அவனுக்கும் இரண்டு பாத்திரங்களில் உணவை எடுத்து வைத்தவள் வேகமாக தயாராக அவனும் தயார் ஆகி வந்தான்..
இருவரும் ஒரு சேர்ந்து உணவை உண்டு விட்டு அவன் சோபாவில் அமர்ந்து ஷூவை இட்டு கொண்டு இருக்கும் போது இள நீல சுடிதார் அணிந்து கொண்டு அவளும் தயாராகி வந்தவள், " நான் கிளம்பறேன்".. என்று மலர்ந்த முகத்துடன் கூறி வெளியே கிளம்ப,
"நிலா ஒரு நிமிஷம் ..எங்க கிளம்பிட்ட???"..
"காலேஜ்க்கு இங்கே இருந்து எட்டு மணிக்கு பஸ் வரும்னு சொன்னாங்க.. அதுல போனால் எட்டு முப்பதுக்கு காலேஜ்க்கு போயிடலாம் சொன்னாங்க"...
"ஓ அப்படியா யாரு சொன்னா ??"...என்று சந்தேகமாக கேட்க
அவளோ வெள்ளந்தியாக, "வனிதா தான் யார்கிட்டயோ கேட்டு சொன்னா"...என்று கூற
"ஓ அந்த அளவுக்கு தெரிஞ்சு வெச்சு இருக்கியா"... என்று மனதுக்குள் நினைத்தாலும் வெளியே கூறாமல், " சரி போய்ட்டு வா".. என்று மட்டும் கூறியவன், அவனும் அவள் கூடவே வெளியே வந்து கதவை அடைத்து இருவரும் ஒரே நேரத்தில் லிப்டுக்குள் ஏறினர்...
இவர்கள் நேரம் பார்த்து லிஃப்டில் கூட்டம் அதிகமாக இருந்தது... இவர்கள் தங்கி இருப்பது 18 ஆவது மாடியில் அன்று என்று பார்த்து இவர்களுடன் இரண்டு மூன்று பேர் ஏற அதுவும் வாலிபர்களாக இருக்க அவர்களிடம் இருந்து ஒதுங்கி நிற்க அவனருகில் வந்து இயல்பாக நின்றாள் வெண்ணிலா...
அவனும் அந்த ஆண்களை பார்த்து அவர்கள் அவளை தீண்டி விடாதபடி தனது கையை லிப்ட்டின் மீது வைத்து இருந்தான் மனு...
அதில் அவர்கள் இருவரும் மேலும் நெருங்க அவளுக்கு அவஸ்தையாக போனது...அதிலும் அவனுடைய உடலும் இவளுடைய உடலும் உரசி கொள்ள புது வித லாவா ஒன்று மனுவின் உடலுக்குள் ஊற்று எடுத்தது...
அவன் கைகளை வேறு பரபரத்து கொண்டு இருந்தது இன்றைய நாள் இப்படி தான் தொடங்க வேண்டுமா என்று அவன் மனம் ஆனந்த ஊற்று கிளம்ப மேலும் அவனுக்கு வசமாக அடுத்த தளத்தில் இன்னொரு ஆளும் ஏற மேலும் அவனை ஒன்றி நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாள் நிலா..
அதனால் இவனுக்கு குஷியாகி போனது..அந்த கள்வன் மனுவோ ஒவ்வொரு நொடியையும் அவளை ரசித்து கொண்டு இருக்க அதிலும் அவனது உயரத்துக்கு அவள் மார்பு வரை மட்டுமே அவள் இருக்க அந்த கள்வனோ மெல்ல அவளின் இடையை அழுத்தமாக பிடித்து அவன் முன்னே நிறுத்தியவன் தன் இரு கைகளாலும் அவளது வயிற்றை அழுத்தி தன்னோடு சேர்த்து பிடித்து கொண்டான்..
அவளால் திரும்பவும் முடியாது ஏனெனில் அதற்குள் வேறு ஒரு ஆளும் ஏற லிப்டில் நிற்க இடம் இல்லாமல் நெருக்கமாக இருக்க மெல்ல அவனது இதயத்தில் தலையை வைத்து அழுத்தி மேலே தலையை தூக்கியபடி கண்காளாலே இடுப்பில் உள்ள கையை எடுக்க சொல்ல அவனோ அவனும் அதே போல அவளது கண்களை பார்த்து எல்லோரையும் காட்ட ,
அவனோ மெல்ல தூக்கிய அவளின் தலை வழியே கண்கள், அவளின் மூக்கு அதிலும் இன்று அடர் நீல நிற மூக்குத்தி அணிந்து அவளின் நாசியை எடுப்பாக காட்டி கொடுக்க அப்படியே எச்சிலை கொண்டு ஈரப்படுத்திய அவளது உதட்டை பார்த்தவனுக்கு மேலும் உள்ளுக்குள் கிளர்ச்சி எழ மேலும் அவளின் வயிற்றில் அழுத்தம் கொடுத்து அவளை தன்னோடு சேர்த்து இறுக்கினான்..
இரு உடல்களும் உரச தலை குளித்து இருந்தவளின் முடியில் இருந்த நல்ல சுகந்தம் அவனுக்கு சூட்டை கொடுக்க அதில் சூடான மூச்சுக்காற்று அவளது கழுத்தில் வளைவில் பட அதில் கூசி சிலிர்த்தவளின் மயிர்கால்கள் எழுந்து நிற்க அதில் மேலும் தன்னை தொலைத்தவன் இருக்கும் இடம் கருதி தன்னிலை அடைந்தான்..
அவனது தவிப்பை எல்லாம் அவளது அடி வயிற்றை அழுத்தி பிடித்து ஆறுதல் பட்டு கொண்டவனின் கைகள் மேலும் ஆறுதல் தேட துடிக்க மெல்ல அவனது விரல்கள் அவளது அடி வயிற்றை வருடி கொடுத்து அவனை சாந்தப்படுத்தி கொண்டான்..
அவளோ தவிப்பாக விழியை உயர்த்தி பார்க்க அவனது பார்வையோ அவளது சங்கு கழுத்தில் இருந்து கீழ் இறங்கி கொண்டு இருந்தது.. அதற்குள் அவனது பார்வையை ஏறிட்டவளை பார்த்து குனிந்து அவளின் செவி மடலை உரசி, " எவ்வளவு நேரம் இப்படியே நிற்ப எல்லோரும் போயிட்டாங்க".. என்று கள்ளசிரிப்போடு கூறியவன் அவளை விடுவிக்க இவளுக்கு என்னவோ போல ஆனது...
இவங்க விட்ட தானே எனக்கு போக முடியும் என்று அவள் நினைக்க அவனோ எப்போதோ அவளை விட்டு விலகி இருந்தான் இது என்ன டா மாயை என அவள் பார்க்க அவனோ அவளை பார்த்து மேலும் சிரிக்க அவளோ தலை கவிழ்ந்து வெக்கப்பட்டாள்..
ஒரு வழியாக இருவரும் பார்க்கிங் வர அவனோ , "நிலா என்கூடயே வா நானே உன்னை ட்ராப் பன்றேன்".. என்க
இல்லை யாராவது பார்த்துட்டா என நெனைத்தவள் , " நான் வரல நீங்க போங்க "..என்றாள் மெல்லிய குரலில்
அவனும் விடாமல், " ஏன் வர மாட்ட??".. என்று ஒரு மாதிரியான குரலில் கேட்க
"இல்ல நான் பஸ்ஸில் போய்க்கறேன் ப்ளீஸ் "..என்றான்
"அதெல்லாம் வேண்டாம் வா வந்து கார்ல ஏறு..நானே உன்ன டிராப் பண்றேன்"..
மேலும் தயங்குவதைப் பார்த்ததும் அவன் கையில் இருந்த அவள் அவனுக்காக சமைத்துக் கொடுத்த உணவை எடுத்து காரின் டோனட்டின் மீது வைத்து விட்டு காரினுள் ஏறி அமர்ந்து காரை ஆன் செய்தான் மனு அவன் முகத்தில் தீவிரம் இருந்தது அதில் நீ என்னுடன் வந்தே ஆக வேண்டும் என்ற வெறி இருந்தது..
அதாவது நீ என்னுடன் வந்தால் மட்டுமே நீ சமைத்த உணவை நான் எடுத்துச் செல்வேன் என்றும் அல்லாது விட்டால் எனக்கு வேண்டாம் என்பது போல் இருந்தது அவன் செயல்..
நான் எனக்காக வா சொல்றேன் அவருக்கு வேண்டி தானே சொல்றேன் யாராவது பாத்துட்டா..என்ன ஆகறது உடனே கோபப்பட்டு போயிட்டார் என்று நினைத்தாலும் அவன் பிடித்த பிடியில் நிற்பவன் என்பதை அவனுடன் இருந்த நாட்களில் புரிந்து கொண்ட நிலா சிறு தயக்கத்துடன் அவனது காரில் ஏறி அமர்ந்தாள்..
அவள் ஏறி அமர்ந்ததும் அவன் முகம் பளிச்சிட நல்ல ரொமான்டிக் பாடல்களை தெறிக்க விட்டு கல்லூரிக்கு மிக மெதுவாக கிட்டத்தட்ட ஊர்வது போல சென்றான்...அவ்வளவு நேரம் அவளுடன் பயணம் செய்யலாமே என நினைத்தே மெல்ல போக ஒருவழியாக முக்கால் மணி நேரத்தில் நிலாவின் ஹாஸ்டல் அருகே கடக்கும் போது செழியனின் கார் நின்று கொண்டு இருந்தது..
