மன்மதன் 40
அத்தியாயம் : 40
அனைவரும் கிளம்பும் முன் , "எல்லாம் சரி தான் அவங்க சேர்ந்து இருக்காங்க பொறவு எதுக்கு அவ ஹாஸ்டல்ல இருக்கனும்..இனி அவ இங்கே இருந்தே காலேஜூக்கு போகட்டும்".. என்று செல்லக்கிளி மீண்டும் தன் வேலையை காட்ட,
மனுவுக்கு அந்த ஒரு விஷயம் மிகவும் பிடித்து இருக்க வெளியே எதையும் காட்டி கொள்ளாமல் அவன் அமைதியாக இருக்க அதிர்வது வெண்ணிலாவின் முறை ஆனது...
வெண்ணிலாவின் அதிர்ந்த முகத்தை மனதில் குறித்து கொண்டு, " அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்..என்னோட வைப்க்கு தேவையானது எதுன்னு எனக்கு தெரியும் "... என்று கூறிய மனு அதோடு பேச்சை முடித்து கொண்டான்..ஒரு வழியாக அனைவரும் விடைபெற்றனர்..
வெண்ணிலாவோ அவனது பேச்சை கேட்டு புரியாத பார்வை பார்த்து வைக்க அவனோ அவளுக்கு பிடி கொடுக்காமல் கிளம்பி விட்டான்..
அன்றைய இரவு அவள் பக்கத்து அறையில் போய் படுக்க போக எத்தனிக்கும் போது, " ஏன் நிலா இங்கேயே படுத்துக்கோ இத்தனை நாள் இங்க தானா படுத்த இப்போவும் இங்கேயே படுத்துக்கோ "..என்று சாதாரணமாக கூறுவது போல கூற
அவளோ, " இல்லங்க நான் அங்கேயே படுத்துகறேன் உங்களுக்கு சிரமம்"...என்றாள்..இப்போதெல்லாம் அவன் ஏதாவது கேட்டான் என்றால் தயங்காமல் பதில் அளிக்கும் அளவுக்கு முன்னேறி இருந்தாள்..
அடிப்பாவி எனக்கா சிரமம் என்று மனதுக்குள் நினைத்து, " அதெல்லாம் ஒன்னுமில்ல "..என்று கூறியவன்," உன் பாட்டியை நம்ப முடியாது நாம சேர்ந்து இருக்கோமான்னு கேமிரா வெச்சு இருந்தாலும் வெச்சு இருப்பாங்க "...என்று சிரித்தபடி கூற தன் பாட்டி அப்படி செய்ய கூடிய ஆள் தான் என்று நினைத்து அங்கேயே படுத்து கொண்டாள்...அவளின் செய்கையை நினைத்து சிரித்து கொண்டான்...
அதன்படி அவர்களின் வாழ்க்கை அப்படியே தெளிந்த நீரோடை போல போய் கொண்டு இருந்தது...இன்னும் இரு நாளில் கல்லூரி தொடங்க இருக்க ஒருநாள் அதிகாலை வேளையில் துயில் உறங்கிக்கொண்டிருந்த வெண்ணிலாவை பார்த்தான் உறக்கம் கலைந்த மனு..
அமைதியான கலையான முகம் அவளுடையது...உறங்கும் போது ஒரு சிறு பிள்ளை போல இருந்தாள்..அந்த காலையில் இரவு விளக்கு ஒளியில் அவள் அழகு அவனை உசுப்பி விட்டது...
தன்னை எப்போதும் மயக்கும் மாயக்காரி கண்களை மூடினாலும் அவனை மயக்கவே செய்தாள்.. அதிகாலை வேளையில் அவனுக்கு பித்து பிடித்தது என்றே கூறவேண்டும் அவள் மேல் உள்ள காதல் ஆறாக ஊற்றெடுக்க தொடங்கிவிட்டது உணர்ச்சிகள் தடுமாறத் தொடங்கியது அவனுக்கு அவள் வேண்டும் என்ற நிலை வந்தது...
கடந்த இரு வாரமாக அவள் அவனுடைய மனதில் நுழைந்ததுக்கு பின் அவன் அவனாகவே இல்லை...அவள் முன் அவனது இமேஜை காப்பாற்ற அவன் அரும்பாடுபட அதிலும் இன்று உடைந்து விடும் போல இருந்தது...
அவள் அணிந்து இருந்த உடை சிறிது விலகி அவளின் வெண்ணிற இடை அவனுக்கு இலேசாக விருந்து அளிக்க தொட்டு பார்ப்போமா என்று அவனது மனம் பிரண்ட மறுபக்கம், " நானே அவளை எப்படி கரெக்ட் செய்யனு தெரியாமல் முழுச்சிட்டு இருக்கேன் இதில் நான் இப்படி செஞ்சு அவ கோபபட்டா |..என தோன்ற இதை எல்லாம் எண்ணி அஞ்சுபவனா மனு மெல்ல அவள் அருகே நெருங்கி படுத்தான்..
அவளிடமிருந்து எந்த விதமான எதிர்ப்பும் வராமல் போகவே மெல்ல அவள் புறம் திரும்பி நெருங்கி படுத்தவன் இருவரின் முகமும் உரசும் இடைவெளியில் இருக்க அவளின் அதரத்தை இவன் தீண்ட மெல்ல நெருங்கினான் மனு...மெல்ல இதழில் இலேசாக அவள் உணரா வண்ணம் இதழ்களை உரச அவள் மெல்ல அசையவும் இரண்டு அடி தள்ளி படுத்து கொண்டான்..
படுத்தவன் மனமோ , "ச்ச இப்படி கொல்றியே டி பேசமால் இப்பவே உன்னை எடுத்துக்கவா தினமும் உன்கிட்ட ஜென்டில்மேன் வேஷம் என்னால போட முடியல டி ..நீயா பேசாமல் என்கிட்ட வந்திடு இல்லை நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது "...என்று அவளை நினைத்து படுத்து கொண்டான்...
இப்படி இவன் வெண்ணிலா பித்து கொண்டு இருக்க கணவனான அவனே அவளிடம் தன் மனதில் புதைத்து வைத்து இருக்கும் காதலை சொல்ல தயங்கும் போது இதோ அசோக் அவளிடம் காதலை சொல்ல தயாராகி விட்டான்...
விடுமுறை முடிந்து கல்லூரி தொடங்கிய முதல் நாளே அவளிடம் தன் காதலை சொல்ல இப்போதே ஒரு பூங்கொத்து ஆர்டர் செய்து தயாராகி விட்டான் அஷோக்..
இவன் இங்கே இப்படி செய்வது மனுக்கு தெரிந்தால் அஷோக்கு ஹாஸ்பிட்டலில் சேர்க்க அட்மிஷன் வாங்கி விடுவானோ????...
மல்லிகை மணம் வீசும்…
