Share:
Notifications
Clear all

மன்மதன் 39

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 39

ஏனெனில் ஏதாவது அடிதடியோ, இல்லை அவளை மிரட்ட வேண்டுமென்றோ என்றால் அவன் அசால்ட்டாக களத்தில் இறங்கி விடுவான் அதுவே ஒரு பெண்ணிடம் காதலை தெரிவிப்பது என்றால் மனு தடுமாறினான்..இதுவே மாயாவிடம் அவனது காதலை கூற கூட அவன் தயங்கவில்லை ஆனால் இவளிடம் ஒரு தயக்கம் வந்தது..

முதலில் அவள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவனது கண்களும் பின்னே செல்லும்..இப்போது தான் அவளை பார்ப்பது போல ரசிக்க துவங்கினான்...

ஆம் அவள் அவனுடைய அம்மாவுடன் பேசி கொண்டு இருக்கும் போதும், பாட்டியின் காலை இதமாக பிடித்து விடும் போதும் அவளுடைய அம்மாவுக்கு உதவி செய்யும் போதும் என அவன் பார்க்கும் போதெல்லாம் அவள் அவனை ஈர்த்தாள்..அவன் ஒருவன் தன்னை பார்த்து கொண்டு இருக்கிறான் என்பது அறியாமலே அவளும் சுற்றி கொண்டு இருந்தாள்..

அப்படி ஒரு நாள் மனு வெளியே போய்விட்டு வரும்போது வந்ததும் அவனது அம்மாவிடம் , "அம்மா ஒரு காபி தாங்க தலை வலிக்குது "..என்று கேட்டான் ..

அப்போது செல்லக்கிளி காபி கலக்க எழுந்த பல்லவி அடக்கி , "வெண்ணிலா போய் காபி போட்டுட்டு வா..உன் புருஷன் கேக்கிறான் பார் "..என்க ,

அவளுக்கு அன்றைய தினம் மாதாந்திர உடல் வலியால் அவள் தவித்து கொண்டு இருந்தாள் இருந்தும் மனுக்கு அசைவ உணவு பிடிக்கும் என்று அவளுக்கு பழக்கி கொடுத்து கொண்டு இருந்த பல்லவி ஒரு வழியாக உணவை தயார் செய்து விட்டு அப்போது தான் வெண்ணிலா அமர்ந்து இருந்தாள் ...அதற்குள் காபி இடும் படி உத்தரவு வர மெல்ல எழுந்து சென்று அவனுக்கு ஒரு கப் காபி தயார் செய்து கொண்டு வந்தாள்..

"என்ன மசமசன்னு நிக்க ..எல்லா விஷயத்திலும் இப்படியே இரு..உன் கூட கல்யாணம் பண்ணின அந்த அமுதா இப்போ முழுகாம இருக்கா..நீ இப்படியே இரு ..அதை கொடு மாப்பிள்ளைக்கு "...என வெண்ணிலாவின் அம்மா திட்டியபடி கூற

அவளோ அவன் அருகே காபியை நீட்டி கொண்டு நிற்க அவனும் அவளை மிகவும் சோதிக்காமல் வாங்கி கொண்டான்...

காபியை குடிக்காமல் டேபிளில் வைத்து விட்டு கண்களை மூடி படுக்க,  " என்னப்பா தம்பி இப்படி இருக்க முடியலையா "..என்று பல்லவி கேட்க,

" ஆமாம் மம்மி என்னனு தெரியல தலை வலிக்குது".. என்று கூற செல்லக்கிளி இதுதான் சமயமென்று வெண்ணிலா , "தம்பிக்கு தான் தலை வலிக்குது சொல்லு  தலையை பிடிச்சு விடு" என்று கூற வெண்ணிலாவுக்கு பக்கென்று ஆனது..

அதிலும் அங்கே அவளது அம்மா, அவளது பாட்டி, அத்தை  என எல்லாரும் இருக்க அவர்கள் முன் தலையை பிடித்து விடுவதா என்று அவள் யோசிக்க,

அதற்குள் செல்லக்கிளி, " எதுக்கு இப்படி நின்னுட்டு இருக்க ..உன் புருஷனோட வேலைகளை எல்லாம் உன்னை தானே செய்ய சொல்லி இருக்கேன் அப்புறம் ஏன் நீ இப்படி நின்னுட்டு இருக்க..இப்படியே நின்னுட்டு இரு...விளங்கிடும்..இதுல இவ படிப்பு வேற நாலு வருஷம் இருக்காம்".. என்று அவர் கூற அதைக் கேட்டு  அவளது கண்களில் நீர் கோர்த்து நிற்கும் அவளை பார்த்தவன் , "அதெல்லாம் வேண்டாம்..நிலா நீ ரூமுக்கு வா".. என்று கூறி காபியை குடித்தவன்,

கண்களாலே அவளிடம் அறைக்கு வரும் படி கூற அவளும் விட்டால் போதுமென்று அவன் பின்னாலே கிட்டத்தட்ட ஓடினாள்... அவன் அழைத்ததும் அவன் பின்னால் அவள் செல்வதை கண்டு பெரியவர்கள் தங்களுக்குள் சிரித்து கொண்டனர்...

உள்ளே வந்தவளிடம், "எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க அவங்க முன்னாடி உனக்கு விருப்பம் இருந்தா மட்டும் இந்த மாதிரி வேலையை நீ செய்தா போதும் அவங்க நிர்பந்ததிற்காக நீ செய்ய வேணாம் "....என்க

அவளோ அமைதியாக இருப்பதை பார்த்து, " உன்கிட்ட தான் நான் பேசிட்டு இருக்கேன் நிலா"..என்க அவனுக்கும் அவளை பார்க்கும் போது பாவமாக இருந்தது..

அதிலும் இப்போது அழுததில் அவளின் நாசி சிவந்து நிற்பதை கண்டவனின் கை பரபரவென பறந்தது அவளை வாரி அணைக்க இதே பழைய மனுவாக இருந்தால் இந்நேரம் அவளின் மனதை கூட எண்ணாமல் அவளை வாரி அள்ளி நுகர்ந்து இருப்பான்.. ஆனால் இப்போது இருக்கும் மனு அப்படி அல்லவே அவளின் ஆழ் மனதை நேசிக்க துடிப்பவனுக்கு அவளின் மனதை பற்றிய கவலை உண்டு...அவள் வருத்தத்தில் இருக்கிறாள் என்பது அறிந்து அவன் சமாதானம் செய்ய துடிக்கிறான்..

அப்போதும் அமைதியாக இருந்தவளை பார்த்து இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்று குறித்து கொண்டான்..

அதற்குள் அவளே மெதுவாக அவனிடம், " இவங்களை ஊருக்கு போக சொல்றீங்களா?? "..என கேட்க

அவன் முடிவே பண்ணி விட்டான் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பியே ஆக வேண்டும் என்று மேலும் அதுமட்டுமல்ல காரணம் அவனின் அருகாமையில் இருக்கும் போது அவள் மனம் இலேசாக சலனப்படுகிறதோ என்ற சந்தேகம் அவளுள் எழ தொடங்கி இருக்கவே அவள் அப்படி கூற

"நீயும் அவங்க கூட போறியா".. என அவன் அவசரமாக கேட்க, ஏனெனில் அவன் தானே கூறி இருந்தான் அவளிடம் அதை மனதில் வைத்தே அவன் கேட்டான்...

"இல்லை நான் இங்கேயே இருக்கேன் காலேஜ் தொடங்கியதும் ஹாஸ்டல் போய்க்கறேன் "...என்று கூற அவனும் சம்மதமாக தலையாட்டினான்..

அதன் பிறகு அவன் மேற்கொண்டு ஒன்றும் பேசவில்லை..நேராக அவனது தந்தையை அழைத்து நடந்த விஷயத்தை எல்லாம் கூறி , "டாட் நாங்க இரண்டு பேரும் சேர்ந்து தான் இருக்கோம்..இவங்க எல்லோரும் சேர்ந்து எங்களை பிரிச்சு வெச்சுடுவாங்க போல "..என்று கூற

அதன் பிறகு பல்லவியை அழைத்த  ரவீந்தர் இன்று இரவு அவருக்கு பிலைட் புக் செய்து இருப்பதாகவும் அதே போல அவர்கள் இருவருக்கும் டிக்கெட் எடுத்து இருப்பதாகவும் கூறியவர் மேற்கொண்டு பல்லவியிடம், " அவங்க வாழ்க்கையை அவங்க வாழ்ந்து கொள்வாங்க நீங்க எதுக்கு அதில் மூக்கை நுழைச்சுட்டு இருக்கீங்க..நல்ல படியாவா இந்த கல்யாணம் நடந்துச்சு ஏதோ நிர்பந்ததுக்காக நடந்துச்சு ..அதுக்கு அவங்க அடாப்ட் ஆக வேணாமா ...

பெத்தவங்களே ஆனாலும் கணவன் மனைவின்னு வந்தா கொஞ்சம் ஒதுங்கி இருக்கிறது நல்லது..நீங்க கூட இருந்து அவங்களை சேர்த்து வைச்சது போதும் மீதி அவங்க சேர்ந்துப்பாங்க "...என்று கூற பல்லவி அதன் பிறகு ஒரு நிமிடம் கூட அங்கே நிற்க வில்லை..மேலும் அவர்களையும் கிளப்ப அவர்களும் கிளம்பி விட்டனர்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top