மன்மதன் 38
அத்தியாயம் : 38
மன்மதன் தேசத்து மல்லிகை
ஒரு வாரத்திற்கு பிறகு...
வெண்ணிலாவின் உறவினர்களும் மனுவின் அம்மாவும் வந்து ஒரு வாரம் கடந்து விட்டது..செழியன் மற்றும் சண்டித்தேவன் வந்து ஒரு நாளிலே சீர்களை எல்லாம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு கிளம்பி விட்டனர்..
செழியனுக்கு மனுவின் பார்வையை எதிர் கொள்ளும் தைரியம் இல்லை...ஏனெனில் என் வாழ்க்கையே இப்படி இருக்க நான் எப்படி இவனை திருத்துவது என்று வந்த மறு நாளே கிளம்பி விட்டான்...
அவனுக்கு அவளுக்கு அடிபட்டு இருப்பதை கண்டும் நொந்து இருப்பவனுக்கு மாலதி வேதனைப்படும் சமயம் அவளை பார்க்காமல் இருக்க முடியாது என்றே செழியன் கிளம்பி விட்டான்..
என்ன தான் மனுவுக்கு செழியன் மீது மதிப்பு வந்து இருந்தாலும் செழியனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை...வெண்ணிலா மற்றும் பல்லவி செழியனை இருக்க சொல்ல அப்போதும் வேலை இருக்கு என்று கூறி நழுவி விட்டான்..
இதற்கு இடையே மனுவின் கதியோ அதோ கதி தான்..நான்கு பெண்களுக்கு இடையில் மனு மாட்டி முழிக்கிறான் என்றே கூற வேண்டும்..அதிலும் அவனது அவனது மனைவியை தவிர்த்து மற்ற மூன்று பூலான் தேவிகளும் சேர்ந்து அவனை ஒரு வழி ஆக்கி இருந்தனர் என்றே கூற வேண்டும்..அதில் வெண்ணிலா மட்டும் விதிவிலக்கு அல்ல..
இந்த ஒரு வார காலத்தில் வெண்ணிலா மற்றும் மனு இருவருக்கும் பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது...
ஆம் வெண்ணிலா தனியாக சிக்கினால் என்றால் அவளிடம், " இதெல்லாம் மனுவுக்கு பிடிச்சது"... என்று கூறி அவனுக்கு அவனின் விருப்ப உணவை எல்லாம் வெண்ணிலாவின் கை கொண்டு செய்ய வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தார் பல்லவி..
அதுமட்டுமின்றி , "நீயே உன் புருஷனுக்கு கொடுமா "...என்று கூறி அவளை எப்போதும் சதா எந்த சமயம் பார்த்தாலும் அவன் மீது கிட்டத்தட்ட அவன் மடியில் அவர்களாக சென்று உட்கார வைக்க வில்லையே தவிர சதா எல்லா சமயமும் அவன் அருகிலேயே அவள் இருப்பது போல பார்த்துக் கொண்டனர்..
இதனால் அவர்கள் இருவருக்கும் காலை முதல் இரவு வரை ஒரு வித இறுக்கமான உணர்வு எழ தொடங்கியது..
அதில் ஒரு காரணம் கூட உண்டு கணவன் , மனைவி உறவு என்பது யாரும் வற்புறுத்தியோ இல்லை யாரும் நிர்பந்தித்தோ வரும் உறவு அல்லவே...அவர்களுக்கு இடையே மொட்டு மலர்வது போல தானாக மலர வேண்டும்..
இவர்கள் என்னவென்றால் காய்க்காத காயை கனிய வைக்கும் முயற்சியில் இறங்கினால் அது ஒரு வித இறுக்கத்தையே கொடுக்கும் என்பது இவர்கள் அறியவில்லை..
அதே நேரம் அவர்களுக்கு இரவு மட்டுமே சற்று ஆறுதலாக இருக்கும் என்று கூறலாம்..ஆம் எல்லோரும் வந்தது முதல் அவர்கள் இருவரும் ஒரே அறையில் தான் தங்கி இருக்கின்றனர் என்றாலும் அந்த சமயம் தான் இருவருக்கும் ஒரு வித நல்ல மனநிலையை கொடுக்கும்..
அவள் அருகே இருக்கும் போது அவனது சில்மிஷம் தான் அவளுக்கு நன்றாக தெரியுமே முதல் நாள் தயக்கத்துடன் அவனது அறைக்குள் நுழைய அவனோ என்னவோ யோசித்து கொண்டு இருந்தான்..
அவள் எப்போது வந்தாலும் சரி அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் மனு யோசிக்க தொடங்கி விடுவான் ..அதனால் அவளுக்கு அவனிடமிருந்து மற்ற வகையில் எந்த விதமான தொல்லையும் எழ வில்லை..
அவளும் இரவு இவன் ஏதாவது செய்வானோ என்ற பீதியில் சரியாக உறக்கம் கொள்ளாமல் இரு நாட்கள் தவிக்க மூன்றாம் நாளில் அவனே அவளை பார்த்து , "உனக்கு விருப்பம் இருந்தா மட்டும் இங்கே இரு இல்லாட்டி வேற ரூம்ல படுத்துக்கோ ..நம்பிக்கை இருந்தா மட்டும் இரு "..என்று கூற அதிலும் அந்த நம்பிக்கை என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுக்க அவள் அடங்கி விட்டாள்...
அவளுக்கு அனைவரும் இருக்கும் சமயம் இவனை விட்டு வெளியே செல்லவே பயம் அதற்கும் ஏதாவது கூறுவார்கள் என்பது அவளுக்கு மிக நன்றாகவே தெரியும் என்பதால் அவள் அந்த இடத்தை விட்டு இம்மி அளவும் நகரவில்லை..அவனும் அவனுடைய வாக்கை காப்பாற்றும் விதமாக மிக கண்ணியமாகவே நடந்து கொண்டான்..
அதேபோல மனுவுக்கு செல்லக்கிளி வெண்ணிலாவை பற்றி சதா எல்லா சமயமும் மனுவிடம் பேசிப்பேசி படுக்கையில் படுத்து கண்களை மூடினால் வெண்ணிலா வெண்ணிலா அவள் ஒருத்தி மட்டுமே வேறு எதுவும் வராதபடி பார்த்துக் கொண்டார்..
கிட்டத்தட்ட வெண்ணிலா பித்தை உருவாக்கி விட்டார் பாட்டி..அதிலும் அவரே அவரது பேரனை அருகில் அமர வைத்து வெண்ணிலாவின் அழகை பற்றி வர்ணிக்க மனுக்கு சொல்லவா வேண்டும் அவனும் அவருடன் கூட்டு சேர்ந்து கொண்டு அவளை சைட் அடிக்க துவங்கினான்...
ஆம் செல்லக்கிளிக்கு இவர்களது வாழ்க்கையை சரி செய்து விட்டு தான் அவரது பேரன் செழியனின் வாழ்க்கையும் சீர்படுத்த வேண்டி இருந்தது...இனியும் காலம் தாழ்த்தினால் எதுவும் நடக்க கூடாதது நடந்து விட போகிறது என்று நினைத்து அதற்கும் ஒரு முடிவு செய்து வைத்திருந்தார்...
ஆனால் மனுவுக்கு அப்படி அல்லவே அவனுக்கு முதலிலேயே அவன் ஒரு குழப்பத்தில் இருந்தவன் செழியன் மற்றும் மாயா விஷயத்தை எல்லாம் கேட்ட பிறகு அவனுக்கே தெரியாமல் வெண்ணிலாவின் பால் அவன் மனம் சரிய தொடங்கி இருந்தது..
அந்த சமயம் பார்த்து இவளுடைய அருகாமையும் சேர்ந்து அவனை குழப்ப அவன் ஒரு வாரமாக யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான், " என்ன ஆனாலும் இவளை எவனுக்கும் விட்டுக் கொடுப்பதில்லை"... என்று இந்த வெண்ணிலா மனுவுக்கு மட்டுமே என்று அவன் முடிவு செய்து விட்டான்..
"என் பொண்டாட்டி அவ..வேற எவனுக்கும் அவளை விட்டுக்கொடுக்க முடியாது ...அந்த அசோக் அப்புறம் எவன் வந்தாலும் அவளை விட போவதில்லை.."... என்று முடிவுக்கு வந்தான் அதிலும் அவனது முடிவுகள் எல்லாமே தீடீர் தீடிரென தானே அது போல வேகமாக தன் மனதை மாற்றி கொண்டான்..
"அவ மனசில் நான் இருக்கிறேனான்னு எனக்கு தெரியாது ஆனால் இந்த நிமிஷம் என் மனசில் இப்போ அவ இருக்க அதே மாதிரி அவ மனசுக்குள்ள நுழைவேன் அதே போல நான் அவளுக்குள் இருக்கேன்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷம் உன்னை என்னுடையவளா ஆக்கிப்பேன் நிலா"... என்று கனவில் அவளுடன் உரையாடினான்...
ஆனால் அவனுக்கு ஒரே ஒரு வருத்தமே நிலா அசோக்கை அல்லவா விரும்புகிறாள் எப்படி அவள் மனதை மாற்றுவது என்று அவனுக்கு புரியவில்லை..அது அவனது நினைப்பு மட்டும் தான் என்பது அவனுக்கு தெரியாதே..
என்ன இருந்தாலும் அவளை எவனுக்கும் விட்டு கொடுப்பதில்லை ..அவனை காதலிச்சில இனி என்னை காதலிக்கட்டும் நிலா நீ எனக்கு தான் டி என் பொண்டாட்டியை எவனுக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டான்..
ஆனால் அதிலும் ஒரு சிக்கல்...அவனுக்கு அவளிடம் எப்படி தன் காதலை கூறுவது ..எப்படி அவளை அவனுடைய வழிக்கு கொண்டு வர வைப்பது மற்றும் எப்படி அவளை அவனை பார்க்க வைப்பது என்பது அவனுக்கு மிக பெரிய மலைப்பான விஷயமாக தான் தெரிந்தது...
