Share:
Notifications
Clear all

மன்மதன் 37

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 37

  அவளிடம் அவளது முகத்தைப் பார்த்து , "திரும்பவும் ஒரு முறை யோசித்து பார்... கொஞ்சம் வேணாம் சமயம் எடுத்துக்கோ ..அதுவரை நான் உன்னை தொல்லை செய்ய மாட்டேன்"...என்று கூற

அவளோ தீர்க்கமாக அவனை பார்த்து, " நான் சொல்லிட்டே இருக்கேன் உங்களுக்கு என்ன புரியவே மாட்டேங்குது என்ன உங்க பணம் திருப்பிக் கிடைக்காதுன்னு நெனைக்கரீங்களா??? "...

"பணம் பணம் அதைபேசிட்டு இருக்காத... பணத்துக்கு வேண்டி நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கல"...

" வேற எதுக்கு வேண்டி கல்யாணம் பண்ணிட்டீங்க சொல்லுங்க"...

அவன் மீண்டும் மீண்டும் அவள் அதுவே கூற அவனுக்கும் கோபம் வந்து , "உனக்கு என்ன என்கூட வாழக்கூடாது அதுதானே கிளம்பு"... என்று கூற

அவனும் ஆண் மகன் தானே எவ்வளவு நேரம் தான் பொறுத்து போவான் அவனது பொறுமைக்கும் எல்லை உண்டு தானே அது எல்லை கடக்க அவளை போக சொல்ல,

அவ்வளவு அதுவரை போராடி கொண்டிருந்த அவளுக்கு திடீரென அவன் கிளம்பு என்றதும் ரோசம் வந்தது அப்படித்தான் அவள் அந்த வீட்டு படியை விட்டு இறங்கினாள்..

வீட்டார் அனைவரும் செழியனை துளைக்க அப்போதும் தன் மனைவியை விட்டு கொடுக்காமல், " அது என்னோட தனிப்பட்ட விஷயம்..இதை பத்தி யாரும் அவ கிட்ட பேச கூடாது".. என்று கூறி அவர்களை எல்லாம் அடக்கி விட்டான்..

மாலதியும் அங்கே இருந்து வெளியேறியவள் அவளது தாய் தாமரையிடம் , "கல்யாணம் தானே பண்ணிக்க சொன்ன அது தான் பண்ணிட்டேனே இனி நீ தலையிடாத".. என்று கூற அவளுக்கு முன்னே விஷயத்தை செழியன் தாமரையிடம் கூறி அவளிடம் எதுவும் கேட்க கூடாது எதுவும் சொல்ல கூடாது என்று கூறவும் மேற்கொண்டு எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியாக சென்று கொண்டு இருந்தது..

இடையிடையே தாமரையின் குத்து வாக்கை கேட்டு கொண்டு தான் அவள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்..

ஆனால் தாமரை மாலதியை விட பெரிய பிடிவாதக்காரி ஒரு ரூபாய் கூட மகளிடம் இன்று வரை கை நீட்டி வாங்காமல் தன் மருமகன் தனக்காக கொடுக்கும் பணத்தை கொண்டு தான் வாழ்ந்து வருகிறார்..

அவள் அதை கேட்கும் போது ,"உனக்கு அம்மாவா உன் கூட உன் துணைக்கு இருக்கேன்..மத்தபடி உன் காசுல வாழ முடியாது "..என்று முகத்தில் அடித்தது போல கூறி விட்டார்..

மேலும், " நீ வேண்டுமானாலும் அவங்க செஞ்சதை மறந்து இருக்கலாம் என்னால மறக்க முடியாது "...என்று கூற அவளோ வாயை மூடிக் கொண்டாள்..

இடையே ஆறு மாதம் முன்பு கல்லூரி வாயில் முன்பு அவளை கண்டாள்..அதுவும் அவளது அம்மாவுக்கு பணம் கொடுத்து மேலும் எனக்கு பாரத்தை சேர்க்க வேண்டாம் என்று கூறவே அதை கேட்ட செழியனும் மேற்கொண்டு எதுவும் கூறாமல் அவள் மனது மாறட்டும் என அமைதியாக இருந்தான்...அதன்பிறகு தாமரைக்கு பணம் கொடுப்பதை கூட அவளுக்காக நிறுத்தி விட்டான்..அதன் பிறகு அவர்களுடன் இருந்த தொடர்பை கூட விட்டு விட்டான்...

அவனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை அவளுக்கு நான் ஒரு நிமிடம் கூட நல்லவனாக தெரியவில்லையா என்பது இன்று வரை அவனுக்கு புரியாத புதிர் என்ன இருந்தாலும் எவ்வளவு நாட்கள் ஆனாலும் அவளே என் மனைவி அதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை மட்டும் உறுதியாக கொண்டுள்ளான்..

இதை எல்லாம் விட  இன்று காலை மாலதியின் சம்பாத்தியத்தில் புதிய ஸ்கூட்டி வாங்கி இருப்பாள் போல ஓரளவு ஓட்டி பழகி இருந்தவள் இன்று தான் கல்லூரிக்கு சென்று இருக்க செல்லக்கிளியின் கட்டளையின் பேரில் மனுவின் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தான்...

அப்போது எப்போதும் அவன் சென்னை வந்தாலே தன் மனைவியை அவள் வேலை செல்லும் கல்லூரி வாயிலில் இருந்து அவள் காணாத படி மறைவாக ஒளிந்து இருந்து பாரத்து செல்லும் அவன் அதே போல இன்றும் கல்லூரி வாயிலில் நிற்க மாலதியும் வந்தாள்..

புது வண்டியை ஒட்டி கொண்டு வந்தவள் பின்னால் அவன் காரில் அவளை பின் தொடர அப்போது எதிரே வந்த லாரியை கண்டதும் இவளுக்கு கொஞ்சம் பயம் வந்து வண்டியை இவள் ஸ்லோ ஆக்கவும் அவளுக்கு பின்னால் இருந்து வந்த வேறு ஒரு பைக்கில் வந்தவன் அவளது வண்டியின் பின்னால் எதிர்பாராத வகையில் மோத இவள் பயத்தில் வண்டியை ஒடித்து நிலை தடுமாறி கீழே விழுந்தாள்..

நொடி பொழுதில் எல்லாம் நடந்து முடிந்து விட , "மாலதி".. என்று கத்தி வண்டியை விட்டு இறங்கியவன் ஓட அதற்குள் அவள் கையின் மீது புத்தம் புதிய வண்டி விழுந்து கூட்டம் கூடி விட்டது..

இவன் பதறி ஓடி வரவும் பயத்தில் மாலதி மயக்கமானாள்...அதுவும் அவனை பார்த்து கொண்டே அவனவன் வந்து விட்டான் என்ற தைரியத்தில் அவள் மயங்க அவள் கண் விழிக்கும் போது அவனது கையில் பூமாலையாக இருந்தாள்..

அதுவரை அவன் துடித்த துடிப்பு அவனுக்கு மட்டுமே தெரியும்... மருத்துமனையில் இருந்து மனுவின் வீடு அருகே இருந்ததாலும் அவளுக்கு ஓய்வு தேவை என்பதாலும் அழைத்து வர வண்டியில் அமர்ந்தது முதல் கத்த தொடங்கியவளின் பேச்சை கேட்காமல் அழைத்து வர அப்போதும் அவள் அவனை அவமானப்படுத்தி விட்டு செல்ல இதற்கு ஒரு விடிவே இல்லையா என்பது போல செழியன் எண்ணி கொண்டு இருந்தான்..

ஒரு வழியாக மாலதியை அவள் வீட்டில் இறக்கி விட்டு காருக்குள் தன் அண்ணனின் வாழ்க்கையை எண்ணி அழுது கொண்டு இருக்கும் வெண்ணிலாவிடம் அவன் விசாரிக்க அவள் நடந்த விஷயத்தை மனுவிடம் கூறினாள்..

அவளும் அந்த நேரத்தில் இருந்த மனநிலையில் எல்லாம் கொட்டி விஷயத்தை கேட்டவனுக்கு முதன் முறையாக செழியன் மீது நல்ல அபிப்பிராயம் வந்தது கூடவே இவனை போன்ற ஒருவனை புரிந்து கொள்ளலாமல் இருக்கும் மாலதியின் மீது வருத்தமும் வந்தது..

அந்த நொடி தான் அவனுக்கு ஒரு உண்மை சுட்டது காதலித்து தான் மணந்து கொள்வேன் என்று இருந்தவனுக்கு அந்த வாய்ப்பு கடவுள் கொடுக்கவில்லை ஆனால் காதலிக்க அருமையான மனைவியை கொடுத்து இருக்கிறார்கள் என நினைத்தான்..

என்ன தாம் இப்படி நினைக்கிறோம் என்று அவன் நினைக்க அப்போது அவன் முன் கடந்த இரு காதல்கள் அவனை மெய் சிலிர்க்க வைத்தது ...

நீ நினைப்பது அல்ல காதல் இதோ காதலுக்காக நாங்கள் காத்து கொண்டு இருக்கிறோமே இது தான் உண்மையான காதல்  என்று மாயா மற்றும் செழியனின் காதல் கதை அவனுள் பெரிய மாற்றத்தை உருவாக்கியது...அந்த மாற்றம் கூடிய விரைவிலேயே நல்ல மாற்றமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..

மல்லிகை மணம் வீசும்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top