Share:
Notifications
Clear all

மன்மதன் 36

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 36

மன்மதன் தேசத்து மல்லிகை

    கல்யாணம் என்பது இரு உடல்கள் மட்டும் இணைவது அல்ல முதலில் இரு மனங்கள் அல்லவா சேர வேண்டும்..இங்கே மனங்கள் ஆளுக்கு ஒரு திசையில் இருக்க எங்கே சேர்வது???..

மாலதி இவனை வேண்டாம் என்று நினைத்தே இந்த திருமண பந்தத்தில் இணைந்து இருக்க அவளால் அவனை அனுசரித்து செல்ல அவனோடு இணைந்து வாழ்க்கையை மேற்கொண்டு வாழ அவள் மனம் ஒப்பு கொள்ளவில்லை..

அவளுக்கும் ஆசைகள் இருக்கும் அவன் உதவி செய்தான் , அவனது குடும்பம் உதவி செய்தது என்ற ஒரு காரணத்திற்காக அவளால் இந்த திருமணத்தை திருமணமாக எண்ணி பார்க்க முடியவில்லை..ஏதோ தாயின் நிர்பந்திற்காக அவள் மணம் புரிந்தாலும் அவளால் ஒப்பு கொள்ள இயலவில்லை..

செழியனை அவளது கணவனாக இதோ அவனது அறையில் அவனுக்காக காத்து இருக்கும் போது கூட அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை..

அவளை பொறுத்தவரை அவன் படிக்காதவன் ,கோபக்காரன்,முரடன் இப்படி ஒருவனை கணவனாக அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை அவள் அளவில் அவள் நினைப்பது நியாயமே...

ஆனால் அவன் செய்த உதவியை மனதில் வைத்து கொண்டு சூழ்நிலை கைதியாக அவள் இங்கே அமர்ந்து இருக்க ஆனால் செழியனுக்கோ மாலதி என்பது அவனை பொறுத்தவரை கிட்டத்தட்ட பதினெட்டு வருட ஆழ் மனது நேசம் ..

அவளிடம் அவன் கண்களை பார்த்து உரையாடியது இல்லை..நேரில் பேசியது இல்லை..இவ்வளவு ஏன் தன்னுடைய காதலை அவளிடம் வெளிப்படுத்த கூட இல்லை..அதனால் அவள் படிப்பு பாதிக்க பட கூடாது என்றே அவன் ஒதுங்கி இருந்தான் மேலும் அவள் தன்னவள் ஆன பின்பு தான் அவளிடம் முழுதாக தன் மனதை காட்ட வேண்டும் என்று எண்ணி இருந்தான்..

செழியன் முரடன் தான் கோபக்காரன் தான் ஆனால் அதே நேரம் பாசக்காரன் கூட..அவனின் விருப்பமானவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவனால் தாங்கி கொள்ள இயலாது...

அதன் படியே அவன் தனது உயிர் நண்பனுக்காக செல்ல அங்கே தன் நண்பனை தாக்கியவர்களை புரட்டி எடுத்த பின்னே அவன் மனது சாந்தி அடைந்தது...அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே..

கடந்த திருவிழாவின் போது ஊர் பெண்கள் மீது மது அருந்தி விட்டு கை வைக்க அதை கண்ட செழியன் மற்றும் பசுபதி அடித்து நொறுக்கி இருந்தனர்..இதை பார்த்த மாலதியோ செழியன் முரடன் என முடிவு செய்து முகத்தை சுழித்தாள்..

இதை எல்லாம் தெரியாமல் மாலதி செழியனுக்காக காத்து இருக்க செழியனும் இரவு ஒரு மணி எனும் போது அவர்களது அறைக்குள் வந்தான்..

அதுவரை நடந்து முடிந்தவையை பற்றி நினைத்து களைத்து போய் இருந்தவனுக்கு புத்தம் புதிய மலரை போல மாலதி அழகாக அவனுக்காக அவனுடைய கட்டிலில் அமர்ந்து கொண்டு அவளுடைய கை நகத்தை சுவைத்து கொண்டு இருக்க அதை கண்டவனுக்கு உள்ளுக்குள் அவள் மீதான நேசம் ஊற்று எடுக்க மெல்ல அவள் அருகே வந்தான்..

கதவு திறந்த ஓசையை கேட்டதும் எழுந்து அவள் நிற்க அதுவரை என்னென்னவோ யோசித்து வைத்து இருந்த மாலதிக்கு ஆஜானுபாகுவாக செழியன் வரவும் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கி கொண்டது..

அவனோ அதை வெட்கம் என எடுத்து கொண்டு சட்டையை கழட்டி ஹாங்கரில் மாட்டி வைத்து விட்டு அவள் அருகே நெருங்கி வர அவளோ கொதித்து எழுந்து விட்டாள்..

"என்ன தைரியத்தில் நீங்க என் பக்கத்தில் வரீங்க??"...

அவனோ , "என்ன ஆச்சு ..ஏன் இவ்ளோ பதட்டம்..நான் உன்னை கவனிக்காமல் வெளியே போயிட்டேன்னு கோபமா ??"...என்று கேட்க,

"நீங்க எங்கே போனா எனக்கு என்ன?? நீங்க எங்கே போய் ரௌடித்தனம் பண்ணினா எனக்கு என்ன??அதே மாதிரி ரௌடித்தனம் பண்ணி தானே என்னை கல்யாணம் பண்ணி இருக்கீங்க..சாரி பணம் கொடுத்து வாங்கி இருக்கீங்க அப்படி தானே"... என்க..

அவனோ ,"என்ன உலறிட்டு இருக்க"... என்று கூறினான்...

"ஆமாம் நான் உலறிட்டு இருக்கற மாதிரி தான் உங்களுக்கு தெரியும்.. நான் படிச்ச படிப்புக்கு எனக்கு ஏத்த ஆளா நீங்க...உங்க ரௌடித்தனத்துக்கு நான் எப்படி சேருவேன் சொல்லுங்க அதை பத்தி நீங்க எப்போவாச்சும் நினைச்சு பார்த்தீங்களா??"...  என்று பொரிந்தாள்..

அவனோ அதுவரை அவள் மேல் எழுந்த தாப உணர்வு அறுபட்டு பதினெட்டு வருட ஒரு தலை காதல் அவனை பார்த்து சிரித்து கொண்டு இருந்தது..

அதுவரை இருந்த மென்மை மெல்ல போய் முகம் முழுவதும் கல் போன்று இறுகி இருக்க அவள் முன்னே வேட்டியை மடித்து கட்டி மார்பில் கையை கட்டியபடி அவளை ஏறிட்டு பார்த்து , "அதுக்கு இப்போ என்ன செய்யணும்னு சொல்ற ??" என்று கேட்க,

"எனக்கு உங்ககிட்ட இருந்து விடுதலை வேணும்"... என்றாள்..

"நான் சொல்றதை கொஞ்சம் கேளு".. என்று கூற

அவளோ கேட்பதாக இல்லை, " என்ன சொல்ல வரீங்க நீங்க இப்படியே உங்க கூட வாழ்ந்து வயகாட்டில வேலை செய்ய சொல்றீங்களா??

நான் ஒத்துக்கறேன் உங்க வீட்டு பணத்தை வெச்சு தான் நான் படிச்சேன்...அதை திருப்பி கொடுத்திடறேன்..ஆனால் படிக்காத உங்க கூட என்னால வாழ முடியாது".. என்று கத்த

"படிப்பு மட்டும் தான் காரணமா".. என்று கேட்டான் அவள் திரும்ப திரும்ப அவனிடம் இருந்து விலகுவதை நினைத்து அவன் அப்படி கேட்க,

அவளோ , "ஆமாம் யாரும் என் மனசை புரிஞ்சிக்கலை என்னோட அம்மா உயிரை விடுவேன்னு சொன்னதுனால தான் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் இல்லாட்டி செய்து இருக்க மாட்டேன்..மத்தபடி என் மனசில் யாரும் இல்லை"..என்றாள்..

"உனக்கு உதவி செய்ததுக்கும் இந்த கல்யாணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல"....

"இருக்கு..அப்படி தானே என் அம்மா உங்கள கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க
ஏன் நீங்க உதவி செஞ்சா எல்லாரும் நீங்க இப்படி தான் கல்யாணம் பண்ணிட்டீங்களா இல்லை என்ன மட்டும் தானா சொல்லுங்க

  நீங்க பணம் தான் கொடுத்து உதவி செஞ்சு இருக்கீங்க..அதுக்கு உண்மையாலுமே நான்,  எங்க குடும்பம் உங்களுக்கு கடன்பட்டு இருக்கு அதுக்காக என் வாழ்க்கையே உங்களுக்காக அர்ப்பணிக்க முடியாது அந்த அளவுக்கு நல்ல மனசு எனக்கு கிடையாது உங்களுக்கு நான் இதை எப்படி சொல்லி புரிய வைக்கிறது எனக்கு தெரியல..

ஆனா இதுதான் உண்மை நான் வந்து சுயநலமா பேசுறேன்னு நீங்க நினைக்கலாம் ஆனால் எனக்குன்னு சில விதிமுறைகள் இருக்கு அதுக்கு தகுந்த மாதிரி தான் நான் வாழ முடியும் எனக்கு என்னோட கணவன் படிச்சிருக்கணும் நல்ல வேலைக்கு போகணும் நானும் வேலைக்கு போகணும் ஊர்ல ஒரு அந்தஸ்து வேணும் அப்டின்னு ஒரு சின்ன சின்ன கனவுகள் ஆசைகள்  இருக்கு ..

எனக்கு இந்த வயக்காடு , இந்த சண்டைக்கு நடுவில் ஏன் இன்னிக்கி கூட  நீங்க சண்டைக்கு போறீங்க இப்பத்தான் வரீங்க ..

இந்த மாதிரி என்னால இருக்க முடியாது இதெல்லாம் உங்களுக்கு சுயநலமா தெரியுது ஆனா எனக்கு வந்து என்னோட ஆசை அது நடக்காதது  ஏமாற்றம் தான் "...என்று படபடவென பொரிய

அவனுக்கு எல்லாமே விளங்கிவிட்டது இவளிடம் காதல் இல்லை நேசம் இல்லை பாசம் இல்லை எதுவுமே இல்லை ஏதோ கடமைக்கு என்று அவள் அம்மா நிர்பந்ததின் பேரில் திருமணம் செய்திருக்கிறாள் என்று புரிந்துகொண்டான்.. இனி  அவனுடைய காதலை கூறினால் அவள் இந்த சமயம் எந்த அளவுக்கு அது உணர்வால் என்பது அவனுக்கு தெரியாது..

அதனாலேயே அவள் மீது அவன் வைத்து இருந்த காதலை 18 வருடம் இப்படி புதைத்து வைத்து இருந்தாலும் அது போலவே மீண்டும் தன்னுள்ளே வைத்து கொண்டான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top