மன்மதன் 35
அத்தியாயம் : 35
தன் தாய் உயிரை விடுவேன் என்று கூறியதாலே திருமணம் நடந்ததை எண்ணியும் இதோ எதையோ சாதித்து விட்டது போல தன்னருகே நெருங்கி நின்று போட்டோக்கு போஸ் கொடுத்து கொண்டு இருக்கும் செழியன் மீது கோபம் வந்தது...சிறுக சிறுக பணம் கொடுத்து வாங்கப்பட்ட பொம்மை போல அவள் உணரபட்டாள்..
அதிலும் கல்யாணத்திற்கு வந்த பலரும் பொண்ணு பெரிய படிப்பு படிச்சு இருக்கு இனி இங்கே வயகாட்டில அந்த பொண்ணு அப்பன் மாதிரி வேலை செய்யலாம் என சிலர் கேலி எல்லாம் செய்ய ஆரம்பத்திலே நொந்து போயி இருந்தவளுக்கு இந்த செய்தி பெரிய உவப்பாக இல்லை..
அவர்களின் கேலி எல்லாம் செழியனின் மீதே பாய தலை குனிந்து நின்று கொண்டு இருந்தாள் ..உறவினர்களின் அத்துமீறிய கேலி செழியனுக்கும் பிடிக்காமல் போகவே , "அது என்ன நீங்க அப்படி சொல்லிட்டிங்க எதுக்கு மாலதி வேலை செய்யணும் அவ தான் எங்க வீட்டு மகா ராணி ..அவ எல்லாம் எங்கேயும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை..என் பொண்டாட்டியை உக்கார வெச்சு சோறு போடுற அளவுக்கு திறமை என்கிட்ட இருக்கு"..என்று ஒரே போடாக போட அதுவும் அவள் மனதில் தவறாகவே பதிந்து போனது...
ஆம் அவளுக்கு படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்பது கனவாக இருக்க அதற்கு இவன் தடை போடுவானோ என்று அதுவும் ஒரு காரணமாக குறித்து வைத்து கொண்டாள் மாலதி...
அவனுடன் தனியாக பேசுவதற்காக காத்து இருந்த மாலதிக்கு இரவு வரை அவனை காண இயலவில்லை...
வெண்ணிலா மட்டும் மாலதி பின்னாடியே அண்ணி, அண்ணி என்று வலம் வர அவளிடம் மட்டும் இலேசாக புன்னகை புரிந்தாள் மாலதி..செல்லக்கிளி மற்றும் வெண்ணிலாவின் அம்மா எல்லோரும் அவளை தாங்கு தங்கு என்று தாங்கினர்..
அவர்களுக்கும் மாலதி தங்கள் வீட்டு மருமகள் ஆனதில் சந்தோஷமே அவளுக்கும் சிறு வயதில் இருந்து அவள் பார்த்து வளர்ந்த குடும்பம் என்பதால் அவளுக்கு தனித்துவிடப்பட்ட உணர்வு ஒன்றும் எழவில்லை...
ஆனால் மாலதியின் மனம் உலைகலன் போல கொதித்து கொண்டு இருந்தது..அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்ற நிலையில் இருக்க செழியனிடம் பேசியே ஆக வேண்டும் என்று அவள் இருந்தாள்..
அதற்குள் இரவு ஆனதும் வெண்ணிலாவின் அம்மா மாலதியை தயார் செய்து செழியனின் அறைக்கு அனுப்பி வைக்கும் போது செழியன் அந்த அறையில் இருந்து கோபமாக வெளியேறினான்.. அதுவும் சாந்தி மூகூர்த்த அறையில் இருந்து அவன் வெளியேறுவதை கண்ட செல்லக்கிளி , "எங்கே யா போற"..
"எனக்கு ஒரு வேலை இருக்கு நான் வந்திடறேன்"..என்று பொதுவாக ஒரு பதிலை அளிக்க,
"தம்பி இப்படி வெளியே போக கூடாது ராசா..எதுவா இருந்தாலும் காலையில் பார்த்துக்கலாம் "..என்று நயமாக கூற
"இல்ல அப்பத்தா போயே ஆகனும்..எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு"... என்று நின்று பேசுவதற்கு கூட சமயம் இல்லாமல் ஓடி கொண்டு இருக்கும் மகனை பார்த்து,
"என்ன டா விஷயம்??அது தான் அத்தை சொல்றாங்களே" ..
"நம்ம பசுபதியை யாரோ அடிச்சுட்டாங்களாம்
.ஹாஸ்பிடல்ல இருக்கான்..அந்த ராக்கையன் கும்பலா தான் இருக்கும் போன திருவிழால நான் அவனோட ஆளுங்களை அடிச்சத்துக்கு இன்னிக்கு சமயம் பார்த்து காத்து இருந்து என்னை அடிக்க முடியாதுன்னு தெரிஞ்சு பசுபதியை அடிச்சு இருக்காங்க பொட்ட பயலுங்க அவனுங்களோட தோளை இன்னிக்கு உரிக்கல என் பேரு செழியன் இல்ல...நான் யாருன்னு காட்டறேன் அவனுங்களுக்கு"... என்று கூறி விட்டு இடுப்பில் ஒரு கத்தி போன்ற ஏதோ ஒரு ஆயுதத்தை சொருகி விட்டு யார் கேள்விக்கும் காத்து இராமல் சென்றான் செழியன்..
அவனது செய்கையை கண்ட மாலதியோ அதிர்ந்து சிலை போல நின்றாள்..அவள் வாழ்க்கை இப்படி தானா தொடங்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது...
மல்லிகை மணம் வீசும்…
