Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 9

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 9

மான்ஸ்டரும் மான்விழியும்

அடர் பச்சை நிற புடவை உடுத்தி பச்சையும் வெள்ளைக் கற்கள் பதித்த வைர ஆபரணங்கள் அணிந்து கேசம் மணக்க மல்லிகை சூடி தேவலோக ரம்பை போல முன் காலத்தில் ராணி எப்படி இருப்பாளோ அதே போன்ற அலங்காரத்தில் மெல்லிடையாள் ஆரபி கையில் வெள்ளிச் சொம்புடன் அன்னநடை நடந்து வந்தாள்..

இதோ அவளை இரண்டு பணியாளர்கள் தயார் செய்து அவளது கணவன் கடம்பனின் அறைக்கு அழைத்து வர அவளோ நடக்கவே தெரியாதது போல நடந்து வந்தாள்..

அவளுக்கு இந்த ஆடையும் அலங்காரமும் எதற்கு என்று தான் தோன்றியது..கருப்பு தினம் அனுசரிக்கவா இந்த அலங்காரம் இந்த பால் எதற்கு பிணத்திற்கு ஊற்ற வா ?? இதோ மனதளவில் பிணம் போலத்தானே நானும் உள்ளேன் என அவள் யோசித்துக் கொண்டே நடந்து வர இதோ அவளது கணவனின் அறையையும் அடைந்து விட்டாள்..

ஆனால் ஏனோ இன்று காலை நடந்த சம்பவத்தை எண்ணி அவளது கை கால்கள் விரைக்கத் தொடங்கியிருந்தது.. இவனுக்கு என்னை பிடிக்கவில்லையா இல்லை காதல் என்ற மாய வலையில் என்னை சிக்க வைத்து விட்டானா இல்லை நான் தான் இதை காதல் என்று எண்ணி பைத்தியக்காரத்தனமாக இவனை நம்பி வந்து விட்டேனா என நினைத்தவளுக்கு அவளது நண்பன் ரிஷி கூறியது ஞாபகத்துக்கு வர ,

அந்த நொடி அவளுக்கு தன் நண்பர்களை காண வேண்டும் என்று அவளது மனம் ஏங்கியது பெற்றோர்கள் இருந்து இருந்தார்கள் எனில் பெற்றவர்களை காண வேண்டுமென அவளுக்கு தோன்றி இருக்கும்..

அவளுக்குத்தான் யாருமில்லையே இதோ இந்த நொடி பொழுது நண்பர்கள் மட்டும் தான் அவளுடைய சொந்தம் அவளுக்காக என்ன நடந்தாலும் வந்து முன்னால் நிற்க போகிறவர்கள் அவர்களே.. அவர்களை காண வேண்டுமென அவளுக்கு தோன்றியது ஆனால் அது முடியாதே அவள் தான் கடல் கடந்து வந்து மாட்டி கொண்டாளே..

இதோ பணியாளர்கள் அவளை அவனது அறையின் வாயிலில் அவளை நிறுத்தி விட்டு கதவை இருமுறை தட்டிவிட்டு அவர்கள் மாயமாக மறைந்து விட்டனர்..

நொடிப்பொழுதில் கதவும் திறந்து கொள்ள அவளுக்கு உள்ளே செல்லலாமா வேண்டாமா என தலையை குடைந்தது.. வாசலிலேயே நிற்க, " எதுவாக இருந்தாலும் உள்ளே வந்து யோசி "..என்ற கம்பீரமான குரல் அவளுக்கு கேட்டது அது அவனேதான்..

அவள் நிமிர்ந்து பார்க்க நான்கு பேர் படுக்க கூடிய அளவில் மிகப்பெரிய படுக்கையில் ஆஜானுபாகுவாக ஒற்றை மனிதனாக அவன் தலைக்கடியில் தலையணையை கொடுத்து காலை நீட்டியபடி கைகளை கட்டிக்கொண்டு அவளை அணு அணுவாக பார்த்துக்கொண்டு இருந்தான்..

" என்ன பார்வை இது அவளை விழுங்கப் போகும் பார்வையா இல்லை வேட்டையாட துடிக்கும் பார்வையா அவளுக்கு புரியவில்லை.. ஆனால் அவனது கண்களில் அவள் தேடிய காதல் இல்லை என்னவோ ஒன்று அவளுக்கு குறையாக தோன்றியது என்னவென்று அவளால் பிரித்தறிய முடியவில்லை..அவளோ அவன் அழைத்தும் உள்ளே வராமல் நின்று கொண்டிருக்க

"உள்ளே வா "...என்று மீண்டும் அவன் அழைத்தான்..

என்னதான் அவனுக்கு பிரச்சினை என கேட்டு விட வேண்டும் என்ற முடிவில் மனதில் ஒரு உறுதியை வைத்துக்கொண்டு அவனது அறைக்குள் வலது காலை எடுத்து வைத்தாள் ஆரபி..

அவள் உள்ளே நுழைந்ததும் கதவு பட்டென அடைத்துக் கொண்டது.. ஆட்டோமேட்டிக் சென்சார் கதவு போலும் அது தான் அவள் உள்ளே நுழைந்ததும் அடைத்து கொண்டது..

அவளோ கதவு பட்டென அடைப்பட்ட சத்தத்தில் ஒரு நொடி ஆரபி அதிர்ந்து திரும்பி பார்த்தவள் கதவு அடைப்பட்டதை எண்ணி கதவா என் எண்ணி அமைதி அடைந்து மெல்ல திரும்பி பார்க்க, அடுத்த நொடி அவன் அவள் அருகில் நின்று கொண்டிருந்தான்...

அவளோ அவனது அருகாமையை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என அவள் முகமே அவனுக்கு உணர்த்தியது.. அவனது கண்களோ அவளது முகத்திலேயே படிந்திருந்தன.. அவளது தலை முதல் கால் வரை இன்ச் இன்சாக அளவெடுத்தான் கண்களாலேயே அவளை கபளீகரம் செய்தான்...

மதியம் அவளை அனைவர் முன்னும் அவமானப்படுத்தி விட்டு இப்பொழுது காதல் பார்வை பார்க்கிறானோ?? காதல் பார்வையா இல்லை காம பார்வையா அவளுக்கு தெரியவில்லை ஏனோ அவனது அந்த பார்வையால் அவளது கை கால்கள் நடுங்கியது உடல் வெடவெடக்க அவனிடமிருந்து அவனது பார்வையில் இருந்து தப்பிக்க இரண்டு அடி பின்னோக்கி நகர்ந்தாள் அப்போதும் அவனது பார்வை அவளை துரத்தியது...

அதை கண்ட அவனோ, "கதவைத் திறந்து வெளியில் போயிருவேன் நினைச்சேன் இரண்டடி தான் எடுத்து வைக்கிறியா??"...என கூறியவன் ஒரு அடி எடுத்து வைத்தான் அதுவே அவளது உடல் உரசும் அளவுக்கு அவன் நெருங்க இன்னும் ஒரு துளி இடைவேளை அவர்களுக்கிடையில் இருந்தது அதுவும் அவளது கையில் அவள் பிடித்துக்கொண்டிருந்த பால் சொம்பாக இருக்க,

அவள் கையில் இருக்கும் சொம்பு அவனது எண்ணத்துக்கு தடையாக இருக்க மெல்ல அவளது கைகளைப் பார்க்க வெண்டை பிஞ்சு போல அவளது விரல்கள் பார்ப்பதற்கே மிருதுவாக இருந்தது..ஒரு பெண்ணின் விரல்களால் கூட அவனுக்கு போதையை உண்டாக்க முடியுமா இதோ உண்டாக்கி கொண்டிருக்கிறாளே??

அவள் கையில் இருக்கும் பால் சொம்பை ஏதோ பலத்திற்காக பிடித்து இருப்பாள் போல ..மெல்ல வெளியே தெரிந்த அவளது மூன்று விரல்களை பற்ற அவளோ திடுக்கிட, " எதுக்கு பயப்படுற அபி கல்யாணம் முடிஞ்சா இதெல்லாம் நடக்கிறது தானே??".. என்று அவ்வளவு கூலாக பேசினான்..

இவன் தானா கடந்த நான்கு நாட்களாக அவளை பாடாய் படுத்தியது என்ற நினைவு அவளுக்கு வர அது கனவு என்பது போல அவனது முகம் மென்மையாக இளகி இருந்தது..

"என்ன அபி அப்படி பார்க்கிற??".. என்று அவளது பெயரை சுருக்கி அவன் அழைக்க காதலிக்கும் போது கூட அவன் அவ்வாறு அழைத்தது இல்லை ..அவ்வளவு இனிமையாக இப்போது அவன் அழைத்தான்..

அவளோ இது கனவு தானா இல்லை நினைவா என்று மலங்க மலங்க அவனை பார்த்து விழிக்க அவளது பார்வையை பார்த்து சிரித்தவன், " என்ன பேபி கனவான்னு யோசிக்கறியா?? கனவல்ல நிஜம் தான்..வேணும்னா என்னை கிள்ளி பார் " என்று அவள் முன் அவனது உருண்டு திரண்ட புஜத்தை காட்ட அவளோ அவனது ஆண்மையின் மொத்த உருவமாய் அவள் அருகே நின்று கொண்டிருப்பவனை பார்த்ததும் அவள் முகம் செம்மையுற இமை குடையால் தன் விழிகளை மூடிக் கொண்டாள்..

அவளது வெட்கத்தை கண்டு அவனது ஒற்றை புருவம் மெல்ல தூக்க அவனது விழிகளோ நொடியில் சிவப்பாக மாறி இருந்தது.. மெல்ல அவளது கைகளில் பற்றிக்கொண்டு இருந்த பால் சொம்பை வாங்கி அருகில் உள்ள மேசையில் வைத்தவன் அவளது தோளை தொட்டு படுக்கைக்கு அழைத்து வந்தான்..

அவள் இந்தியாவிலிருந்து கடம்பஞ்சோலைக்கு வந்திறங்கிய போது இத்தனை மென்மையாக அவன் நடந்து இருந்தாலோ அல்லது அவர்களது கல்யாணத்தில் மென்மையாக அவன் நடந்து இருந்தாலோ அல்லது இன்று மதியம் அவன் மென்மையாக அவளிடம் இருந்து இருந்தாலோ அவளுக்கு இந்த பயம் வந்திருக்குமா வந்திருக்காதா என தெரியவில்லை அவளும் இலகுவாக இருந்திருப்பாள்..ஆனால் இப்போது முடியாமல் தவித்தாள்..

அதிலும் அவனது இந்த அபி என்ற அழைப்புக்கே அவள் அவனது தோள் சாய்ந்து இருப்பாள்.. ஆனால் இன்று ஏனோ அவளுக்கு மூச்சு முட்டியது பேச்சுக்கள் வராமல் போனது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top