மான்ஸ்டர் 8
அத்தியாயம் : 8
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் இதோ தனக்கு அருகே அமர்ந்து இருப்பவள் விருப்பம் இல்லை என்றாலும் நான் நினைத்ததை நடத்தி காட்டுவேன் என்று வேதங்கள் ஓதி கொண்டிருந்த கடம்பன் கடைக்கண்ணால் அவளை பார்க்க அவளது முகம் களையிலந்து போய் இருப்பதை பார்த்து மேலும் எரிச்சல் மெல்ல அவள் அருகே நெருங்கி அமர்ந்தவன் அவளது செவியில்,
" நீயா தான் என்னை தேடி வந்த நான் ஒன்னும் உன்னை கடத்தி கூட்டிட்டு வரல..இதை எதிர்பார்த்து தானே வந்த அப்புறம் ஏன் இந்த அழுகை என் குடும்பத்துக்கு ஒரு கவுரவம் இருக்கு அதை எந்த சூழ்நிலையிலும் கெடுக்க நான் விட மாட்டேன்..இது என்ன தெரு முனையில் இருக்கிற பிள்ளையார் கோவில்ல நடக்கிற திருமணம்னா நெனைச்சிட்டு இருக்க?? இது ராஜ வம்சத்து திருமணம் இங்கே நடக்கிற ஒவ்வொரு அசைவும் இந்த உலகத்துக்கே தெரியும் அதனால உன்னால சிரிக்க முடியலனாலும் நீ சிரிச்சு தான் ஆகனும் நீ சிரிக்கலைனாலும் இந்த கல்யாணம் நடந்தே தீரும்.. அதுனால இப்போ நீ சிரிச்சு இருக்க எனக்கு இந்த கல்யாணம் இப்போ இந்த நொடி நடக்கணும்".. என்று அவளது செவியில் ஈயத்தை பாய்ச்சி ஊற்றுவது போல அவன் கூற அவளோ அதன் பின் பொங்கி வழியும் கண்ணை துடைத்து கொண்டு அமர்ந்தாள்..
மனதிலோ அவருக்கு என் மேல ஏதோ கோபம் போல ஆனால் அவனுக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் தான் போல அவனுக்கும் என் மீது ஆழ் கடந்த நேசம் உள்ளது என நினைத்து கொண்டவள் ,
"திருமணம் முடிந்ததும் நான் உங்களை மீட்டு எடுப்பேன் எழில் இப்போ ஏதோ என் மேல கோபத்தில் இருப்பீங்க போல அது என்னனு தெரியல கண்டிப்பா உங்களை என்னால மாத்த முடியும் எழில் கண்டிப்பா மாத்துவேன்".. என்று மனதுக்குள் கூறி கொண்டிருக்கும் உற்றார்கள் ஊரார்கள் முன் வேதங்கள் முழங்க அரச குடும்பத்தின் இளவரசியாக அவளை தன்னில் சரி பாதியாக ஏற்று கொண்டான் கடம்பன்..
ஆம் அவளது வெண் சங்கு கழுத்தில் மங்கல நாணை பூட்டி தன்னில் பாதியாக ஏற்று கொண்டான்..அவன் மனதை பொறுத்தவரை அவளுக்கு அவன் அணிவிக்கும் வேலியே.. எந்த பக்கமும் அவளால் திரும்பி மூச்சு விட முடியாத படி அவளை தன்னுள் புதைத்து கொள்ளும் ஒரு யுத்தமே என அவன் முடிவு செய்ய அவளோ கடவுளே என்னுடைய எழில் எனக்காக என்னுடன் நூறு வருஷம் வாழனும் அதுக்கு என்ன தடையாக வந்தாலும் அதை எல்லாம் உடைத்து எறி ".. என அவள் மனதில் கூறி கொள்ள,
அந்த சமயம் பார்த்து சாலையில் பல கருப்பு நிற கார்களின் அணிவகுப்பு வர அதை கண்ட பாதுகாப்பு படையினர் அந்த அரங்கத்தையே சுற்றி வளைக்க அதில் ஒரு சிலர் காரில் இருந்து இறங்கவும் முயற்சி செய்ய முனைய கடம்பனின் பாதுகாவலர்கள் தடுத்து அவர்களை திருப்பி அனுப்பி விட்டனர்..
இதை கண்ட கடம்பனின் விழிகள் கோர தாண்டவம் ஆடி தன் கோபத்தை மறைக்க அரும்பாடுபட்டு நக்கல் சிரிப்பை அந்த கார்களில் குறிப்பிட்ட எண் கொண்ட வாகனத்தை பார்த்து சிரித்தவனின் விழிகளில் முழுவதும் கோபம் மட்டுமே மேலும் தலை குனிந்து நின்று இருந்த தன் மனைவி ஆரபியை அவளே சட்டென்று எதிர்பார்க்காத போது அவளை தன் அருகே இழுத்து அவளது இடுப்பில் கையிட்டு அந்த குறிப்பிட்ட எண்ணுள்ள வாகனத்துக்கு காட்டும் விதத்தில் திரும்பி நின்றவன் மேலும் அந்த கார் உறுமிக் கொண்டே இருக்க மேலும் உறுமட்டும் என நினைத்தான் போலும் தன் மனைவியின் இதழில் ஊரார் முன்னிலையில் முத்தமிட்டான்..
தன் முகத்தை தன் புறம் அவளது இடையை பற்றிய கரத்தை விடாமல் திருப்பியவன் சிவந்த அவளின் அதரங்களையும் அவளது பூ முகத்தையும் கண்டவன் நொடி பொழுதில் அவளது அதரங்களை தீண்டி இருக்க எதிர்பாராத இந்த இதழ் முத்தத்தில் அதிர்ந்தவள் தன் விழிகளை விரிக்க அவளது விழிகளை மேலும் விரிக்க அவனது இதழ் வன்மையான தீண்டியது..
இதுவரை அவன் அவளை தொட்டு தீண்டியது இல்லை..காதலிக்கும் போது கூட மிக கண்ணியமானவனாக நடந்து கொண்டான்..
ஆனால் இதுவே அவன் முதன் முறையாக தீண்டி இருக்கிறான் அந்த தீண்டலில் அவளுக்கு அவளது இந்த மூன்று நாட்களாக அவனது பாராமுகமாக இருந்தது எல்லாம் அவளது குழம்பிய மனம் எல்லாம் தெளிந்தது போல இருக்க இது போதும் எழில் உங்களை நான் மாற்றி விடுவேன் என நெனைத்தவள் மெல்ல அவனிடம் இருந்து விடுபட இவர்களின் இந்த முத்த காட்சியை கண்டு அனைவரும் ஆர்ப்பரித்தனர்..
அதை கண்ட அந்த காரில் இருந்து நபர் கார் கண்ணாடியை இறக்க முயல அதற்குள் பாதுகாப்பு படையினர் தங்களது துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட துவங்க அந்த கார்கள் வந்த வழியே பறந்தது..
அந்த கார்கள் சென்றதும் அவளின் மீது வைத்திருந்த கையை எடுத்தவன் அங்கே திரண்டு நின்று இருந்த மக்களுக்கு கையசைத்து அவளது கையை பிடித்து கொண்டு சென்று விட்டான்...
அந்த காட்சிகளை கண்ட இலந்தரையர் , "இங்கு என்ன நடக்குது இவர்கள் எதற்காக வருகிறார்கள் "..என்பது போல குழம்பி பார்க்க அதற்குள் கடம்பனின் வாகனம் பறந்து கொண்டிருந்தது..
அவரும் வீட்டுக்கு செல்ல அரண்மனையின் ராஜா கடம்பன் எனில் அவனுடைய மனைவி தானே இனி ராணி அவளுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டாமா சுமங்கலி பெண்கள் ஆரத்தி எடுக்க தாமரைக்கு என்ன தான் இதில் துளியும் விருப்பம் இல்லை என்றாலும் தன் மருமகளை வரவேற்கும் விதமாக நில விளக்கை கையில் கொடுத்து உள்ளே வர சொல்ல அவளும் அமைதியாக வாங்கி கொண்டாள்..
அதுவரை கடம்பன் இழுத்து வைத்திருந்த பொறுமை காற்றில் பறக்க தன் அருகே நின்று கொண்டிருந்த உதவியாளர்களிடம் ஏதோ சொல்ல அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அந்த பகுதி மட்டுமல்ல கண்ணுக்கு எட்டும் தூரத்தில் உள்ள அனைத்து வேலையாட்களும் மாயமாகி இருக்க அதற்குள் ஆரபி அரண்மனைக்குள் வலது காலை எடுத்து வைத்திருந்தாள் அவள் முன்னே செல்ல இவன் ஒரு அடி பின்னே சென்று கொண்டிருந்தவனின் பார்வையில் குடும்பத்தார் மட்டும் விழ வேகமாக அவளது கையில் தூக்கி பிடித்து பூஜை செய்யும் அறைக்குள் செல்ல முனைந்தவளின் கையில் இருக்கும் விளக்கை தட்டி விட்டான்..
அவனது எதிர்பாராத இந்த செயலால் அனைவரும் அதிர அனைவரின் முகத்தை பார்த்து முறைத்து விட்டு, " விளக்கு பிடிச்சு வரவேற்பு கொடுக்க இங்கே மகிழ்ச்சியான விஷயம் எதுவும் நடந்திடலயே..என்னை பொறுத்தவரை இன்னிக்கு என்னோட வாழ்க்கையில் ஒரு கருப்பு நாள்..அதுக்கான சடங்குகள் ஏதாவது இருந்தா செய்ங்க"... என்று கூறியவன் விறுவிறுவென்று அவனது அறைக்கு செல்ல,
அதை கேட்ட அனைவரும் அதிர்ந்தனர் என்றால் சற்று முன் ஆரபி அவள் மனதில் உருவாக்கி வைத்திருந்த மனோதிடம் எல்லாம் சுக்குநூறாக நொறுங்கி போவதை அவள் உணர்ந்து கொண்டு தான் இருந்தாள்..
மேலும் என்ன இவன் நொடிக்கு ஒரு முறை மாறி கொண்டிருக்கிறான் சற்று முன் கூட ஊரார் முன் முத்தமிட்டானே அது எல்லாம் பொய் என உரைப்பது போல கருப்பு தினம் என்று கூறி வெறுப்பை காட்டி விட்டு செல்கிறானே??
இவன் நான் நேசித்த என் காதலனா இல்லை கருப்பு தினம் என்று மற்றவர்கள் முன்னால் என்னை அவமானப்படுத்தி செல்லும் என் கண(ய)வனா??? என புரியாமல் அவள் அனைவரையும் பார்த்து விழிக்க ,
இந்த காட்சியை கண்டதும் தாமரைக்கு அவளை கண்டு வருத்தம் எழ மெல்ல மீயாழிடம் , "அவளுக்கு ஒரு அறையை ஒதுக்கி கொடு".. என்று கூறி விட்டு செல்ல, இலந்தரையரோ என்ன விஷயம் என அறிய கடம்பனின் அறை நோக்கி சென்றார்..ஒருவரும் அவளது பார்வைக்கு பதில் அளிக்கவில்லை..
விருப்பம் இல்லை என்றாலும் தாய் கூறியதற்காக அவள் அருகே வந்தவள் அவளது கலங்கிய முகத்தை பார்த்து என்ன நெனைத்தாலோ, " வாங்க "..என்றழைக்க கடம்பன் சென்ற திசையையே பார்த்து கொண்டு மியாவின் பின்னால் சென்றவளுக்கு ஒரு அறையை காட்டியவள் அவளது முகத்தை பார்த்து , "ஆழ்ந்த அனுதாபங்கள்".. என்று கூறினாள்..
முதலிலே கசங்கி இருந்தவள் இந்த வார்த்தையை கேட்டதும் பாவமாக மியாவை பார்க்க, "கடம்பனை தேவையில்லாமல் திருமணம் செய்து உங்க வாழ்க்கையை நீங்களே கெடுத்துகிட்டிங்க அதுக்காக ஆழ்ந்த அனுதாபங்கள் " என்று கூறியவள் அங்கிருந்து சென்று விட்டாள்..என்ன சொல்கிறாள் என்ன நடக்கிறது என்று புரியாமல் கடல் போன்ற அரண்மனையில் ஒரு ஓரத்தில் அவளுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறையில் முடங்கி போனாள் ஆரபி..
மான்ஸ்டர் வருவான்..
