Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 7

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 7

மான்ஸ்டரும் மான்விழியும்

கடம்பன் பதவி ஏற்றதில் இருந்து மூன்றாம் நாள் காலை ஊரே கூடியிருக்க ஒரு நாட்டை ஆளும் மன்னர் வீட்டு திருமணம் என்றால் சும்மாவா ?? ஆடம்பரத்துக்கும் குறைவு இல்லை..பொன் பொருளுக்கும் குறைவு இல்லை.. செல்வ செழிப்புக்கும் குறைவு இல்லை..அந்த திருமண சடங்கில் எந்த வித குறைவும் இல்லை ..

ஆனால் யார் மனதிலும் மகிழ்ச்சி என்ற ஒன்று இல்லாமல் தான் திருமண சடங்குகள் நடைபெற்று கொண்டிருக்கிறது..

"திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்...

ஆனால் இங்கு இரு இதயங்களும் வேறு வேறு பாதையில் அல்லவா பயணம் செய்து கொண்டிருக்கிறது..ஒரு இதயம் முழுவதும் வன்மையும் மற்றொரு இதயம் காதலையும் அல்லவா சுமந்து கொண்டு நிற்கிறது..

காதலை சுமந்து இருக்கும் இதயம் தன் காதலை எண்ணி கண்ணீரையும் அல்லவா சுமந்து கொண்டு இருக்கிறது..இந்த ஒரு நாளுக்காக அவள் ஏங்கியதோ பல நாட்கள் பல விடியா இரவுகளை கடந்து தன் காதலை கண்டு அவள் அடைந்த மகிழ்ச்சி துளியும் அவளுக்கு இப்போது இல்லை..

ஆம் கடந்த மூன்று நாட்களாக அவள் யோசித்து யோசித்து அவளது மூளை புண்ணாகி போனது தான் மிச்சம்..

அவனோ நான் தான் உன்னை இங்கு அழைத்து வந்தேன் என்கிறான்.. ஆனால் அவளிடம் சரியாக பேச மாட்டேன் என்கிறான்...அவளை அந்த வீட்டில் விட்டுவிட்டு சென்று விட்டதோடு சரி பின் அவள் என்ன ஆனால் என அவனுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை போலும் அவளை திரும்பி கூட அவன் பார்க்கவில்லை..

வேளா வேளைக்கு உணவு மட்டும் கனகச்சிதமாக வந்து விடும் வீட்டில் உள்ள யாரும் பணியாளர்கள் உட்பட அவளிடம் யாரும் உரையாடவில்லை..அவள் கேட்டால் பதில் அளிப்பதும் இல்லை..

நேற்று கூட இருவர் வந்து அவளுக்கு உடைகள் தைக்க அவளை அளவெடுத்து சென்றனர்.. அவளோ, " நீங்கள் யார் ??"..என கேட்ட போது,

பதில் அளிக்காமலேயே இருந்தவர்கள் இறுதியில், " எங்க வேலையை செய்ய விடுங்க மேடம்"... என்ற பதில் தர அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை..எதற்காக யாரும் என்னிடம் உரையாடாமல் இருக்கிறார்கள் என நெனைத்தவள்,

விதியே என அவள் அவர்களுக்கு ஒத்துழைத்தாலும் அவள் மனம் அவன் ஏன் தன்னை ஒதுக்கி தள்ளுகிறான் அதிலும் அவன் கார் கண்ணாடியை உடைத்தது கண்ணாடி ஜாடியை உதைத்தது அவளிடம் பாராமுகமாக இருப்பது இதெல்லாம் அவளுக்கு புதியது..அவனது இந்த முகத்தை அவள் கண்டதே இல்லை..புதிய ஒருவனை பார்த்தது போல அவளுக்கு அவனை காணும் போது தோன்றியது..

காதலிக்கும் போது இருந்த மென்மை இப்போது அவனிடம் இல்லாமல் போனது என்னவோ என பல விஷயங்களை ஆலோசித்து ஒன்றுக்கும் விடை தெரியாமல் கண்ணில் நீர் திரையிட அவனுக்கு அருகில் அமர்ந்து இருக்க,

அவனது முகமோ வெட்டி செதுக்கி வைத்திருந்த பாறாங்கல் போல இறுகி இருந்தது அதை பிறர் அறியாமல் அவன் மறைக்க அரும்பாடுப்பட்டு கொண்டிருந்தான் கடம்பன்..அவனது மனம் அவன் எதிரே உள்ள அக்னி குண்டம் போல கொதித்து கொண்டிருந்தது..

இதோ தன்னருகில் அமர்ந்து இருப்பவளை அந்த ஹோம குண்டத்தில் தள்ளி விட்டால் என்ன என்று கூட அவள் யோசித்து பார்த்து விட்டான்.. அவளை இப்படி ஒரேடியாக கொள்வதில் அவனுக்கு விருப்பம் இல்லை..அவளை அணு அணுவாக வதைக்க வேண்டும் என்பதே அவனது எண்ணமாக இருந்தது அதற்கு அவன் எடுத்திருக்கும் ஆயுதமே இந்த திருமணம் ஆகும்..

மேடையில் வீற்றிருந்த அனைவரும் பொறுமிக் கொண்டே அமைதியாக இருந்தாலும் ஒருத்தி மட்டும் வாய்விட்டே புலம்பினாள்..

அது வேறு யாருமில்லை மீயாழ் தான்.. மீயாழுக்கு முடியவில்லை இந்த காட்சியை அவளால் காண முடியவில்லை, " என்ன மா எல்லாமே அவனோட இஷ்டம் தானா?? எல்லாமே அவனுக்கு மட்டும் தானா ?? என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு?? நான் ஒருத்தனை காதலிச்சேன்னு சொல்லி அவனை இன்னிக்கு வரைக்கும் வீட்டு சிறையில் அடைச்சு வெச்சு இருக்கீங்க ..நான் மீறி ஏதாவது செய்தா அவனை கொன்னுடுவேன்னு மிரட்டி வெச்சு இருக்கீங்க ஆனால் ஊர் பேர் தெரியாத ஒருத்தியை உங்க மகன் காதலிக்கிறான்னு சொல்லி ஊரே திரண்டு அவனுக்கு கல்யாணம் செய்து வைக்குது?? இப்போ மட்டும் உங்க ராஜ குடும்பம் ஒன்னும் செய்யாதா இல்லை உங்க ராஜ குடும்ப புத்தகத்தில ஆம்பிளைங்க மட்டும் என்ன வேணா செய்யலாம்னு ரூல் இருக்கா சொல்லுங்க "...என்று அவள் குமுற

அதே குமுறல் தாமரைக்கும் இல்லாமல் இல்லை பெற்ற தாய் என்னையே யாரிடமும் பேசாமல் வீட்டில் அடைகாக்கும் பெட்டை கோழி போல வைத்திருப்பவனிடம் என்னவென்று சொல்வது அதிலும் ஆட்சி அதிகாரம் எல்லாம் அவனிடம் சென்று இருக்கும் இந்நேரத்தில் என்ன பேசுவது என அவர் ஒதுங்கி இருந்து தான் ஆக வேண்டும் ஆனால் குல பெருமையை சீர்குலைப்பதை மட்டும் அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை..ஆனால் முதலிலே வெறுப்பில் இருக்கும் தன் மகளை மேலும் வதைக்க மனமின்றி, " மியா அமைதியா இரு..அவன் என்ன செய்தாலும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் நம்மை விட நம்ம குலத்தை அவன் பாதுகாப்பான் அது மட்டும் நிச்சயம் உண்மை ஒரு நாள் வெளியே வரும்..அதுவரை அமைதியாக இரு டா ".. என்று தாமரை விழியாள் தன் மகளை சாந்தப்படுத்த ,

அவளோ , "என்ன அம்மா அவனா நம்ம பெருமையை பாதுக்காக்க பிறந்தவன் அவன் ஒரு "..என்று தொடங்கியவளை தீ பார்வை பார்த்த தாமரை, " இனி ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வந்துச்சு "...என்று கூற மீயாழ் தன் வாயை மனமின்றி அடைத்து கொண்டாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top