Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 6

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 6

அவளாக சிரிக்க முயலும் போது கூட அவர்கள் இருவரும் எங்களிடம் சிரிப்புக்கு பஞ்சம் என்பது போல இருந்து விட்டனர்..

அவனும் பதவி ஏற்ற பின் ஒரு சில விஷயத்தில் பிசியாக இருக்க அவள் தான் அந்த கூட்டத்தில் ஒன்ற முடியாமல் தவித்து கொண்டிருந்தாள்..அதிலும் இலந்தரையர் அவளை பார்த்து முறைக்கிறாரோ என்ற சந்தேகம் கூட எழுந்தது.. அவனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தவள் மெல்ல தாமரை விழியாளின் அருகில் சென்று, " ஆன்ட்டி".. என்று கூற,

மீயாழோ அவள் அவர்கள் வருவதை கண்டதும், "நான் போறேன் மா வரதுனா வாங்க "..என்று கூறி விட்டு செல்ல அவரும் ஆரபியின் முகத்தை பார்த்து விட்டே பாவம் இவள் பாடு என்ன ஆகுமோ என்று நினைத்து கடந்து விட்டார்..

"என்ன நான் ஏதோ தப்பு செஞ்ச மாதிரியே எல்லோரும் பார்கிறாங்க..நான் என் காதலனை கண்டு பிடிச்சு அவனிடம் வந்து சேர்ந்தேன் அது என்ன அவ்வளவு பெரிய தவறா?? "... என்பது போல முழிக்க அவளது தோளில் அழுத்தமாக யாரோ கை வைக்க திரும்பி பார்க்கவும் அங்கே கடம்பன் அவளை நெருங்கி நின்று கொண்டிருந்தான்..

அவளை பார்த்து , "வா போகலாம்".. என்க

அவளோ , "இல்ல அவங்க எல்லாம் என் மேல கோபமா இருப்பாங்க போல".. என்று தன் மனதில் பட்டதை அவள் கூற

"அவங்க மட்டும் இல்லை நானும் தான்"... என்று அழுத்தமாக அவன் கூறினான்..அதை கூறும் போது மட்டும் அவனது குரல் மாறி இருந்ததோ ??

அவளோ, " என்ன சொன்னீங்க??".. என்று அவனது முகத்தை பார்க்க அவனோ நொடி பொழுதில் தன் பார்வையை மாற்றி கொண்டவன் ,

ஒன்னுமில்ல உன் பக்கத்தில் நான் இருக்கும் போது என்னை தவிர பீ வேறு ஏதாவது யோசிக்கலாமா யோசிக்க தான் நான் விட்டு விடுவேனா ?? அப்படி என்னை நினைக்காமல் வேற யோசிச்சிட்டு இருந்தா எனக்கு கோபம் வரும் ..வா போலாம்".. என கூறி அவளது கையை பிடித்து அழைத்து செல்ல அந்த காட்சி அங்கே கூடியிருந்தோர் மொபைல் மற்றும் காமிராக்களில் படம் பிடிக்கப்பட்டது..அவன் கூறியதை கேட்ட அவளது விழிகளும் மகிழ்ச்சியுடன் மலர்ந்தது கூடவே தான் கடம்பன் என்னும் ஒரு கிணற்றில் விழுந்து இருக்கிறோம் இனி என்ன தான் ஆனாலும் வெளியேற முடியாது என அவளுக்கு அந்நேரம் விளங்கவில்லை..

அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவளது கையை பிடித்து கிட்டத்தட்ட காரில் தள்ளி அவனும் ஏறி கொண்டவன்..காரில் தன்னருகே அமர்ந்து இருப்பவளை பார்த்து , "என்ன வந்த வேலை எல்லாம் முடிந்ததா??".. என புரியாத மொழியில் கேட்க

அவளோ , "என்ன சொல்றீங்க எழில்?? எனக்கு புரியலையே??".. என்று அவனை பார்த்து கூற,

அவனோ கண நேரத்தில் அவனது பார்வையை மாற்றி கொண்டவன், " இல்லை என்னை பார்க்க வந்தியே அந்த வேலை முடிஞ்சதா??"... என கேட்க

அவளோ, " ஓ அதை சொல்றீங்களா??"... என அழகாக வெட்கப்பட்டவள் அவன் கையில் தலை சாய்ந்து அமர்ந்தவள் , "எழில் உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன் எழில் நீங்க இல்லாமல் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் எழில்..ஆனால் யார்கிட்டயும் நான் சொல்லல..என் உணர்வுகளை நான் நீங்க சொன்ன மாதிரி மறைச்சு வைச்சு கிட்டேன் எழில்.. உங்களை திரும்பி இப்படி பார்ப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லை எழில்.. ஆனால் உங்க மேல கோபமாக இருக்கேன் எழில்".. என்று வார்த்தைக்கு வார்த்தை அவள் எழில் எழில் என்று கூற கடம்பனின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கொண்டே வந்தது..

அப்போது என பார்த்து பல கருப்பு கார்களின் அணிவகுப்பு போல கார்கள் வந்து கொண்டிருந்தது..ஆனால் அந்த கார்களை கடம்பனை பாதுகாத்து வந்த பாதுகாப்பு படையினர் அருகில் கூட விடவில்லை..கடம்பன் அக்கார்களை பார்த்து ஒரு நக்கல் சிரிப்புடன் கடந்து விட்டான்..

அந்த கருப்பு நிற காரில் உள்ள ஒரு சிலர் கார் கதவை திறக்க முயல அதற்குள் கடம்பனின் கார் சீறி பாய்ந்தது..

அதை கண்ட ஆரபியோ , "யார் எழில் அது அவங்க?? என்ன சொல்ல வராங்க ??"...என்று கேட்க,

அவனோ சுற்றி பார்த்து அவள் கேள்விக்கு பதில் அளிக்காமல் தன் கோபத்தை அவனது கைகளுக்குள் அடக்கி டிரைவரிடம், " k பேலஸ் போ".. என்று கூற அவரும் வாகனத்தை திருப்பினார்..

ஆரபியோ , "என்ன நான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் இருக்கிறார்" என நினைத்து , "எழில்".. என்றழைக்க ,

அவனுள் சுடர் விட்டு கொண்டிருந்த கனல் மீண்டும் அப்பெயரை கேட்டதும் எறிய ஆத்திரத்தில் காரின் ஜன்னலில் ஓங்கி ஒரு குத்து கொடுக்க காரின் ஜன்னல் உடைப்பட்டு அவன் மீதும் அவள் மீதும் கண்ணாடி துகள்கள் தெறிக்க அதை கண்டு வாகன ஓட்டுநர் திரும்பி பார்க்கவும் கடம்பனின் விழியில் தெரிந்த கோபத்தில் அவர் அடங்கி திரும்பி காரை ஓட்ட கார் பறந்து கொண்டிருந்தது..

அவளோ பேயறைந்தது போல அவனை பார்த்து முழிக்க அவனோ தன் அருகில் அமர்ந்து இருப்பவளின் கையை சட்டென்று தன் பக்கம் இழுக்க அவளோ அவன் மீது மோதினாள்..

அவன் இழுத்த விசையில் அவளது கை அவனுடன் வராமல் இருந்தது அவளுடைய பாக்கியம், " எழில் என்னோட கை".. என்று அவள் வாய் திறக்கும் முன் அவன் அவளது செவியில், " ஸ்டாப் இட் ப்ளடி டாமிட் இனி ஒரு தடவை எழில்ன்னு ஒரு பெயர் உன் வாயில வந்துச்சு உன் உடம்புல உயிர் இருக்காது நான் கடம்பன் புரியுதா?? இந்த கண்ணாடி துகள்கள் மாதிரி உன்னை சுக்கு நூறா ஆகிடுவேன் ..என்ன டி நெனைச்சுட்டு இருக்க உன்னோட இந்த பேச்சை எல்லாம் நம்ப நான் ஒன்னும் என நிறுத்தி மடையன் கிடையாது ..இனி ஒரு வார்த்தை பேசின நீ தொலைஞ்ச "..என்று கார் ஓட்டுனர் கேக்காத வண்ணம் அவளது செவியில் அழுத்தமாக கூற அவளோ அவனை அடுத்த நொடி பார்க்க அவனது கண்களில் தெரிந்த நெருப்பில் அப்படியே அணைந்து போனாள்..அவனும் அவளிடம் விஷயத்தை கூறி முடித்ததும் அவளை விட்டு நகர்ந்து அமர்ந்து கொண்டான்..

அவளுக்கு நடப்பதும் தான் காண்பதும் உண்மை தானா என் மீது கோபம் கொள்ளவே தெரியாதவன் தானா என அவள் காரின் ஓரம் பயந்து ஒடுங்கி இருக்க அதற்குள் அவனுக்கு சொந்தமான பேலசுக்குள் கார் நுழைந்தது..

கார் நின்றதும் காரை விட்டு இறங்கியதும் , "இறங்கு".. என்று கூற அவளோ அவனது கோபத்தில் பயந்தவள் நான் என்ன தவறு செய்து விட்டேன் ஏன் இப்படி கோபப்படுறாரு என நினைத்து காரை விட்டு இறங்க அந்த வீடே அவளுக்கு பயத்தை கொடுத்தது..

ஏனெனில் அவ்வளவு அழகான இடத்தை அவள் வாழ்க்கையில் அவள் இது நாள் வரை பார்த்திருக்க முடியாது..ஆனால் கடம்பனின் கோபத்தில் அவளுக்கு மயானம் போல காட்சியளிக்க ஒரு வேளை நான் ஏதாவது செய்ய போய் கோபமாக இருக்கிறாரோ என நினைத்து தன் மனதை தேற்றியவள் அவனுடன் உள் செல்ல அந்த பேலசின் பெரிய ஹாலில் ஒற்றை குஷன் இருக்கையில் கம்பீரமாக அமர்ந்தவன் தன்னை கண்டு பயத்தில் இருப்பவளை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்து , "வெல்கம் ஆரபி..உங்களுக்கான ஜெயில் எப்படி இருக்கு??".. என்க

அவளோ என்ன சொல்கிறான் என முழித்து, " எ..ழி..ல் "..என வாயை திறக்க

கடம்பனின் கால் பட்டு ஒரு கண்ணாடி ஒரு அழகான கண்ணாடி ஜாடி உடைந்தது..

அவள் அதிர அவனோ சிரித்து , "நான் சொல்லி இருக்கேன் என்னை அந்த பெயர் வெச்சு கூப்பிடாதேன்னு..என்ன சொன்ன?? என் மேல வெச்சு இருக்க காதலுக்காக நீ இங்கே வந்து இருக்கேன்னா?? ஹா ஹா உன்னை வர வெச்சதே நான்..நான் நெனைச்சதுனால தான் நீ வந்த என்னை நியூஸ் பேப்பர்லயும் நீ பார்த்த "...என்று கூற

அவளோ அவனது கடுமையை பார்த்து இது அவளது எழில் தானா என்ற சந்தேகத்தில் அவனை அதிர்ந்து பார்க்க,

"ரொம்ப சந்தேகபடாத கடம்பனும் நானே தான் உன் பாஷையில் சொன்னா எழிலும் நானே..ஆனால் நான் கடம்பன் இந்த கடம்பஞ்சோலையோட ராஜா புரியுதா டாமிட்..அதுக்கு முன்னாடி நான் உன் எதிரி இப்போ புரியுதா டேமிட் நான் நெனைச்சதுனால தான் நீ என் கண் முன்னாடி வந்து இருக்க..என்ன புரியலையா?? உன் விஷயத்தில் நான் நெனைக்கணும் அடுத்தது நடக்கணும்னு நான் நெனைக்கணும் இப்போ புரியுதா".. என்று கூற,
ஆரபியோ புரியாமல் குழம்பினாள்..

அதை பார்த்து சிரித்தவன், " ஹ்ம்ம் இன்னும் மூணு நாளில் கல்யாணம் அதுவரை இங்கேயே இரு.. எனக்காக தாயாரா இரு "...என்று கூறி விட்டு கடம்பன் சென்று விட்டான்.. ஆரபி அவனது பேச்சு செயல்கள் எதுவும் புரியாமல் குழம்பி போனாள்...

மான்ஸ்டர் வருவான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top