Share:
Notifications
Clear all

மந்தாரம் 34

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 483
Thread starter  

மந்தாரம் : 34

   தேவிகா வந்திருக்கிறாள் என்ற விஷயம் அறிந்ததும் விஷ்வா நேராக ராம் மோகன் வீட்டிற்கு வந்து விட்டான்..

அவனை கண்டதும் தேவிகாவுக்கு கண்ணீர் வந்தது.. ஏதோ அவளுடைய சொந்த உறவை பார்ப்பது போல ஒரு எண்ணம் அவளுக்கு கிடைத்தது.. நெடு  நாட்களுக்கு பிறகு அவள் அவனை சந்திக்க, மற்றவர்கள் மீது அவளுக்கு பாசம் இருக்கிறதா என்றெல்லாம் தெரியாது.. ஆனால் இவன் மீது உண்மையான அன்பை அவள் வைத்திருந்தாள்..

அப்படி இருக்க, அவன் அவளை பார்த்து, "இப்போ அழுது என்ன பண்றது தேவி?? எல்லாம் சரியாகும்" என்றவன் அவள் கையில் இருக்கும் குழந்தையை பார்த்து விஷ்வா, "அப்படியே விது மாதிரி இருக்கான் இல்லையா அங்கிள்??" என ஆச்சரியமாக கேட்க அவரும், "ஆமாம் விஷ்வா அப்படித்தான் இருக்கான்"..

"எப்படியோ விது கூட்டிட்டு வந்துட்டானே.. நான் இதெல்லாம் நடக்குமா நினைச்சுட்டு இருந்தேன்" என்று விஷ்வா கூறினான்..

"நானும் அதை தான்டா நினைச்சிட்டு இருக்கேன்" என்றார் ராம் மோகன்..

மேலும் அவளை பார்த்து விஷ்வா, "அழாதே தேவி..என்கிட்ட முன்னாடியே விஷயத்தை சொல்லி இருக்கலாம்.. இந்த அளவுக்கு இழுக்கனும்னு இல்ல.. நான் எப்படியாவது அங்கிள் கிட்ட பேசி இருப்பேன்..இனி எல்லாம் அங்கிள் பார்த்துப்பாங்க கவலைப்படாத..ஆனால் உனக்கு என்ன பேசணுமோ உன்னுடைய மனசுல என்ன நினைக்கிறாயோ அதை தெளிவாக பேசு இனியாவது உனக்கு நீ மட்டும் தான் இருக்க நீ தான் பேசியாகணும் அப்படி நினைச்சு பேசு" என்று அவன் கூறினான்..

அவளோ எதுவும் பேசாமல் அமைதியாக குழந்தையை பிடித்தபடி நின்றாள்..ஏனெனில் அவளுடைய மனதுக்குள் வேறு விஷயம் ஓடிக் கொண்டு இருந்தது.. ஆனால் அனைவரும் என்னென்ன பேசுகிறார்களோ அதை எல்லாம் காதில் எடுத்துக் கொண்டுதான் அவள் இருக்கிறாள்...

    "விஷ்வா மூலமாக தான் மா.. நீ இருக்கிற இடம் எனக்கு தெரிஞ்சது.. அவன் தான் உன்னையும், குழந்தையையும் பார்த்தான்.. அதுக்கு பிறகு தான் உனக்கே தெரியாமல் உங்களை பத்தின விஷயத்தை தேடி அலைஞ்சு, உன் விவரம் தெரிஞ்சதும் உன்னை கூட்டிட்டு வர முயற்சி பண்ணினேன்" என ராம் மோகன் நடந்த விஷயத்தை அவளிடம் கூறினார்..

அதை கேட்டு அவள் அமைதியாக நின்றாள்.. "தேவி மா.. நானெல்லாம் கிராமத்தில் வளர்ந்தவன்.. ஒருவனுக்கு ஒருத்தி அப்படின்னு வாழ்ந்தவன்.. கஷ்டப்பட்டு வந்தவன்.. என்னோட கஷ்டம் என் பிள்ளைக்கு வந்திட கூடாது அப்படின்னு நான் அவனுக்கு கஷ்டமே தெரியாமல் வளர்த்தினது எந்த அளவுக்கு அவன் கீழே என்னை இறக்க முடியுமோ அந்த அளவுக்கு அவன் இறக்கிட்டான் மா..அவன் நல்லவன்.. செய்தது எல்லாம் சரி தான் அப்படின்னு நான் சொல்ல மாட்டேன்.. ஆனால் எப்படியோ நீங்க இரண்டு பேரும் சேர்ந்துட்டீங்க.. இனியும் நீங்க சேர்ந்து இருக்கணும்னு தான் எனக்கு ஆசை.. உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினை தீர்த்து இரண்டு பேரும் ஒண்ணா வாழற வழியை பாருங்க.. உனக்கான எல்லா சப்போர்ட்டும் என்கிட்ட இருந்து கண்டிப்பா கிடைக்கும்.. என்னடா இவன் இப்படி பேசுறான் அப்படின்னு நினைக்காத.. மனசுல இருந்து சொல்றேன் ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிச்சிட்டு என் பையன் எந்த உயரத்துக்கு போனாலும் அவனால நல்லா வாழ முடியாது..." என்று அவர் கூறினார்..

அதை கேட்டு தேவியின் மனம் சற்றே குளுமை அடைந்தது.. இவராவது நல்ல மனிதனாக இருக்கிறாரே என அவள் நினைத்தாள்..

ஆனால் ரேவதிக்கு இந்த அதிர்ச்சி எல்லாம் தாங்கி கொள்ள முடியாமல் அவர் இருந்தார்.. ஆமாம் பேரன் அப்படியே அவருடைய மகனை உரித்து வைத்து இருக்கிறான்..

ஆனால் அவர்கள் வீட்டிலிருந்து இந்த காரியம் நடந்திருக்கிறது அவர்களுக்கு தெரியவில்லையே..

எவ்வளவு பெரிய மடச்சியாக அவர் இருந்திருக்கிறார் என்றெல்லாம் அவர் யோசித்தார்.. அது மட்டுமின்றி நடந்த விஷயத்தை எல்லாம் நம்ப முடியாமல் அவர் இருக்கிறார்.. என்னவோ இவர்கள் பேசி முடிவு செய்யட்டும் என்ற எண்ணத்தில் அவர் இருந்தார்...

அப்படி இருக்க, விஷ்வா எப்போதும் போல அவர்களின் குடும்ப பிரச்சனை.. அவர்கள் தீர்த்துக் கொள்ளட்டும் என அவன் அமைதியாக நின்று கொண்டான்..

அப்பொழுது தான் தேவி ராம் மோகனை பார்த்து," சார் பேசி முடிச்சிட்டீங்களா?? நான் கொஞ்சம் பேசலாமா??" என்க..

அவரும், "பேசு மா.. உனக்கு என்ன  பேசணுமோ பேசு" என்று கூறினார்..

"எனக்கு இங்க வந்ததுல துளியும் விருப்பம் இல்லை சார்.. நான் சந்தோசமா இல்லை.. இங்கு வந்ததுல எனக்கு துளி சந்தோஷம் கூட கிடைக்கல.. எனக்கு ஆதரவு தந்துட்டு இருந்த வெற்றியை கொன்னுடுவேன்னு சொல்லி மிரட்டி தான் என்னை உங்க மகன் இங்க கூட்டிட்டு வந்திருக்கார்..

இங்கே நடக்கும் எல்லாம் விஷயத்துக்கும் ஆரம்ப புள்ளி நான் மட்டும் தான்.. நான் பண்ணின ஒரே ஒரு தப்பு உங்க மகன் மேல ஆசை வைத்தது..

என்னோட கிராமத்தில் நடந்த பிரச்சனையில் இவரை கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை வந்த போது நான் வாழ்ந்தா இவர் கூட தான் வாழ்வேன் அப்படின்னு  மனசுல நினைச்சு நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்..

அது செய்யாம இருந்திருந்தா அவருக்கும் இந்த மாதிரி நடந்திருக்காது.. எனக்கும் இந்த மாதிரி எல்லாம் நடந்து இருக்காது..

அப்போ அவர் மேல கண்மூடித்தனமான அன்பை வைத்திருந்தேன் அது பழைய தேவிகா.. எப்போ இந்த வீட்டை விட்டு நான் வெளியே போனேனோ அப்பவே அது எல்லாம் தூரமா போட்டுட்டேன்... இப்போ நான் ரூபனோட அம்மா அந்த அடையாளம் எனக்கு போதும்...

இப்போ முதல் முறையா நான் நேசித்தவன் தப்பான ஒரு ஆள் அப்படின்னு எனக்கு தெளிவா புரிஞ்சுடுச்சு.. இனி இந்த வாழ்க்கைக்குள்ள வந்து அவரையும் கஷ்டப்படுத்தி, என்னையும் கஷ்டப்படுத்திக்க நான் விரும்பல..

எனக்கு அவரு சரியான துணையாக இருக்க மாட்டார்.. நானும் அவருக்கு சரியான இணையாக இருக்க மாட்டேன்..

நான் ஒன்னும் இங்கே வாழவோ இல்லை.. நீங்க சொல்ற மாதிரி அவர் கூட இருக்கவோ வரல.. எனக்கு உங்க மகன் கூட இருக்க வாழ்க்கை வேண்டாம்.. அது சரி வராது.. நான் இங்கே வந்ததே அவருக்கு பயந்தது தான்.. இப்பவும் என் காதுக்குள்ள அவர் பேசின வார்த்தைகளும் அவர் செய்த விஷயமும் எனக்கு ஓடிக்கிட்டு இருக்கு..

இப்படிப்பட்ட ஒரு ஆளை தேர்ந்தெடுத்தது என்னுடைய தப்புதான்.. இதுல உங்க மகனை நான் எந்த தப்பும் சொல்ல மாட்டேன்..

இதெல்லாம் நடந்து முடிஞ்சு இப்போ அஞ்சு வருஷம் ஆச்சு.. எனக்கு ஒரு மகன் இருக்கான்.. நான் ஒரு நல்ல வாழ்க்கைக்குள்ள போகணும்னு நினைக்கிறேன்..

அதுக்காக எனக்காக ஒருத்தர் காத்துகிட்டு இருக்கார்.. உங்க மகன் சொன்ன மாதிரி என் தகுதிக்கு யார் இணையோ அவர் என்னை தேர்ந்தெடுத்து இருக்கார்.. நான் அவர் கூட போய்க்கிறேன்..

தயவுசெய்து உங்க மகன்கிட்ட சொல்லி என்னையோ எனக்கு ஆதரவு தந்த குடும்பத்தையோ எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லுங்க.. அப்படி சொல்லி மிரட்டி தான் கூட்டிட்டு வந்திருக்கார்.. என்னால அவங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது..

நீங்க சொன்னீங்க உங்க சொத்தை காட்டி, உங்க மகனை மிரட்டி எங்களை அழைத்து வந்திருக்கீங்க அப்படின்னு ஆனால் இப்படி மிரட்டி ஒருத்தரை ஒரு வாழ்க்கைக்குள்ள நுழைக்க முடியாது இல்லையா??.. அதுவும் அவருக்கும், எனக்கும் ஏணி வச்சா கூட எட்டாது..

இதெல்லாம் நான் அப்போ யோசிக்கல.. ஆனால் இப்போ நான் யோசிக்கிறேன்.. எனக்கு அவர் வேண்டாம்.. இந்த வாழ்க்கை வேண்டாம் இப்பவும் அவர் பிடிக்காமல் தான் கூட்டிட்டு வந்திருக்கார்.. எனக்கு இதுல விருப்பமில்ல.. அவருக்கும் விருப்பமில்லை அப்படி இருக்கும்போது எங்க வாழ்க்கை மட்டும் எப்படி நல்லா இருக்கும்..

மத்தவங்க கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்து எதுவும் என் மகனுக்கு தேவையில்லை.. என் மகன் எனக்காக வந்தான்.. அவனை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும்.. மத்தவங்க காசுல அவன் வாழக்கூடாது.. நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன்.. ஒரு காலத்தில் முதுகெலும்பு இல்லாமல் இருந்தேன்.. ஆனால் இப்போ எனக்கு வாழ தெரியும்.. நான் வாழ்ந்துக்கிறேன்.. தயவு செஞ்சு எனக்கும், அவருக்கும் விவாகரத்து வாங்கி கொடுங்க.. அது போதும்" எனக் கூறினாள் தேவி..

அவளுடைய பேச்சைக் கேட்டதும் ராமமூர்த்தி மேலும் அதிர்ந்தார்... அந்தப் பெண் பேசுவது நியாயமான வார்த்தைகள் அதற்கான பதில் அவரிடம் இல்லை.. இனி என்ன செய்வது என அவருக்கே தெரியவில்லை..

அவளின் நேர்மையான பேச்சை வெகுவாக ரசித்தான் விஷ்வா.. இதை தான் அவன் அவளிடம் எதிர் பார்த்தான்.. அப்படி இருக்க இந்த சர்ச்சை எல்லாம் மாடியில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த விது ஒரு மாதிரியான முகத்தோடு அவன் வந்தான்..ஆம் அவன் முகமே கூறியது அவன் அனைத்து விஷயத்தையும் கேட்டு விட்டான் என்று.. அப்படி இருக்க அழுத்தமான பார்வையை அனைவர் முன்னும் வீசியவன் அவள் முன்னே நின்றான்..

நேருக்கு நேராக நின்றான்.. அவன் வந்ததும் அவளுடைய தலை அவனை காண பிடிக்காமல் தாழ்ந்து கொள்ள அதை கண்டவன்

"என்ன இவளுடைய நடிப்புல எல்லாரும் விழுந்துட்டீங்களா?? இப்படித்தான் நல்லவ மாதிரி நடிப்பா.. என்னை விட எல்லாம் அவ்வளவு சீக்கிரம் இவளால் போக முடியாது" என்று கர்வத்தோடு அவன் அவள் பேசியதெல்லாம் ஒரு பேச்சே இல்லை என அனைவருக்கும் உணர்த்தும் விதமாக கூறினான்..

இவள் சிபாரிசு செய்து தான் என்னுடைய சொத்தை என் தந்தையிடம் நான் வாங்க வேண்டுமா என்ற எண்ணம் அவனுக்கு வந்தது.. அந்த கடுப்பில் அவன் பேசினான்..

அப்படி இருக்க அவளைப் பார்த்து, "எனக்கு உன்னோட சிபாரிசு எல்லாம் தேவையில்லை.. இந்த சொத்தை எப்படி வாங்கணும்னு எனக்கு நல்லா தெரியும்.. இந்த ஆக்டிங் எல்லாம் இவங்களோட வச்சுக்கோ என்கிட்ட வேண்டாம்" என்று விது எச்சரிக்கையோடு கூறினான்..

அதை கேட்ட அவளோ, "உங்ககிட்ட நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. எனக்கான ஆள் நீங்க இல்லை அப்படின்னு நான் உங்க அப்பா கிட்ட சொல்லிட்டு இருக்கேன்.. எனக்கு ஒன்னும் இங்கே இருக்கணும் உங்க கூட வாழனும் அப்படிங்கிற எண்ணம் துளியும் கிடையாது.. உங்களால எங்களுக்கு எந்த பிரச்சனையும் வந்திட கூடாது அப்படின்னு பேசிட்டு இருக்கேன்.. உங்ககிட்ட இருந்து எனக்கு விவாகரத்து வேணும் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாதுன்னு பேசிட்டு இருக்கேன்.. இதுல நடிக்க எந்த அவசியமும் எனக்கு இல்லை.. ஏன் உங்க முகத்துக்கு நேராவே சொல்லுவேன் எனக்கு நீங்க வேண்டாம்" என்றாள்..

அதை கேட்டு விதுவின் முகம் கோபத்தில் கறுத்து போனது..

பிறகு ராம் மோகனை பார்த்து, "சார் தயவு செஞ்சு உங்க பிரச்சனை நீங்க பார்த்துக்கோங்க.. அதுல என்னையும், என்னுடைய மகனையும் இழுக்காதிங்க.. இவர்கிட்ட இருந்து கூடிய சீக்கிரம் எனக்கு விவாகரத்து வாங்கி கொடுங்க.. இதை சொல்லத்தான் நான் வந்தேன்.. நான் கிளம்புறேன்.. இனி எங்களை தொல்லைப்படுத்தாதீங்க" என்று அவள் கூறவும் பெரியவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை..

அவனுக்கோ மிகவும் அதிர்ச்சியாக இருந்தது..  விதுவால் அவளின் இந்த பேச்சை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. எப்பொழுதும் அவன் காலில் விழுந்து அவன் பின்னாலே நாய்க்குட்டி போல சுற்றிக் கொண்டிருக்கும் அவள் இப்பொழுது அவனை எதிர்த்து இப்படி பேசவும் ஒரு பக்கம் அதிர்ச்சியாகத்தான் அவனுக்கு இருந்தது இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளை பார்த்து முறைத்தான்..

அப்படி இருக்கும் போது தான் அவளின் கையில் இருக்கும் அவளுடைய குழந்தை ரூபன் விதுவைப் பார்த்து, "அம்மா அப்பா.. அப்பா" எனக் கூறினான்..

ஆம் அன்று என பார்த்து விது காக்கி நிற சட்டை அணிந்து இருக்கவும், குழந்தை அப்பா எனக் கூற, எதிரே இருப்பவன் வலிக்க வேண்டும் என கருதியே கடந்த காலத்தில் இந்த குழந்தைக்காக அவனிடம் கேவலமாக நின்ற நொடிகள் ஞாபகத்திற்கு வர, "கண்ணா இது உன் அப்பா இல்லை உன்னோட வெற்றி அப்பா நம்ம வீட்ல இருக்கார்.." என்று அவள் கூறினாள்..

அதை கேட்டவனுக்கு எங்கிருந்து தான் ஆத்திரம் வந்ததோ தெரியவில்லை.. அவளை ஓங்கி அடிக்கலாம் வேண்டும்  என்றே அவள் பேசுகிறாள் என எண்ணி அவளை அழுத்தமாக பார்த்தான்..

பிறகு என்ன நினைத்தானோ, "நீ என்னதான் அழுத்தி அழுத்தி நான் இந்த குழந்தைக்கு அப்பா நான் இல்லை என்று சொன்னாலும் நான் தான் அப்பன் அப்படின்னு அந்த குழந்தைக்கு நல்லாவே தெரிஞ்சு இருக்கு அதுனால ரொம்ப முயற்சி பண்ணாதே..

அப்புறம் என்ன சொன்ன விவாகரத்து தானே?? எதை எப்போ எப்படி உனக்கு கொடுக்கணும்னு எனக்கு நல்லா தெரியும்.. அதை நான் அப்ப கொடுத்துக்கிறேன் புரியுதா.. இதுலயும் என்னை மீறி என்னுடைய விஷயத்துல யாரும் மூக்கை நுழைக்க மாட்டாங்க.. அதனால யார்கிட்டயும் சிபாரிசுக்கு போய் நிக்காத.. வேஸ்ட் ஆப் டைம்..

நான் கூட இந்த பிரச்சனைக்கு வேண்டி தான் உன்னை கூட்டிட்டு வந்தேன்.. ஆனா நீ கொஞ்சம் ஓவரா வாய் பேசுற மாதிரி இருக்கு.. அதனால உனக்கு குட்டியா ஒரு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு உன்னை அனுப்பி வைக்கிறேன்.. பை த வே ஸ்டில் நவ் யூ ஆர் மை வைஃப் இதுக்கு அர்த்தம் என்ன அப்படின்னு இங்கே இருக்கவங்ககிட்ட கேட்டுக்கோ..

நானும் உனக்கு விவாகரத்து கொடுத்து துரத்தி விடணும் அப்படின்னு தான் நினைச்சேன்.. ஆனால் இப்போ சொல்றேன்.. எப்ப கொடுக்கணும் என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் புரியுதா?? அதுவரை என்னோட பொண்டாட்டியா என்னோட வீட்ல நீ இரு.. அப்புறம் சும்மா சும்மா குழந்தையைக் காட்டி நான் அப்பா இல்லை நான் அப்பா இல்லைன்னு சொல்லிட்டு இருக்காத.. உன்னை தப்பா நினைப்பாங்க என்னை இல்லை.." என்று அவன் கூறிவிட்டான்..

அதை கேட்டு அவள் அதிர்ந்து நிற்க இவர்களை வேடிக்கை பார்க்கும் அனைவரும் என்ன டா நடக்குது இங்கே என திகைத்து நின்றனர்..ஆம் வேண்டாம் என கூறியவன் இப்போது விவாகரத்து கொடுக்க மாட்டேன் என கூறுகிறான்.. அதே நேரம் அவனிடம் வாழ வேண்டும் என ஆசைப்பட்டவள் இப்பொழுது விவாகரத்து வேண்டும் என கூறுகிறாள் அப்படி என்னதான் இங்கு நடக்கிறது என தெரியாமல் அனைவரும் குழம்பி நின்று கொண்டிருக்க தன் பேச்சு முடிந்தது என அவனும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டான் விது பிரதாப்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top