Share:
Notifications
Clear all

மந்தாரம் 33

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 328
Thread starter  

மந்தாரம் : 33

காலை முதல் மகிழ்ந்த அவளுக்கு இந்த நொடி ஏனோ வேப்பங்காயாக கசந்தது.. லேசாக கண்ணை கரித்துக் கொண்டு வந்தது.. அவனிடம், ஒன்றும் அவள் அவனுடைய சொத்தையோ அவனுடைய சுகத்தையோ கேட்கவில்லை.. அவளுடைய சந்தோஷத்தை அவனிடம் பகிரத் தான் அவள் வந்தாள்..

ஆனால் அதற்கும் அவன் வெறுப்பை கக்கவும் அவளுக்கு மிகவும் வருத்தமாக போனது..

"குழந்தையோட அப்பா நீங்க உங்க கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்றது??? நீங்க தானே இந்த குழந்தைக்கு அப்பா??" என்று அவள் கேட்டாள்..

அந்த கேள்வி அவனுக்கு வேப்பங்காயாக கசந்தததோ என்னவோ "எப்படி நான் அப்பாவா?? சரி தான்..முதல்ல பொய் சொல்லி என்னை கல்யாணம் பண்ண?? இப்போ வயித்துல குழந்தைன்னு சொல்லிட்டு வந்து என் முன்னாடி நிக்கிற.. என்ன நாளைக்கு நீதான் என்னுடைய பொண்டாட்டி உன் வயிற்றில் இருக்கும் குழந்தை என்னோடது அப்படின்னு போஸ்டர் அடிச்சு ஒட்டி எல்லாருக்கும் விருந்து வைக்க சொல்றியா?? அதுக்கு தான் இந்த போராட்டமா?? இதோ பார் உனக்கு இந்த குழந்தை வேணும்னா பெத்துக்கோ.. இல்லேன்னா இந்த குழந்தை வேண்டாம்னா கலைச்சிடு.. இந்த குழந்தை சென்டிமென்ட் சொல்லிட்டு எல்லாம் என்கிட்ட வராத.. எனக்கு இது எல்லாம் சுத்தமா பிடிக்காது..

நான் முதல்ல உன்னை ஏத்துக்கணும்.. அதுக்கப்புறம் தான் உன் வயித்துல வரதெல்லாம் ஏத்துக்க முடியும்... எனக்கும் இந்த குழந்தைக்கு எந்த சம்பந்தமும் இல்லை.. லுக் அன்னிக்கு நீயும் நானும் ஒன்னா இருந்தோம்.. அது அதோட முடிஞ்சு போச்சு.. அப்படியே நூல் பிடிச்சு என் வாழ்க்கைக்குள் வரலாம் அப்படின்னு நினைக்காத.. இது தான் என்னோட முடிவு.. இனி நீ என்ன வேணாலும் பண்ணலாம்" என்று அவன் மீண்டும் எடுத்தெறிந்து பேசினான்...

அதை கேட்டவள் அரண்டு விட்டாள்.. இவ்வளவு தூரம் மனசாட்சி இல்லாமல் இவன் இருப்பானா?? எந்த மாதிரியான வார்தைகள் இவன் கூறி விட்டான்?? விட்டால் இந்த குழந்தை கூட அவனுடையது இல்லை என கூறுவான் போல என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை..

அப்படி இருக்க கண்கள் கரித்துக் கொண்டு வந்தாலும், "இத பாருங்க உங்ககிட்ட நான் எதையுமே எதிர்பார்க்கல.. குழந்தையோட அப்பாவா உங்ககிட்ட இந்த விஷயத்தை பகிர்ந்துக்கணும்னு ஆசைப்பட்டேன் அவ்வளவுதான் வேற எதுவுமே இல்லைங்க.. உங்களுக்கு இந்த குழந்தை வேண்டாமா இருக்கலாம் ஆனால் எனக்கு வேணும்.. நான் ஒன்னும் இந்த குழந்தையோட உரிமையை கேட்டு உங்க முன்னாடி நிக்கல.. இந்த குழந்தையோட அப்பாவா உங்க கிட்ட இந்த விஷயத்தை பகிர்ந்துக்கணும்னு நினைச்சேன் அவ்வளவுதான்" என்று அவள் கண்ணீரோடு கூறினாள்..

அதைப் பார்த்தவன் அவள் வார்த்தைகளில் கடுப்பாகி, "திரும்பவும் குழந்தையோட அப்பா அப்பானு சொல்லிட்டு இருக்காத.. எனக்கு அந்த வார்த்தை பிடிக்கல.. என் குடும்பம் அப்படிங்கற வட்டத்துக்குள்ள கொண்டுவர நினைக்காதீங்க நடக்காது... கல்யாணமே ஆகலை என்று நான் நினைச்சுட்டு இருக்கேன்.. உன் கூட நடந்த அந்த கருமத்தை நான் மறக்கணும்னு நினைச்சுட்டு இருக்கேன்..

இதுல கல்யாணம், குழந்தை அப்படின்னு ஒரு குடும்பத்தை என் தலையில் கட்ட பார்க்கிறயா??" என்றவன், "சி நீயும், நானும் ஒன்னா இருந்தோம் இல்லைன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்.. அன்னைக்கு நானும் சந்தோஷமா இருந்தா நீயும் சந்தோஷமா இருந்த.. அது மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்.. அதோட இந்த விஷயம் முடிஞ்சு போச்சு..

இப்போ குழந்தை என வந்து நிற்கிறது நீ நான் கிடையாது.. நான் ஒன்னும் உன்னை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லல.. இது உன்னுடைய விருப்பம்.. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. அப்புறம் என் கூட படுத்தவங்க லிஸ்ட்ல எல்லாம் எடுத்தா எத்தனை குழந்தைக்கு நான் அப்பா ஆகிறது??" என கூடுதலாக அவள் இதைப் பற்றி மேலும் பேசக்கூடாது என எண்ணி அந்த வார்த்தையை கேட்டான்..

அவனின் வார்த்தைகளில் அவளுக்கு கண்ணீர் கரித்துக் கொண்டு வர, அவளை பார்த்து, "இதுக்கு மேல இந்த டிராமா வை என்னால கண்டினியூ பண்ண முடியாது.. நீ இனி இங்க ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது கிளம்பு.. அதுதான் என் வாழ்க்கைக்குள் நுழைய மாட்ட எனக்கு எந்த பிரச்சினையும் செய்ய மாட்ட அப்படின்னு சொன்னியே.. நீ கிளம்புறதுக்கான நேரம் வந்துடுச்சு கிளம்பிடு" என்றான்..

அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்ததும் அவனின் வெறுப்பான வார்த்தையை கேட்ட அவளோ மேலும் திகைக்க இப்படி ஒரு மனசாட்சி இல்லாத ஒருத்தன் மீது ஆசை வைத்தேன் என முதல் முறையாக நினைத்தாள், "என்ன சொல்றீங்? என் மேல இருக்கிற கோபத்துக்கு என் வயித்துல வளர குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு.. எனக்கு இந்த குழந்தை வேணும்.. நான் பெத்துப்பேன்.. எனக்குன்னு இருக்கிற இந்த உறவை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. நீங்க என்ன சொன்னாலும் இந்த குழந்தைக்கு நீங்க தான் அப்பா இதை உங்களால் மறுக்க முடியாது.. எனக்கு எந்த உரிமையும் உங்ககிட்ட இருந்து வேண்டாம்.. தயவுசெஞ்சு கொச்சையா மட்டும் பேசாதீங்க" என்று கூறினாள் தேவிகா..

"வெல்டன்.. இப்ப சொன்ன பார்த்தியா இதுதான் என் பிரச்சனை.. முதல்ல நீ என்னை ஏமாத்தின.. என் வீட்டுக்குள்ள வந்து என்னையே ஆட்டி வச்சுட்டு இருக்க.. இப்போ வயித்துல ஒரு குழந்தையை காட்டி அதிகாரத்தோட நீ பேசுற?? இப்படியே பேசி பேசி நீ இங்கே இருக்கலாம் அப்படிங்கற நினைப்பதெல்லாம் நடக்காது..

நீ அடுத்தது என்ன சொல்ல போறேன்னு எனக்கு தெரியும்.. இந்த குழந்தை உங்களோடது அப்படின்னு சொல்லுவ.. இது நாலு பேருக்கு தெரிய வரும்.. அப்படியே என்னுடைய அம்மா, அப்பா காதுக்கு போகும்.. அவங்கள வச்சு எனக்கு தூண்டில் போட பார்ப்ப அப்படித்தானே.. எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது ஒரு குடும்பம் அப்படிங்கற வாழ்க்கைக்குள் எல்லாம் நான் நுழையவே விரும்பாதவன் அப்படின்னு எப்பவும் உன்னிடம் நான் சொல்லி இருக்கேன்..

அதையும் மீறி பொய் சொல்லி நீ என் வாழ்க்கையில் நுழைஞ்ச.. இப்ப குழந்தை வந்துடுச்சுன்னு என் முன்னாடி கண்ணை கசக்கிட்டு நிக்கிற.. இதெல்லாம் நீ முன்னாடி யோசிச்சிருக்கணும்..

என்னுடைய நெற்றியில் என்ன இளிச்சவாயன் எழுதி ஒட்டி இருக்கா??? போடி..

நீ பண்ணினதுக்கு திருப்பி அடிக்க வேண்டாம்.. இது கூட உனக்கு கிடைக்கலைன்னா எப்படி??? அப்போ இதெல்லாம் அனுபவிக்க நீ தகுதியான ஆள் தான்.. உன்னால உன் வயிற்றில் இருக்கும் உன்னோட குழந்தை தான் பாவம் அனுபவிக்கப் போகுது..

ஒரு ஃப்ரீ அட்வைஸ் சொல்றேன் இந்த வீட்ல இருந்து நீ வெளியே போனதும் குழந்தையை அபோட் பண்ணிட்டு உனக்கான ஏதாவது ஒரு இளிச்சவாயன் கிடைப்பான் அவனை கல்யாணம் பண்ணிட்டு புதுசா வாழ்க்கை ஆரம்பி.. இங்கே வந்து தாலியை காட்டி, குழந்தையை காட்டி எல்லாம் சீரியல் நாடகம் போட வேண்டாம்.. அதுக்கெல்லாம் இந்த விது பிரதாப் மசிய மாட்டான் ஓகே.. இனி ரெண்டு நிமிஷம் நீ இங்கு நிற்க கூடாது... கூடிய சீக்கிரம் வீட்டை விட்டு கிளம்பற வேலைய பாரு.. இல்லை ரொம்ப அசிங்கப்படுவ" என்றவன் பேச்சு முடிந்தது என அவனுடைய வேலையை பார்க்க துவங்கி விட்டான்..

அந்த நொடி விது அவள் வாழ்க்கையில் மிகவும் கேவலமான மனிதனாக தெரிந்தான்.. இப்படி ஒரு கேவலமான ஒருவனை காதலித்து அவன் தான் வேண்டும் என திருமணம் செய்ததை எண்ணி முதன்முறையாக வருத்தம் அடைந்தாள் தேவிகா..

இத்தனை நாட்கள் அவன் மீது வைத்திருந்த காதல் எல்லாம் பொய்த்து போனது போல அவளுக்கு தோன்றியது..

அவளை பேசியது எல்லாம் அவள் பொறுத்துக் கொண்டாள்.. ஆனால் குழந்தை ஒரு உதிரம் இப்பொழுதுதான் கருவாக இருக்கும் குழந்தையை சொன்னது தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..

எப்போது இந்த அளவுக்கு அவன் பேசி விட்டானோ இனி இந்த வீட்டில் இருக்கக் கூடாது என நினைத்தவள் அந்த இரவை எப்படி கழித்தாள் என தெரியாது.. ஏனெனில் அவள் அவனுடைய அறையை விட்டு வந்ததும் ராம் மோகன் தம்பதியினர் வந்துவிட அவளால் உடனே வெளியே கிளம்ப முடியவில்லை..

காலை ஆனதும் யாருக்கும் சந்தேகம் வந்துவிடாதபடி எப்பொழுதும் போல வேலைகளை எல்லாம் செய்து வைத்தவள், பிறகு ரேவதியிடம் கோவிலுக்கு செல்கிறேன் என கூறி சென்றவள் அப்படியே சென்று விட்டாள்..

எங்கு செல்ல வேண்டும் என எதுவுமே தெரியாமல் சென்றவள் கிடைத்த பஸ்ஸில் ஏறி சென்று விட அந்த பஸ் நின்ற இடத்தில் இறங்கியவள் எங்கு செல்வது என தெரியாமல் கால் போன திசையில் நடந்தாள்.. வாழ்க்கையே அவளுக்கு வெறுத்து போனது..

அவளுக்கு உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை.. ஆனால் அவள் வயிற்றில் இருக்கும் கருவை அவளுடன் அழிக்க மனமில்லை.. அப்படி இருக்க என்ன செய்வது என தெரியாமல் செல்லும் போது தான் ஒரு சில கயவர்கள் அவளிடம் தவறாக நடக்க முனைய அப்போது அவளை காப்பாற்றிவன் தான் வெற்றி..

அதன் பின் வெற்றி தான் அவளுக்கு முழு ஆதரவு கொடுக்க, அவளும் சுகமாக குழந்தையை பெற்றெடுத்தாள்..

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி என் மனதை புரிந்து கொண்டவள் இதுதான் அவளுக்கு கிடைத்த நல்ல வாழ்க்கை என கருதி அந்த வாழ்க்கையை அவளின் குழந்தையோடு வாழ துவங்கிய போது தான் மீண்டும் விது பிரதாப் அவள் வாழ்க்கைக்குள் நுழைந்து மீண்டும் அவளை இங்கு மிரட்டி அழைத்து வந்து இருக்கிறான்..

இனி தேவிகாவின் வாழ்க்கை எப்படி இருக்கும்?? அவளையும் சரி அவளுடைய மனதையும் புரிந்து கொள்ளாத விதுவுடன் அவளின் இனி உள்ள காலத்தை வாழ்வாளா இல்லை அவளின் மனதை புரிந்து கொண்டு அவளுக்காக காத்திருக்கும் அவள் மீது அன்பை விதைத்து வைத்திருக்கும் வெற்றியுடன் அவளுடைய வாழ்க்கையை வாழ்வாளா?? பொறுத்திருந்து பார்ப்போம்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top