Share:
Notifications
Clear all

மந்தாரம் 35

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 483
Thread starter  

மந்தாரம் : 35

    அலுவலகத்திற்கு வந்தவனுக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.. என்ன தைரியத்தில் அவன் இதையெல்லாம் பேசிவிட்டு அவளிடம் வந்து விட்டான்.. அவளை தான் அவனுக்கு துளியும் ஆகாதே.. அப்போ உண்மையில் அவளை அவனுக்கு விட மனம் இல்லையா இது என்ன புது வியாதி??

ஏன் அவன் அப்படி சொன்னான்?? என அவனை தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தான் விது.. அவள் பேச்சு அடக்க வேண்டும் என அவன் எண்ணினான் அதற்காக வார்த்தைகளை விட்டான் தான் இருந்தாலும் ஏதோ ஒன்று இடித்தது.. என்ன என்ன என அவன் யோசிக்கும் பொழுது அவனுக்கு கிடைத்த விடயம் அந்த குழந்தை ரூபன்..

அவனை காணும் போது இனம் புரியா ஒரு பரவசம் அவனுக்குள் வருவது என்னவோ உண்மை தான் என்றாலும் அதை ஒப்புக்கொள்ள அவனுக்கு மனம் வரவில்லை..மேலும் இவள் எப்படி என்னை அந்த குழந்தையின் தகப்பன் இல்லையென்று கூறலாம் என எண்ணினான்.. அவளுக்கு என்ன திமிர் இருக்கும் என்று எண்ணினான்.. அதனுடைய அவன்தான் ஒரு காலத்தில் அந்த குழந்தைக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினான் என்பதை மறந்து இருந்தான்..

இங்கு அவளையும் குழந்தையையும் அழைத்து வரும்போது கூட பெரிதாக குழந்தை மீதெல்லாம் நாட்டம் இல்லாமல் இருந்தவனுக்கு அவள் தீடிரென குழந்தை மீது உரிமை இல்லை என்றதும் அவனுக்கு எப்படி அவள் அதை கூறலாம் என்ற ஆத்திரம் வந்தது அதன் வெளிப்பாடு தான் இதெல்லாம்...

அப்படி இருக்க அவன் நினைத்து கொண்டு இருப்பது எல்லாம் அவளுடைய கொட்டத்தை அடக்க வேண்டும் என்பது தான்.. அப்படி இருக்க அவனுடைய வேலைகள் அதற்கு மேல் அவனை யோசிக்க விடாமல் அழுத்த அவன் அவனுடைய வேலைகளில் மூழ்கினான்..

அவன் சென்றதும் அவன் பேசிய வார்த்தைகள் இன்னும் அவளை தாக்கி கொண்டு இருப்பதால் ராம் மோகனை பார்த்து, "சார் அவர் என்ன சொல்றது?? நான் என்ன கேட்கிறது?? இதெல்லாம் சரிப்பட்டு வராது சார்.. அவர் எனக்கு யாரும் இல்லை.. அவருடைய பேச்சை நான் கேட்கணும்னு எந்த அவசியமும் இல்லை சார்..

உங்க கூட பேசிட்டேன்.. என்னுடைய வேலை முடிஞ்சது நான் கிளம்புறேன்.. விவாகரத்து பத்திரத்தில் எங்க கையெழுத்து போடணும் அப்படின்னு சொல்லுங்க.. நான் கையெழுத்து போட்டு அனுப்பி வைக்கிறேன்.. அவர் சம்பந்தமான எல்லா விஷயத்தையும் முடிக்கணும்னு நினைக்கிறேன்.. பெரியவரா இருந்து நீங்க சீக்கிரம் முடிச்சு கொடுங்க" என அவள் கூறி விட்டாள்..

அதே நேரம் அவளிடம் ராம் மோகன் ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டு நான் ஒன்று நினைக்க இங்கு வேறு ஒன்றாக நடக்கிறதே என எண்ணி, "அம்மா தேவி நீ என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு அதுல உடன்பாடு தான்.. நீங்க பேசுறதை எல்லாம் கேட்டேன் .. விருப்பம் இல்லாமல் இரண்டு பேரை இணைக்கணும்னு நான் எப்பவும் நினைக்க மாட்டேன்..

அதே நேரம் இந்த குழந்தைக்கு அப்பா, அம்மா இரண்டு பேரும் வேணும் உங்களால இந்த குழந்தை அனாதையாகி இருக்கக் கூடாது அப்படின்னு ஆசைப்படுறேன்.. எதுவா இருந்தாலும் நல்லா யோசிச்சு செய்யுமா.. வந்தது வந்துட்ட விவாகரத்து வாங்குற வரையுமாவது இங்கே இருந்துட்டு போமா.. இதை நான் கேட்கக் கூடாது தான் ஆனாலும் மனசில்லாமல் கேட்கிறேன்...

அவன் நான் சொல்ற பேச்சை கேட்கிற நிலைமையில் இல்லை.. நீயாவது கேளு மா.. ஒரு பேரன் இருக்கான்னு தெரிஞ்சது முதல் அவனை தூக்கி கொஞ்சனும் அவன் கூட இருக்கணும்னு ரொம்ப ஆசையோட இருந்தேன் மா..

உங்களுக்குள்ள என்ன நடந்தது அப்படிங்கிறது உங்க இரண்டு பேர் சார்ந்த விஷயம்.. அதுக்குள்ள நாங்க வரல.. உங்களால முடிஞ்சா சேர்ந்து வாழுங்க இல்லைன்னா பிரிஞ்சு வாழுங்க அது உங்க ரெண்டு பேருடைய தனிப்பட்ட விருப்பம்...

ஆனால் எங்க பேரன் ரூபன் அவன் கண்ணுக்குள்ள நிக்கிறான் மா.. எங்ககிட்ட இருந்து அவனை பிரிச்சிடாதே மா.. உன் கூட இருக்க ஆசைப்படுறேன் மா" என அவரா கூறினார்..

அப்படி இருக்க ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் விஷயத்தில் ஏக அழுத்தத்தில் இருந்த ராம் மோகன் தேவிகாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்..  அதை கண்ட அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.. இப்படி தன்னிடம் இந்த பெரியவர் கேட்கிறாரே என கண்கள் கரிக்க நின்று கொண்டு இருந்தாள் தேவிகா..

அதை கண்ட ரேவதிக்கு தாங்க முடியவில்லை.. அதற்குள் தேவிகா மிகவும் வருத்ததுடன், "இல்லை சார் அது வந்து முடியாது சார் என்னை மன்னிச்சிடுங்க.. அது சரி வராது" என்று வருத்ததோடு கூறிக் கொண்டு இருக்கும் போதே அவளை இடை மறித்த ரேவதி, "என்ன நெனச்சிட்டு இருக்க நீ?? அவ்வளவு பெரிய மனுஷன் உன்கிட்ட கெஞ்சிட்டு இருக்கார்.. நீ ஓவரா பேசிட்டு இருக்க?? நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணீங்க ஏது பண்ணிங்க எங்களுக்கு தெரியாது.. அவனுக்கு ஒரு இப்படி ஒரு குடும்பம் இருக்கு அப்படிங்கிறதையே இப்பதான் எங்களுக்கு தெரியும்.. நானே அந்த அதிர்ச்சியில் இருக்கேன்.. அவர் உன் கையில இருக்க எங்க பேரனை பார்த்ததிலிருந்து அந்த குழந்தை கூட இருக்கணும் தானே ஆசைப்படுகிறார்.. கொஞ்ச நாள் இருந்தா தான் என்ன?? நாங்க அந்த அளவுக்கு உன்னை ஏதாவது கொடுமை படுத்திட்டோமா?? விருப்பமில்லாத கல்யாணம் பண்ணிக்கிட்டது நீங்க.. யாருக்கும் தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டது நீங்க.. ஒத்த பையன் அவன் கல்யாணம் எப்படியெல்லாம் நடக்கணும்னு ஆசைப்பட்டு இருப்பேன்.. ஆனால் நடக்கல அவனுடைய குழந்தையுடன் வந்து நீ நிற்கிற.. அந்த குழந்தை கூட இருக்கணும் தானே ஆசைப்படுறோம்.. அதுக்கு கூட கொஞ்சம் மனசு இறங்க மாட்டியா??? அதுதான் விவாகரத்து வாங்குற வரை ஆவது இரு என்று சொல்றார்ல அது கூட கேட்க மாட்டியா??" என்று ரேவதி சூடாக கேட்டார்..

அதோடு நில்லாமல் அவள் கையில் இருந்த குழந்தையை, "நீ வா டா கண்ணா பாட்டி உனக்கு சாக்லெட் தரேன்" என்றதும் குழந்தை அவரிடம் தாவிக் கொண்டான்..

அவரும் ஆசை தீர குழந்தை முத்தமிட்டு கொஞ்சியவர், "நீ தாத்தா கிட்ட போ பாட்டி நிறைய சாக்லெட் எடுத்துட்டு வரேன்.." என்று குழந்தையை ராம் மோகனிடம் கொடுக்க அவனும் சென்று விட்டான்.. அவரும் குழந்தையை கொஞ்சி விளையாட துவங்கினார்..

அவர் பேசியதை கேட்ட தேவிகாவுக்கு அவர்களுடைய மனசு புரிந்தது.. அது மட்டுமில்லாமல் அவர்கள் குழந்தையிடம் உரிமையாக பழகுவதை கண்டு பிரித்து கொண்டு வர அவளால் இயலவில்லை..

இவனிடம் விவாகரத்து வாங்காமல் இங்கே இருந்து சென்றால் மீண்டும் ஏதாவது உரிமை கொண்டாடி வந்தாலும் வருவான் என கருதி அவள் விவாகரத்து வாங்கிவிட்டே செல்லலாம் அது வரை அவர்கள் உடன் குழந்தை இருக்கட்டும் என அவள் நினைத்தாள்..

அதனால் அவளும் அங்கேயே இருக்க முடிவு செய்தவள் ரேவதி மற்றும் ராம் மோகனை பார்த்து, "நான் இங்கேயே உங்களுக்காக கொஞ்ச நாள் இருக்கேன்.. உங்களுக்கான வேலை முடிஞ்சதும், எனக்கு விவாகரத்து கிடைச்சதும் நான் இங்கே இருந்து போறேன்.. ஆனால்  நான் இங்கே இருக்கிற வரை நான் அவுட் ஹவுஸில் தங்கிக்கிறேன்.. நான் இந்த வீட்டு வேலைக்காரியா வேணும்ன்னா இந்த வீட்டில் இருக்கேன்.. ஆனால் அவரோட மனைவியா நான் இருக்க மாட்டேன்.. அதுக்கு சம்மதம் அப்படின்னா இருக்கேன்.. அதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு.. இந்த வீட்டில என்ன வேலை இருந்தாலும் செய்யறேன்.. ஆனால் அவர் சார்ந்த வேலைகளை என்கிட்ட செய்ய சொல்லாதீங்க.. அதே மாதிரி உங்களுக்கு இந்த குழந்தை மீது உரிமை இருக்கு.. ஆனால் உங்க பிள்ளைக்கு இந்த குழந்தை மீது உரிமை இல்லை.. நீங்க இந்த குழந்தையோட உறவாடுங்க.. உங்க மகனை உறவாட விடாதீங்க.. அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.." என அவள் அவளுடைய முடிவை கூறியவள் எப்போதும் போல அவள் அடுக்களைக்குள் சென்று வேலை செய்ய துவங்கி விட்டாள்..

அவள் சென்றதும் பெரியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள ராம் மோகன் தான், "அவ மனசு போல இருக்கட்டும் விடு பார்த்துக்கலாம்.. கொஞ்சம் விட்டு பிடி.." என்று கூறினார்..

அதைக் கேட்டு ரேவதியும், "என்னமோ போங்க இந்த குழந்தை மட்டும் கண் முன்னாடி வரல.. அவ்வளவுதான்.. இன்னும் என்ன எல்லாம் பார்க்க இருக்கோ தெரியலங்க" என்று அவரும் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டினார்..

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விஷ்வா சிறிது நேரம் அவர்களோடு இருந்துவிட்டு, பிறகு அவளை காண சென்றவன் ஒரு புதிய போன்,கொஞ்சம் அவளுடைய செலவுக்கு அவள் மறுக்க மறுக்க கொடுத்து விட்டு, "இதில் உனக்கு எது வேணும்னாலும் வாங்கிக்கோ.. ஒரு அண்ணனா தரேன் மறுக்காதே.. உனக்கு ஏதாவது பிரச்சனை அப்படின்னாலும் என்னை கூப்பிடு நான் வரேன்..சும்மா ஓடி போயிட்டு இருக்காதே.. எதையும் எதிர்த்து நின்று போராடு.. உனக்கு ஒன்னுனா நீ மட்டும் தான் பேசணும்.. உனக்காக யாரும் பேச மாட்டாங்க.. நீதான் போராடனும் அது எந்த முடிவாக இருந்தாலும் சரி.." என்று கூறி ஆறுதல் வார்தைகள் சொல்லி விட்டு அவனும் சென்று விட்டான்... அவன் கூறியதை மீண்டும் தெளிவாக தேவிகா உள்வாங்கி கொண்டாள்..

அங்கு புதிதாக வேலையில் இருப்பவர்கள் எல்லாம் இவளை கண்டதும் யார் இவள் என்பது போல பார்த்தாலும் அவள் எதையும் கண்டு கொள்ளாமல் அவள் அவளுடைய வேலைகளில் மூழ்கினாள்..

அப்படி இருக்க மாலை ஆனது.. ரேவதி மற்றும் ராம் மோகன் தோட்டத்தில் போடப்பட்டு இருக்கும் இருக்கையில் அமர்ந்து இருக்க, அந்த மேசையில் விலை உயர்ந்த விளையாட்டு பொருட்கள் நிறைந்து இருந்தன..

அதை எல்லாம் பார்த்து குழந்தை அப்படியே தாத்தா, பாட்டியிடம் விழுந்து விட்டான் என்று தான் கூற வேண்டும்..

அவன் குழந்தை இல்லையா அதனால் அவனுக்கு அதை எல்லாம் பார்த்ததும் அவனுடைய கண்கள் ஆர்ப்பரிக்க அவர்களை விட்டு இம்மியளவு கூட நகராமல் விளையாட துவங்கி விட்டான்..

அந்த சமயம் பார்த்து அவள் பெரியவர்கள் இருவருக்கும் காபி தயாரித்து கொண்டு வந்தாள் தேவிகா.. அவளுக்கு அந்த காட்சியை பார்த்ததும் உள்ளுக்குள் ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் மறு பக்கம் இது போன்ற விலை உயர்ந்த பொருட்களால் மகன் மனம் மாறிவிடுமோ அவனுடைய அப்பாவின் குணம் குழந்தைக்கு வந்து விடுமோ என்ற பயம் அவளுக்கு சற்று வந்தது..

இருந்தாலும் அந்த பெரியவர்கள் முகத்தை பார்த்து அவள் அமைதியாக இருந்தாள்.. இன்னும் கொஞ்ச நாள் தானே என எண்ணினாள்..அவர்களின் கண்களில் உண்மையான நேசம் இருந்தது.. அதற்காக அவள் பொறுத்து கொண்டாள்..

அப்படி இருக்க அவள் காப்பியை கொண்டு செல்லவும் விதுவின் கார் உள்ளே வரவும் சரியாக இருந்தது.. அவர்களின் விளையாட்டை ஓரமாக நின்று ரசித்துக் கொண்டு இருந்தாள்.. அதுவரை அவளுக்கு இருந்த மனநிலை அவன் வந்ததும் மாறியது..

உள்ளுக்குள் இலேசான படபடப்பும், அவளுடைய கண்கள் அவளின் குழந்தையை பார்க்க, ஏனோ குழந்தை அருகில் கூட விது பிரதாப்பை விடக்கூடாது என்ற எண்ணம் அவளுக்கு வந்தது..

இந்த குழந்தையை கருவில் சுமக்கும் போது அவன் பேசிய வார்த்தைகள் அவளின் நெஞ்சில் ஈட்டியாக குத்தி அவளை நினைவுப்படுத்தி கொண்டு இருந்தன..

அதே நேரம் அவனும் தன் காரை நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கியவன் கண்கள் தோட்டத்திற்கு செல்ல அவனுடைய கண்களில் அந்த குழந்தை தான் தெரிந்தான்..அதாவது அவனுடைய குழந்தை தெரிந்தான்..

தன் பெற்றோர்கள் குழந்தையிடம் மகிழ்ச்சியோடு விளையாடுவதைக் கண்டு அவனுக்கு உள்ளுக்குள் லேசான ஒரு சந்தோஷ உணர்வு வந்தது என்னவோ உண்மைதான்..

அதனால் என்னவோ தன் பெற்றோர்களை பார்க்க செல்வது போல அவனுடைய கால்கள் அவனை அறியாமல் தோட்டத்து பக்கம் சென்றது..

அவன் வருகிறான் என்பதை அவனை திரும்பி பார்க்காமலேயே காபி கப்பை கொண்டு செல்கின்றவள் முதுகில் சில்லென்ற ஊசி குத்தும் அழுத்தமான பார்வையை அவள் தேகம் உணர்ந்து கொண்டிருக்க அவள் கால்கள் சற்று வேகம் எடுத்து சென்றது..

எப்படியாவது அவள் கைகளில் உள்ள காபியைக் கொண்டு பெரியவர்களுக்கு கொடுத்துவிட்டு விது வருவதற்குள் வேகமாக குழந்தையை எடுத்தவள், "கண்ணா வா உடம்பு கழுவ நேரம் ஆச்சு வா போகலாம்" எனக் கூறியவள், "அவன் விளையாட்டடும் தேவி.. அது தான் நாங்க இருக்கோமே" என்ற ரேவதியின் பதிலை பொருட்படுத்தாமல், "இல்லை மா நாங்க போறோம்.. ரொம்ப நேரம் ஆச்சு.. அவனுக்கு உடம்பு கழுவனும்" என கூறி விது அருகே வருவதற்குள் குழந்தையை தூக்கிக் கொண்டு அவள் ஓடி விட்டாள்..

ஆம்.. சரியான விது வரவும் அவள் குழந்தையை அவளுடைய கணவனுக்கு காண விடாமல் தடுப்பது போல குழந்தையை தூக்கிக் கொண்டு செல்லவும் சரியாக இருந்தது..

அதை கண்ட அவனுக்கு அவள் வேண்டும் என்று தன்னை அவமானப்படுத்துகிறாள் என்ற எண்ணத்தில் மேலும் அவள் மீது ஆத்திரம் கொண்டான்..

பெரியவர்களுக்கும் என்ன நடக்கிறது என புரியாமல் திரும்பி பார்க்க அதற்குள் மகன் வந்து நிற்கவும் இதுதான் விஷயமா என அவர்களுக்கு புரிந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்..

அவன் சங்கடப்படக்கூடாது என கருதி ரேவதி, "குழந்தைக்கு உடம்பு கழுவ கூட்டிட்டு போறா" எனக் கூற அதை கேட்டவன் எதுவும் கூறாமல் எவ்வளவு நாள் தான் என்கிட்ட இருந்து குழந்தையை தூக்கிட்டு போறேன்னு நானும் பாக்கறேன் டி.. என்றவனுக்கு அவளுடைய செய்கை சுத்தமாக பிடிக்கவில்லை..

ஆம்.. அவள் எவ்வளவு தூரம் அவனை ஒதுக்கி வைக்க நினைக்கிறாளோ அது எல்லாம் அவனுக்கு அவள் வேண்டுமென்று அவனை அவமானப்படுத்துவதாக தான் தோன்றுகிறது அதற்காகவே அவளின் செய்கை எல்லாம் முறியடிக்க வேண்டும் என அவன் நினைக்கிறான்..

இது நடக்குமா???  அதே நேரம் குழந்தை, குட்டி என்ற கூட்டுக்குள் வரமாட்டேன் என்று எண்ணிக் கொண்டிருந்தவன் கல் போன்ற மனதை அவனுடைய குழந்தையின் வருகை கல் போன்றவனின் இதயத்தை கரைத்துக் கொண்டிருக்கிறதோ என்னவோ..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top