Share:
Notifications
Clear all

மந்தாரம் 39

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 483
Thread starter  

மந்தாரம் : 39

  "என்ன விது கோபம் வருதா?? உனக்கு கோபம் வந்தாலும் பரவாயில்லை.. நான் பேசுவதை கேட்டுட்டு போ.. இந்த மாதிரி நான் முன்னாடியே உன்னை நிற்க வைச்சு பேசி இருந்தா இதெல்லாம் நடந்து இருக்காதோ என்னமோ?? நானும் நீ ஏதாவது பேசி என்னை அசிங்கப்படுத்திடுவ அப்படின்னு நான் அமைதியா போனது தப்புன்னு இப்ப தோணுது.." என்றார்.. அதை கேட்டு அவன் இறுகி போய் நின்று கொண்டு இருந்தான்..

"நீ இவ்வளவு ஓடி சம்பாதிச்சு என்ன பண்ண போற?? உன் வாழ்க்கைக்கான அர்த்தம் என்ன?? இந்த பிசினஸ் ஃபீல்டுல இல்லாமல் மனசு விட்டு பேச உனக்கு ஒரு உறவு என்று ஏதாவது ஒன்று இருக்கா?? எங்களை விடு..

எங்ககிட்ட பேசவும் உனக்கு வரைமுறை இருக்கும்.. ஆனால் உன் மனசுல இருக்குற விஷயத்தை நல்லதோ, கெட்டதோ பகிர்ந்து கொள்ளவோ இல்லை உனக்கு பின்னாடி இவன் தான் அப்படின்னு சொல்லவோ யாராவது ஆள் இருக்கா?? சொல்லுடா?? நான் பெருமையா சொல்லுவேன் என் மகன் எனக்கு பின்னாடி இருக்கான்.. என்னை விட உயரமாக வளர்ந்து நிற்கிறான்... அதுவும்  தொழிலில் வாழ்க்கையில் இல்லை..அப்படின்னு பெருமையா சொல்லுவேன்..

அப்படி உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கா?? ஏதோ விபரீதமான சூழலில் உனக்கு ஒரு கல்யாணம் நடந்துடுச்சு.. அதுவரை உன்மேல எந்த தப்பும் இல்லை..

அதுக்கு பிறகு ஒன்னு நீ அவளை விட்டு இருக்கணும்.. இல்ல எங்க கிட்ட விஷயத்தை சொல்லி இருக்கணும்.. அதுவும் இல்லை..

ஆனால் நீ அவளை கூட்டிட்டு வந்து அவ கூட இருந்து ஒரு குழந்தையும் பெத்திருக்க.. பிடிக்காத ஒருத்தி கூட வாழ்ந்து இருக்க.. அது தான் எனக்கு புரியல.. அந்த இடத்துல தான் இடிக்குது.. பிடிக்காத ஒரு வாழ்க்கை எப்படி வாழ முடியும்??

அவளை அடிச்சும் துரத்தி விட்டு இருக்க.. இந்த பாவத்தை எங்க கொண்டு போய் கழுவுவ?? அந்த பொண்ணு கூட வாழ்ந்து உனக்கு ஒரு மகன் இருக்கான்.. இது தான் நீ செய்த தப்பு.. அப்போ அவங்க ரெண்டு பேருக்கும் ரெஸ்பான்சிபிலிட்டி நீதான்.. நீ மட்டும் தான்..

இதிலிருந்து உன்னால கண்டிப்பா மாற முடியாது.. நான் அப்படி மாறவும் விடமாட்டேன்.. ஒன்னு அவங்க கூட சேர்ந்து வாழு.. இல்லை ப்ராப்பரா முடிச்சு விடு.. இந்த ரெண்டுக்கும் இடையில் இருந்துட்டு இருக்காத.. அதாவது அவள் வேண்டாம் ஆனால் குழந்தை வேறொருத்தனை அப்பானு சொல்றது மட்டும் உனக்கு உறுத்துது அப்படின்னா நீ தான் தப்பு...

இன்னைக்கு உன்னோட ரத்தம் வளர்ந்து நிற்கிறான்.. அவன் உன் கண்ணு முன்னாடியே வேற ஒருத்தனை அப்பானு சொல்றான்.. அது உனக்கே அசிங்கமா இருக்கு.. நீ தேவிகாவை துரத்த முடியும்..

ஆனால் உன்னை மாதிரியே இருக்க உன்னுடைய மகனை உன் வாழ்க்கையில் இருந்து அகற்ற முடியுமா??? அவனைப் பார்த்துட்டு உன்னால உன் வாழ்க்கையில் இருந்து அவனை விலக்கி நிறுத்த முடியுமா சொல்லு?? இன்னைக்கு அஞ்சு வயசு பையன் மனசுல வெற்றி அப்படிங்கிறவன் தான் அப்பாவா இருக்கான் அதை வேடிக்கை பார்த்துட்டு நீ நிக்கிற.. கொஞ்சமாவது யோசி.. எல்லாம் இளமையும் ஆரோக்கியமும் இருக்கிற வரை மட்டும்தான் விது அதெல்லாம் போயிடுச்சுன்னா நமக்குன்னு ஒரு துணை வேண்டும் என்று தோணும்.. அப்போ யாரும் நம்மளை நேசிக்கிறவங்க இருக்க மாட்டாங்க நம்ம பணத்தை நேசிக்கிறவங்க வேணா நம்ம கூட இருக்கலாம் அது கிடையாது வாழ்க்கை.. லைப் இஸ் எ பியூட்டிஃபுல்.. அந்த லைப்குள்ள வாழ்ந்து பார்த்தா தான் தெரியும்?? இவங்கள ஒதுக்கி விட்டுட்டு நீ எவ்வளவு தூரம் உன்னோட வாழ்க்கையை வாழ்ந்திட முடியும்" என அவர் கேட்டார்..

அதைக் கேட்டு அப்பொழுதும், "இப்பொழுது தானே மகன் ஒருத்தன் இருக்கான்னு எனக்கு தெரியும்.. அப்பா எனக்கு கொஞ்சம் சிம்பதி அந்த குழந்தை மேல இருக்கு இல்லைன்னு எல்லாம் சொல்லல.. அவன் அந்த வெற்றியை அப்பான்னு சொல்லும் போது எனக்கு ஹர்ட் ஆகுது உண்மைதான்... நான்தான் உன்னோட அப்பா அப்படின்னு எனக்கு சொல்ல தோணுது இல்லைன்னு எல்லாம் இல்ல.. நீங்க சொல்றதெல்லாம் நான் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிறேன்..

அதுக்காக அவளை ஏத்துக்கவெல்லாம் முடியாது.. எனக்கு இப்பவும் கல்யாணம் குடும்பம் குழந்தை அப்படின்னு நீங்க சொன்னிங்களே.. அது மேல எல்லாம் நம்பிக்கை இல்லை.. இப்பவும் நீங்க என்னை ஜீரோனு சொன்னது தான் குத்திட்டு இருக்கு.. அதுதான் அவளே சொல்றாளே வெற்றி தான் முக்கியம்.. நான் முக்கியம் இல்ல அப்படின்னு அவளே அப்படி நினைக்கும் பொழுது நான் அவ பின்னாடி கெஞ்சிட்டு இருக்க சொல்றீங்களா?? சி அப்பா அவளுக்கும் என் கூட வாழ விருப்பம் இல்ல.. எனக்கும் இப்படி ஒரு குடும்பத்தோட வாழ விருப்பமில்லை.. ஆனால் நீங்க சொல்றதனால் ஒன்னு சொல்றேன் என்னால தான் அந்த குழந்தை வந்துச்சு.. அந்த குழந்தைக்கு வேண்டியதை மட்டும் நான் செய்யறேன்.. மத்தபடி என்கிட்ட எதுவும் எதிர்பார்க்காதீங்க" என்று கூறினான் அவன்..

அதை கேட்ட அவர் இவன் என்ன சொன்னாலும் திருந்த போறது இல்லை என முடிவு செய்து, "சரி அப்போ நான் உன்னை மட்டும் கவனிச்சு இருந்து இருக்கலாம்.. உன்னோட அம்மாவை அப்படியே விட்டு இருக்கலாம் இல்லை.." எனக் கூறினார்..

அதைக் கேட்டு அவன், "என்ன சொல்றீங்க??" என கேட்டான்.. ஏனெனில் பல தருணங்களில் மட்டுமல்ல எப்போதுமே தன் தாயை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத தந்தையை மட்டும் தான் அவன் கண்டிருக்கிறான்.. ஆனால் இப்பொழுது முதன்முறையாக அம்மாவை பற்றி அவனிடம் பேசவும் அவன் அதிர்ந்த பார்வை பார்த்தான்...

"உண்மையை தான் சொல்றேன்.. ஒரு காலத்தில் எனக்கு உன்னை தான் பிடிக்கும்.. உன்னோட அம்மாவை சுத்தமா பிடிக்காது அது உனக்கு தெரியுமா??" என கேட்டார்.. அதை கேட்டவன் அதிர்ந்தான்..

"உன்னோட அம்மா, உன்னோட அப்பா சேர்ந்து ஒரு நல்ல கணவன், மனைவியா தானே நீ பார்த்து இருக்க.. ஆனால் எனக்கு அவளை ஒரு காலத்தில் சுத்தமா பிடிக்காது.. நானும் அவளும் ஒரே ஊர்.. அவ கொஞ்சம் பணக்கார பொண்ணு.. அவளுக்கு என்னை சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்.. கல்யாணம், குடும்பம் அப்படின்னு எனக்கு அதுல எல்லாம் நாட்டமே இல்லை.. எனக்கு வேறொரு பெண் மீது இஷ்டம் ஆனால் என்னுடைய காதலை அந்த பொண்ணு கிட்ட சொன்னதே இல்லை... சொல்ல எனக்கு தைரியமும் வந்ததில்ல அது வேற விஷயம்..

என் வீட்ல வற்புறுத்தி என்னை கல்யாணம் பண்ணி வைச்சாங்க.. ஏன்னா பெரிய இடத்து பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் நல்லா இருப்பேன்னு என் வீட்டில் நினைச்சாங்க.. ஆமா கட்டினா இவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன் அப்படின்னு பிடிவாதமா என்னை கட்டிக்கிட்டா உன்னோட அம்மா..

அதுவே உன்னோட அம்மாவை பிடிக்காமல் போச்சு..நானும் தாலி கட்டின பிறகு இது தான் வாழ்க்கை அப்படின்னு அவளோட வாழ ஆரம்பிச்சேன்..

அவளை கல்யாணம் பண்ணின நேரமோ என்னமோ தெரியல நான் ஆரம்பிச்ச எல்லாமே நஷ்டம் ஆச்சு..அப்போ உன்னோட அம்மா வந்த நேரம்னு சொல்லி நான் அவகிட்ட சண்டை போட்டேன்.. அவளை ஒதுக்கி வைச்சேன்.. பிடிக்காத பொண்டாட்டி நின்னா குத்தம் நடந்தா குத்தம் அப்படி என்கிற மாதிரி உன்னோட அம்மா என்ன பண்ணினாலும் எனக்கு கோபம் தான் வரும்..

கொஞ்ச நாள் அவளை என்னோட இருக்காதே அவளோட வீட்டுக்கு போ.. உன்னால தான் எனக்கு இப்படி எல்லாம் ஆகுதுன்னு துரத்தி விட்டேன்.. அவளும் அழுதுகிட்டே போனா... எங்கே போனாலும் என்னை விட்டுக் கொடுத்ததில்லை..

அப்போ தான் மறுபடியும் ஒரு தொழில் வைச்சேன்.. அவள் இல்லாத நேரமோ என்னமோ தெரியல.. அது சரியா எனக்கு கை கொடுத்துச்சு..ஓடியாடி உழைச்சேன்.. நல்ல வருமானம் கிடைச்சது.. எனக்குன்னு ஒருத்தி இருக்கா அப்படிங்கறத நான் மறந்துட்டேன்.. தொழில் அதை முன்னேற்றம் அடையணும்.. அது மட்டும் தான் எனக்கு குறிக்கோளா இருந்துச்சு..

   ஒரு நாள் என்னோட அம்மாகிட்ட இருந்து ஒரு லெட்டர் உனக்கு மகன் பிறந்து இருக்கான் அப்படின்னு அதை படிச்சதும் உடம்பே சிலிர்த்து போச்சு..

தான் ஆடா விட்டாலும் தன்னுடைய தசையாடும் அப்படிங்கறது போல தான்.. நீ பிறந்துட்ட.. எனக்கு ஒரு மகன் இருக்கான்.. என்னோட உதிரம் அப்படின்னு தெரிஞ்சதும் அவ்ளோ சந்தோஷம்.. அப்போ கூட உன்னை தந்த உன்னோட அம்மாவை நான் புரிஞ்சுக்கல..

நான் ஊருக்கு போகும் போது உன்னை பார்க்க போனேன்.. அப்போ கூட என்னை பார்த்து அழுதிட்டு இருந்தா.. அவளுக்கு என்னை பார்த்த சந்தோசம்.. அவ்வளவு காதல் என் மேல..

ஆனால் எனக்கு உன்னோட அம்மா என் கண்ணுல தெரியல.. நீ தான் தெரிஞ்ச.. ஏன்னா நீ என்னோட ரத்தம் ஆச்சே.. அந்த திமிர், அந்த பாசம் எல்லாம் கலந்து உன்னை பார்த்து நான் கண் கலங்க அவளோ என்னை பார்த்து மலங்க மலங்க பார்த்திட்டு இருந்திட்டே இருந்தவள் திடீர்னு என்கிட்ட வர எழுந்தவ, "மாமா வந்துட்டீங்களா" என ஆசையா என்னை பார்த்த சந்தோஷத்தில் வந்தவ அப்படியே தலை சுத்தி மயங்கி விழுந்துட்டா...அப்படியே அவளுக்கு வலிப்பு வந்துடுச்சு..

உடனே எல்லோரும் வந்து உன்னோட அம்மாவை தூக்க நான் பார்க்கும் போது அப்படியே பதறிட்டேன்.. ஆமாம் கீழே விழுந்தவளை தூக்கும் போது அவளுடைய கால்களுக்கு இடையே இரத்தம்.. அதை பார்த்த எனக்கு அப்படியே தலையே சுத்திடுச்சி..கையும் ஓடல.. காலும் ஓடல..

உடனே டாக்டர் வர அவங்க அவசர அவசரமா அவளை எங்கேயோ கூட்டிட்டு போனாங்க என்னென்னமோ நடந்துச்சு.. கிட்டத்தட்ட அவளுடைய முகத்தை பார்க்க எனக்கு 24 மணி நேரம் ஆச்சு..

அதுக்குள்ள எனக்கு  உயிர் போன மாதிரி ஆகிடுச்சு.. அவளுக்கு அதிகமான ரத்த போக்கு அதுனால மயங்கிட்டா அப்படின்னு சொன்னாங்க.. நான் அதிர்ச்சியா உன்னை தூக்கி வைச்சிட்டு பதறிட்டு நின்னேன்..

டாக்டர் அவளை செக் பண்ணிட்டு வெளியே வந்தப்போ, "நான் அவளுக்கு எப்படி இருக்கு" என கேட்டேன்..

அந்த டாக்டர் என்னை பார்த்து, "என்ன சார் இப்படி பார்க்கறீங்க?? உங்க கையில் இருக்கிற ஒரு உயிரை கொடுக்க எங்களை மாதிரி பொண்ணுங்க அவங்க உயிரை பணயம் வைச்சா தான் உங்களை மாதிரி ஆளுங்களுக்கு பெயர் சொல்லும் பிள்ளை வருவாங்க.. இது எல்லாம் அதோட பார்ட் தான்.. சீக்கிரம் உங்க மனைவிக்கு சரியாயிடும் கவலை படாதீங்க.. உங்க மனைவி இல்லனா உங்க பையன் உங்களுக்கு கிடைப்பானா??? கொஞ்சம் உங்க பொண்டாட்டியையும் கவனிச்சுக்கோங்க.. அவங்களையும் புரிஞ்சுக்கோங்க.. கொஞ்சம் வீக்கா இருக்காங்க.. இந்த சமயம் உங்களுடைய ஆதரவு அவங்களுக்கு கண்டிப்பா வேணும்.. குழந்தையையே பார்த்துட்டு இருக்காம, இந்த குழந்தையை உங்களுக்கு கொடுத்த அவங்களையும் கவனிச்சுக்கோங்க.." அப்படின்னு சொல்ல நான் அரண்டு போயிட்டேன்..

அவங்க என்னமோ சாதாரணமா தான் சொல்லிட்டு போயிட்டாங்க.. ஆனா எனக்குள்ள அவ்வளவு ஒரு வலி.. என் மகன் அப்படிங்கும் போது சிரிச்ச என்னோட மனசு அவளை கண்டுக்கவே இல்லையே.. அப்படின்னு என்னை நானே கேவலமா உணர்ந்தேன்..

டாக்டர் சொன்ன மாதிரி அவ இல்லைன்னா நீ கிடையாது.. எனக்காக உயிரையே பணயம் வைத்து உன்னை கொடுத்திருக்கா.. அவளை நான் எப்படி பார்த்துக்கணும்.. உன்னை விட அதிகமா பார்த்துக்க வேண்டாமா? அப்படின்னு எனக்குள்ள நானே கேள்வி கேட்டேன்..

அதோட அவளை பார்க்க போனா பாவம்.. என்னை பார்த்து மாமா மகன் உங்களை மாதிரியே இருக்கான்ல அப்படின்னு கேட்கிறா.. நான் அவளை கண்டுக்காததையோ இல்லை.. அவ கூட பேசாததையோ எதை பத்தியும் குறை சொல்லல.. இப்படிப்பட்ட ஒருத்தி என் வாழ்க்கையில் கிடைக்க மாட்டா.. அப்போ என்னோட மனசை மாத்திக்கிட்டேன்.. அவளையும் உன்னையும் என் கூடவே வைச்சுகிட்டேன்..

இப்போ ஆணித்தரமாக நான் சொல்லுவேன்.. என்னோட பொண்டாட்டி வந்ததுக்கப்புறம் தான் எனக்கு இந்த வாழ்க்கை அப்படின்னு.. அதுக்கப்புறம் நான் வேகமாக உயர்ந்தேன்.. அவள் மீதான என்னுடைய பார்வை மாறுச்சு.. அவள் என் மேல வச்சிருக்க பாசம் மட்டும் தான் என் கண்ணுக்கு முன்னாடி தெரிஞ்சுச்சு.. வேற எதுவுமே தெரியல இப்போ நீ முக்கியமா இல்ல.. அவன் முக்கியமான கேட்டா நான் அவ தான் முக்கியமா சொல்லுவேன்.. அந்தளவுக்கு அவ மேல காதல் எனக்கு இருக்கு" என கூற அதை கேட்டவன் அப்பாவை ஒரு மாதிரி  பார்த்தான்.. அவர் பேசப் பேச தன் தாய் மீது தன் அப்பா வைத்திருக்கும் காதல் எத்தகையது என்பதை அவன் புரிந்து கொண்டான்.. ஆனால் அதற்காக எல்லாம் அவளை ஏற்றுக் கொள்வானா கேள்விதான்..

"என்னுடைய வாழ்க்கையை சொல்லி உன்னை போர் அடிச்சிட்டேனா.. நான் இதை ஏன் சொல்றேன்னா என்னோட வாழ்க்கை மாதிரி தான் உனக்கும்... எதுவுமே நம்ம பார்க்கிற பார்வையில தான் இருக்கு விது.. நம்ம பார்வை நல்ல விதமாக இருந்தா எல்லாமே நல்லவிதமா இருக்கும்.. ஒரு ஆளை கெட்டவங்க நான் முடிவு பண்ணிட்டோம்னா அவங்க நல்லவங்களா இருந்தாலும் நம்ம பார்வைக்கு கெட்டவங்களா தான் தெரிவாங்க..

நாம நேசிக்கிறத விட நம்மள நேசிக்கிறவங்க கிடைக்கிறது ரொம்ப அபூர்வம்... அப்படி கிடைச்சா அவர்களை விட்டு விடாதே விது.. அவங்க அளவுக்கு நாம நம்மளையே நாம நேசித்திருக்க மாட்டோம்..

இதுக்கு மேல நான் இதைப் பற்றி சொல்றதுல எந்த அர்த்தமும் கிடையாது.. உங்க ரெண்டு பேருக்குமே விருப்பமில்லாத இந்த விஷயத்துல நான் ஏன் பெருசா மூக்கை நுழைக்கணும்.. என்ன முடிவு நீங்க எடுக்குறீங்களோ அதுக்கு நாங்க கட்டுப்படுறோம்.. இனி இதை பத்தி பேச போறது இல்லை.. நீயே உனக்கு என்ன வேணும்னு முடிவு பண்ணு.." என்றவர்  அவனை தெளிவாக குழப்பி விட்டுட்டு சென்றார்..

அவனோ அவர் கூறியதை கேட்டு சிலை போல நின்றான்.. அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.. அப்பா சொல்வதை எல்லாம் அவன் கேட்டாலும் அவனுக்கு யோசிக்க வேண்டும் என இருந்தது.. அவன் ஒரு கலங்கிய குளம் போல இருந்தான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top