Share:
Notifications
Clear all

மந்தாரம் 40

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 483
Thread starter  

மந்தாரம் : 40

   விது அவனுடைய பக்கத்தை பற்றி நன்றாக யோசித்தான்.
தந்தை கூறிய விஷயமும் அவனுடைய வாழ்க்கையும் எல்லாம் ஒரே போல இருப்பது போல இருந்தது.. ஒருவேளை அப்பா தனக்கு வேண்டி ஒரு புதிதாக கதை ஒன்றை கூறினாரோ என்னவோ என்பது போல எல்லாம் யோசித்தான்..

ஏனெனில் அப்பா தன் அம்மா மீது வைத்திருக்கும் காதலை அவன் நன்கு அறிவான்.. அவருக்கு விடியும் போதும் சரி துயிலும்போதும் சரி அம்மா அனைத்து விஷயங்களிலும் வேண்டும்.. எங்கு சென்றாலும் அம்மாவை அழைத்து தான் செல்வார் அதையெல்லாம் அவன் கண்டிருக்கிறான்.. அவனுக்கு கூட சில சமயங்களில் இவங்க ஏன் ரொம்ப ஓவரா பண்றாங்க என்று கூட நினைத்ததுண்டு அந்த அளவுக்கு அவர் தன் அம்மாவை காதலிக்கிறார்..

அப்படி இருக்கும் அப்பாவுக்கு ஒரு காலத்தில் அம்மாவை பிடிக்கவில்லை என்றால் அப்பா சொல்வதை அதனால் நம்ம கூட முடியவில்லை.

    ஆனால் அவர் கூறியதிலேயே ஒரு விஷயம் அவனுக்கு தெளிவாக புரிந்தது..

"நம்மை நேசிக்கிறவங்க ரொம்ப கம்மி..  நம்மளை நேசிக்கிறவங்க கிடைச்சா விட்டுடாத" என்ற வார்த்தை அவனை உறுத்தி கொண்டே இருந்தது.. இருந்தாலும் அக்குழந்தையைக் கண்டதும் ஏதோ ஒரு ஈர்ப்பு, அவனுள் வருவதையும் அவன் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறான்..

ஒருவேளை தன்னிடம் குழந்தையை விடாமல் அவள் பொத்தி பொத்தி வைப்பதனால் என்னவோ அவனுக்கு அவனுடைய குழந்தை வேண்டும் என தோன்றுகிறதா என தெரியாமல் முழித்தான் அவன்...

இல்லை அக்குழந்தை வெற்றி அப்பா என கூறும் போது அவனுக்கே ஏன் வலிக்க வேண்டும் என்று அவன் கலங்கிய குட்டை போல எப்பொழுது உறங்கினான் என அவன் அறியவில்லை.. அதை விட தன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்த அவள் தன்னை எதிர்த்து நிற்கும் பொழுது செய்வதறியாது அவனும் தவித்து தான் நின்றான்..

அடுத்து இரு நாட்கள் அவன் யாரிடம் பெரிதாக பேசவில்லை.. வேலைக்கு செல்கிறான்.. வீட்டிற்கு வருகிறான் என்ற அளவில் மட்டும் விது இருந்தான்.. குழந்தை அருகே அவன் செல்லவில்லை என்றாலும் குழந்தையை கவனித்து கொண்டு இருந்ததில் அவள் குழந்தையை விட்டு இம்மியளவு கூட நகராமல் தான் இருப்பது போல இருந்தது..

அது அவனிடம் குழந்தையை விடக் கூடாது என்ற பிடிவாதம் என்பதை அவன் புரிந்து அவளுக்குள் இப்படி ஒரு வெறி தன் மீது இருக்கிறதா என அவனால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.. அன்றைய தேவிக்கும் இன்றைய தேவிக்கும் மன அளவில் பெரிய மாற்றத்தை அவள் கொண்டு இருக்கிறாள் என அவள் காணாமல் அவன் அவளை கவனித்து உணர்ந்தான்..

பெரியவர்களும் அன்றைய சம்பவத்திற்கு பிறகு ஒதுங்கி இருப்பது போல தான் தேவிகாவுக்கு தோன்றியது.. அது அவளுக்கு இலேசான கவலையை கொடுத்தது.. அவளுக்கு அவன் மீது தான் கோபமே தவிர அவர்கள் மீதில்லை..

இருந்தாலும் பெரியவர்கள் குழந்தையுடன் இருப்பதிலோ இல்லை அவளுடன் இருப்பதிலோ எந்த குறையும் வைப்பதில்லை..

அவர்களும் குழந்தை அவர்கள் அருகே வந்தால் குழந்தையுடன் விளையாடுகிறார்கள் இல்லை என்றால் அவர்களும் அவர்களின் வேலையை பார்த்துக் கொண்டு இருப்பது போலத்தான் அவளுக்கு தோன்றியது..

இந்த செயலால் அவளுக்கு தான் என்னவோ போல இருக்க குழந்தையுடன் விளையாடி கொண்டு இருக்கும் பெரியவர்கள் முன்னால் சென்றவள், "உங்களுக்கு நான் அன்னிக்கு அப்படி அவர்கிட்ட நடந்ததுல எந்த வருத்தமும் என் மேல் இல்லையே.. என்னை மன்னிச்சிடுங்க.. அவர் எனக்கு செய்ததையும் இந்த குழந்தையை அவர் புறக்கணிச்சத்தையும் நெனச்சு தான் அப்படி நடந்துக்கிட்டேன்.." என கீழ் உதட்டை கடித்தபடி தன்னுடைய வருத்ததை அடக்கியபடி கேட்டாள்..

அவர்களோ, "உன் மேல வருத்தப்படுவதற்கு என்ன மா இருக்கு எங்க மகன் சரியில்ல.. இந்த மாதிரி உங்க ரெண்டு பேருடைய வாழ்க்கையில நடந்திருக்க வேண்டியதில்லை அப்படின்னு பல தடவை தோணி இருக்கு.. உனக்கும் விருப்பமில்லை அவனுக்கும் விருப்பமில்லை..

யாராவது ஒரு பக்கம் கொஞ்சம் அன்பா பாசமோ யாராவது ஒருத்தருக்கு இருந்தா கூட நாம முயற்சி பண்ணலாம்.. என்னுடைய ஒரு நம்பிக்கையே உனக்கு அவன் மேல இன்னும் அதே அன்பும், காதலும், பாசமும் இருக்கும்..

அதை வைத்து உங்க ரெண்டு பேரையும் சேர்த்துடலாம் அப்படின்னு நான் நினைச்சேன்... ஆனால் அப்படி இல்ல அப்படின்னு நீயும் நிரூபிச்சிட்ட.. அவனும் நிரூபிச்சிட்டான்.. இதுல நீ மன்னிப்பு கேட்டு எங்களுக்கு என்னவாக போகுது..

விடுமா.. நீயும் நல்ல பொண்ணு தான்.. உன்ன மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க நாங்க கொடுத்து வச்சிருக்கணும்... என் பையனுக்கு தான் கொடுத்து வைக்கல... அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்??

ஆனா ஒன்னு அவனுக்கு யாரு மேல பாசம் இல்லை என்றாலும் குழந்தை மேல ரொம்ப பாசமா இருக்கான்.. ஆனால் அதை வெளிக்காட்ட முடியாமல் தான் திணறிட்டு இருக்கான்..

வெற்றியை அப்பானு சொல்றது கூட அவனுக்கு பிடிக்கல.. சில சமயத்துல என் மகனை உன்னோட மலை கிராமத்துக்கு வம்படியா அனுப்பி வைத்திருக்கக் கூடாதோ அதனால தான் இப்படியெல்லாம் நடந்துச்சோ அப்படின்னு கூட நினைக்கிறேன் மா..

வயசாயிடுச்சு பாரு.. இந்த பிரச்சனை எல்லாம் பார்த்து இதுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்காதா?? இந்த பிரச்சனை முடியாதா?? அப்படின்னு பல விதமா யோசிச்சிட்டு இருக்கேன்.. பேசாமல் உனக்கு என் மகனை விட வெற்றி பொருத்தமா இருந்தா அவனை கல்யாணம் பண்ணி சந்தோசமா இரு மா" என்று கூறவும் அவள் அதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டாள்.. அதோடு பெரியவரின் வருத்தமும் அவளுக்கு புரிந்தது..

அவளும் இதை தானே பல தடவை யோசித்து இருக்கிறாள்.. அவனை அவளுடைய வாழ்க்கையில் சந்தித்திருக்கவே கூடாது.. அவன் மீது ஆசை வைத்திருக்கவே கூடாது என அவளும் தான் பல தடவை நினைத்து இருக்கிறாளே..

அவள் செய்த ஒரே ஒரு தவறு அவளை எப்படியெல்லாம் வாழ்க்கையில் புரட்டி போட முடியுமோ அப்படி அவளை புரட்டி போட்டு கொண்டு இருக்கிறது..

அதிலிருந்து மீளவும் முடியாமல் வெளியேறவும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது அவள்தானே.. இப்படி அனைவரின் வாழ்க்கையிலும் வருத்தத்தை அள்ளி கொடுத்த பெருமை அவளை தானே சேரும்... அவள் அவன் மீது ஆசை வைத்திருக்காவிட்டால் அந்த பொய்யை சொல்லி இருக்காவிட்டால் இதுபோல எல்லாம் நடந்திருக்காதே என்று அவளுக்கு உள்ளுக்குள் ஆழமான வலி வந்தது.. ஆனால் அதற்கு எந்த பதிலும் கூறாமல் அங்கிருந்து சென்றாள்..

அதோடு அவர் இறுதியாக வெற்றியோடு நன்றாக வாழு என்று கூறியது அவர் என்னவோ வலியின் வீரியத்தில் தான் கூறி இருக்கிறார்.. அவர் கூறியதில் எந்த விதமான தவறும் இல்லை..

ஆனால் அதே நேரம் அவர் கூறிய வார்த்தை அவளை பொறுத்தவரை அவளின் ஆழ்மன தவிப்பை கிளறி விட்டது போல ஆகிவிட்டது..ஆம் அந்த வார்த்தையில் அவள் ஒரு சுயநலவாதி போல அவளுக்கு தோன்றியது..

ஆம் வெற்றி நல்லவன் தான்.. அவனோடு வாழ அவளுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. அவளை புரிந்தவன்.. அவளின் கடந்த காலம் தெரிந்தும் அவளுக்காக காத்து இருக்கிறான்.. ஆனால் கண் முன்னே விதுவை வைத்துக் கொண்டு அவளால் சத்தியமாக வெற்றியை திருமணம் செய்துக் கொள்ளவோ இல்லை வெற்றியை நேசிக்கவோ அவளால் முடியாது.. என்னதான் வெறுப்புக்கும் விருப்பத்துக்கும் இடையே நூல் அளவு வித்தியாசம் இருந்தாலும் விதுவை அவ்வளவு தூரம் விரும்பி விட்டாள் அவனை மறந்து வெற்றியோடு வாழ்வது அவளால் இயலாத காரியம்.. முழு மனதோடு வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல... அவள் காரணமாக வெற்றியின் வாழ்க்கையையும் பாதிப்பு அடைய வைக்க அவளுக்கு விருப்பமில்லை..

இந்த சம்பவத்திற்கு பிறகு தான் இது எல்லாம் அவள் யோசிக்க துவங்கியிருக்கிறாள் தேவி.... இதைப்பற்றி வெற்றியிடமும் பேச வேண்டும் என நினைக்கிறாள்...

மேலும், அவளுக்குத்தான் நன்றாக தெரியுமே வெற்றியை குழந்தை அப்பா என அழைக்கும் பொழுது அவன் முகத்தில் தெரியும் கோபத்தை அதிலிருந்து அவளால் புரிந்து கொள்ள முடிந்திருந்தது இருந்தாலும் இதையெல்லாம் வைத்து அவன் மீது உள்ள கோபத்தை அவளால் தணிக்க முடியாது அல்லவா??

மேலும், விது செய்த தவறுக்கு ஒரு தீர்வு வேண்டாமா?? இனி விதுவும் அவளுடைய வாழ்க்கையில் வேண்டாம்.. வெற்றியும் வேண்டாம் என முடிவு செய்தாள்..

ஆம்.. வெற்றி மிக நல்லவன்.. ஆனால் மனதில் விதுவை வைத்துக் கொண்டு வெற்றியை திருமணம் செய்து கொள்ள அவளுக்கு மனமில்லை.. அது வெற்றியை ஏமாற்றுவது போல ஆகும்.. அந்த ஏமாற்றத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது..இதை பற்றி அவனிடம் கூற வேண்டும் என  நினைத்தாள்.. விவாகரத்து முடிந்ததும் இந்த இடத்தை விட்டு விட்டு எங்கேயாவது சென்று விட வேண்டும் என நினைத்தாள்..

அவளை சுயநலவாதியாக இந்த விஷயத்தை வெற்றியிடம் கூறினால் அவன் நினைக்க கூடும்.. ஆனால் நினைத்தால் நினைத்து கொள்ளட்டும்.. அவன் வாழ்க்கை சிறக்க இதை தவிர வேறொரு நல்வழி இல்லை என அவள் நினைத்து இனி உள்ள வாழ்க்கை அவள் மகன் மட்டும் போதும் என முடிவு செய்து அவள் இருக்கும் போது தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது..

ஆம்.. மகன் மட்டும் தான் வாழ்க்கை என தேவி நினைக்க மகனோ அவள் கண் முன்னே மூச்சு கூட விட முடியாமல் திணறிக் கொண்டு இருந்தான்.. அதை கண்டவள் ஐயோ என கத்த அந்த சத்தத்தை கேட்டு அனைவரும் அவ்விடத்திற்கு வந்தனர்.. விது உட்பட...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top