Share:
Notifications
Clear all

மந்தாரம் 36

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 483
Thread starter  

மந்தாரம் : 38
     ரூபன் அருகே கூட விதுபிரதாப்பை அவள் விட முனைந்ததில்லை.. அவன் குழந்தையை பார்க்கக்கூடாது..  குழந்தையை அவன் கையால் எடுக்கக்கூடாது.. குழந்தைக்கும் அவனுக்கும் எந்தவிதமான தொடர்பும் இருக்கக் கூடாது என்பதில் தெள்ளத் தெளிவாக அவள் இருந்தாள் தேவிகா..

பார்ப்பவர்களுக்கு இவள் திமிராக செய்கிறாள் என நினைக்கக்கூடும் ஆனால் உண்மையில் அவளின் சுயமரியாதையை அவன் தூண்டி விட்ட விஷயத்திற்கு காரணமானதே இது தான்..

அதுமட்டுமின்றி அவள் அவன் பின்னால் வந்தால் என்ற ஒரு காரணத்திற்காக அவன் செய்ததை அவள் மறக்கவில்லை.. அது கூட அவளோடு போகட்டும் அவளாக அவள் தலையில் மண் அள்ளி போட்டு கொண்டதற்காக கிடைத்தது என கூட எண்ணிக் கொள்ளலாம்.. ஆனால் குழந்தை விஷயத்தை அவள் சாதரணமாக எடுத்துக் கொண்டு இருக்கவில்லை..

ஆம் இந்த குழந்தைக்கு தனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.. இதை நீ பெற்றுக் கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லை.. வேண்டுமென்றால் கருவை கலைத்து விட்டு என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என குழந்தையை முன்னிறுத்தி தானே இந்த வீட்டை விட்டு அவன் வெளியேற்றி இருந்தான்..

அது எல்லாம் அவ்வளவு எளிதாக அவள் மறந்து விடுவாளா என்ன??? அவன் நினைத்துக் கொண்டிருக்கலாம் அவன் மிரட்டி அழைத்து வந்ததும் எங்கே வந்து பொட்டி பாம்பாக அடங்கி இருப்பாள் என்று ஆனால் அது தான் இல்லை...

அவளைப் பொருத்தவரை அனைத்து விஷயங்களையும் அவள் பேசி ஆகிவிட்டது.. இனி பேச ஒன்றும் இல்லை அவனைச் சுற்றி இருக்கும் யாருடனும் அவளுக்கு விரோதம் இல்லை..

உண்மையில் அன்பு மட்டும்தான் இருக்கிறது.. அதே சமயம் அவனிடம் வெறுப்பு மட்டும் தான்.. ஒரு காலத்தில் அவளை நம்பி மட்டும்தான் அவள் அவன் பின்னாடி வந்தாள்.. ஆனால் இப்பொழுது அப்படி இல்லை.. காலம் வெகுவாக மாற்றி இருக்கிறது..

அப்படி இருக்க மாலை வேளையில், ராம் மோகன் மற்றும் ரேவதியிடம் குழந்தை தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருக்க, விஷ்வா வாங்கி கொடுத்த போனை எடுத்த தேவிகா வெற்றியை அழைத்தாள்.. ஆம்.. வெற்றியுடன் பேசி இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி விட்டது அதனால் அவனை அழைக்க எண்ணினாள் தேவி.. குழந்தை அவர்களோடு இருக்கவும் கொஞ்சம் அப்படியே தோட்டத்தின் மறுபக்கம் சென்று பேச எண்ணி அங்கு சென்று விட்டாள்..

ஆம்.. விது வீட்டுக்கு எப்போதும் போல வந்திருந்தான் தான்.. ஆனால் வந்ததும் இவர்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவனுடைய அறைக்கு சென்று விடவும் அவளுக்கு பிரச்சனை இல்லை.. ஆம் அன்று குழந்தை அருகே வந்தவன் தான்.. அவள் குழந்தையை தூக்கி சென்ற பின் குழந்தை அருகே வர முயற்சி செய்யவில்லை..

அவன் அந்த செயலை அவமானமாக எண்ணி இருக்க கூடும் என அவள் யூகித்து இருந்தாள்.. அதை பற்றி அவளுக்கு கவலை இல்லை.. அவளுக்கு தேவை எல்லாம் ஒரு விவாகரத்து மட்டும் தான்.. அது கொடுத்துவிட்டால்  அவள் அவளுடைய வழியில் சென்று விடுவாள்.. மத்ததற்கெல்லாம் பேச்சே இல்லை என்ற நிலையில் தான் தேவிகா இருக்கிறாள்..

அதை எண்ணியவள் இனி அவன் குழந்தை அருகே வர மாட்டான் இல்லையா என்ற நிலையில் சற்று அகன்று போய் நின்று கொண்டாள்..

ஆம்.. இங்கு வந்ததில் இருந்து அவனை தொடர்பு கொள்ளவில்லை.. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆகி விட்டது..

   அதனால் அந்த போனை எடுத்தவள் அவனுடைய எண் மட்டும் அவளுக்கு நியாபகத்தில் இருக்க, அந்த எண்ணை போட்டு அவனை அழைக்க வெற்றியும் ஒரு சில ரிங்கில் அவளை காக்க வைக்காமல் போனை எடுத்து விட்டான்..

"ஹலோ நான் தேவி பேசுறேன்" என்றதும் உடனே பரபரப்பான வெற்றி, "என்னங்க எப்படி இருக்கீங்க?? எப்போ இங்க வருவீங்க?? நீங்க போன வேலை முடிஞ்சுதா??" என்று அவன் கேள்விகளை அடுக்கினான்..

ஏனெனில் இதெல்லாம் அவனுக்கு கேட்க வேண்டிய கேள்விகளாக இருக்க அவளுடைய குரலை கேட்டதும் படபட படபடவென பேச துவங்கி விட்டான்..

"இல்லைங்க இப்போதைக்கு வர முடியும்னு தோணல.. விவாகரத்து வாங்கிட்டு தான் வரணும்.." என்று அவள் வார்த்தைகளை மென்று முழுங்கினாள்..

"என்னங்க சொல்றீங்க?? அப்போ நீங்க இப்போதைக்கு வர மாட்டீங்களா .??எனக்கு ரூபன் கண்ணுக்குள்ளே நிக்கிறாங்க.. அவனை விட்டுட்டு இருக்கவே முடியல.. பேசாம அவனை என்கிட்ட விட்டு விடுங்க?? நீங்க உங்க வேலையை பார்த்துட்டு மெதுவா வாங்க.. நான் அவனை பார்த்துக்குறேன்" என்று அவன் கூறினான்..

அதைக் கேட்டு அவளுக்கு அவனுடைய வளர்த்த பாசம் அது என புரிந்தாலும் குழந்தையை விட்டுவிட்டு அவளால் இருக்க முடியுமா என்ன??

"இல்லைங்க குழந்தைக்காக தான் நானே இங்கே இருக்கேன்.. அவரோட அம்மா, அப்பாவுக்கு ரூபன் மேல ரொம்ப பாசம்.. ரூபன் கூட இருக்கணும்னு ஆசைப்படுறாங்க.. விவாகரத்து வாங்கிட்டு மொத்தமா முடிச்சுட்டு வரலாம்னு இருக்கேன்" என்று அவள் கூறவும் வெற்றிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. என்னதான் அவன் கூறி விட முடியும்..

அவள் அவளுடைய குடும்பத்தோடு இருக்கிறாள்.. குடும்பத்தை விட்டு வா என்றா அழைக்க முடியும்?? என்ன ஆனாலும் இந்த குடும்பத்தை பொருத்தவரை வெற்றி மூன்றாம் மனிதன் தானே என்று நினைப்பில் அவன், "இனி உங்களை எல்லாம் பார்க்கவே முடியாதாங்க??" என்று ஒருவித ஏக்கத்தோடு கேட்டான்...

"ஐயோ..அப்படி எல்லாம் இல்லைங்க நாங்க விவாகரத்து வாங்கினதும் வந்துடுவோம்..எங்களுக்கு அதுக்கு பிறகு எந்த வேலையும் இங்கே இல்லை" என்று அவள் நடந்து கொண்டே பேசினாள்..

"இப்படியே வந்தா அவங்களால உங்களுக்கு தான் பிரச்சனை..  அதனால தான் நான் இங்கே இருக்கேன்" என்று கூற, அவள் என்ன சொல்கிறான் என்பதை புரிந்து கொண்ட அவனோ, "என்னங்க அவங்க பெரிய பணக்காரங்களா இருக்காங்க.. அவ்ளோ சீக்கிரம் உங்களை விடுவாங்களா?? இல்ல ஏதாவது பிரச்சனை பண்ணுவாங்களா??" என்று வெற்றி சந்தேகமாக கேட்டான்..

அவளுக்கும் அது குழப்பமாக இருந்தாலும், "தெரியலைங்க.. ஆனால் எல்லா நல்ல படியா முடிஞ்சா நானும், ரூபனும் இங்கே இருக்க வேண்டிய அவசியம் இல்லைங்க" என்றாள்..

"ஏங்க நீங்க எங்கே இருக்கீங்கனாவது சொல்லுங்க.. நான் வந்து பார்க்கிறேன்.. தூரமா நின்று பார்த்திட்டு போயிடறேன்.. பார்க்கணும் போல இருக்குங்க.." என்று கூற அவளுக்கோ அவனுடைய மனம் புரிந்தது..

அவளோ, "நான் சொல்றேங்க" என்றவள் விதுவின் வீட்டு விலாசத்தை கூறினாள்.. அவனும், "சரிங்க கூடிய சீக்கிரம் வந்து பார்க்கறேங்க.." என்க அவளும் சரிங்க என்றாள்..

"அத்தை எப்படி இருக்காங்க??" என கேட்டாள்..

"அதுக்கு என்னங்க?? அதுக்கு ரொம்ப முடியல.. நடந்ததை அதனால ஏத்துக்க முடியல.. உங்களையும் குழந்தையையும் சொந்தமாகவே நினைச்சுடுச்சா.. நீங்க போனதை அதனால் ஏத்துக்க முடியாம படுத்து படுக்கையாகவே கிடக்குது.. நான் எவ்வளவோ சொல்லி அது கேட்கிற நிலைமையில் இல்ல.. நானே ஒரு மாதிரியாத்தான் இருக்கேன்.." என்று வெற்றி கூறவும் அவளுக்கு அவர்களுடைய மனம் புரிந்தது.. அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது அவளுக்கு புரியாமல் இல்லை..

ஆனால் இனி இது போன்ற பிரச்சனைகள் வந்து விட கூடாது என அவள் நினைத்து, "இனிமேலும் இந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு நினைச்சு தான் இங்கே இருக்கேன்..கண்டிப்பா ரூபனை கூட்டிட்டு நானே வரேன்.. அதுவரை கொஞ்சம் பொறுமையா இருங்க.." என்று கூறவும், அவனும், "சரிங்க ரூபன்கிட்ட கொஞ்சம் போனை கொடுங்களேன்" என கேட்டான்..

அவளும், "சரிங்க..அவன் விளையாட்டிட்டு இருக்கேன் இதோ கொடுக்கிறேங்க" என்றாள்..

   அதற்குள் ரேவதி, "ஐயோ ரூபன் கண்ணா.." என கூறவும் சரியாக இருக்க இவளுக்கு என்ன நடந்ததோ என எண்ணி பதறி, உயிரே இல்லாமல் அவர்கள் இருக்கும் இடத்துக்கு செல்ல அங்கு நீச்சல் குளத்தில் குழந்தை விழுந்து இருந்தான் அவளுடைய தமையன்..

ஆமாம்.. குழந்தை தண்ணீருக்குள் விழுந்திருக்கிறான்..குழந்தையை சரியான நேரத்தில் விது காப்பாற்றி இருந்தான்.. இப்போது அவன் கைகளில் தான் குழந்தை இருந்தான்.. அந்த காட்சியை தான் அவள் கண்டு கொண்டிருக்கிறாள்...

குழந்தை விழுந்ததில் தண்ணீரைக் கண்டு மேலும் பயந்து விட கூடாது என கருதி மீண்டும் அவன் தண்ணீரில் விளையாட விட்டான்.. ஆனால் பாதுகாப்பாக அவன் கைகளில் அவன் நீந்தி கொண்டு இருந்தான்..

அவளுக்கு குழந்தை தண்ணீருக்குள் கண்டதும் உயிரே இல்லை.. அதுவும் அவனுடைய கைகளில் குழந்தை அதையும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

"ரூபன் வா கண்ணா.. அம்மா கிட்ட வா.." என்க அவனோ, இது தான் சமயம் என்பது போல, "இல்லை அம்மா தண்ணி ஜாலியா இருக்கு.. நான். வரல விளையாடறேன்" என கூறி விட அவள் எது நடக்க கூடாது என எண்ணி இருந்தாலோ அது நடந்தது ஆம்.. அவன் கைகளில் அவளுடைய குழந்தை.. அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அதேசமயம் இதுவும் குழந்தையை விடாமல் அவளைத்தான் அழுத்தமாக தண்ணீருக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான்...

ரேவதியோ அவரின் படபடக்கும் இதயத்தை அடக்கியபடி, எங்கே தேவிகா கலங்கி விடுவாளோ என பயந்து, "இங்கே தான் மா விளையாடிட்டு இருந்தான்.. உன்னை காணாமல் தேடிட்டு இருந்தான்.. நானும் கவனிச்சிட்டே தான் இருந்தேன்.. திடீர்னு நீ வேணும்னு சொல்லி அடம் பிடிச்சு அந்த பக்கமா வந்தவன் நான் பிடிக்க பிடிக்க தண்ணிக்குள்ள விழுந்துட்டான்.. நல்லவேளை விது வந்ததுனால காப்பாத்த முடிஞ்சது" என்று கூற அவளுக்கும் அதையெல்லாம் கேட்கக்கூட மனமில்லை.. உன் கைகளில் இருந்து குழந்தையை வாங்கியாக வேண்டும் என்ற வெறி மட்டும் தான் இருந்தது...

என்ன மடத்தனம் செய்து விட்டேன்.. போனில் பேசிக்கொண்டே இப்படி குழந்தையை கவனிக்காமல் விட்டு விட்டேனே என எண்ணி, "ரூபன் வா" என கூற அவனோ வரவில்லை.. இங்கு  விதுவுக்கு பத்திக்கொண்டு வந்தது..

என்ன குழந்தையை நான் இப்போது எடுத்தால் உங்களுக்கு என்ன?? என்பது போல வேண்டுமென்றே குழந்தையை விடாமல் இருக்க, அங்கு இருந்த ரேவதியை பார்த்து, "அம்மா குழந்தையை அவங்ககிட்ட இருந்து தர சொல்லுங்க மா..என் குழந்தையை அவங்க எடுக்கிறது எனக்கு பிடிக்கல" என கூற அதற்கு மேல் பொறுமை இல்லாதவன் குழந்தையை தூக்கி கொண்டு மேலே வந்தான்.. ரேவதியும் அதைக் கேட்டு அதிர்ந்தார்...

அதற்குள் லைனில் இருந்து ஹலோ ஹலோ என வெற்றி அலறும் சத்தம் தெளிவாக கேட்க அங்குள்ள அனைவருக்கும் கேட்க அப்போது தான் உயிர் பெற்றவள் போல போனை காதில் வைத்து, "ஹலோ" என்க,

"என்னங்க ஆச்சு" என வெற்றி கேட்கவும், அவள் விதுவின் பக்கம் திரும்பாமல், "குழந்தை தண்ணிக்குள்ள விழுந்துட்டான்.. இந்த வீட்டு முதலாளி குழந்தையை காப்பாத்திட்டார்.. இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லைங்க நான் உங்களை அப்புறம் கூப்பிடுறேன்" என அந்த நொடி அவன் அந்த குழந்தைக்கு யாரும் இல்லை என்பதை பறைசாற்றும் விதமாக அவள் ஒரு வார்த்தையை விட்டாள்.. அதைக் கேட்டதும் விதுவின் முகம் மாறியது.. தன்னை வேண்டுமென்றே இவள் அவமானப் படுத்துகிறாள் என அவன் எண்ணினான்...

ரேவதியும் அவளின் நிலையை உணர்ந்து கொண்டு, "குழந்தையை தாப்பா" என்று கேட்டார்.. நாம் குழந்தையை விது தூக்கி இருப்பதில் அவளுக்கு பிரச்சனை என்பதை அவர் புரிந்து கொண்டார்.. அவளின் நடத்தை அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவரை அடக்கிக் கொண்டு அவர் தன் மகனிடம் இருந்து குழந்தையை வாங்க முனைந்தார்..

குழந்தையோ, "தண்ணீ தண்ணீ" என விதுவின் கைகளில் இருந்து கத்திக் கொண்டு இருக்க, அவனோ தன் தாயிடம் குழந்தையை கொடுக்காமல் நேராக அவள் முன்னால் வந்து நின்றான் விது பிரதாப்..

அவ்வளவு நேரம் அவன் முகம் பார்க்காமல் பேசிக் கொண்டு இருந்தவள் அருகே அவன் வரவும் அவனுடைய கையில் அவளுடைய குழந்தை இந்த காட்சியை காண அவளுக்கோ உடல் சில்லிட துவங்கி இருந்தது.. அவனின் அழுத்தமான பார்வையை தேவிகா எதிர்க் கொண்டாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top