மந்தாரம் 38
மந்தாரம் : 38
வெற்றி...
அந்த குழந்தை முதல் அவள் வரை வெற்றி என்ற வார்த்தையை கூறுவது அவன் நெஞ்சில் ஈட்டியாக பாய்ந்தது..ஆம் அதை வெளியே சொல்ல முடியாத நிலையில் தான் தற்போது விது இருக்கிறான்..
ஆம்.. அவன் அழைத்தால் நாய் போல அவள் வந்து விடுவாள் என அவன் எண்ணினான்.. அவனை தவிர அவள் இதயத்தில் யாராலும் இடம் பிடிக்க முடியாது என்ற கர்வம் அவனுக்கு இருந்தது..
அவள் அவனை ஏமாற்றியதால் அவள் காதல் என்று கூறியதைக் கூட அவன் ஏற்றுக்கொள்ளாமல் அவளை பழி வாங்கினான்.. அவளை வீட்டை விட்டு அடித்து துரத்தினான்.. இன்றளவும் அவன் அவளின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அவள் அவனை வெகுவாக காதலிக்கிறாள் என்ற கர்வம் அவனுக்கு இருந்தது..
அதனாலேயே தன் தந்தை அவனுக்கு வைத்த செக்கை கூட அசால்ட்டாக துச்சமாக எண்ணி அகங்காரமாக அவளை அழைத்து வந்தான்..
ஆனால் அழைத்து வந்தபோதுதான் புதிய தேவிகாவை அவன் கண்டான்.. ஆம்.. அவள் மனதில் இப்போது அவன் இல்லை என்பது ஒரு பக்கம் அவனுக்கு வலியை கொடுத்தாலும் அக்குழந்தை அவன் கூட வெற்றி தான் வேண்டும் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
உண்மையில் இதையெல்லாம் அவன் உணரக்கூட இல்லை.. சரியாக அவன் உணர்ந்து இருந்தால் எப்போதோ அவனால் தேவிகாவுடன் இணைந்திருக்க முடியும்.. ஆனால் அவன் இதை உணர்ந்து கொள்ளாமல் அவளுக்கு திமிர் என்னையே எதிர்த்து நிற்கிறாள் என்ற எண்ணத்தோடு அவன் இருக்கிறான்...
மேலும் தன் முன்னாலேயே வெற்றியைப் பற்றி அவள் கூறும் பொழுது அவன் அவளுக்கு செய்தது எல்லாம் கண்முன்னே வந்து போனது..
அவளுடைய காதலை நிரூபி என கேட்டு அவளோடு உறவாடிய தினம் அவன் கண் முன்னே வந்து அவனை சோதனை செய்தது..
எவ்வளவளோ பணம் சம்பாதித்து விட்டான்.. பணம் என்பதை காட்டிலும் அவனுக்கு தொழில் செய்ய பிடித்து இருந்தது.. அதில் கிடைத்த செல்வாக்கு எனும் போதையை அவன் ரசித்தான்..
அந்த செல்வாக்கை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்தான்.. அதில் தன்னை மிஞ்ச யாருமில்லை.. அவன் ஒரு ராஜா என்ற எண்ணத்தில் அவன் இருக்கிறான்..
ஆனால் அது எல்லாம் இவர்கள்(தேவிகா, ரூபன்) இருவர் முன் எதுவுமே இல்லாதது போல அவனுக்கு தோன்றியது..
ஆம்.. அக்குழந்தை அவனுடைய குழந்தை தான்.. அவன் மீது அவள் வைத்து இருந்த அன்பை நன்றாக அறிவான் இவன்.. அதன் மூலமாக கிடைத்த குழந்தை தான் ரூபன்..
அப்படி இருக்க குழந்தையை பொருத்தவரை விது யார் என்று தெரியாது தான்.. அவனுடன் அக்குழந்தைக்கு பழக்கம் இல்லை தான்..
அவனைப் பாதுகாத்ததெல்லாம் வெற்றிதான் எல்லாம் விதுவுக்கு புரிகிறது..
ஆனால் குழந்தை வெற்றியை அப்பா என்று அழைப்பது மட்டும் அவனுக்கு எங்கோ ஒரு பக்கம் வலிப்பது போல இருந்தது...
அது என்ன விதமான உணர்வை என புரிந்து கொள்ள முடியாமல் ஒரு அழுத்தமான நிலையில் அவன் நின்று கொண்டிருக்க அந்த சமயத்தில் ராம் மோகன், "என்னடா இதெல்லாம்?? ஏன் இப்படி பண்ற இந்த தேவிகா அந்த குழந்தை எல்லாம் நாங்க உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சு அதன் மூலமா வந்தது கிடையாது தானே???
உன்னோட குடும்பம் நீயா உருவாக்கிக்கிட்டது.. நான் சொன்னது எல்லாமே உன் குடும்பத்துடன் சேர்ந்து வாழு அப்படிங்கிறதுதான் மத்தபடி வேற எதுவும் இல்லை..
நான் மேலே போகும்போது என்ன இந்த சொத்து பத்து எல்லாம் தூக்கிட்டு போக போறேன்?? எல்லாமே உனக்கு தானடா..
எங்களுக்கு இருக்கிற ஒரே ஒரு குழந்தை நீ மட்டும் தான்... நீ நல்லா இருக்கணும் தானே ஆசைப்படறோம்.. என்ன உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டோம்.. அதனால உன் மூலமா ஒரு பொண்ணு பாதிக்கப்பட்டு இருக்கா அப்படிங்கற விஷயம் தெரிஞ்சதும் நாங்க அவளை கூட்டிட்டு வந்தது தப்பா??
ஏன் இப்படி குழந்தை முன்னாடி இப்படி பிஹேவ் பண்ற??.. கஷ்டமா இருக்கு விது.. இப்படி இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு.." என்று அவர் கேட்டார்..
அதை கேட்டவனுக்கு கோபம் வந்தது.. "அப்பா எல்லாத்துக்கும் காரணம் நீங்க மட்டும் தான்.. செய்யறது எல்லாம் செஞ்சிட்டு இப்போ நீங்க பேசாதீங்க அப்பா.. செம்ம கடுப்புல இருக்கேன்.. ஏதாவது சொல்லிட போறேன்?? எதுக்கு எனக்கு டார்ச்சர் பண்ணி அவங்கள கூட்டிட்டு வர சொன்னீங்க?? நான் என் வாழ்க்கையை பார்த்துட்டு இருந்தேன்.. அவ அவளோட வாழ்க்கைய பார்த்துட்டு தானே இருந்தா?? இப்போ எங்கிருந்து மருமகள், பேரன் அப்படின்னு சொல்லி உறவு கொண்டாடிட்டு இருக்கீங்க?? அவங்களுக்காக என்கிட்ட சப்போர்ட் பண்ணிட்டு வராதீங்க பா.. ஏற்கனவே ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்கேன்.." என்றான் விது..
"இப்போ உனக்கு ஒரு குடும்பம் இருக்குன்னு தெரிஞ்சு அவங்களை இங்கே கூட்டிட்டு வந்தது தான் தப்பா?? நீ முறையா செய்ய வேண்டியதை நாங்க செஞ்சது தான் தப்பா??" என ராம் மோகன் கேட்டார்.. அவருக்கு அவனிடம் பேசி ஆக வேண்டும் என்று இருந்தது அதனால் அவரும் ஒரு முடிவோடு தான் அவனிடம் பேச துவங்கினார்...
"ஆமாம் தப்பு தான்.. என் தகுதி என்ன?? அவளோட தகுதி என்ன?? உங்களுக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை?? இப்போ மட்டும் பையன் அப்படின்னு சொல்றிங்க?? எனக்கு செக் வைச்சு தானே அவளை கூட்டிட்டு வர சொன்னீங்க.. இப்போ வந்து பாசம், மண்ணாங்கட்டி அப்படின்னு சொல்றிங்க??? அந்தக் குழந்தை என்னை அப்பானு சொல்லாம வெற்றியைத் தான் அப்பான்னு சொல்றான்?? இவள் அதுக்கு மேல நான் முக்கியமில்ல அவன் தான் முக்கியம்னு சொல்றான்.. இந்த அசிங்கம் எல்லாம் எனக்கு தேவையா?? போயும் போயும் அவ வாயில இருக்கிறது எல்லாம் என்னை கேட்க வெச்சிட்டீங்களே??" என தேவி மீதுள்ள கோபத்தை தன் தந்தையிடம் காட்டினான்..
அதைக் கண்டு அவர் இவனிடம் பொறுமையாக பேசினால் தான் வேலைக்கு ஆகும் எனக் கருதி ராம் மோகன், "சரி வா பேசுவோம் எல்லாத்தையும் பேசி முடிச்சிடுவோம்.. இதுக்கு மேல இதை நீட்டிட்டு போறதில்ல எனக்கும் உடன்பாடு இல்லை" என்றவர், "சரி.. இப்போ சொல்.. தேவி உனக்கு யார்?? ரூபன் உனக்கு யார்?? சொல்லு?? அவங்களுக்கும், உனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லைன்னு சொல்லு.. இப்போவே அவங்களை நான் இந்த வீட்டை விட்டு அனுப்பிடுறேன்.. ரூபன் உன் ரத்தம் இல்லைன்னு சொல்லு நான் இந்த வீட்டை விட்டு அனுப்பிடுறேன்.. நீ சொல்றது எல்லா விதத்திலும் உண்மையா இருக்கணும்.. அவங்களுக்கும் உனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இருக்கக் கூடாது அப்படி என்றால் மட்டும் சொல்லு" என கூறினார் அவர்..
அதை கேட்ட அவனால் என்ன பதில் அவனால் சொல்லிட முடியும்.. ரூபன் அவனுடைய ரத்தம் ஆகிற்றே.. அப்படி இருக்க அவன் அமைதியாக இருந்தான்.. இந்த கேள்வி அவனுடைய அப்பா கேட்கும் போது உண்மை அவனை தாக்குவதால் யாரிடம் அவனுடைய கோபத்தை காட்டுவது என தெரியாமல் கடுப்பாக நின்றான்..
"என்னப்பா அமைதியா இருக்க எனக்கு இதற்கு ஒரு கிளாரிட்டி வேணும்.. ஒன்னு நீ சொல்லணும் நீ எதுவும் சொல்லல... எனக்கு இப்ப தெரிஞ்சாகணும்.. எனக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்படின்னு நீ சொல்லிடு நான் இப்பவே அவங்களே வீட்டை விட்டு அனுப்பி விடுறேன்.." என்று கேட்க அவன் அவனுடைய அப்பாவை பார்த்து, "அப்பா.. நல்லா ட்ரிக்கர் பண்றீங்க பா.. என் வாய் வழியாக கேட்கணும்னு எதிர்பார்க்கிறீர்களா?? நல்லா கேட்டுக்கோங்க.. அந்த திமிர் பிடிச்சவ கையில இருக்குற குழந்தை என்னோடது தான்.. என்னோட ரத்தம் தான்.. மேற்கொண்டு ஏதாவது இருந்தா சொல்லுங்க.. அதுக்கும் பதில் சொல்றேன்.. இதனால் அன்னைக்கே உங்ககிட்ட சொல்லிட்டேனே.. அப்புறம் எதுக்கு மறுபடியும் மறுபடியும் கேக்குறீங்க??" என்று அவன் எரிச்சலாக கேட்டான்..
அவன் இதை ஏற்கனவே ஒப்புக்கொண்டு ராம் மோகன் தானே இப்படி ஒரு செக் அவனுக்கு வைத்து அதன் மூலம் தானே அவர்களை வீட்டிற்கு கொண்டு வந்து இருக்கிறான்..
அப்படி இருக்க மீண்டும் அவர் கேட்கவும் அவனுக்கு ஏனோ கடுப்பாக இருந்தது..
அப்படி இருக்க, "மறுபடி மறுபடி கேட்கிறது.. நீ மறுபடியும் மறுபடியும் தப்பு பண்ற விது.. அதனால தானப்பா நான் கேட்க வேண்டியதா இருக்கு" என்று அவரும் கூற அவனும் அவரைப் பார்த்து முறைத்தான்..
"அப்பா உங்க கிட்ட எத்தனை தடவை சொல்றது எனக்கு அவ்வளவு சுத்தமா பிடிக்கல.. என்னை சீட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா.. அவ கூட வாழ சொல்றீங்களா?? அவளை பார்த்தாலே எனக்கு கடுப்பாகுது.. நான் சொன்ன மாதிரி அவளுக்கு டிவோஸ் கொடுத்துடுவேன் அதுக்கப்புறம் அவளை கிளம்பி போக சொல்லுங்க" என நடந்ததை அவன் காண்டாக கூறினான்..
அதைக் கேட்ட அவருக்கு அப்போது தான் அவனுடைய பக்கம் புரிந்தது.. அப்படி இருந்தாலும் மகன் தன்னுடைய தவறை புரிந்து தவறை திருத்த முயற்சி செய்யவில்லையே என கருதி, "சரி நீ சொன்ன மாதிரி உனக்கு அவளை பிடிக்கல.. உன்னை ஏமாத்திட்டா எல்லாம் சரி தான்.. பிடிக்காத ஒருத்தியை உனக்கு எப்படி தொட தோணுது.. சொல்லுப்பா.. அவங்க உன்னை கம்பெல் பண்ணி தாலி கட்ட வச்சிட்டாங்க.. தேவிகாவும் பொய் சொல்லி உன்னை மாட்டி விட்டுட்டா?? நீயும் அவளை இங்கே கூட்டிட்டு வந்துட்ட வேலைக்காரியா அவ நம்ம வீட்ல இருந்தா?? ஆனால் எப்படி ஐந்து வயது மகன் உனக்கு வந்தான்?? அதுக்கு பதில் சொல்லு..
பிடிக்காத ஒருத்தியை எப்படி நீ தொட்ட?? இதை ஒரு தகப்பன் நான் கேட்க கூடாது தான்.. ஆனாலும் எனக்கு தெரிஞ்சாகணும்.. ரூபன் உன்னுடைய மகன் அப்படின்னு நீ ஒத்துக்கிட்ட சரி.. ஆனால் தேவிகா அவள் கூட எப்படி நீ இருந்த??" என அவர் கேட்டார்.. அதை கேட்ட அவனுக்கு பதில் இல்லை.. அவருடைய ஒவ்வொரு கேள்வியும் அவனுக்கு அவனுடைய நெஞ்சில் ஈட்டியாக பாய்ந்தது..
என்னவென்று சொல்ல முடியும் அவனால்??? அமைதியாக இருந்தான்..
"என்ன அமைதியா இருக்க?? இல்ல அந்த பையன் உன்னுடைய மகன் இல்லையா அப்படின்னா சொல்லு.. நான் உங்களை இப்பவே வீட்டை விட்டு துரத்தி விடுகிறேன்.. எனக்கு உன்னை தவிர வேற எதுவுமே முக்கியம் கிடையாது.. ஒருவேளை தேவிகா இந்த குழந்தை உன்னோட குழந்தை தானே பொய் சொல்லி இருக்கலாம் இல்லையா??" என்று அவர் மகன் யோசிக்கிறான் என்பதை அறிந்து கொண்டே அவனை மடக்க அப்படி கூறினார்..
அவருடைய கேள்வியின் தாக்கம் தாங்க முடியாமல், "அப்பா எத்தனை தடவை இதை கேப்பிங்க.. நான் தான் சொல்றேன் இல்ல.. அந்த குழந்தைக்கு நான் தான் அப்பா அப்படின்னு சும்மா திரும்பத் திரும்ப அந்த கேள்வி கேட்காதீங்க.." என வெகுண்டு கூறினான்..
"இன்னும் நான் கேட்ட ஒரு கேள்விக்கு நீ பதில் சொல்லவே இல்லையே?? பிடிக்காத ஒருத்தியை ஏன் தொட்ட??"
"அப்பா மறுபடி மறுபடி கேக்காதீங்க நான் தொட்டதுனால தான் குழந்தையை வந்தான்.. வேணும்னு தான் செஞ்சேன்.. போதுமா" என்றான் கடுப்புடன்..
"போதாது அப்பா... முழு தப்பை பண்ணிட்டு உன்கிட்ட வேற என்ன கேள்வி விது கேட்க முடியும்?? இப்ப வரை நீ செஞ்சதை தப்புன்னு நீ உணரலையா??" என்க அவன் அமைதியாக இருந்தான்..
"விது உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டா?? நீ கோபப்பட்டாலும் இதுதான் உண்மை.. நீ பிசினஸ்ல எவ்வளவோ சாதித்து இருக்கலாம்.. உனக்கு பெயர், புகழ், பணம் எல்லாமே கிடைச்சி இருக்கலாம்.. ஆனால் உன்னோட பர்சனல் லைஃப்ல பிக் ஜீரோ.." என்றார்..
அதை கேட்டதும் அவன் அதிர்ந்த பார்வை பார்த்தான்.. ஆம் இத்தனை நாட்கள் அவனுக்கு என்று இருந்த கர்வத்தை மொத்தமாக சிதைப்பது போல இருந்தது அந்த ஜீரோ என்ற வார்த்தை..
ஆம் அதை அவனால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
"அப்பா இவ விஷயத்தையும் என்னையும் சேர்த்து வச்சு பேசாதீங்க.. நான் எப்படி ஜீரோன்னு சொல்றீங்க.. இதுக்கு தான் நான் உங்ககிட்ட பேசறது இல்ல.. நான் செஞ்சதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா.. இல்லை உங்களைவிட அதிகமாக வளர்ந்துட்டேன்னு பேசுறீங்களா.. எனக்கு ஒரு பாஸ்ட் இருக்கு தான்.. நான் இல்லைன்னு சொல்லல.. அத வச்சு என்ன ட்ரிகர் பண்ணி என்னை ஜீரோனு சொல்லாதீங்க.. அது என்னால ஏத்துக்க முடியாது" என்று கொதித்து கூறினான்..
அவரோ பொறுமையாக அவனை பார்த்து, "இப்பவும் சொல்றேன் நீ ஜீரோ தான் பா" என்றார்.. அதை கேட்டு அவன் ஆத்திரத்தோடு தந்தையை பார்க்க அவரும் இந்த நொடி தான் அனைத்துக்கும் சரியான நொடி.. தன்னுடைய மகனின் அகம்பாவத்தை சிதைத்தே ஆக வேண்டும் என அவரும் முடிவு செய்து இருந்தார்..
யார் ஜெயிப்பார் மகனா?? இல்லை தந்தையா??
