Share:
Notifications
Clear all

மந்தாரம் 32

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 328
Thread starter  

மந்தாரம் : 32

மூன்று மாதங்கள் ஆகி விட்டது.. தேவிகாவின் தலையை தூக்கவே முடியவில்லை.. தலை பாரமாக இருந்தது.. அவளுக்கு வாந்தி வருவது போல இருந்தது..

அவளுக்கு அவளுடைய உடல்நிலையை பார்க்கும் போது என்னவென்று புரியாமல் எல்லாம் இல்லை.. தெளிவாக புரிந்தது.. சரியான சமயத்தில் நடக்கும் அவளின் மாதவிடாய் கடந்த இரு மாதங்களாக வரவில்லை என்றதுமே அவளுக்கு சந்தேகம் தான்..

மலை கிராமத்தில் வாழ்ந்த பெண்களுக்கு அதுவும் தேவிகா ஊரில் இருக்கும் பெண்களுக்கு இயல்பாக நாடி பிடிக்க தெரியும்..அப்படி அவள் ஏதோ சந்தேகத்தில் அவளை கையை நாடி பிடித்து பார்க்க இரண்டு நாடி துடிப்பதை பார்த்து அவளுக்கு அவள் வயிற்றில் ஒரு உதிரம் இருக்கிறது என்பதை அவள் புரிந்து கொண்டாள்..

ஆனால் அது உண்மை தானா இல்லை மனப்பிரமையா என்பதை கண்டறிய வீட்டு வேலை எல்லாம் முடித்து விட்டு அவள் கோவிலுக்கு செல்வது போல சென்றவள் அவள் எப்போதும் செல்லும் கோவில் அருகே ஒரு மருத்துவமனை இருந்தது..

அங்கு சென்று அவள் பரிசோதனை செய்ய அவள் கருவுற்று இருக்கிறாள் என அவர்கள் கூறினார்கள்..

அதை கேட்டதும் அவளுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.. ஆம்..அவளுக்கு உறவென்று சொல்லிக்கொள்ள அவளுடைய வயிற்றில் ஒரு உதிரம்.. அதுவும் அவனுடையது என நினைக்கும் போது அவள் உள்ளம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..

இதை அவனிடம் கூற வேண்டும் என அவள் நினைத்தாள்.. அன்று அவனோடு கூடி கலந்ததால் மட்டும் அவளுக்கு ஒன்றும் கண்ணகி பட்டம் எல்லாம் கிடைத்துவிடவில்லை.. அவனும் அவளை தலையில் தூக்கி வைத்து எல்லாம் கொண்டாடவில்லை..

தேவிகாவை முட்டாள் பெண் இவள் என்று தான் கூற வேண்டும்.. அன்றைய உறவுக்கு பிறகு அவன் அவளிடம் பேசுவதே இல்லை என்று வேணாலும் கூறலாம்.. அவன் வேலை முடிந்தது அவன் சென்று விட்டான் அவ்வளவு தான்..

ஒரு வேலைக்காரியாக அவளிடம் ஏதாவது தேவைக்கு இன்றி வேறு எந்த பேச்சு வார்த்தையும் அவளுக்கு அவனிடமும் இல்லை..அவனும் உரையாடியது இல்லை..

ஆம்.. அவனின் பெற்றோர்கள் வந்ததும் விஷ்வா நல்ல முறையில் ராம் மோகன் அவனுக்கு கொடுத்த வேலையை பார்த்து அவன் தங்கி இருக்கும் ஊருக்கு சென்று விட்டான்..

பிறகு தான் விது மற்றும் தேவிகா இருவருக்கும் இடையே அந்த வீட்டில் பிரச்சனையும் இருக்காதே.. அவனுக்கும் அன்று இரவுக்கு பிறகு அவளிடம் எந்த பிரச்சனையும் இல்லை... இடையே வெளிநாடு எல்லாம் சென்று விட்டு வந்தான் விது..வந்தவன் அவனுடைய வேலைகளில் மூழ்கி இருந்தானே ஒழிய அவள் பக்கம் வருவதில்லை..

அவன் வாழ்க்கையும் சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது.. அவன் அவளை கண்டு கொண்டதாக கூட தெரியவில்லை..இந்த அளவுக்கு ஒருத்தி அவள் வாழ்க்கையில் அவள் வைத்திருக்கும் காதலுக்கு அவன் தகுதி ஆனவன் தானா என கேட்டால் இல்லையென்று தான் கூற வேண்டும்.. இவளை போல முட்டாள் தனமாக அவன் மீதான அதீத ஆசையோ, அன்போ வைக்க வேண்டுமா என்று தான் நமக்கெல்லாம் தோன்றும்.. ஆனால் அவளை போன்ற முட்டாள்களுக்கு இதெல்லாம் தோன்றாது..இவள் எல்லாம் பட்டு திருந்த வேண்டிய ஆள் தான்..

அவளுக்கும் அதை பற்றி எல்லாம் இப்போதைக்கு கவலை இல்லை போலும்.. அவள் வயிற்றில் ஒரு குழந்தை வந்து விட்டது... அன்றைய நாள் அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.. அவளுக்கு என்று ஒரு உறவு வந்து விட்டது என்ற மகிழ்ச்சியும் அவளுக்கு இருந்தது.. இனி அவள் அனாதை இல்லை என்ற எண்ணத்தில் அவள் இருந்தாள்..

அதை அவனிடம் கூற வேண்டும் என மாலை அவனுடைய வரவுக்காக காத்துக் கொண்டு இருந்தாள் தேவிகா..

எப்போதும் மாலை நேரத்தில் மகன் வந்து சிறிது நேரம் அவனோடு கழிந்ததும் ராம் மோகன் மற்றும் ரேவதி இருவரும் கிளப்பிற்கு செல்வது வழக்கம்..

அப்படி இருக்க, அந்த சமயம் பார்த்து அவனிடம் பேச வேண்டும் என கருதி அவள் காத்துக் கொண்டிருக்க, அதேபோல மகன் வந்து சிறிது நேரம் அவனோடு உரையாடிவிட்டு அவர்கள் சென்றதும் இவள் மெல்ல அவனிடம் பேச வேண்டும் எனக் கருதி அவனுடைய அறையை நோக்கி சென்றாள்..

அங்கு அவன் அவனுடைய வேலைகளில் மூழ்கி இருந்தான்.. அவள் அவன் கேட்காத ஒரு காபியை தயாரித்து கொண்டு அவனை காண செல்ல அவள் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..

அவன் இதை எப்படி எடுத்து கொள்வான்.. குழந்தையை ஏற்றுக் கொள்வானா இல்லையா அவன் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன இந்த குழந்தை அவளுக்கு பொக்கிஷம் குழந்தை அவளுக்கு வேண்டும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டு கையில் காபி கப்பை பார்க்கவும் இன்னைக்கும் கீழே வீணா போயிடாத என நினைத்து கொண்டு சென்றாள்..

ஆம் அவள் எப்பொழுது எல்லாம் காபி கொண்டு சென்றாலும் அது கீழே தானே போகிறது என எண்ணிக்கொண்டே சென்றவள் கதவை தட்ட, "எஸ் கமின்.." என்ற கம்பீர குரலில் அவன் அவளை அழைத்தான்..

அவள் உள்ளே சென்று அவன் வேலை சென்று கொண்டு இருக்கும் மேசை அருகே சென்றவள், "காபி.." எனக் கூற அவனோ, "நான் உன்கிட்ட காபி கேட்கவே இல்லையே" என வேலைகளில் மூழ்கிய படியே அவன் கூறினான்.. அவள் முகத்தை இன்னும் அவன் பார்க்கவில்லை.. வேலையில் மூழ்கி இருந்தான்..

அவளுக்கோ அவன் காண வேண்டும் இருந்தது.. இருந்தாலும் ஒரு பக்கம் வெட்கத்தோடு அவள் நின்று கொண்டு இருந்தாள்..

அவன் மறுக்கவும், "இல்ல இந்த டைம்ல நீங்க ஒரு கப் காபி குடுப்பீங்க.. அதனால தான் நான் தயார் பண்ணி கொண்டு வந்தேன்" என்று அவள் கூற, "சரி வச்சிட்டு போ" என்று அவன் அப்பொழுதும் அவள் முகத்தை பார்க்கவில்லை..

அவள் எப்பொழுதும் போல காபி கப்பை வைத்தவள் நல்லவேளை இன்னைக்கு உனக்கு யோகம் இருக்கு வீணா போகல என்று காபி கப்பை பார்த்து மனதுக்குள் நினைத்தவள் ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டு அவனிடம் விஷயத்தை கூற வேண்டும் என்று நினைப்பதற்குள் அவளுக்கு வெட்கம் வேறு வந்து தொலைத்தது..

அவளுக்கு மனதுக்குள் பல ஆசைகள் நிறைந்திருந்தது.. ஆனால் அதெல்லாம் தூசாகி போக போகிறது என அவள் அந்த நொடி நினைத்து பார்த்து இருக்க மாட்டாள்..

அப்படி இருக்க, "எனக்கு உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் அதுக்காகத்தான் காபி கொண்டு வந்தேன்" என்று அவள் கூறினாள்..

அவள் தயக்கத்தோடு பேசுவதை பார்த்தவனுக்கு சற்று எரிச்சலாக இருந்தாலும் அவள் முகத்தை பார்க்காமல், "என்ன சொல்ல வந்தியோ அதை சொல்லிட்டு போ.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு" என்று அவன் கத்தரித்து கூறினான்..

அவளோ அவனின் குரலில் சற்று அழுத்தம் கூடுவதை பார்த்து வேகமாக விஷயத்தை கூறி விடலாம் என எண்ணி, "என்னங்க.. நான் கர்ப்பமா இருக்கேன்.. அதை சொல்ல தான் நான் உங்களை தேடி வந்தேன்.. நமக்கு குழந்தை வர போகுதுங்க" என்று அவள் கூறவும், "வாட்???" என்று அதிர்ந்த விழியோடு அப்பொழுதுதான் அவள் முகத்தை அவன் பார்த்தான்..

அவனின் அதிர்ச்சி கலந்த அழுத்தமான பார்வையை பார்த்த அவளோ சற்று திகைத்து கொண்டே, "ஆமாம்.. இன்னைக்கு தான் ஹாஸ்பிடல் போனேன்.. டாக்டர் நான் கர்ப்பமா இருக்கேன்னு சொன்னாங்க.. முதல்முறையா உங்ககிட்ட தான் சொல்லணும்னு காத்துகிட்டு இருந்தேன்" என்று அவள் தயங்கிக் கொண்டே ஒரு பக்கம் வெட்கமும் ஒரு பக்கம் அவன் என்ன சொல்வானோ என்ற படபடப்பும் எல்லாம் கலந்து அவள் விஷயத்தை கூறினாள்..

அதை கேட்டவனுக்கு எப்படி இதை எதிர்கொள்வது என தெரியவில்லை ஒரு நொடி அவனே அதிர்ந்து விட்டான்.. என்ன குழந்தையா என்பது போல தான் அவனுக்கு இருந்தது..

அவனுக்கு அவள் கூறிய விசயத்தை பற்றி யோசிக்க இரு நொடிகள் தேவைப்பட்டது.. அவளோ அவன் என்ன சொல்ல போகிறானோ என எதிர்பார்த்து காத்து இருக்க, அவன் முகம் நொடி பொழுதில் மாறியது.. சற்று அழுத்தம் கூடியது..

அவளது முகத்தை பார்த்து, "அதை எதுக்கு என்கிட்ட சொல்ற?? நீ கர்ப்பமா இருந்தா இருந்துக்கோ.. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?? எதுக்கு என்னையும் அதுல சேர்த்துக்கிற.. நீ கர்ப்பமா இருக்கேன்னு சொல்லு.. உன்னோட விஷயத்தை முடி" என்று என்னவோ அதற்கு முன் சம்பந்தமே இல்லாத மாதிரி அவன் கூறினான்..

அதைக் கேட்டதும் தான் அவள் முழுமையாக அதிர்ந்து விட்டாள்..
என்ன மாதிரியான மனிதன் இவன் என அவனுடைய பேச்சைக் கேட்டு அவளால் நினைக்க முடியாமல் இல்லை.. என்ன சொல்ல வருகிறான் இவன்.. அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையென கூறுகிறானா என அவள் இடிந்து போய் அவனை பார்த்தாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top