மந்தாரம் 31
மந்தாரம்: 31
அவளும் அவனிடம் அவளை நிரூபித்து விட வேண்டும் என கருதி, "ஆமாம் என் வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு தான்.. நீங்க என்ன சொன்னாலும் செய்வேன்.. நான் உங்களுக்கு செய்ததுக்கு என்னை என்ன வேணாலும் சொல்லுங்க.. அதெல்லாம் ஏத்துகிறேன்.. ஆனால் என்னை மத்தவங்க கூட மட்டும் இணைச்சு வச்சு பேசாதீங்க.. அதை மட்டும் என்னால தாங்கிக் கொள்ள முடியாது" என்று அவள் கூறினாள்..
அதைக் கேட்டவன் மெல்ல அவனுடைய குரலை கொஞ்சம் தாழ்த்தி, அவன் வெற்று மார்பில் கையை கட்டிக் கொண்டே மது போதையில் சிவந்த விழிகளால் அவளை அழுத்தமாக பார்த்து, "நான் என்ன சொன்னாலும் செய்வியா??" என ஒரு மாதிரியாக கேட்டான்..
"ஆமாம்.. என் உயிரே நீங்கதான் அப்படின்னு வாழ்ந்துட்டு இருக்கேன்.. உங்களுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்.. என்ன செய்யணும்னு சொல்லுங்க..செய்யறேன்.. ஆனால் மனசு நோகடிக்கிற வார்த்தைகளால் மட்டும் என்னை அடிக்காதீங்க" என அவள் கூறினாள்.. அங்கு தான் அவள் மிகப்பெரிய மடத்தனத்தை செய்தாள்..
அதை கேட்டவன் அவளை மேலும் கீழுமாக கவனிக்க நனைந்த உடையில் அவள் அவனின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் தான் அவள் அந்த நேரத்தில் இருந்தாள்..
அப்போதுதான் அவன் குடித்த மது நன்றாக வேலை செய்தது.. இது நாள் வரை அவன் அவள் என்னதான் செய்திருந்தாலும் கண்ணியமாகத்தான் நடந்து கொண்டிருந்தான்..
இப்போது அவனுடைய கண்ணியத்தை சற்றே இறக்கி ஒருவேளை அவள் கூறுவது போல நான் தாலி கட்டியவன் ஆகிற்றே என்ற உரிமையை அவள் மீது நிலைநாட்ட எண்ணினானோ என்றெல்லாம் தெரியாது.. ஆனால் அவன் பார்வை கொஞ்சம் அவளின் மேனியில் படர்ந்தது என்னவோ உண்மைதான்..அது அவனின் உணர்வை நன்றாக தூண்டியது..
அப்படி இருக்க, "எனக்காக என்ன வேணாலும் செய்வேன்னு சொன்னியே..அப்போ என்கூட வந்து படு" என்றான்..
ஒரே வார்த்தை அவன் என்ன சொன்னான்.. அது தான் சொன்னானா?? இல்லை நான் தவறாக புரிந்து கொண்டேனா என புரியாமல் அவள் மீண்டும் அவளின் பெரிய விழிகளை விரித்து அவனை பார்க்க, அவனோ அங்கு அவன் அவள் வருவதற்கு முன் ஆத்திரம் மிகுதியில் குடித்து மிச்சம் வைத்து இருந்த பாட்டிலை குடித்தவன், "சொன்னது காதுல விழலயா?? சி நான் ரொம்ப நல்லவன்லாம் கிடையாது.. நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன மாதிரி ஸ்ரேயா உன் முன்னாடியே கிஸ் பண்ணி இருக்கா.. நான் அவளை கிஸ் பண்ணி இருக்கேன்..
இப்படி ப்ளா ப்ளா ப்ளா என்னென்னமோ என்னோட வாழ்க்கையில இருக்கு.. அந்த மாதிரி நீ கிடையாது.. நீ ரொம்ப நல்லவ.. ஒருத்தனுக்கு ஒருத்தி அப்படின்னு தான் வாழ்ந்துட்டு இருக்க.. நான் ஒரு பத்தினி தெய்வம்..
அப்படி எல்லாம் என்கிட்ட சொல்லிட்டு இருக்க.. அப்ப நான் கண்ணால பார்த்தது என்ன பொய்யா?? சரி பொய்யின்னு வைப்போம்.. நீ அப்படி இல்லைன்னு சொல்ற?? சோ எனக்கு ப்ரூவ் பண்ணு.. நான் மட்டும்தான் உன் மனசுக்குள்ள இருக்கேன்னு நிரூபிச்சு காட்டு..
நீ என்னை மட்டும் தான் நேசிக்கிற என்னை மட்டும் தான் யாசிக்கிற என்னமோ சொல்றியே.. நான் உன்னோட புருஷன் தானே.. தாலி கட்டின புருஷன் தானே.. அப்போ என் கூட வந்து படு.. அது தான் எந்த தப்பும் நடக்கலைன்னு சொல்றியே அப்புறம் என்ன??" என அவன் அவளிடம் கேட்டான்..
அதை கேட்டவள் இலேசாக அதிர்ந்தாள்.. ஆம்.. என்ன இவன் இப்படி எல்லாம் கேட்கிறான் என்ற அதிர்ச்சி அவளுக்கு வந்தது.. அவனுக்கு தன்னை கண்டாலே ஆகாது அப்படி இருக்கும் பொழுது இப்படி ஒரு வார்த்தையை கூறுகிறானே என அவள் திகைத்து நின்றாள்.. இதை எப்படி ஏற்று கொள்வது என தெரியாமல் அவள் திண்டாடினாள்..
மதுவின் போதையில் அவன் வார்த்தைகளை விடுகிறான் என்றால் நாமும் அவன் சொன்னதை செய்ய வேண்டுமா என்றெல்லாம் அவள் யோசிக்க அவளை ஆழமாக பார்த்த அவனோ, "இதோ பாரு நான் குடிச்சுட்டு பேசுறேன்.. குடிச்சிட்டு படுக்க கூப்பிடுறேன் அப்படியெல்லாம் நினைக்காத.. என்னோட கண்ட்ரோல் என்ன அப்படின்னு எனக்கு நல்லா தெரியும்.. காலைல எந்திரிச்சுட்டு தெரியாம பண்ணிட்டேன்.. போதையில் தெரியல.. அப்படி இப்படி எல்லாம் சொல்லிட்டு இருக்க மாட்டேன்.. தெளிவா தான் கேட்கிறேன்.. உன்னால முடியுமா முடியாதா??? நீ என் மேல வச்சிருக்கறது உண்மையான காதல் அப்படின்னா நிரூபிச்சு காட்டு.. அப்போ நான் நம்புறேன்..
நான் ஒன்னும் உன்னை கம்பெல் பண்ண கிடையாது.. உனக்கு பிடிக்கலைன்னா நீ பிடிக்கலைன்னு சொல்லிட்டு போலாம்.. அதுக்கான எல்லா ரைட்ஸும் உனக்கு இருக்கு.. ஆனால் அதுக்கு பிறகு நீ என்கிட்ட இந்த சினிமா டயலாக் எல்லாம் வந்து என்கிட்ட பேசிட்டு இருக்க கூடாது.. நீ இப்ப வரல அப்படின்னா அப்போ நான் சொன்னது தான் உண்மை அப்படின்னு எடுத்துக்கவா??" என அவன் கேட்டான்..
அதை கேட்டதும் அவள் அதிர்ந்து விட்டாள்.. இவனைப் போல எந்த களங்கமும் அவளிடம் துளியும் கிடையாது.. இப்பொழுதும் அவள் அவனை காதலிக்கிறாள்..
அதுதான் அவள் செய்யும் ஏக தவறு என கூறலாம்.. தாலி கட்டியவன் அவளை அழைக்கிறான் அவளால் செல்லாமல் இருக்க முடியவில்லை.. அது தவறு என்று அவளால் யோசிக்கவும் முடியவில்லை.. ஆனால் இப்படி ஒரு சூழலில் அவளை நிரூபிக்க வேண்டுமா என்ற எண்ணம் அவளுக்கு வந்தது..
அவன் சிநேகத்தோடும் ஆசையோடும் அவளை நாடி இருந்தால் அவள் இப்பொழுதே அவன் முன்னே அவனுள் சரணடைந்திருப்பாளோ என்னவோ ஆனால் அவன் இப்படி ஒரு சூழலில் அழைக்கவும் அவள் மனம் ஒரு நொடி நின்றது..
ஆனால் அவனும் அவளை அவன் அருகே வர வைத்தே தீருவேன் என்ற எண்ணத்தில், "அப்போ உனக்கு என் மேல காதல் இல்லை?? பொய் சொல்லி தான் கல்யாணம் பண்ணி இருக்க அப்படித்தானே.. அப்போ நான் நினைக்கிறது எல்லாம் சரிதான் அப்படித்தானே?? நீயா நான் கட்டுனதை கழட்டி இங்கே வச்சுட்டு நீ போகலாம்.. நான் டிஸ்டர்ப் எல்லாம் பண்ண மாட்டேன்..
இல்ல என்கூட வந்து படுக்கலாம்.. இந்த ரெண்டுல ஏதாவது ஒன்னு இப்போ நடந்தே ஆகணும்" என்று அவனும் அவளை எங்கு அடித்தால் எங்கு வீழ்வாள் என எதிர்பார்த்து அவன் பேசினான்..
ஏனெனில் தன்னை காதலித்து திருமணம் செய்தவள் போல கல்யாணம் செய்து அவன் பின்னாலேயே வந்து வீட்டு வேலைக்காரி போல அவனுக்காக அனைத்து பணிவிடைகள் செய்வது போல எல்லாம் நடித்து வேறொருவன் கூட சுற்றிக் கொண்டிருப்பதை அவ்வளவு இயல்பாக அவனால் எடுத்துக் கொள்ள முடியவில்லை..
அந்த ஆதங்கத்தில் அவன் வார்த்தைகளை விட்டான்.. வேண்டும் என்று தான் அவன் அப்படி கேட்டான்.. அதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை..
ஏனெனில் அவன் யோக்கியவான் இல்லை.. இவள் தான் யோக்கிய சிகாமணி ஆகிற்றே.. கட்டிய கணவனோடு இருப்பதில் என்ன தவறு என்பதுதான் அவனுடைய கேள்வி..
அப்படி இருக்க, அவன் விடாக்கண்டன் போல அவளையே பார்த்துக் கொண்டிருக்கவும் அவளோ யோசித்துக் கொண்டிருந்தாள்..
"புருஷன் கூட படுக்குறதுல என்ன தப்பா??" என அவன் மீண்டும் தூண்டில் போடவும் அவள் கண்களை மூடினாள்..
அப்பொழுது அவளுடைய பாட்டி கூறியதுதான் ஞாபகத்துக்கு வந்தது.. "கல்யாணம் ஆன பிறகு என்ன வேணாலும் நாம மறுக்கலாம் ஆம்பளைங்க அவங்க பொஞ்சாதியை தேடி வந்தா மட்டும் நாம மறுக்க கூடாது.. அது ரொம்ப தப்பு" என அவர் கூறியது அவளுக்கு அந்த நொடி ஞாபகத்துக்கு தேவையில்லாமல் வந்தது..
அவன் அவளை நாடுவதில் ஆழ்ந்த காதல் இல்லை.. காமம் இல்லை.. ஆசை இல்லை.. எதுவும் இல்லை.. அது இல்லாம அவளுக்கு தெளிவாக புரிந்தது.. ஆனால் அவள் இந்த விஷயத்தை வைத்து விளையாடவும் அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை..
இது இன்றைக்கு நடக்க வேண்டும் என்று இருக்கிறது என எண்ணிக் கொண்டாள்..
இதோ அவளாக அவனிடம் சென்றாள் என்பதை விட அவளின் கையை வைத்தே அவளின் கண்களை அவன் குத்தினான் என்று தான் கூற வேண்டும்..
ஆம் அவள் அவன் அருகே சென்றது மட்டும் தான் அவளுக்கு நியாபகம் இருக்கிறது..ஆனால் அதன் பிறகு வேறெதுவும் நியாபகத்திற்கு இல்லை..ஆம் அவளை காணும் போதெல்லாம் வெறுப்பை கக்கும் அவன் இப்பொழுது அவளை நாடி கொண்டு இருக்கிறான்..அது ஏனோ?? காதலும் இல்லாமல் காமமும் இல்லாமல் சாதாரண பேச்சு வார்த்தையில் துவங்கிய இந்த கூடல் முதலில் சில அசௌகரியங்களை கொடுத்தாலும் போக போக அது இயல்பான கூடலாக மாறியது..
அவளுக்கும் சரி அவனுக்கும் சரி அது இனிமையான இரவாக தான் அன்றிரவு அமைந்தது..எப்படியோ துவங்கிய அந்த இரவு ஒரு இனிமையான விடியலாக அவளுக்கு விடிந்தது..
