Share:
Notifications
Clear all

மந்தாரம் 30

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 328
Thread starter  

மந்தாரம் : 30

அவன் பேசிய பேச்சுக்கு அவள் அவளை ஏதாவது செய்து அவளை நிரூபித்து கொள்ள வேண்டும் என அவளுக்கு தோன்றியது.. ஆனால் அது முட்டாள் தனம் அல்லவா??

தான் ஏன் தன்னை அழித்துக் கொண்டு அவனிடம் நிரூபிக்க வேண்டும் அவனிடம் பேசி அல்லவா ஜெயிக்க வேண்டும் என்று அந்த நொடி அவளுக்கு தோன்றியது..

தேவிகா கிராமத்தில் வளர்ந்த பெண் தான்.. அதுவும் மலை கிராமத்தில் வளர்ந்த பெண்.. பல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்ந்தவள் தான்.. ஆனால் அவள் ஒன்றும் தைரியம் இல்லாத கோழை கிடையாது..தேவிகா இவன் மேல் ஆசைப்பட்டால் என்பது உண்மைதான்..

அதற்காக அவளின் மானத்தை விலை பேசும் எல்லா விஷயத்திற்கு எல்லாமே அவள் அடிபணிந்து செல்வாள் என நாம் நினைத்தாள் அது ஆகச்சிறந்த முட்டாள்தனமாக இருக்கும்... அவனின் காதலுக்கு வேண்டுமானால் அவள் அடிபணிவாளே ஒழிய அவனின் பழி சொல்லுக்கு அவள் அடிபணிய மாட்டாள்..

ஆம் அப்படி என்ன நடந்தது என அவன் தன்னை இப்படி ஒரு பழி சொல் சொல்கிறான்..
பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா?? தீர ஆராயாமல் இவ்வளவு பெரிய வார்த்தைகளை அவன் விட்டு விட்டானே என்ற கோபம் கூட அவளுக்கு வந்தது..

அவனுக்காக இத்தனை நேரம் காத்து இருந்து அவனுக்காக விரதம் இருந்து கோவிலுக்கு சென்று அவனுக்காக இத்தனை நேரம் உண்ணாமல் காத்து இருந்தால், தான் ஒரு அண்ணனாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவனோடு தன்னை இணைத்து வைத்து, அவன் என்ன வார்த்தை கேட்டு விட்டான் என எண்ணி அவள் மனதை அந்த வார்தைகள் வெகுவாக பாதிக்க நேராக சென்றவள் அந்த நனைந்த உடையிலேயே அவனை காண சென்றாள்..

அவளுக்கு எதுவும் தலைக்குள் ஓடவில்லை.. அவன் பேசிய வார்த்தை மட்டும் தான் இன்னும் ஓடிக் கொண்டு இருந்தது..

அவனுடைய அறை இலேசாக திறந்து தான் இருந்தது.. விளக்கு எரிந்து கொண்டிருந்தது.. அவன் என்னும் உறங்கவில்லை என்பதை அவளுக்கு உணர்த்தியது..

அதனால் அவள் உள்ளே செல்ல அங்கு நனைந்த உடைகளை எல்லாம் களைந்து விட்டு அவன் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு நின்று கொண்டு இருந்தான்..

ஏதோ பலத்த யோசனையில் அவன் இருப்பது போல அவன் கையில் சிகரெட் இருந்தது..அவளை கண்டதும் அவனுடைய பேச்சு எப்போது முடிந்தது என்பது போல இன்னும் இவள் இங்கு நின்று கொண்டு இருந்தால் இவளுக்கு நடக்கும் அனைத்திற்கும் அவன் பொறுப்பாக முடியாது என மனதுக்குள் நினைத்துக் கொண்டே சிகரட்டை பிடித்து இழுத்துக் கொண்டு இருந்தான்..

அந்த அளவுக்கு அவள் மீது அவன் கடுப்பாக இருந்தான்..அவள் அங்கு நிற்கிறாள் என்ற பொருட்டே இல்லாமல் நின்றான் விது..

அவளுக்கோ அழுகையும், ஆத்திரமும் ஒரு சேர நின்றது.. புசுபுசுவென மூச்சுக்காற்றை பெரிதாக இழுத்து விட்டு, "என்ன சொன்னீங்க?? உங்களுக்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது?? சொல்லுங்க எனக்கு தெரிஞ்சு ஆகணும்?? என்னை பற்றி என்ன நினைச்சுட்டு இருக்கீங்க??" என அவள் வந்த வேகத்தில் அவனிடம் கேட்டாள்..

அவனோ ஒரு பப்பை இழுத்து விட்டுக் கொண்டே," இந்த நிமிஷம் இந்த நொடி என் பார்வையில உலகத்திலேயே கேவலமான ஒருத்தி உயிரோடு இருக்கா அப்படின்னா அது நீதான்" என்று அவன் கூறினான்.. ஆம் அவள் கேட்டதிற்கான பதில் அது தான் என்பது போல அவன் கூறினான்..

அதைக் கேட்டதும் அவள் மேலும் திகைத்து போய், "எப்படி என்னை இப்படி ஒரு வார்த்தை நீங்க சொல்லலாம்?? நான் அப்படி பட்ட பொண்ணா??" என ஆதங்கத்தில் கேட்டாள்..

"பின்ன இந்த நேரத்துல ஒருத்தன் வீட்டுக்குள்ள இருந்து நீ வந்தா வேற என்ன சொல்லணும்?? உனக்கென்ன அவன் வீட்ல வேலை இதைத் தவிர??" என அவன் கேட்கவும் தான் விஷ்வா வீட்டு வாசலில் இருந்து அவள் வந்ததை பற்றி தான் கூறுகிறான் என கேட்டதும் அவளுக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது...

"ஒரு பொண்ணுன்னா ஒரு ஆண் கூட இருந்தா படுக்க தான் போவாங்களா??.. அந்த அளவுக்கு தான் நீங்க பொண்ணுங்களை எடை போட்டு வைச்சு இருக்கீங்களா?? நீங்க பார்த்தீங்களா?? நான் அவர் கூட தப்பு பண்றதை?? நீங்க பார்க்காமல் எப்படி என்னை குறை சொல்லலாம்??" என அவள் வெகுண்டு கேட்டாள்..

"நான் ஒன்னும் மத்த பொண்ணுங்களை எல்லாம் சொல்லல..ஆனால் உன்னை சொல்லுவேன்.. ஆமாம் எனக்கும், உனக்கும் தப்பு நடந்துச்சுன்னு சொல்லி என் கையால தாலி வாங்கினவ தானே நீ.. அந்த அளவுக்கு நான் சொல்றது உண்மை தானே??.. இதிலேயே உன்னுடைய தராதரம் என்னன்னு உனக்கு புரியலையா??" என்றான் விது..

அவளை அடக்கி விட்டான்.. ஒரே வார்த்தையில் அவளை அடக்கி விட்டான்.. அவள் அன்று சொன்ன பொய் இன்று அவள் முகத்துக்கு நேராக அவளை திருப்பி அடிக்கிறது.. அப்படி இருக்க, அவள் ஒரு நொடி தவித்து போய் அவள் கண்களில் மலமலவென கண்ணீர் கொட்டியது..

அதை பார்த்தவன், "என்ன பேச்சு நின்னு போச்சு.. பேசு டி.. இப்போ பேசு.. நான் தான் பார்த்தேனே.. நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்குறத நான் பாக்கல.. அவன் வீட்டில் இருந்து நீ வரத பார்த்தேன்.. அது மட்டும் இல்ல.. இன்னைக்கு சாயந்திரம் நீங்க இரண்டு பேரும் ஜாலியா ஐஸ்கிரீம் சாப்பிட்டு இருக்கிறதையும் பார்த்தேன்..

ஐஸ் கிரீம் மட்டும் தான் வாங்கிக் கொடுத்தானா?? இல்லை வேற ஏதாவது கிடைச்சுதா?? தாலி என் கையால வாங்கிட்ட படுக்கிறது மட்டும் அவன் கூடவா??" என்றான்.. அவள் வலிக்க வேண்டும் என மீண்டும் வார்த்தைகளால் அவளை தாக்கினான்..

அவளோ அவன் பேச்சில் காதுகளை அப்படியே பொத்திக் கொண்டாள்..ஆம் அதற்கு மேல் அவளால் அவனின் வார்த்தைகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை..அவளின் உயிர் வரை அவன் வார்த்தைகளால் அவளை குத்தி குதறி விட்டான்..

ஆம் எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அவ்வளவு தூரம் கேவலமாக பேசி விட்டான்.. இந்த அளவுக்குத்தான் ஒரு பெண்ணை இவன் எடை போடுவதா?? அதற்கு மேல் அவளால் முடியவில்லை..

அவன் முன்னே இப்படி அழுது கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது என எண்ணி, "போதும் நிறுத்துங்க.. ரொம்ப பேசிட்டீங்க..

நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு நெனைச்சேன்.. அதுக்காக அப்படி சொன்னேனே தவிர பார்க்கிற எல்லார்கிட்டயும் நீங்க சொன்ன மாதிரி படுக்கிற ஆள் நான் கிடையாது.. உங்களுடைய மனசு இவ்வளவு கேவலமா இருக்கும்னு நான் எதிர்பார்க்கல...

அது மட்டுமில்லாமல் விஷ்வா சார் எனக்கு அண்ணா மாதிரி.. அவரும் என்கிட்ட ஒரு தங்கச்சிக்கிட்ட எப்படி பழகுவாரோ அப்படி தான் பழகுவார்.. ஒரு அண்ணன், தங்கச்சி எப்படி இருப்பாங்களோ அப்படி ஒரு உறவு தான் எங்களுக்குள்ள இருக்கு..

எனக்கும் யாரும் கிடையாது அவருக்கும் யாரும் கிடையாது அதனால நாங்க பேசி பழகுறோம்.. அவர் எப்பவுமே எனக்கு ஒரு அண்ணா தான்...

நான் இந்த வீட்டை விட்டு வெளியே போனது கூட கோவிலுக்கு தான்.. ஊர் சுத்த இல்லை.. அதுவும் உங்களுக்கு முடியாமல் போனதுனால உங்களுக்கு நல்லா ஆகணும்னு சொல்லி சாமிகிட்ட வேண்டிட்டு போனேன்.. இந்த ஊர்ல எங்க கோயில் இருக்குன்னு எனக்கு தெரியாது.. அப்பத்தான் விஷ்வா சார் வந்தார்.. அவர் கூட்டிட்டு போனார்..

அவருக்கு ஏதோ வாங்கணும்னு சொன்னார்.. வாங்கிட்டு வரும்போது எனக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தார்.. அதை பார்த்துட்டு தான் நீங்க இப்படி பேசுறீங்க.. நீங்க பார்த்த மாதிரி நான் அவர் வாங்கி கொடுத்த ஐஸ்கிரீமை தான் சாப்பிட்டேனே தவிர நீங்க பார்க்காம என் மேல பழி சுமத்துனீங்களே அது மாதிரி நான் ஒன்னும் அவர் கூட படுக்க போகல..

அதுவும் இந்த நேரத்துல அவர் வீட்டு கதவை ஏன் தட்டப் போனேன் தெரியுமா?? உங்களுக்காக காத்திருந்து காத்திருந்தது நீங்க இன்னும் வராததுனால உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை..

அதுக்காக அவரை எழுப்பலாமா அப்படின்னு நினைச்சு தான் போனேன்.. அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க.. இதுதான் நடந்த விஷயம்..

நான் ஒன்னும் உங்களை மாதிரி தாலி கட்டின பொண்டாட்டி முன்னாடியே வேற ஒருத்தியை கட்டி பிடிச்சிட்டும், வேறொரு பொண்ணு உங்களை முத்தம் கொடுப்பதை வேடிக்கை பார்த்துட்டு நான் நிக்கிற மாதிரி நீங்க என்னை நினைத்துவிட்டீர்களா?? நான் ஒன்னும் உங்களை மாதிரி கிடையாது..

நான் ஆசைப்பட்டது உங்களை தானே தவிர வேறு யாரையும் கிடையாது.. உங்களுக்கு என்னை பிடித்து இருக்கோ பிடிக்கலையோ எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை..

என் வாழ்க்கை முழுசும் உங்களுக்கு மட்டும் தான் இதை என் மனசுல இருந்து நான் எப்பவும் மாற்ற மாட்டேன்.. என்னை தொட உங்களுக்கு மட்டும் தான் உரிமை இருக்கு.. நீங்க மட்டும் தான் என்னை தொட முடியும்.. வேற யாராலயும் என்னை தொட முடியாது.. அந்த அளவுக்கு நான் கேவலமா போயிடல" என்று அவள் கூறினாள்..

அதைக் கேட்டவன் அவளை ஆழமாக பார்த்தானே ஒழிய வேற எதுவும் பேசவில்லை.. அவளுடைய கதைகளெல்லாம் அவன் நம்ப தயாராக இல்லை...ஆனால் அவளை இதை வைத்தே அடிக்க வேண்டும் என்று மட்டும் தோன்றியது..

ஆம்.. அவன் தான் அவளை எப்போது அடிக்கலாம் என்றல்லவா காத்துக் கொண்டு இருக்கிறான்..

அப்படி இருக்க, "அப்போ எதுவும் நடக்கலன்னு சொல்ற?? உன்னோட வாழ்க்கை முழுவதும் எனக்கு தான் அப்படின்னு சொல்ற?? அப்படி தானே?? அப்படி ஒரு தெய்வீக காதல் என் மேல அப்படி தானே??" என ஒரு மாதிரியான குரலில் கேட்டான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top