மந்தாரம் 29
மந்தாரம் : 29
அவனுக்கு உடல் நலம் தேறி இரண்டு நாட்கள் ஆகி விட்டது.. மருந்துகள் இன்னும் உட்கொள்ள இருந்தாலும் அவன் அலுவலகம் செல்ல துவங்கி இருந்தான்..
அவன் உள்ளே பல குழப்பம் நிறைந்து இருந்தது.. அது எல்லாம் தேவிகாவை பற்றி தான்.. அவள் அவனை கவனித்து கொண்டது எல்லாம் அவனுக்கு சரி தான்.. அவனுடைய உடல்நிலையை கவனித்து கொண்ட விதத்தில் அவனது மனம் கொஞ்சம் இளகி தான் இருந்தான்..கொஞ்சம் அவள் மீதான அவனுடைய எண்ணங்களை அவன் மாற்ற வேண்டும் என்று கூட எண்ணி இருந்தான்..
ஆனால் அது எல்லாம் தவிடு பொடியாக்கும் விதத்தில் தான் தேவிகா ஒரு காரியம் செய்தாள்..
ஆம்.. வேலைக்கு சென்றவன் மாலையில் வரும் வழியில் விஷ்வா மற்றும் தேவிகா இருவரும் இணைந்து ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டு இருக்கும் காட்சியை அவன் காண நேர்ந்தது..அதுவும் இருவரும் பேசி சிரித்து கொண்டு இருந்த காட்சியை கண்டவனுக்கு மீண்டும் அவள் மீதுள்ள பழைய கோபம் மீண்டும் கிளர்த்து கொண்டு வந்தது..
கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்களாக தேவிகா விது கூடவே இருந்து கவனித்துக் கொண்டதிலும், அவள் பேசியதையும் வைத்து கொஞ்சம் மாறி இருக்க, ஆனால் அவன் வேலைக்கு சென்றதும் அவள் அவளுடைய வேலையை காட்ட துவங்கி விட்டாளா என எண்ணியவன் மனதில் அவள் மீது இருந்த சிறு துளி நல்ல எண்ணத்தையும் கைவிட்டவன் மீண்டும் அவளை கேவலமாக நினைக்க துவங்கி விட்டான்..
அப்படி வீட்டுக்கு வந்தவன் அவனுடைய அறையில் குறுக்கும் நடுக்கமாக நடந்து கொண்டே எத்தனை சிகரெட் பிடித்து தள்ளி இருப்பான் என அவனுக்கு தெரியவில்லை.. நேரம் ஆக ஆக அவனுக்கு தலை சூடானது.. அவனுக்கு என்று அவனுடைய அறைக்கு வந்த உணவு மற்றும் மருந்துகளை கூட உட்கொள்ளவில்லை..
அந்த வீட்டுக்குள் அவன் அந்த நொடி இவளை யோசித்துக் கொண்டு இருப்பது கூட அவனுக்கு பிரச்சனையாக இருந்தது.. அப்படி இருக்க அந்த வீட்டுக்குள் இருக்க முடியாமல் வெளியே சென்று விட்டான்.
இவளை பற்றி ஏன் நாம் இந்த அளவுக்கு யோசிக்கிறோம் என்றெல்லாம் அவனிடம் கேட்டால் அவனுக்கு தெரியாது.. அவள் அவனோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவனுக்கு ஏதோ ஒரு பிரச்சனையாக இருப்பதை அவன் உணர்ந்து கொண்டு தான் இருந்தான்..
உண்மையில் அவள் விஷ்வாவோடு பழகுவதை அவன் விரும்பவில்லை... அதுதான் உண்மையான காரணம்.. அதை அவன் உணர்ந்து கொள்ளவும் இல்லை.. அது வேறு விஷயம்.. அதற்கு அவன் பெயரிட்டது இவள் தவறானவள்.. இவள் தன்னை ஏமாற்றியது போல விஷ்வாவையும் ஏமாற்ற பார்க்கிறாள்.. அதற்காகத்தான் வந்திருக்கிறாள் என்றுதான் நினைத்தான்..
அப்படி இருக்க, அவனோ எதை பற்றியும் யோசிக்காமல் நேராக பாருக்கு சென்று குடிக்க துவங்கி விட்டான் விது..
அதேநேரம் அவருக்கு உடல் நலம் பெற்றால் கோவிலுக்கு வருவதாக வேண்டி இருந்த தேவிகாவுக்கு, இந்த ஊர் புதிது என்பதால் எப்படி கோவிலுக்கு செல்வது என தெரியாமல் அவன் மாலை வேலை விட்டு வீட்டிற்கு வருவதற்குள் வீடு திரும்ப வேண்டும் என வேகமாக கோவிலுக்கு செல்ல இருந்தவள் முன்னிலையில் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்த விஷ்வா அவள் ஒரு வித பதட்டத்தோடு நிற்பதை பார்த்து என்னவென்று கேட்க, "எனக்கு கோவிலுக்கு போகணும்.. ஆனால் இந்த ஊர்ல எப்படி போகணும்னு தெரியாது" என்று கூறினாள்..
அதை கேட்டு அவனோ, "சரி வா எனக்கும் வெளியே கொஞ்சம் ஷாப்பிங் போகணும்.. நான் கூட்டிட்டு போறேன்" என கூற முதலில் தேவிகா தயங்கினாள்..
"இல்லை விது சார் வரதுக்குள்ள வரணும்.. அவருக்கு தேவையான மருந்துகள் எல்லாம் எடுத்துக் கொடுக்கணும்" என கூற, "அதெல்லாம் அவன் வருவதுக்குள் வந்திடலாம் வா" என கூறி விஷ்வா அழைத்து சென்றான்..
ஏனெனில் அவனுக்கு என்னவோ தெரியவில்லை.. தேவிகாவை பார்த்ததில் இருந்து மிகவும் பிடித்து விட்டது.. அவள் அந்த வீட்டில் வேலைக்காரி என்றாலும் அவளை ஒரு தங்கையாக எண்ணிக் கொண்டான் விஷ்வா..அவளும் அண்ணா அண்ணா என இயல்பாக பேசுவது அவனுக்கு பிடித்து இருந்தது..
அப்படி இருக்க, அவளை கோவிலுக்கு அழைத்து சென்று, பிறகு அவனுக்கு தேவையானதை எல்லாம் வாங்கியவன் அவளுக்கு ஒரு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்து அதை ரசித்து இருவரும் உண்டு கொண்டிருப்பதை தான் விது பார்த்தான்.. அப்படி இருக்க விஷ்வாவிடம் அவள் இயல்பாக பேசிக் கொண்டிருப்பதும் அவன் கண்களில் பட்டு தான் அவன் ஆத்திரம் அடைந்தான்..
என்னமோ தெரியவில்லை அவளுக்கு தாலி கட்டி விட்டான்.. ஆனால் எதற்காக அவளை வீட்டுக்கு வந்தானோ அதை விட அவனுக்கு அவள் அவனை ஒவ்வொரு நொடியும் இது போன்ற செயல்களால் பழி வாங்குகிறாளோ என்ற எண்ணம் தான் அவனுக்கு வந்தது..
அதனால் அவள் விஷயம் அவனை குடைந்து கொண்டே இருக்கிறது என்பதை அவன் உணர்ந்தான்..
அப்படி இருக்க விஷ்வா அவளிடம் பேச்சு கொடுத்தான்..
அவள் ஊர் எது என்பது துவங்கி அவளுடைய விவரங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கேட்டு அறிந்து கொண்டவன் இறுதியாக அவளுடைய கணவனை பற்றி கேட்கவும் தான் தீடிரென அவள் அதிர்ந்து போக அதை கவனித்த விஷ்வா, "என்னாச்சு உன் புருஷனை பற்றி தானே கேட்டேன்" என்று அவன் சாதாரணமாக கூறவும் அதைக் கேட்ட அவளோ படபடக்கும் அவளுடைய இதயத்தை வேகமாக அடக்கி அவன் முன்னே எதையும் காட்டிக் கொள்ளாமல், "எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு நான் என் புருஷன் கூட இல்லைன்னு யார் சொன்னா?? நான் அவர் கூட தான் இருக்கேன்" என அவள் கூற அதைக் கேட்டவன், "எங்க இருக்கார்?? சொல்லு.. எனக்கு அவரைப் பார்க்கணும்.. முடிஞ்சா இங்கேயே அவருக்கு வேலை வாங்கி தரேன்" என விஷ்வா கேட்க,
"என்னோட இதயத்தில் பத்திரமா இருக்காரு.. ஆசைப்பட்டவரை கல்யாணம் பண்ணிக்க கூடிய பாக்கியம் எத்தனை பேருக்கு இருக்கு எனக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு.. நான் யாரை ஆசைப்பட்டேனோ அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. என்னை அவருக்கு பிடிக்காம இருக்கலாம் ஆனால் எனக்கு எப்போதுமே அவரை ரொம்ப பிடிக்கும்.." என இதயத்தை காட்டி விட்டு, "இதுக்கு மேல அவரை பத்தி எதுவும் கேட்காதீங்க.. சொல்ற சக்தி எனக்கு இல்ல... எனக்கும், அவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.. அதனால அவர் கூட சேர்ந்து வாழ எல்லாம் வாய்ப்பே இல்லை.. இந்த பேச்சு இதோட விட்டுடுங்க" என்று அந்த பேச்சுக்கு முழுக்கு போட்டு விட்டாள்..
அவனுக்கும் அவளுடைய விபரத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசை எல்லாம் இல்லை.. ஆனால் என்னவோ தெரியவில்லை இவள் மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிட்டது.. அதனால் அவளுடைய வாழ்க்கையில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதை தீர்த்து வைக்கலாமே என்று கருதித்தான் அவன் கேட்டான்.. அவள் சொல்ல மறுக்கவும் விஷ்வாவும் விட்டு விட்டான்.. ஆனால் அவளுடைய கணவனுக்கு இவளை பிடிக்கவில்லை என்பது மட்டும் தெளிவாக அவனுக்கு விளங்கியது..
அப்படி அவர்கள் வீட்டுக்கும் வந்து விட்டார்கள்..அவளோ அவன் வந்து இருப்பானோ என எண்ணி இருக்க அவனுடைய கார் இல்லாததால் இன்னும் வரவில்லை போல என சமாதானம் கொண்டவள் வீட்டுக்கு போய் எப்போதும் போல அவளுடைய வேலைகளில் ஈடுபட துவங்கினாள்..
அப்போது தான் அவன் வீட்டுக்கு வந்தான்.. பிறகு சென்று விட்டான் என வேலைக்கார அண்ணன் மூலமாக தெரிந்து கொண்டவள் எங்கே போனாங்க?? என யோசித்து கொண்டு அவனுக்காக உண்ணாமல் காத்துக் கொண்டு இருந்தாள் தேவிகா..
இரவு ஆகியது.. வெளியே மழையும் வந்து கொண்டு இருந்தது..அனைவரும் உறங்கி விட்டனர்.. இவன் வந்தபாடில்லை.. இவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பயம் உள்ளுக்குள் வந்தது.. அவனை அழைக்க அவனுடைய தொலைபேசி எண் கூட அவளுக்கு தெரியாது.. விஷ்வாவிடம் கூறி அவனை அழைக்க சொல்லலாமா என எண்ணினாள்..
அவன் மீது இவ்வளவு அக்கறையை வெளியே சென்றவனுக்கு வீட்டிற்கு வர தெரியாதா என அவளுடைய மனசாட்சி அவளிடம் கேள்வி கேட்டால் அவரு என் புருஷன் அவரை என் மனசும் தேடும் உனக்கு என்ன என அவளின் மனசாட்சியோடு சண்டை போட்டுக் கொண்டு அவள் விஷ்வாவுக்கு தகவல் தெரிவிக்கலாம் என கதவை திறந்து வெளியே செல்ல அங்கு மழை வலுத்து இருந்தது..
அவள் மெல்ல தோட்டத்துக்கு பக்கமாக சென்றவள் விஷ்வா வீட்டு அருகே சென்று விட்டாள்.. கதவை தட்ட போக அதற்குள் அந்த பெரிய வீட்டுக்குள் விது பிரதாப்பின் கார் உள்ளே நுழைந்தது..
அவனுடைய கார் நுழைவதை கண்டதும் அவன் வந்து விட்டானா என எண்ணி அவள் வர அவனோ கொஞ்சம் போதையில் வந்தவன் விழிகள் தோட்டத்தை பார்க்க அவனுடைய பார்வைக்கு அவள் விஷ்வா வீட்டுக்குள் இருந்து வருவது போல தான் இருந்தது.. அதை கண்டதும் அவனுடைய கோபமும் அகங்காரமும் பன் மடங்காகியது..
இந்த அளவுக்கு சென்று விட்டாளா அப்போ தினமும் இது தான் நடக்குதா என எண்ணினான்.. அப்படி இருக்க அவன் அவள் மீது இருந்த ஆத்திரத்தை அந்த காரில் காட்டினான்..
அதற்குள் அவள் அவன் வந்து விட்டான் என எண்ணி வேகமாக வரவும் முழுவதுமாக தொப்பலாக நனைந்து இருந்தாள்..
அவனும் காருக்குள் இருந்து கீழே இறங்கி வந்தவன் அவனும் மழை என்றும் பாராமல் அவளை பார்த்து கடும் கோபத்தில் இருந்தான்..
அப்போது, "ஐயோ அவரு நனைஞ்சிட்டு இருக்காரு.. அவருக்கு இன்னும் சரியா கூட குணமாகல" என்று கருதி வேகமாக அவள் வந்தவள் மழை வெள்ளத்தில் கால் இடறி அவளுடைய கால் வழுக்க அப்படியே நிலை தடுமாறி போனவள் அவன் மீது மோத போக அதற்கு விடாமல் அவள் இடையை அவன் அந்த சூழலிலும் தாங்கியவன் அவள் விழாதபடி தாங்கி பிடித்த அவனின் முகத்தை பார்த்து, "நன்றிங்க மழைக்குள் வழுக்கி விட்டுடுச்சு.." என்றவள் அவனிடமிருந்து தன்னை விடுவித்து கொண்டாள்..
ஏனெனில் அவனுடைய அருகாமை தானே அவளுக்கு பிரச்சனையாயிற்றே..
அப்படி இருக்க, அவன் அவளை ஆழமாக பார்க்க அந்த இருட்டில் அவனுடைய பார்வை அவளுக்கு புரிபடவில்லையோ என்னவோ கடந்த இரு நாட்களாக அவன் அவளிடம் சாதாரணமாக அவள் கேட்பதற்கு எல்லாம் பதில் அளிப்பதும் இயல்பாக இருப்பது போல அவளுக்கு தோன்றியதால், "என்னங்க இவ்வளவு நேரம் ஆயிடுச்சு உங்களுக்காக காத்துட்டு இருந்தேன்" என்று தேவிகா இயல்பாக கூறினாள்..
அதைக் கேட்டவன் ஏற்கனவே கடுப்பில் இருந்தவன், அவ்வளவு நேரம் அவன் கடைபிடித்து வைத்திருந்த பொறுமையை காற்றில் பறக்க விட்டு, "எனக்காக காத்திருந்தவள் தான் விஷ்வா வீட்டில் இருந்து வரியே??" என்றான்..
அதை கேட்டவள் அதிர்ந்து, "இல்லைங்க உங்களை தேடித்தான் போனேன்" என அவள் பக்கத்து நியாயத்தை சொல்ல முயல,
"இதை என்னை நம்ப சொல்றியா??.. என்னைத் தேடி போனியா?? இல்லை அவன் கூட படுத்துட்டு வரியா?? இப்போ ஏன் பொய் சொல்ல முயற்சிக்கிற?? ஏன் டா இவன் வந்தான்னு பிரச்சனையா இருக்கா உனக்கு??" என்றான் விது..
அதைக் கேட்டவள் அப்படியே அரண்டு போய்விட்டாள்.. "என்னங்க சொல்றீங்க??" என்று அதிர்ந்தவள் கேட்க அவனும் மதுவின் வீரியத்தில், "அதுவும் இல்லைனா இவன் என்ன திடீர்னு வந்துட்டானே என்று நினைக்கிறயா?" என்று அவன் கேட்டான்..
அவள் அவனுடைய பேச்சில் திகைத்துப் போய் நிற்க இப்படி ஒரு வார்த்தை அவன் வாயிலிருந்து அவள் எதிர்பார்க்கவில்லை.. அவனுடைய வார்த்தைகளை கிரகித்துக் கொள்ள அவளுக்கு ஆழ்ந்த இரு நொடி தேவைப்பட்டது.. அதற்குள் அவன், "நீ இந்த அளவுக்கு இறங்கி போவேன்னு நான் எதிர்பார்க்கல.." என்று கூறிவிட்டு அவன் அங்கிருந்து சென்று விட்டான்..
அந்த வார்த்தைகளை அவளால் உட்கொள்ள முடியாமல் மழை என்று பாராமல் அங்கேயே அவள் எவ்வளவு நேரம் தான் என்றால் என அவள் அறியாள்...
