Share:
Notifications
Clear all

மந்தாரம் 28

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

மந்தாரம் : 28

"ப்ரோ உன்னை கண் கலங்காமல் பார்த்துக்க சொல்லி தான் ஆன்ட்டி, அங்கிள் சொல்லிட்டு போய் இருக்காங்க.. இப்போ நீ சரியா சாப்பிடாமல் இப்படி டிஹைட்ரேட் ஆகி காய்ச்சல் வந்து படுத்து இருக்க.. இப்ப நான் ஆன்ட்டி அங்கிள் கிட்ட என்ன சொல்லுவேன்??" என்று விஷ்வா உடல்நிலை சரியில்லாமல் படுத்து இருக்கும் விதுவை பார்த்து காமெடியாக கூற அதை கேட்டு மெல்லிய புன்னகையை தான் விதுவால் கொடுக்க முடிந்து இருந்தது.. ஆனால் அதற்கு மேல் அவனால் சுத்தமாக முடியவில்லை.. அந்த அளவுக்கு அவனுடைய உடல் முழுவதும் வலியால் அவதிப்பட்டு இருந்தான்..

"ரெண்டு நாளா ஒரு இம்போர்ட்டண்ட் மீட்டிங்கு பிரிப்பேர் பண்ணதுல சரியா சாப்பிடாம தண்ணி குடிக்காம இருந்துட்டேன்" என்று விது உடல்நிலை சரியில்லாத காரணத்தை கூறினான்..

அதைக் கேட்ட விஷ்வா, "இதுதான் சாப்பிடாம தூங்காம வேலை செய்றதா??" என்று கிண்டலாக கூறினான்.. என்றவன், "தொழில் முக்கியம் தான்.. அதுக்கு நீ ரொம்ப முக்கியம்.. இப்படி உடம்ப கெடுத்துவிட்டு வேலை செய்யணும் அப்படின்னு அவசியம் இல்லை விது" எனக் கூறினான் விஷ்வா..

"இப்போ இன்னைக்கு தான் அந்த மீட்டிங் எனக்கு போயே ஆகணும்.." என்று விது விஷ்வா கூறியதை கேட்டாலும் அவன் கூறினான்.. அதைக் கேட்டு விஷ்வா, "நீ இங்க இருந்து ஒரு அடி கூட நகர கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க நீ எங்கேயும் போக வேண்டாம்.. இரண்டு நாள் உனக்கு ரெஸ்ட் தான்" என்றான்..

"விஷ்வா அது ஒரு இம்போர்ட்டண்ட் டீல் நான் போகலைன்னா சரி வராது.." என்று அப்போதும் விது கூறினான்..

"விது ஸ்டாப் இட்.. இப்போ நீ போறதுக்கு உன் உடம்புக்கு சரி வராது.. உனக்கு பதிலா நான் வேணும்னா அட்டென் பண்றேன்" என விஷ்வா இவன் அடம் பிடிப்பதை பார்த்து கூறினான்..

அதை கேட்டு மனமே இல்லாமல் விது பார்க்க விஷ்வாவோ, "ப்ரோ நானும் கொஞ்சம் வேலை எல்லாம் செய்வேன்.. என்னை நம்பலாம்.. இவ்ளோ எல்லாம் யோசிக்க தேவை இல்லை" என கூற அதை கேட்டதும் பிறகு யோசிக்காமல் சரியென விது கூறினாலும் விஷ்வா அவனை விட நன்றாக தொழிலில் ஈடுபாடு உடையவன் என்றும் அவனை விட இதில் விஷ்வாவுக்கு அனுபவம் அதிகம் என விது பிரதாப்புக்கு தெளிவாக தெரியும் அதனால் சரி என கூறிவிட்டான்..

ஏனெனில் நேற்று இரவு கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டவன் எப்படி படுக்கையில் இருந்து கீழே விழுந்து கிடந்தான் என அவனே அறியான்.. காய்ச்சலில் மயக்கம் அடைந்து கீழே விழுந்த அவன் இதோ மதியத்துக்கு மேல் தான் கண் முழித்து இருக்கிறான்..அவனுக்கு என்ன நடந்தது என விஷ்வா கூறித்தான் அவனுக்கு விளங்கியது..

அப்பொழுதுதான் காய்ச்சலின் வீரியத்தில் மயங்கி விட்டான் என்பது அவனுக்கு புரிந்தது.. அப்படி இருக்க அவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவனுக்கு ஓய்வு தேவை என்றும் நல்ல உணவும் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.. நான்கு நாட்களாவது அவனுக்கு ஓய்வு தேவை என அறிவுரை செய்திருக்க அவனுக்கும் ஓய்வு தேவை என அவனுடைய உடல் கெஞ்சியது அதனால் அவனும் விஷ்வாவிடம் ஒப்படைத்து விட்டான்..

பிறகு விஷ்வா அங்கு கணவனுக்கு முடியவில்லை என்றதும் தேவிகாவின் காதல் மனது அவன் பின்னாலே அலைந்து கொண்டு இருந்தது.. கணவனின் தன் மீதுள்ள கோபமோ இல்லை அவன் தன்னை தர குறைவாக பேசியதோ எதுவுமே ஞாபகத்தில் இல்லை..

காலையில் அவனுக்கு காபி கொடுக்க போன வேலைக்கார அக்கா அவன் மயங்கி கிடக்கிறான் என கூறியதும் இவளுக்கு உயிரும் இல்லை உணர்வும் இல்லை.. அப்படியே அதிர்ந்து விட்டாள்.. அவனின் கோலத்தை கண்டவள் என்ன செய்வது என தெரியாமல் ஒரு வித பதட்டத்தில் தான் இருந்தாள்..

மருத்துவர் வந்து காய்ச்சல் தான் வேறொன்றும் இல்லை என கூறியதும் தான் அவளுக்கு உயிரே வந்தது.. இருந்தாலும் வாடி போன அவனுடைய முகத்தை பார்த்துக்கொண்டே அதே இடத்தில் அவள் நின்று கொண்டு இருக்கிறாள்.. யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்பது போல தான் தேவிகா நின்று கொண்டு இருந்தாள்..

அவனை விட்டு துளியும் மாறவில்லை.. விஷ்வாவிடம் அவனுடைய வேலையை ஒப்படைத்தவன் கண்களை மூடி ஓய்வு எடுத்துக் கொள்ள விஷ்வா அங்கு தவித்து போய் நின்று கொண்டு இருக்கும் தேவியை பார்த்து, "தேவி சாருக்கு தேவையானதை நீ தான் கூட இருந்து பார்த்துக்கணும்..

நான் வந்து பார்க்கும்போது சார் தெம்பா இருக்கணும் புரியுதா?? நான் வரும் வரை சாரை விட்டு எங்கேயும் போக கூடாது" என்று விஷ்வா தேவிகாவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு போக அவளோ எப்போது தன்னிடம் பொறுப்பை ஒப்படைப்பான் என்று காத்து இருந்திருப்பாள் போல உடனே வேகமாக தலையாட்டியவள் கண்கள் லேசாக குளமாக இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் தன் கண்களை துடைத்து கொண்டாள்..

விஷ்வா சென்றதும் அங்கு நின்று கொண்டு இருந்த ஷ்ரேயா, "பேபி எனக்கு உன் கூட இருக்கணும் தான் ஆசை.. ஆனா எனக்கு முக்கியமான ஷூட் இருக்கு.. நான் சீக்கிரமா ஷூட்டிங் முடிச்சுட்டு வந்து உன் கூட டைம் ஸ்பென்ட் பண்றேன்.. டேக் கேர்" என்று தேவி முன்னிலையில் விது அவனின் கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டு, "தேவி சாரை நல்லா பாத்துக்கோ.. கூடவே இரு நீ எங்கேயும் போகாத" என்று கூறவும் தன் முன்னே தன் கணவனை வேறொரு பெண் முத்தமிட்டது உள்ளுக்குள் வலித்தாலும் தயவு செய்து இவர்கள் எல்லாரும் வெளியே சென்று விட்டால் அவனைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் மெல்ல தலையாட்ட ஒருவழியாக ஸ்ரேயாவும் அங்கிருந்து சென்று விட்டாள்.. அப்போது தான் அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.. அது மட்டுமின்றி அவன் படுத்திருக்கும் நிலைமையை பார்த்து எப்போது விழும் என இருந்த கண்ணீர் வேகமாக எல்லோரும் சென்றதும் விழுந்தது..

கம்பீரமாக இருப்பவன் இப்படி முடியாமல் படுத்து இருக்கிறானே என்ற வருத்தம் அவளுக்கு இருக்க, சாதாரண காய்ச்சல் தான் இருந்தாலும் அவளை பொறுத்தவரை அவளுக்கு எது வந்து இருந்தாலும் அவள் தாங்கிக் கொள்வாள்.. அவன் மீது உயிரையே வைத்து இருக்கும் அவனுக்கு ஒன்று என்றதும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..

அவன் கண்களை மூடி படுத்து இருக்க அவன் முன்னே சூடான கஞ்சியை கொண்டு வந்த தேவி, "என்னங்க என்னங்க" எனக் கூற, அவளின் குரலை கேட்க அந்த சூழலிலும் அவனுக்கு விருப்பம் இல்லை..

"என்னங்க தயவு செஞ்சு கண்ணை திறங்க.. நீங்க தூங்கலைன்னு எனக்கு நல்லா தெரியும் கொஞ்சம் சாப்பிட்டு மருந்து சாப்பிட்டு படுத்துக்கோங்க .." என்றாள்..

அப்போதும் அவன் கண்களை திறக்கவில்லை.. "இங்கே இருந்து போ" என்றான் கோபமாக,

அவளுக்கோ அவனை எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டும்.. அதுவரை இங்கே இருந்து செல்ல கூடாது என்ற எண்ணத்தில் அவள் இருந்தாள்..

அப்படி இருக்க, "என் மேல இருக்கிற கோபத்தால் சாப்பிடாமல் இருக்காதீங்க" என்று கூறவும் அவன் அப்போதும் கண்களை திறக்காமல், "உன்னை போக சொன்னேன்..கிளம்பு டி.. உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கல.." என்றான்..

அதைக் கேட்டவளுக்கு அப்பொழுதும் அவன் மீது கோபம் வரவில்லை.. தண்ணீரு இவ்வளவு கோபத்தால் அவனுக்கு மீண்டும் முடியாமல் போய்விடுமோ என்று தான் அவள் கருதினாள்..

"நான் உங்க கால்ல வேணா விழறேன்.. நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்.. தயவு செஞ்சு கண்ணை மட்டும் திறங்க.." என்று அவன் கால்களை அவள் பிடித்தாள்..

அப்போது கண்களை திறக்க அவன் உணவு உண்டால் போதுமென்ற நிலையில் தான் அவனும் இருந்தான்.. இருந்தாலும் அவளை காணும் போது எழும் கோபத்தை அவனால் அடக்க முடியவில்லை..

அப்போதும் அவன், "நான் என்ன சொன்னாலும் செய்வியா??" என்றான்..

அவளோ அவன் உணவு உண்டால் போதுமென்ற நிலையில், "ஆமாம் நீங்க என்ன சொன்னாலும் நான் செய்வேன்.. நீங்க சாப்பிட மட்டும் செய்ங்க" என்க

அவனோ அவளை ஆழமாக பார்த்து, "அங்கே வைச்சிட்டு போ.. நான் சாப்பிட்டுகிறேன்" எனவும், அவளோ அவன் மீதான காதல் மனது வேகமாக வெளிப்பட்டு, "ஏங்க இது கூட நான் செய்யக் கூடாதா?? என் மேல இருக்கிற கோபத்தை கொஞ்சம் ஒதுக்கி வைங்க.. நான் இந்த வீட்டு வேலைக்காரி.. அதை மட்டும் நினைச்சுக்கோங்க.. நான் வேற யாரும் இல்லை.. ஒரு வேலைக்காரியா நான் உங்களுக்கு இந்த பணி விடைகள் எல்லாம் செய்யலாம்" என கண்கள் கலங்கி அவள் கூற, அவன் மீண்டும் ஆழமாக அவளை பார்த்தானே ஒழிய, அதன் பிறகு வேறேதும் சொல்லவில்லை..

அவன் கையில் ட்ரிப்ஸ் போட்டு இருந்ததால் அவனால் தனியாக சாப்பிட முடியவில்லை.. அப்போது அவன் மறுக்க மறுக்க அவள் தான் அவனுக்கு ஊட்டி விட்டாள்..

அவனும் அமைதியாக உண்டவன் மருந்து உட்கொள்ளும் போது அவனுக்கு குமட்ட அவன் எழுவதற்குள் அவனை அறியாமல் காய்ச்சலின் வீரியத்தில் உண்ட உணவு எல்லாம் அவன் வாந்தி எடுத்து விட அவனுக்கே ஒரு மாதிரியாக இருந்தது..

அவனோ அதை சுத்தம் செய்வதற்கான முயற்சி எடுக்க போக அவளோ அவனை தடுத்து நிறுத்தி அவனை தாங்கி பிடித்து படுக்க வைத்தவள் அந்த இடத்தை சுத்தம் செய்ய துவங்கினாள்..

அதைக் கண்டவன் என்ன நினைத்தானோ அவள் சிறு முகம் சுழிக்காமல் செய்வதை பார்த்து, "சாரி எனக்கு முடியல அதனால தான்" என்று அவளை இப்படி ஒரு வேலை வாங்கி விட்டோம் என்ற உண்மையான வருத்தத்தில் அவன் மன்னிப்பு கேட்டான்..

அதற்கு அவளோ, "எதுக்குங்க என்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேக்குறீங்க?? இந்த நேரத்தில் இதை சொல்லி உங்களை கோபப்படுத்த கூடாது இருந்தாலும் நீங்க என்னை வேலைக்காரியா நினைச்சாலும் நான் உங்களை என் புருஷன்தான் நினைக்கிறேன்.. ஒரு புருஷனுக்கு இந்த வேலையெல்லாம் செய்யறது பொண்டாட்டிக்கு அருவருப்பா இருக்காதுங்க" என்று கூறிக்கொண்டு அதை சுத்தம் செய்ய அந்த வார்த்தை அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவள் அதை முகம் சுளிக்காமல் செய்வதை கண்டவனுக்கு என்னவோ போலத்தான் இருந்தது..

அதன் பிறகு அவளை பார்த்து, "தேங்க்ஸ்" என்று சொல்ல, "எதுக்குங்க தேங்க்ஸ் எல்லாம்??" என்று கூறியவள் மீண்டும் அவனுக்கு உணவு கொடுக்க அதை உண்டவன் மருந்து சாப்பிட்டுவிட்டு உறங்கிக் கொண்டான்.. அவன் உறங்கினாலும் அவனுக்கு ஏதாவது தேவைப்படுமோ என அவன் அருகிலேயே அவள் நின்று கொண்டிருந்தாள் தேவிகா..

அப்படி கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்குள் தேவிகாவின் கவனிப்பில் அவன் சரியாகி விட்டான்.. அதுவரை என்ன வேலை இருந்தாலும் அவனுடனே இருந்து கண்ணும் கருத்துமாக அவள் அவனை கவனித்துக் கொண்டாள்..

அதையவன் எப்படி உணர்ந்தான் என அவனுக்கு தெரியாது.. ஆனால் அவளுக்கு இதெல்லாம் அவனுக்கு செய்ய முடிந்ததே என்று பாக்கியமாகத்தான் கருதினாள் தேவிகா.. அது தான் தேவிகா.. இவனிடம் எதை கண்டு மயங்கினாள் என அவள் அறியாள்.. ஆனால் அவளின் அவன் மீதான அதீத அன்பு அவளை அவன் என்ன ஏசினாலும், உதாசீனப்படுத்தினாலும் அவன் மீது மீண்டும் மீண்டும் அன்பையே வாரி வழங்க வைக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை..

அப்படி இருக்கும் போது இதை எல்லாம் புரிந்த கொள்ளாத அவளின் கணவன் மூலம் அவளுக்கு ஒரு சம்பவம் ஒன்று நடந்தது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top