Share:
Notifications
Clear all

மந்தாரம் 27

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

மந்தாரம் : 27

"என்னை விடுங்க" என அவனின் நெருக்கமான உணர்வு அவளுக்குள் ஏதோ ஒன்று செய்வதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது..

ஏனெனில் அவள் ஆசைப்பட்டவள் தானே அவன்.. அப்படி இருக்க, அவன் தொடும் வேளையில் அவளால் கூசாமல் எல்லாம் இருக்க முடியாது.. என்ன தான் அவன் மீது அவளுக்கு வருத்தம் இருந்தாலும் அவள் உள்ளம் அவனின் அருகாமையை யாசிக்கிறது என்பதை அவள் உணர்ந்து கொண்டு தான் இருந்தாள்..

அதிலிருந்து அவள் வெளியே வர எண்ணுகிறாள்.. ஆனால் அவன் விடவில்லை.. ஆம்.. அவளின் சிறு மாறுதலும் அவனுக்கு நொடி பொழுதில் புரிந்து விட, அவனின் மூச்சுக்காற்றும், அவனின் நெருக்கமும் அவளை வெகுவாக பாதிக்க வைக்க நான்கு அடி தூரத்தில் வீராப்பாக பேசிய அவளால் அவ்வளவு நெருக்கத்தில் பேச முடியவில்லை.. ஏன் அவளால் சரியாக மூச்சை கூட விட முடியவில்லை..

அவனின் அந்த சிறு உரசலால் அவள் முகம் செம்மையுற்று அவளை அவன் முன்னால் அசிங்கப்படுத்தி விட அதை கண்டவன், ஏற்கனவே அவள் பேசியதில் அவள் மீது இருந்த ஆத்திரத்தில் அவன் தொடுகையில் அவள் உள்ளம் குழைவதை கண்ட அவன், அவளை நக்கலாக பார்க்க அதை கண்டவள் கண்கள் அவனுடைய பார்வையில் வீழ்ந்து போய், "இவ்வளவுதானா நீ.. அவன் உன்னை இவ்வளவு கேவலமா பேசுறான்.. அவன் தொடும் போது எப்படி கூசிட்டு இருக்க??? உன்னால எப்படி முடியுது.. அவன் சொன்னது போல நீ ஆம்பிளை உடம்புக்கு ஆசைபடுறயா?? அந்த அளவுக்கு உன்னோட உடம்பு தரம் கெட்டு போயிடுச்சா??? அவனுடைய பார்வையை பார்.. உன்னை எவ்வளவு கேலி பண்றான் பாரு" என்று அவளின் மனசாட்சி அவளைத் சண்டை போட்டது..

அவளுக்கு அழுகையும் ஒரு வித சங்கடமும் சேர்ந்து நிற்க அவனுக்கோ அவளின் வார்த்தைகளின் வீரியத்தால் அவள் அவனுடைய கைகளுக்குள் அகப்பட்டு விட்டாள் என்றதும் மேலும் தன் பிடியை அழுத்தமாகப் பிடித்து அவள் தன்னை விட்டு வெளியே சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில், "என்னடி எனக்கு என்ன உரிமை இருக்குன்னு கேட்கிற?? உன் கழுத்துல கிடக்கிற தாலி அது கிட்ட போய் கேளு என்ன உரிமை அது உனக்கு சொல்லும்.. இதுக்குத்தானே என்னை பொய் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்ட.. என் வீட்டுலயே இருந்துட்டு என்னையே எதிர்த்து பேசுறியா??? என்ன தைரியம் உனக்கு இருக்கும்??.. என் வீட்டில் இருக்கிற வரைக்கும் நீ கண்டவன் கூட பேசிட்டு அவனை ஏமாத்திட்டு இருக்கிறதை வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியாது.. நான் கேட்டு தான் ஆவேன் எல்லா உரிமையும் எனக்கு இருக்கு.." என கேட்டவனுக்கு இன்னும் அவள் மீது இருந்த ஆத்திரம் குறையவில்லை..

அவளுக்கோ அவன் விட்டால் போதுமென்று இருந்தது.. ஆம்.. அவன் திட்டினாலும் பரவாயில்லை.. 4 அடி தூரமாக நின்று கொண்டு பேசிக்கொள்ளட்டும்.. ஆனால் அவன் கைக்குள் அவளை வைத்துக் கொண்டு அவன் பேசுவதுதான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..

இந்த நேரத்தில் அவனுடைய கோபமோ இல்லை.. அவனுடைய ஆத்திரமும் எதுவும் அவளுடைய கண்களுக்கு தெரியவில்லை.. அவனுடைய அந்த நெருக்கம் தான் அவளை கொன்று கொண்டு இருந்தது..

அதனால் அவள் அவன் விட்டால் போதுமென்று எண்ணி அவன் தொடுகைக்கும், அவனுடைய அருகாமைக்கும் கீழ் அடங்கி, "தெரியாமல் பேசிட்டேன்.. என்னை விடுங்க.. என்னை மன்னிச்சிடுங்க.. இனி மேல் பேச மாட்டேன்" என கூறினாள்..

அப்போதும் அவன் விடவில்லை.. அவனின் கோபத்தால் அவனுடைய அழுத்தம் அவளின் தேகத்தில் கூடியதே தவிர குறையவில்லை..

அவனின் நெருக்கம் தாங்கி கொள்ள முடியாமல், "என்னை விடுங்க" என்றாள்..

"விட முடியாது டி.. என்ன பண்ணுவ??" என நக்கலாக கேட்டவன் அவளை உற்று நோக்க, அவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக செம்மை அடைவதை கண்டு, மெல்ல அவளை அப்படியே அவனின் ஒரு கைக்குள் அடக்கி, அவனின் மறு கையால் அவளின் செம்மை படர்ந்த கன்னத்தை தொட, அவளோ அவளின் முகத்தை அந்த பக்கம் இந்த பக்கமாக ஆட்டி அவன் தொட விடாமல் முயற்சி செய்யவும் அவளை தொட்டே தீருவேன் என்ற இறுமாப்புடன் அவன் மேலும் அவளின் தாடையை பிடித்துக்கொள்ள இப்பொழுது அவளின் முகம் அவன் ஒற்றை கைக்குள் அடங்கி போனது..

பிறகு நக்கலாக அவளை பார்த்து, "என்னடி என்னமோ நான் தொட்டதும் உனக்கு அப்படியே ஆகாத மாதிரி துடிக்கிற??.. நல்லாவே நடிக்கிற???.. ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி அவ்வளவு பேச்சு பேசின.. இப்போ என்ன டி மன்னிப்பா?? இப்போ பேசு டி..பரவால்ல நான் தொடும் போது உன்னோட உடம்பு நல்லாவே ரியாக்ட் ஆகுது.. அதுதான் உன் முகம் காட்டிக் கொடுக்குதே.. உன் கழுத்துல இந்த தாலி இருக்கிற வரை நான் என்ன பண்ணாலும் கேட்க எவனும் வர மாட்டான்.. அதே மாதிரி நீயும் நான் சொல்றதை கேட்டு தான் ஆகணும்.. வேற வழி இல்ல புரியுதா.. மீறி நடந்தா என்ன நடக்கும்னு உனக்கு காட்ட வேண்டாமா??" எனக் கூறி விது அவளை சற்று மிரட்டுவோம் என கருதி அவளின் முகம் நோக்கி குனிந்தான்..

அதைக் கண்டதும் அவள் அன்றைய தினம் போல அவன் மீண்டும் அவளை இதழ் முத்தம் கொடுக்க தான் அருகில் வருகிறானோ அவன் வந்தால் அவளால் அவனை விலக்க முடியாது.

அவளும் இப்போது இருக்கும் சூழலில் அவளும் அவனோடு கலக்க நேரிடும் இது அதை விட அசிங்கமாக போகும் என எண்ணி, அவள் ஒரு முடிவாக அவன் அவளை முத்தமிடும் முன், "என்னை நீங்க மறுபடியும் தொட்டீங்க அப்படின்னா நீங்க என்னை உங்க பொண்டாட்டியா மனசார நினைக்கிறீங்கன்னு அர்த்தம்..அதுனால தான் என்னை தொடுறீங்கன்னு அப்படின்னு நான் எடுத்துப்பேன்.. இப்ப சொல்லுங்க நீங்க என்னை பொண்டாட்டியா தானே நினைக்கிறீங்க அதனாலதான் என்னை தொட வரீங்க??.. நீங்க இப்போ இல்ல எப்ப வேணாலும் என்னை தொடலாம் ஆனால் நீங்க தொடும் போது எல்லாம் எனக்கு என் புருஷன் எனக்கு தாலி கட்டுன புருஷன் என்னை தொடுறதா சந்தோஷமா ஏத்துப்பேன்.. இப்ப தொடுங்க" என்று அவள் கூறவும் அவனுடைய கை அவள் தேகத்திலிருந்து பட்டென எடுத்துக் கொள்ள அவள் உள்ளம் ஒரு நொடி லேசாக அதிர்ந்தாலும் விட்டால் போதும் என அவள் அவ்விடம் விட்டு வெளியேறி விட்டாள்..

அவனோ அவள் பயப்படுவாள் என அவளின் உதட்டை நோக்கி அவன் குனிந்தால் இப்பொழுது அவள் அவனை அடக்கி பேசி விட்டு சென்று விட்டாலே என்று அவள் பேசியதில் அவனுக்கு ஆத்திரம் மூண்டு அப்படியே அவன் அமர்ந்து விட்டான்..

அவள் சொன்னது போல அவளை மனைவியாக நான் நினைக்கிறேன்னா எதற்காக நான் அவளை தொடப் போனேன் என எண்ணியவனுக்கு பதில் ஏதும் கிடைக்காமல் அதற்கு பிறகு அவனுடைய உறக்கம் தொலைந்தது தான் மிச்சம்..

ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு நிச்சயமாக தோன்றியது.. இவள் ஆபத்தானவள்.. இவளை அடிக்கும் விதத்தில் தான் அடிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டான்..

அவளோ அவனிடமிருந்து தப்பித்து விட்டு அவள் தங்கியிருக்கும் அறைக்குள் நுழைந்து கொண்டவள் கதவை அடைத்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.. இப்பொழுது கூட அவளின் இதயம் படப்படவென துடித்துக் கொண்டிருக்கிறது.. அதை அடக்க முடியாமல் அவள் திண்டாடினாள்.. ஆனால் இப்பொழுது அவனிடம் பேசி அவனிடம் இருந்து தப்பித்து விட்டாள்.. ஆனால் கூடிய சீக்கிரம் அவனிடம் இருந்து விலக முடியா வலையில் மாட்ட போகிறாள் என்பதை அவள் இந்நேரம் அறிந்து இருக்க மாட்டாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top