மான்ஸ்டர் 5
அத்தியாயம் : 5
மான்ஸ்டரும் மான்விழியும்
தன்னை பார்த்து எழில் என்று கூறியவளை கூர்ந்து கவனித்தவன் விழிகளில் என்ன மொழிகிறது என பிறர் பார்வைக்கு புரியவில்லை ..
இவ்வளவு ஏன் தனக்கு எதிரே தன்னிடம் காதல் யாசகம் பெற காத்து இருந்தவளுக்கும் புரியவில்லை..ஆனால் அவள் விழிகள் அவனை கண்டதும் மலர்ந்தன..பல காதல் மொழிகள் அவ்விழிகள் பேசின..அதை அவனது விழிகளும் கண்டு கொண்டன..
அதே நேரம் அவள் கூறியதை அவனால் ஏற்று கொள்ள இயலவில்லை அவளை மேலும் கீழும் பார்த்து கொண்டிருக்க இலந்தரையரோ , "யார் மா நீ எங்கிருந்து வந்திருக்க??..இவன் என்னோட மருமகன் அதை விட இந்த நாட்டு மன்னராக போறவர்..இவரை பத்தி தவறாக பேசலாமா.. இவன் பெயர் கடம்பன் எழில் அல்ல"... என்று கூற,
"அதை அவரை சொல்ல சொல்லுங்க என் கண்ணை பார்த்து என்னை காதலிக்கலன்னு சொல்ல சொல்லுங்க "...என்றாள் ஆரபி..அவள் அவ்வாறு கூறியதும் கூட்டதுக்குள் சலசலப்பு ஏற்பட்டது..யார் இந்த பெண், எதற்காக வந்திருந்தாள் என மக்களிடம் சலசலப்பு எழ அதை எல்லாம் கவனிக்காமல் அவனை மட்டுமே பார்த்து கொண்டிருந்தாள் ஆரபி..
அவளது உறுதியை கண்டவன் விழிகள் நொடியில் ஆச்சரியத்தில் திளைத்து மேலே ஏதோ சொல்ல போன இலந்தரையரை தடுத்த கடம்பன் அவளை பார்த்து, " இங்கே வா"..என்பது போல தன்னுடைய ஒரு விரலை சுண்டி காட்ட அதோ பாவம் ஒரு நாய் குட்டி போல அவனிடம் ஓடினாள்..
இதோ ஒரு மூன்று இஞ்ச் இடைவெளியில் அவள் நிற்கிறாள்.."எழில்".. என்றழைக்க அந்த பெயர் அவனை மட்டுமல்ல அவனை சுற்றி உள்ள அனைவரையும் தாக்க நிலைமையை கையில் எடுத்து கொண்ட கடம்பன்," கீழே என்ன சொன்ன ??அதை இப்போ என் கண்ணை பார்த்து சொல்லு??"... என்க
அவளோ சிறு துளி பயமும் இன்றி அவனது கண்ணை பார்த்து, " இந்த கேள்வியே தவறு எழில் ..என் கண்கள் உனக்கு பதில் சொல்லலையா ஆனால் என் கண்கள் உணர்த்திட்டே இருக்கு எழில்..அது உனக்கு புரியலையா என் கண் எப்போதும் உன்னை தான் பார்க்கணும் உன்னை மட்டும் தான் பார்க்கணும் அதுக்காக மட்டும் தான் நான் இவ்வளவு தூரம் வந்து இருக்கேன்..இதோ உன் ஊர் மக்கள் இல்லை யார்கிட்டே வேணாலும் நான் சொல்ல தயாராக இருக்கேன்..இவ்வளவு தூரம் கடந்து உன்னை பார்க்க மட்டும் தான் வந்து இருக்கேன்..எனக்கு உன் கூட வாழனும் உன்கூட இருக்கணும் எழில் எல்லா எதிர்ப்புகளை கடந்து வந்து இருக்கேன் என்னோட காதலை மீட்டு எடுக்க வந்து இருக்கேன்..என் காதலை அதாவது நீ என்கிட்டேயே திரும்ப வந்திடு "...என்று கூறியவள் அவனது தோளில் மென்மையாக சாய சுற்றுப்புறம் யார் இருக்கிறார்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் அவள் கூற கடம்பனின் விழிகள் அவளை இன்னும் ஆழமாக ஆராய்ந்தது..அவள் மனதில் காதல்! காதல் ! காதல்! மட்டுமே..வேறு எதுவும் இல்லை..
அவள் தோளில் சாய்ந்ததும் அந்த கடம்பன் என்னும் இரும்பின் பாரம் சற்று கூடி போனதோ??
அவளின் பேச்சை கேட்டு கடம்பன் அமைதியாக நின்று கொண்டிருக்கலாம் ஆனால் இலந்தரையரோ, " என்ன சொல்ற மா சும்மா விழாவை கெடுக்க செய்யும் சதியா இது?? யார் அனுப்பினா உன்னை??".. என்று கத்த கடம்பனோ ஒரே பார்வை அவரை பார்த்து தான் பார்வையாலே அவரது வாயை அடைக்க,
மீயாழோ, " என்ன மா இது??".. என்று கேட்க அவரோ, " அவன் என்ன சொல்றான்னு பார்ப்போம் "..என்று கூற
கடம்பனின் பதிலை காண அனைவரும் ஆவலுடன் இருந்தனர்..அவனும் அனைவர் முன்னும் அவளை பார்த்து மெல்லிய புன்னகை உதிர்த்து, "உன்னோட காதலை தேடி வந்து இருக்கன்னா இதோ உன் காதலை எடுத்து கொள்"... என்று கூறியவன் அவன் அணிந்து இருந்த அரச குடும்பத்துக்கு பாரம்பரிய சங்கலியை அவளது சங்கு கழுத்தில் இதோ கூடியிருந்தவர்கள் சாட்சியாக அணிவித்தான்..
இதை அவள் கூட சற்றும் எதிர்பார்க்கவில்லை அவளுக்கே அதிர்ச்சி என்றால் அவனை சுற்றி இருந்த அனைவருக்கும் ஏகபோக அதிர்ச்சி..மக்களுக்கு எல்லாம் யார் அந்த எழில் இந்த பெண் யார் என பல கேள்விகள் குடைய,
இலந்தரையர் மற்றும் தாமரை விழியாளும் , "கடம்பா என்ன காரியம் இது".. என்று கேட்க அவர்களை பார்வையாலே அடக்கியவன் மக்களை பார்த்து இன்முகத்துடன் சிரித்தவன் தன் தோளில் சாய்ந்து கொண்டே தலையை மட்டும் தூக்கி அவன் செய்தது உண்மை தானா என்பது போல பார்த்த அவளை அப்படியே தன் கைகளால் வளைத்தவன் கூடி இருந்த மக்களை பார்த்து , "நம்ம நாட்டில் மன்னராக போற ஆள் முடி சூடும் போது நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கணும்..அதுக்கு மக்களாகிய உங்க மகிழ்ச்சிக்கு எந்த குறைவும் வர கூடாது..இது தான் இந்த நாட்டோட முக்கிய கொள்கை.. அதே போல யார் மனமும் வருத்தப்பட கூடாது...அதுனால உங்க முன்னாடி இவளை என்னோட மனைவியா ஏத்துக்கறேன்..அப்புறம் எங்க தனிப்பட்ட விஷயத்தை பொதுவா பேச எனக்கு விருப்பமில்லாததால் இந்த திருமணத்துக்கு சாட்சியாக இதோ நான் அரச குடும்ப சங்கலியை அணிவிச்சு இருக்கேன்..
இன்னிக்கு இருந்து அடுத்த மூன்றாம் எங்க திருமணம் உங்க அனைவரின் முன்னால் நடக்கும் அதுக்கும் இதே போல எல்லோரும் வந்து எங்களை வாழ்த்தனும் "...என்று கூற,
மேடையில் வீற்றிருந்த ஆரபி, கடம்பனை தவிர மீதம் உள்ளவர்கள் அனைவரும் அதிர மீயாழுக்கு மட்டும் கோபம் தலைக்கேறியது..
"என்ன மா அவனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா அவன் மட்டும் அரச குடும்பத்தில் பிறக்காத ஒருத்தியை கல்யாணம் பண்ணுவான் நான் மட்டும் கல்யாணம் பண்ண கூடாதா ?? "என்று மனதில் தோன்றியதை வாய் விட்டே தன் தாயிடம் கூற ,
தாமரையும் அதே சமயம் அதை தான் யோசித்து கொண்டிருந்தார்..ஆனால் அவரால் மகனை தடுக்க முடியாது..அவனை நான் தான் பெத்தேனா என்று கூட பலமுறை அவர் சிந்தித்து இருக்கிறார்..இருந்தாலும் குல கவுரவத்தை கெடுக்கும் விதத்தில் அவன் செய்த செயல் இருப்பதால், " கடம்பா "..என்க
அவரை பார்த்து, " என்ன அம்மா உங்க மருமகள் எப்படி இருக்கா எனக்கு ஏத்த மாதிரி இருக்காளா??".. என்க
தன்னை பார்த்து சந்தோஷத்தில் கண்ணில் நீர் திரையிட்டு பாவமாக பார்க்கும் பெண்ணை பார்த்து எதுவும் கூறாத நிலையில் அவர் தத்தளிக்க அதே போல அவருடைய மகன் இவள் தான் உங்கள் மருமகள் என சூசகமாக பதில் கூறி இருப்பதை புரிந்து கொண்டவர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை பிறகு மடமடவென காரியங்கள் நடந்தது..
இதோ கடம்பஞ்சோலையின் புதிய அதிபராக மக்கள் முன் பதவி ஏற்றான் கடம்பன்..அதை சந்தோசமாக மக்கள் காண அவளும் மிக மகிழ்ச்சியாக நிகழ்ச்சியை கண்டு களித்தவளுக்கு அப்போது தான் இவன் தனக்கு யாருமில்லை என்று கூறியது நினைவு வர ஆனால் இப்போது அவன் ஒரு நாட்டை ஆள போகிறவன் என்று கூறினால் அவளுக்கு எதை நம்புவது எதை நம்பாமல் விடுவது என்று அவளுக்கு புரியவில்லை..
இதோ விழா முடிந்தும் கூட அவனது அம்மாவோ அவனது சகோதரி யாரும் ஆரபியிடம் உரையாடாதது வேறு அவளுக்கு குழப்பத்தை விளைவித்தது..
