Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 4

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 4

சாலையில் கவனம் பதித்தவளுக்கு ஒரே ஆச்சர்யம் அதே சமயம் அதிர்ச்சியும் கூட வழி நெடுகிலும் அவளது எழிலின் புகைப்படத்தை ஒட்டி வைத்திருக்க காரோட்டியோ, " மேடம் எங்கே போகனும் ??"..என மூன்றாவது முறையாக கொஞ்சம் சத்தமாக அவளிடம் கேட்டான்..

அவளோ அதில் சுய உணர்வை பெற்றவள் , "அது அது என்று திணறி அங்கே போங்க".. என எழிலின் படம் இருக்கும் திசையை காட்ட கார் பறந்தது..

அவளுக்கு அவனது படத்தை கண்டதும் அவள் எதற்காக இங்கே வந்து இருக்கிறாள் என்பது கூட அவளுக்கு மறந்து போனது தான் எதற்காக தடுமாறுகிறோம் என்பது கூட அவளுக்கு புரியவில்லை..

அதும் அவனது பெயரோ எழில் அல்லவா இங்கே என்ன கடம்பன் என எங்கு பார்த்தாலும் இருக்கு என குழம்பி போனவள் அவனது போஸ்டருக்கு கீழே அடுத்த ஆட்சி புரிய வந்திருக்கும் புதிய மன்னருக்கு வாழ்த்துக்கள் என்ற பதிவை பார்க்க குழம்பி போனாள்..

ஏனெனில் இவள் கண்ட எழிலுக்கு வேலை கிடையாது அடுத்த வேளை சோற்றுக்கு கூட ஏதாவது செய்து தான் வாழ்பவன் அப்படியிருக்க இங்கே ஒரு நாட்டை ஆள்பவன் அவன் என்றால் அவளால் அதை எண்ணி அதிர்ச்சியடைய முடியாமல் இருக்க முடியவில்லை..

அவளோ குழம்பி இருக்க அதற்குள் கார் நிற்க அவளோ பேயறைந்தது போல முழித்தாள்..

"மேடம் இறங்கிக்கோங்க நீங்க சொன்ன இடம் வந்துடுச்சு"... என ஒரு விழா நடக்கும் இடத்தில் அவன் வாகனத்தை நிறுத்த

அவளோ அந்த டிரைவர் கூறியதை கருத்தில் கொள்ளாமல் காரில் இருந்து இறங்கியவள் எழிலின் புகைப்படத்தை பார்த்து கொண்டிருக்க அதோ தூரத்தில் ஆரவார முழக்கம் வேறு அவளது செவிப்பறையை கிழித்துக் கொண்டு சென்றது..

அங்கே மேடையிலோ மேடை ஏறியவனை பார்த்து அனைவரும் எழுந்து நிற்க தாமரை விழியாளின் முகத்தையே பார்த்து அவர் அருகில் தன் ஒற்றை புருவத்தை தூக்கி மீசையை நீவி விட்டு கொண்டே அவர் அருகில் செல்ல அவருக்கு அவரது கை கால்கள் விரைக்க துவங்க யாருக்கும் தெரியவில்லை என்றாலும் அவனுக்கு தெரியாதா அவனது தாயை பற்றி,

ஒரே எட்டில் அவர் அருகில் சென்ற கடம்பன் தன் அன்னையின் காலில் விழ அவரோ ஒரு எட்டு பின்னுக்கு வைத்தார் அதை கவனித்த அவன் அவரது காலை மெல்ல அழுத்தத்துடன் இழுத்து முன் புறமாக வைத்து காலை தொட்டு எழுந்தவனின் அவரை பார்த்து நக்கல் சிரிப்புடன் அவரை பார்க்க அவரது கைகளோ தன் மகனை ஆசீர்வாதம் செய்யாமல் பின்னால் இருப்பதை பார்த்து கொண்டே அவரை அவன் அணைக்க தாமரை விழியாளின் உடல் குலுங்கியதை அவன் உணர்ந்தான்..

மெல்ல அவரது காதில்," என்ன கடம்பஞ்சோலை ராணியாரே என்னை எல்லாம் ஆசிர்வாதம் பண்ண மாட்டிங்களா ..நீங்க பண்ணலனாலும் நான் பண்ண வைப்பேன் ரொம்ப முரண்டு பிடிச்சா அந்த காலையே வாரி விடவும் தயங்கவும் மாட்டேன்னு உங்களுக்கு நல்லா தெரியும்..எங்கே உங்க அருமை மகள் மீயாழ் வர முடியாதுன்னு சொன்னாலோ?? "...என மெல்ல யோசனை செய்பவன் போல தன் தாயின் தோளை பற்றி அவரது கண்களை பார்த்து வினவ ,

தூரத்தில் இருப்பவர்களுக்கும் இவ்வளவு ஏன் அருகில் இருப்பவர்களுக்கு கூட தாயும் மகனும் தங்களது அன்பை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தான் தோன்றும்..

ஆனால் தன் தாயின் உடல் தன் மகனின் அருகாமையை கண்டதும் பயத்தில் குலுங்குவதை கண்ட கடம்பன் பிறர் அறியாமல் அதை மறைத்து அவரை பார்த்து, " என்னை பத்தி தெரிந்தும் உன் பொண்ணு இதை செய்யறானா அதுக்கு அவளுக்கு தண்டனை கண்டிப்பா இருக்கு "..என்று கூற அவரோ அதிரிச்சியானார் தாமரை ..அதை கண்டவன் விழிகள் சிரித்து தன் தாய் கையில் பலத்துக்காக முறுக்கி பிடித்து இருந்த போனை நொடியில் கைப்பற்றியவன் மீயாழுக்கு அழைக்க அவளோ சலித்து கொண்டு யாரென்றே தெரியாமலே , "நான் வர முடியாதுன்னு சொன்னா உங்களுக்கு புரியாதா மா..அவன் செத்தா சொல்லுங்க வாய்க்கு அரிசி போட்டுட்டு போறேன் "..என்று கூற அதை கேட்டவன் பலமாக சிரிக்க,

அதை கேட்டவளோ அதிர அவனோ கண நேரத்தில் தன் முகத்தை பிறர் அறியாமல் மாற்றி பின் மெல்லிய சிரிப்பை உதிர்த்தவன் , "நான் சாகனுமா?? இல்லை வேற யாராவதா ?? "..அதை கேட்டதும் அவள் அதிர ,

" இன்னும் அஞ்சு நிமிஷத்தில் நீ இங்கே இருக்க இல்ல அஞ்சு நிமிஷத்துல யார் உயிர் போகும்னு எனக்கு தெரியாது ஆனால் அந்த வலியிலேயே உன் உயிர் போயிடும் அது மட்டும் எனக்கு தெரியும்".. என்று கடம்பன் கூற,

மறுமுனை மீயாழோ, " ஹே அப்படி எல்லாம் செஞ்சிடாத "...என்று அவள் கூறியது காற்றில் மொழிக்க, தன் அண்ணனின் குணம் அறிந்த அவள் தான் செய்த மடத்தனத்தை எண்ணி தலையில் அடித்து அடுத்த நொடி அவள் தயாராகி விழா நடக்கும் இடத்துக்கு விரைந்தாள்..

போனை அணைத்தவன் தன் தாய் பீதியுடன் இருப்பதை பார்த்து , "பெத்தா மட்டும் போதாது பொறுப்பா வளர்க்கலனா இப்படி தான் பெத்த பசங்க முன்னாடியே பேய் அறைஞ்ச மாதிரி நிற்க வேண்டி இருக்கும் "..என்று கூறி அவனுக்கு கொடுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தான்..

அதை கேட்டு தாமரை அதிர்ந்தாலும் வெளியே காட்டி கொள்ளாமல் சுற்றுப்புறம் கருதி தன் உணர்வை அடக்கி அவரது இருக்கையில் அமர்ந்தார்..

இலந்தரையரோ, " விழாவை ஆரம்பிக்கலாமா கடம்பா "..என்று இயல்பாக கேட்க,

அவனோ அவரை மதிக்காமல், "அஞ்சு நிமிஷம் கழிச்சு ஆரம்பிங்க "..என்று தனது போனை நோண்ட துவங்கி விட்டான்..

அவன் கூறிய படியே அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் விழா துவங்கப்பட்டது துவங்கிய ஓரிரு நிமிடத்திற்குள் மீயாழ் விழாவிற்கு வந்து சேர அவளை கண்டு நக்கல் சிரிப்பை தன் மீசைக்குள் மறைத்து வைத்தவன் முகத்தை கடுமையாக்கி ஒரு நொடி அவளை கண்டவன் பின் விழாவை கவனிக்கலானான்..அவளோ தன் தாயின் அருகில் நல்ல பிள்ளை போல அமர்ந்து கொண்டாள்..

ஆரபியோ கால் போன போக்கில் பிரம்மை பிடித்தவள் போல விழா நடக்கும் திசையை நோக்கி நடக்க, ஆனால் அவளின் மனதில் பல கேள்விகள் குடைந்து அவளை ஒரு வழியாக்கி இருந்தது ,

இதோ அவள் அறியாமலே ஒரு கையில் பெட்டியும் தோளில் ஒரு பேகும் மறு கையில் எழில் அவளுக்காக வாங்கி கொடுத்த பெட்டியும் இருக்க அதை பிடித்து கொண்டு நடந்து வந்தவள் இதோ விழா நடக்கும் இடத்தையும் அடைந்து விட்டாள்..

அதோ மேடையில் அவன் அவனே தான் அவளுடைய எழிலே தான்.. கடல் கடந்து வந்தவளின் மனதை இறைவன் கேட்டு விட்டானோ இதோ அவளின் கண் அவன் மிக கம்பீரமாக அமர்ந்து இருக்கிறான்..

கிட்டத்தட்ட லட்சக்கணக்கானோர் வீற்றிருக்கும் இடத்தில் அவன் ஒருவன் மட்டுமே ஆரபியின் கண்களுக்கு தெரிந்தான்..எவ்வளவு நாட்கள் அவனுக்காக காத்து இருந்து இருப்பாள் அந்த காத்து இருப்புக்கு கிடைத்த பரிசு அவன்..அவனை கண்ட நொடி கூட அவனை பற்றி அவள் குழம்பிய அனைத்தும் மறந்து போயின அவனது அருகாமைக்கு அவள் மனம் ஏங்கி அவனை பார்த்து கொண்டே ஆரபி நடக்க,

இலந்தரையரோ கடம்பனின் கண் அசைவில் அனுமதி பெற்று ஒலி பெருக்கியின் முன் நின்று ," கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாகிறது நமது நாட்டின் ஒரு அரசர் பதவி ஏற்று..என்ன தான் நம் கடம்பஞ்சோலை அழகிய தீவாக வளர்ந்தாலும் நம் நாட்டிற்கு என்று மன்னர் இருப்பது நம்மை எல்லாம் கவுரவிக்கும் என்று கூறினால் மிகையாகாது.. அந்த வழியில் கதம்ப ராஜாவின் வாரிசு கடம்பன் இன்று பதவி ஏற்கிறார்..அவர் பதவி ஏற்பதில் என்னை விட உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி என்பதை நானறிவேன்..இருந்தாலும் நம் நாட்டிற்கு என்று ஒரு முறை உண்டு அதன் படி கடம்பன் ஏற்பதில் யாருக்காவது குறை இருக்கா ?? சொல்லுங்க "...என்று இலந்தரையர் கேட்கவும் ,

ஆரபி மேடைக்கு அருகில் நுழையவும் சரியாக இருக்க அவளது செவிகளில் அவர் கூறியது தெளிவாக கேட்டாலும் அவளது கண்கள் ஏனோ கடம்பனின் மீதே நிலைத்து நிற்க,

இலந்தரையர் மக்களிடம் இருந்து பதில் வராததை கண்டு கடம்பனை பார்க்க கடம்பனோ எழுந்து நின்று அனைவருக்கும் இனிய முகத்துடன் வணக்கம் தெரிவித்து மைக்கை வாங்கியவன், "நான் இந்த நாட்டு இளவரசன்னு சொல்லி யாருக்காகவும் பயந்து நீங்க உங்க குறைகளை சொல்லாமல் இருக்க வேணாம் உங்களுக்கு ஏதாவது என் மூலமாக செய்யணும்னு இருந்தா சொல்லுங்க ..நான் இந்த பதவிக்கு எல்லாம் என்னைக்கும் ஆசைப்பட்டது இல்லை ஆனால் நம் நாட்டின் விதிமுறைப்படி எல்லாம் நடக்கணும்னு நீங்க எல்லோரும் ஆசைப்பட்டதால் மட்டுமே நான் இந்த பதவியை ஏற்க முடிவு செஞ்சு இருக்கேன்..யாருக்காவது என்னிடம் குறையோ இல்லை என் மூலமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றாலும் மிக தாராளமாக சொல்லலாம் "..என்று அவன் கூறி கொண்டு இருக்கும் போதே கூட்டத்தில் உள்ள அனைவரும் அமைதியாக இருக்க டெட்டி பொம்மையை பிடித்த ஆரபியின் கைகள் தூக்கப்பட்டன..

"எனக்கு இருக்கு ஒரு குறை இருக்கு எழில் ..அதுவும் உன்கிட்ட இருந்து உன்னால தான் செய்ய முடியும்..என் காதலை கேட்டு வந்து இருக்கேன்..அதை திருப்பி தருவாயா எழில் ".. என்று கடம்பனை பார்த்து கூட்டத்தினரை பொருட்படுத்தாமல் கேட்டாள் ஆரபி..

அவள் கூறியதை கேட்டதும் அருகில் உள்ளவர்கள் அதிர அதே அதிர்வு கடம்பனிடமிருந்தும் வெளிப்பட்டது..கடம்பன் மட்டுமல்ல அரச குடும்பத்திடம் இருந்தும் அதே அதிர்வு வெளிப்பட்டது..

மான்ஸ்டர் வருவான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top