Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 3

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 3

மான்ஸ்டரும் மான்விழியும்

கடம்பன் பெயருக்கு ஏற்றது போல அவன் இறுகிய பாறை தான் அவன்..அவனை யாராலும் உடைத்து பார்க்க முடியாது..அவன் உடையவும் மாட்டான்..தன் உணர்வுகளை மறைப்பதில் கில்லாடி அவனை விட வேறு யாரும் இருக்க முடியாது ...

இதோ இப்போது கூட வழி நெடுகிலும் பல வித சிந்தனைகள் ஓடி கொண்டிருந்தாலும் விழா நடக்கும் இடத்தை அடைந்ததும் அவன் முகம் சடுதியில் மாறி காரில் இருந்து இறங்கியதும் தன் முகத்தை மாற்றியவன் அங்கே ஆரவாரம் செய்து கொண்டிருந்த மக்களை பார்த்து கையசைத்தான்..

மக்களும் ஆர்ப்பரிக்க அவர்களை பார்த்து வணக்கம் தெரிவித்தவன் ஒரு சிலருக்கு கையும் கொடுத்தான்..மக்கள் முன்னிலையில் தான் நல்லவன் என்பதை உருவகப்படுத்தி கொள்கிறானோ??..

அவன் நாட்டு மக்களில் ஒரு சிலர் கூட , "அப்படியே உங்க அப்பாவை சிறு வயதில் பார்த்தது போல இருக்கு தம்பி "..என்று கூற , அவர்களிடம் எல்லாம் ஒரு சிறு புன்னகை தனது கம்பீரம் கடுகளவும் கசிந்து விட கூடாதது போல தன் இதழை பிரித்தவன் கம்பீர நடையுடன் மேடையை நோக்கி நடந்தான்..

அதற்குள் இலந்தரையர் தன் வயதுக்கும் மீறி மேடையை விட்டு கீழறங்கி ஓடி வர தாமரை விழியாளோ," எல்லாம் கஷ்டம்".. என்பது போல முகத்தை திருப்பியவர் ஏதோ ஒரு நினைவு வர வேகமாக தன் மகள் மீயாழுக்கு அழைத்தார்..

தன் அண்ணனை போலவே பலமுறை மீயாழும் தன் தாயை காக்க வைத்து கொண்டிருக்க, " மகன் வடக்கே என்றால் மகள் தெற்கே ஆனால் குடும்ப குணத்துக்கு மட்டும் ஒரு குறைவும் இல்லை "...என்று வாயால் மெலிதாக அவர் முணுமுணுத்து கொண்டிருக்கும் போதே மீயாழ் தன் தாயை அழைத்தாள்..

அவளது போனை எடுத்த அவரோ, "எங்கே இருக்க மியா??".. என்று கேட்க,

"ஜிம்ல ஒர்க் அவுட் பண்ணிட்டு இருக்கேன் ஏன் இந்த வீட்டுல எல்லா இடத்திலும் காமிரா ஆன்ல தானே இருக்கு அப்புறம் எதுக்கு இந்த சில்லி கேள்வி கேட்டு எனக்கு கால் பண்றீங்க ??? "...என்று தன் முகத்தில் வழியும் வியர்வையை துடைத்து கொண்டே காய்ந்தாள் மியா..

மகளின் பேச்சை கேட்டு ஆத்திரம் எழுந்தாலும் அவள் எதற்காக இப்படி பேசுகிறாள் என்பதை அறிந்தும், " இன்னிக்கு கடம்பனுக்கு முடி சூட்டு விழா "...என்று மகளுக்கு அந்த விஷயம் தெரிந்தே அவளுக்கு அவர் நியாபகம் படுத்த

"அதுக்கு நான் என்ன செய்யணும் ?? அவன் காலில் வந்து விழனுமா ??".. என்று அவள் சூடாக கேட்க

தாமரையோ , " மியா போதும் உன்னோட அதிங்கபிரசங்கிதனமான பேச்சை நிறுத்து அதை கேட்க எனக்கு துளியும் விருப்பமில்லை ..என்ன இருந்தாலும் அவன் உன் அண்ணன்.. நம்ம குடும்பத்துக்கு ஒரு மரியாதை இருக்கு மரியாதை இல்லாமல் பிறக்க நீ ஒன்னும் சாதாரணமான குடும்பத்தை சேர்ந்தவள் கிடையாது ..குடும்ப மானத்தை காற்றில் பறக்க வைக்கிறது தான் உன் எண்ணமா இருந்தா அது கடம்பன் முன்னாடி நடக்காது அது உன் நினைவு இருக்கட்டும் ".. என்று மெல்லிய குரலில் என்றாலும் கடினமான குரலில் அவர் கூற

அதை கேட்டதும், "போதும் உங்க குடும்ப பெருமை .. ரொம்ப நல்லா வாழ்ந்துட்டு இருக்கிற மாதிரி பேசாதீங்க...வீட்டுக்குள்ளே சிறை வாழ்க்கை தானே வாழ்ந்துட்டு இருக்கீங்க ..அதுவும் உங்க மகனால் வெளில உங்கனால சொல்ல முடியுமா?? ஒரு அரக்கனை எப்படி தான் பெத்திங்களோ ?? "..என்று அவள் சலித்து கொண்டு கூற

"போதும் நிறுத்து மியா எனக்கு எல்லோரும் என் பிள்ளைகள் தான் அதில் எந்த மறுப்பும் இல்லை.. யாரும் அரக்கனை வயித்துக்குள்ள வெச்சு பெத்துக்கறது இல்லை..என்ன பேச்சு இது ?? இப்படி தான் நான் உன்னை வளர்த்தேனா?? இந்த மாதிரி ஒழுங்கீனமா இருக்கத்தான் நான் உனக்கு சொல்லி கொடுத்தோமா..நீ என்ன சொன்னாலும் அவன் இந்த நாட்டோட ராஜா அவனுக்கு நீ மரியாதை கொடுத்து தான் ஆகனும்"... என்று தாமரை கூற,

கடம்பன் மீதுள்ள கோபத்தை தான் ஏன் தன் தாயிடம் காட்டுகிறோம் என்று நினைத்த மீயாழ், " இப்போ உனக்கு என்ன வேணும் எதுக்கு இப்போ என்னை அழைச்சிங்க??"... என்று கேட்க

அவரோ, " நீ விழாவுக்கு வரியா இல்லையா ??".. என்க

"இல்லை..ஒரு கெட்டவன் இந்த நாட்டை ஆள போறதை என்னால பார்க்க முடியாது அதனால நான் வரல"... என்றாள் பட்டென்று யோசிக்க கூட இல்லை..

அதை கேட்டதும் தாமரை விழியாளோ சலித்து கொண்டு , "சரி உன் இஷ்டம்".. என்று கூறி வைக்கவும் கடம்பன் மேடையை நோக்கி வரவும் சரியாக இருக்க, தாமரை விழியாளோ ஒன்றும் அறியாதவர் போல முகத்தை வைத்து கொண்டார்..

வேங்கை போன்ற இருக்கும் அவனது விழிகள் தன் நாட்டு மக்களை பார்த்து கையசைத்தவன் மில்லி மீட்டர் அளவுக்கு இதழ்களை பிரித்து சிரித்து கொண்டே மேடையில் வீற்றிருக்கும் நபர்களை பார்வையிட்டு கொண்டே மேடையை நோக்கவும்,

தன் தாய் தன்னை கண்டதும் அவர் உள்ளே எழும் பதட்டத்தை மறைக்க அரும்பாடு படுவதை கண்டவன் புயல் போல மேடைக்கு சென்றான்..அவர் எதற்காக பதட்டப்படுகிறார் என்பதையும் அவன் கண்டும் விட்டான்..அதை கண்டவனுக்கு நக்கல் கலந்த ஒரு புன்னகை வெளியே வந்தது..

அந்த நேரம் பார்த்து விமானத்தில் இருந்து தரை இறங்கிய ஆரபி தன் உடமைகளை எல்லாம் எடுத்து கொண்டு வெளியே வர அத்தீவின் எழிலில் மயங்கி நின்றாள் ஆரபி..

வானில் இருந்து தரை இறங்கி கொண்டிருக்கும் போதே அவள் அத்தீவின் எழிலில் சிந்தை மயங்கி தான் இருந்தாள் ஆனால் கூடவே ஒரு பதற்றமும் ஏனோ இனம் புரியாத படபடப்பும் அவளுள்ளே எழுந்தது என்னவோ உண்மை தான்..

என்ன தான் எழில் சூழ்ந்து இருந்தாலும் அழகு அதிகம் உள்ள இடம் தான் ஆபத்தும் நிறைந்த இடமாமே அது அவள் நினைவில் வந்து வாட்ட , "என்ன இருந்தாலும் எப்படி இருந்தாலும் நான் என் எழிலிடம் தானே சேர போகிறேன் ".. என அகம் மகிழ்ந்து போனவள் அவனை கண்ட பத்திரிக்கையை கையில் எடுத்து பார்த்தாள்..ஆம் அவன் வரேன் காத்திரு என்று கூறி விட்டு சென்றபின் அவனை இதோ இந்த பேப்பரில் தான் பார்க்கிறாள்..அதை கண்டது முதல் அவளது கை கால்கள் இருப்பு கொள்ளவில்லை..

அதில் கருப்பு நிற கோட் சூட்டில் ஆண்மைக்கே இலக்கணம் போல நின்று கொண்டிருந்தான்.. ஏதோ ஒரு விழா போலும் பலர் அந்த விழாவில் கூடியிருக்கும் அதில் தான் அவனது முகமும் அவளுக்கு பளிச் என தெரிய அவனை கண்டதும் அவள் அடைந்த இன்பத்தை இதோ இந்த நொடி அவள் உணர்ந்து கொண்டிருக்க,

" மை டியர் எழில் ஏதோ ஒரு காரணமாக தான் நீங்க திரும்பி வரலன்னு மட்டும் எனக்கு தெரியும்..அது எதுவானாலும் பரவாயில்லை உங்களுக்கு ஸ்வீட் ரீவெஞ்ச் கொடுக்க போறேன் பாருங்க..ஒரு போன் இல்லை ஒரு மெசேஜ் இல்லை ...எங்கே இருக்கீங்கன்னு தெரியல ஆனால் என்னை உங்க உயிருக்கு மேல காதலிக்கறீங்கன்னு மட்டும் எனக்கு தெரியும்..எனக்கான சப்ரைஸ் காத்திரு தானே சொல்லிட்டு போனீங்க எழில் இதோ நான் உங்களுக்கு சப்ரைஸ் பண்ண வந்துட்டேன் "..என்று அவள் அவன் தன் முன் இருப்பது போல உரையாடி கொண்டிருந்தவள் வெளியே வந்து பார்க்க ஏர்போர்ட்டை சுற்றிலும் நீர் சூழ்ந்து இருக்க ஏர்போர்ட்டில் இருந்து நேராக ஒரு தார் சாலையை கண்டாள்..

அந்த சாலையின் முடிவு நேராக கடலுக்கு அருகே உள்ள படகுகள் பகுதிக்கு அந்த சாலை செல்ல அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் எல்லோரும் அந்த பகுதியை நோக்கி செல்ல அவளும் தன் உடமைகளை எடுத்து கொண்டு அங்கே சென்று ஒரு விசைப்படகில் ஏறி அமர்ந்து கொண்டாள்..

அந்த விசை படகோ யாரிடமும் எங்கே செல்ல வேண்டும் என்று கூட கேளாமல் நீருக்குள் பறக்க அவளோ தன் விழிகளை ஆச்சரியமாக விரித்தாள்..

அவள் முதன் முதலாக வானத்தில் பறந்து இதோ தண்ணீரில் மிதந்து கொண்டிருக்க, " எழில் உங்களை பார்க்க நான் எப்படி எல்லாம் வரேன் பாருங்க " ..என்று மென்மையாக சிரித்தவள் இனிமையாக இயற்கையின் விசித்திரத்தை எண்ணி பிரயாணம் செய்தவள் ஒரு வழியாக தீவிற்குள் வர உண்மையில் ஏர்போர்ட் செல்ல வேண்டுமெனில் இந்த விசை படகில் பயணம் செய்தால் மட்டுமே பயணம் செய்ய இயலும் என்பதை உணர்ந்து கொண்டாள்..

மேலும் படகு கரையில் வந்து நின்றதும் மிக பெரிய கட்டிடங்களும், சாலைகளும் என நம் நாட்டை போலவே காட்சி அளிக்க ஆனால் ஊரே விழா கோலம் பூண்டிருக்க அவளுக்கு என்ன செய்தி என புரியாமல் அவளது பெட்டிகளை எல்லாம் எடுத்து கொண்டு படகில் இருந்து இறங்கவும் வழி நிறைய பல டேக்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்க அதில் ஒன்றில் ஏறி அமர்ந்தவள் சாலையில் கவனம் பதித்தாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top