மான்ஸ்டர் 2
அத்தியாயம் : 2
கடம்பஞ்சோலை :
கடம்பஞ்சோலை என்னும் அழகிய இடம்..பெயருக்கு ஏற்றது போல ஒரு அழகிய இடமது..இந்த இடம் தீவா இல்லை நாடா ?? என்ற கேள்வி கேட்டால் அழகிய தீவு என்றே கூற வேண்டும்..ஆனால் உலக வரைப்படத்திலோ அது ஒரு சிறு நாடாகும்...
நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்டு நீலகடல் சுற்றிலும் அரணாய் இருக்க ஆழ் கடலின் நடுவில் கம்பீரமாக வீற்றிருக்கும் பச்சை மாயோனின் பெயர் தான் கடம்பங்சோலை ...
அழகிய தீவு உலகத்தில் இது போன்ற அழகிய இடம் இருக்குமா என்பது போல அழகை நிறைந்த ஒரு இடமது..எங்கு பார்க்கினும் பச்சை கம்பளம் நீல கடலில் மிதந்து கொண்டிருப்பது போல மிதந்து கொண்டிருக்கும் ஒரு சிறிய தீவாகும்..
அத்தீவில் வாழும் மனிதர்களுக்கு பணத்திற்கு செல்வச் செழிப்பிற்கும் குறை ஒன்றும் இல்லை அவர்கள் அவர்களின் நாட்டை விட்டு வேறு எங்கும் செல்ல வேண்டிய எந்த தேவையும் இதுவரை ஏற்பட்டதில்லை ..
மக்கள் யாவருக்கும் வேண்டிய அனைத்து சௌகரியங்களையும் அந்நாட்டு அரச குடும்பம் செய்து கொடுத்துள்ளது.. அந்நாட்டை உருவாக்கியவர்கள் தங்களை ஆட்சியாளர்களாக உருவகப்படுத்தி கொள்ள அதன் படியே மன்னர் ஆட்சி தான் இன்று வரை தொடர்கிறது..
அந்நாட்டு மன்னர்களுக்கு மக்களின் சந்தோஷமே மிகப் பிரதானமாக இருக்க இன்றைய தினம் மேலும் மக்களின் சந்தோஷத்தை அலங்கரிக்க போகிறது என்று கூறினால் மிகையாகாது..
ஆம் இன்று கடம்பஞ்சோலையின் உற்சவ நாள் அந்நாட்டின் அடுத்த வாரிசான கடம்பனின் பதிவு ஏற்பு விழா இன்று தான் நடைபெற இருக்கிறது..
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் கடம்பனின் தந்தை மன்னர் கதம்ப ராஜா ஒரு அகோர விபத்தில் மரணமடைந்து இருக்க , மன்னர் பதவி காலியாகி இருந்தது.. கடம்பனின் தாய் மாமன் இலந்தரையர் மற்றும் தாய் தாமரை விழியாள் இவர்களின் மேற்பார்வையில் எந்த விதமான முறைக்கேடும் வராமல் அவர்கள் ஆட்சி புரிந்த வர, இதோ இன்று தான் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு பிறகு இன்று தான் முறையாக மன்னர் ஆட்சி புரிய கடம்பனின் பதவி ஏற்பு விழா நடந்து கொண்டிருக்கிறது..
என்ன தான் தீவாக இருந்தாலும் இத்தீவு கிட்டத்தட்ட நம் இந்திய நாட்டுக்கு அருகில் அத்தீவு உள்ளதால் இந்திய வாசமே அதில் வீசும்..இதில் வாழும் மனிதர்களும் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்கே புலம் பெயர்ந்து இருக்க அதிலும் தமிழை பிரதான மொழியாக பேசும் அத்தீவில் உள்ள அனைவரின் பெயர்களும் சங்க காலத்தை ஒத்து இருக்கும்..காலத்துக்கு ஏற்ப பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஒரு சில விஷயங்கள் இன்னும் பழமை மாறாமல் தான் உள்ளன..
அது தான் இந்த பதவியேற்பு விழா.. ஆம் இந்த பதவியேற்பு விழா ஒன்றும் மாட மாளிகையில் நடைபெற போவதில்லை ..அத்தீவில் வாழும் அனைத்து மக்களின் முன்னே அவர்களின் ஒப்புதலின் பேரிலேயே நடக்கும்... ஆம் அவர்களில் யாருக்கேனும் இந்த பதவியேற்பு விழாவில் மறுப்பு இருந்தால் அவர்களின் குறை நிவர்த்தி செய்த பின்னே பதவியேற்பு விழா நடக்கும்..குறை நிறைவேற்றப்படாமல் அரசர் பதிவு ஏற்க முடியாது..
அப்படியிருக்க அத்தீவே விழா கோலம் பூண்டு தீவின் நடுவே அமைக்கப்பெற்ற ஒரு கூடத்தில் அனைத்து மக்களும் குழுமி இருக்க இன்னும் மன்னராக போகும் கடம்பனை காணவில்லை.. அவனுக்காக தான் அனைவரும் காத்திருக்க அவனது மாமா விழா நடக்கும் இடத்தில் இருந்து அவனது தொலைபேசி எண்ணுக்கு அவனை அழைத்தார்..
அவனுக்கு இதுபோன்ற அழைப்புகள் பிடிக்காது என்று தெரிந்தும் அழைத்தார் இலந்தரையர்...
அவர் கிட்டத்தட்ட பத்து முறை அழைத்து பதினோராவது முறையாக போனை கட் செய்தான் கடம்பன் ..அவனது தாய் மாமனோ அவன் போனை கட் செய்வதை உணர்ந்து, " ஓகே அவன் பார்த்துட்டான் இனி வந்திடுவான் " ..என எண்ணி கொண்டிருக்க,
தாமரை விழியாளோ தன் அண்ணனே என்றாலும் தன் மகனின் மனதில் நஞ்சை விதைத்து வைத்து இருக்கும் அண்ணன் மீது கோபம் மனதுக்குள் இருந்தாலும் வெளியே அதை காட்டாமல், " அண்ணா கடம்பன் எங்கே ?? ".. என்று கேட்க,
"அவன் வந்துருவான் மா ..போன் பார்த்துட்டான் இப்போ தான் கட் பண்ணினான் "...என்று பெருமையாக கூற
"அவன் பேசாத போதே இந்த கவுரவம்..பேசிட்டா இன்னும் நஞ்சை விதைச்சு இருப்பார் ".. என்று மனதுக்குள் நினைத்த தாமரை அவரை ஒரு கேவலமாக ஒரு பார்வை பார்க்க அவரோ காணாதது போல அமர்ந்து விட்டார்..
இத்தனைக்கும் காரணமான அவனோ தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து கொண்டிருந்தான் அந்த ஹல்க்..
அவன் கையிலோ ஓரு சிறு பாம்பு விளையாடி கொண்டிருந்தது..அந்த பாம்பின் விஷத்தை விட கொடியவன் தான் இவன்..அந்த பாம்பின் முகம் போல அவன் முகமும் ஆக்ரோஷமாக தான் இருந்தது..
கிட்டத்தட்ட ஆறே கால் அடியில் ஆகாய அசுரன் போல தன் நீண்ட கைகளால் அந்த சிறு பாம்பை அவனது தேகத்தில் ஓட விட்டு விளையாடி கொண்டிருந்தான்..
அந்த பாம்போ அவனது சட்டையில்லா தேகத்தில் உலா வர அந்த பாம்பு அப்படியே அவனது முகத்திற்கு வர அவனது தாடியில் ஊர்ந்து கொண்டே அவனது தாடியை கவ்வி பிடிக்க விஷமுள்ள பாம்பு என்ற சிறு துளி பயமும் இன்றி அவன் தன்னையே கண்ணாடியில் வெறித்து கொண்டிருந்தான்..
அவனுள்ளே பல கேள்விகள் ?? ..விடை தெரிந்தும் அதை ஏற்க மறுக்கும் அவனது மனம்??..பழி வெறி ஊறிய அவனது நயனங்கள் பழி வாங்க துடித்து கொண்டிருக்க இதோ அந்த பாம்பை போல தன்னுள்ளே கொட்டி கிடக்கும் விஷத்தை கட்க தயாராகி இருக்கிறான்..
அவனுள்ளே நிழல் படம் போல பல காட்சிகள் ஓடி கொண்டிருக்க அதை ஏற்க முடியாமல் அவனது முகம் ருத்ர மூர்த்தியாக சிவந்து இருந்தது ..அதை மேலும் சிவப்பாக்க அவனது மாமனின் அழைப்பு வந்து அவனை தடுக்க , அதே நேரம் அவன் தாடியில் ஊர்ந்து கொண்டிருந்த பாம்பு தனது நாவால் அவனது தாடியை குத்த துவங்கியதில் சுய உணர்வு பெற்றவன், " உன்னை என் மேல விட்டா எனக்கே உன் விஷத்தை காட்டுறியா?? உன்னை விட மோசமனவன் நான்..நீ என்னை கடிக்க தான் முயற்சி பண்ணுவ ஆனால் நான்".. என கூறி நொடியில் அந்த பாம்பின் கழுத்தை பிடித்து தனது இரு கைகளலாளேயே அதனை இரு துண்டுகளாக்கினான்...
அதுவோ துடி துடித்து சாக அதை எந்த வித சலனமும் இல்லாமல் கண்டவன் அவனது பிரம்மாண்ட அறையில் இருந்த உடை மாற்றும் அறைக்கு சென்று அவனுக்கு என்று பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட உடையை எடுத்து அணிந்தவன் மீண்டும் முக்கண்ணாடி அருகே வந்து தனது முறுக்கு மீசையை மேலும் நீவி விட்டு கொண்டான்..
அவன் கண் எதிரே தான் அந்த பாம்பு இன்னும் துடித்து கொண்டிருந்தது அதை கண்டவன் இது போல என் வன்மத்துக்கு காரணமானவர்களை இரு துண்டுகள் ஆக்காமல் விட மாட்டேன் என சூளுரைத்தவன் தன்னை போல அடங்காமல் இருக்கும் முடியை படிய ஜெல் வைத்து வாரினான்...
மீண்டும் தன் மீசையை முறுக்கி விட்டு அவன் வெளியே வர அவன் பின்னே இரண்டு பேர் அவன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓடி வந்தவர்கள் , "சார் அங்கே எல்லோரும் காத்து இருக்காங்க"...
அவன் கூறியதை கேட்ட கடம்பன், " காத்து இருக்கட்டும்"... என்று முறைப்புடன் பதில் கூறினான்..அவனது பதிலில் , "நீ எல்லாம் என்னை கேள்வி கேக்கிறாயா??".. என்ற தொணி தொக்கி நின்றது..
அதை கண்ட அவனது பணியாளர்களுக்கு அதற்கு மேல் அங்கே அவனிடம் பேச முடியாது பேசவும் கூடாது..பேசினால் அவன் அந்த நொடியில் என்ன நெனைக்கிறானோ அந்த தண்டனை கிடைக்கும்..அதனால் அவர்கள் வாயை அடைத்து கொள்ள ,
அவன் வெளியே செல்லும் போது பணியாளர்கள் மீண்டும் ஒரு பாட்டிலில் சிறு பாம்புகளை அடைத்து வைத்திருக்கும் கண்ணாடி பாட்டிலை கொண்டு செல்வதை பார்த்து கொண்டே பதவியேற்பு விழாவிற்கு சென்றான்...
அவன் மனம் அந்த பாட்டிலில் அடைக்கப்பட்ட பாம்பை பார்த்ததும் மீண்டும் ஏதோ ஒரு நினைவு ஆட்கொள்ள காரில் ஏறி அமர்ந்தும் அவனது மனம் அமைதி இல்லாமல் உலைகலன் போல கொதித்தது யாரை கடித்து குதறலாம் என துடித்து கொண்டிருந்தான்..அமைதியாக இருக்க வேண்டிய தருணமிது ஆனால் அவனால் இயலவில்லை..மகிழ்ச்சியடைய வேண்டிய தினமது ஆனால் அவனால் இயலவில்லை..அவனின் கோபம் அவனை தடுக்கிறது..அவன் குத்தி குதற நினைக்கும் ஆள் விமானத்தில் பயணம் அல்லவா செய்து கொண்டிருக்கிறாள் ..அது தானோ அவனது மனம் கொதிக்கிறது ???? இது ஒன்றும் அறியாமல் ஒருத்தி அழகாக தன் காதலனை எண்ணி அவன் அவளுக்கு காதலிக்கும் போது வாங்கி தந்த டெட்டி பொம்மையை கட்டி பிடித்து கொண்டு மனதில் அவனை கட்டி அணைத்து இருப்பது போல உருவகப்படுத்தி கொண்டு பிரயாணம் செய்து கொண்டிருந்தாள்..
மான்ஸ்டர் வருவான்..
