மான்ஸ்டர் 1
அத்தியாயம் : 1
ஓம் தன் மகேசாய வித்மஹே
வாக்விசுத்தாய தீமஹி
தந்நோ சிவ ப்ரசோதயாத்
ஓம் மஹா தேவாய வித்மஹே
ருத்ர மூர்த்யே தீமஹி
தந்நோ ப்ரசோதயாத்
ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ ஈச ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ ருத்ர ப்ரசோதயாத்
ஓம் சதாசிவாய வித்மஹே
ஜடாதராய தீமஹி
தந்நோ ருத்ர ப்ரசோதயாத்
ஓம் சிவோத்தமாய வித்மஹே
மஹோத்தமாய தீமஹி
தந்நோ சிவ ப்ரசோதயாத்
ஓம் பசுபதயே வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ பசுபதி ப்ரசோதயாத
என்ற ஸ்லோகத்தை ஒன்றிற்கு இரு முறை துதித்து கொண்டிருந்தாள் ஆரபி...அவளுள்ளே இலேசான படபடப்பு போலும்..எப்போதும் இறைவனிடம் நின்றால் அமைதி அடையும் அவள் மனம் இன்றோ சஞ்சலப்படுகிறது..
அவளது தோழன் ரிஷி அவள் செல்ல இருக்கும் இடத்தை பற்றி கூறியதாலா??.. இல்லை அங்கே நீ செல்ல வேண்டாம் என்று மறுத்ததாலா??.."அப்படி என்ன பெரிய இடமது ??..பெரிய ராட்சதர்கள் வாழும் இடமா??".. எதற்காக என்னை செல்ல வேணாம் என்று கூறினான் என்ற கேள்வி அவளை குடைந்தாலும் அவளவனை காண அவள் சென்றே ஆக வேண்டும் என்ற உந்துதல் அவளுக்கு உண்டு..
அதற்குள் அவளை அழைக்க வந்த அவளது நண்பன் ரிஷி , "என்ன தயாராகிட்டியா?? எட்டு மணிக்கு உனக்கு பிலைட் இப்போ கிளம்பினா தான் ஏர்போர்ட் போக சரியா இருக்கும் ".. என்று அவளது முகத்தை பார்க்காமலே கூற,
ஆரபியோ அவனது கையை பிடித்து, " ரிஷி ப்ளீஸ் லிசன் டூ மீ.. நான்.." என்று அவள் கூற வரும் போதே அவளது கையை தட்டி விட்டு அவளது கையை உதறி தள்ளியவன்,
" என்ன லிசன் பண்ண சொல்ற ஆரு ??.. ஒருத்தனை காதலிச்சாலாம் ..அவனை பார்க்காமல் அவளால இருக்க முடியாதாம்..அவன் அங்கே இருக்கானாம் ..அவனை பார்க்க அங்கே போறாலாம் தனியா ?? ".. என்று அவன் முறைத்து கூற,
"இதுக்கு பேர் காதல் ரிஷி அது உனக்கு தெரியாது..உனக்கும் புரியவும் செய்யாது எப்போவும் சிடுசிடுன்னு இருக்கிற உனக்கு எப்படி இதெல்லாம் புரியும்??".. என்று அவள் எதிர் கேள்வி கேட்க,
" என்ன இதுக்கு பேர் காதலா?? முட்டாள்த்தனம்ன்னு தான் நான் சொல்லுவேன்..கிட்டத்தட்ட ஒரு மாதம் பழகின ஒருத்தனை தேடி அங்கே போறது எல்லாம் ஆக சிறந்த முட்டாள்தனம் தான்..அதும் உன்னை மாதிரி படிச்ச பொண்ணுங்க செய்யும் போது செம்ம காண்ட் ஆகுது " என்று ரிஷி கூறவும், அவளோ முறைத்தாள்..
"எதுக்கு முறைக்கிற உண்மையை தான் நான் சொன்னேன் உன் மேல உண்மையான காதல் வெச்சிருந்தா இப்படி உன்னை இப்படி அம்போன்னு விட்டுவிட்டு போவானா..அதுவும் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆக போகுது ..உனக்கு என்ன பைத்தியமா??".. என்று கேட்க
அவளோ , "அது தான் நான் போறேனே அவரை பார்க்க அது போதாதா ?? "...என்று அவன் மீது வழியும் அபரிமிதமான காதலை வெளிப்படுத்தி அவன் கூற,
"என்ன கருமமோ இனி என்கிட்ட இந்த காதல் கத்தரிக்காய் பத்தி எல்லாம் பேசாதே கேட்கும் போதே எரிச்சலா இருக்கு ".. என்று கூற,
அவளோ வேகமாக தயாராகி அவளது பெட்டிகளை எடுத்து கொண்டு வெளியே வர தன் தோழி பெட்டிகளை தூக்கி கொண்டு வருவதை கண்டவன் அவளிடம் இருந்து பெட்டியை வாங்கி காருக்குள் வைத்தான் ரிஷி..அதற்குள் லாவண்யா ஓடி வந்து , "சாரி லேட் ஆகிடுச்சா "...என அரக்க பறக்க காருக்குள் ஏறி அமர,
அவளை மேலும் கீழும் பார்த்தவன், " எல்லாம் எனக்குன்னு வந்து சேருதுங்க "..என்று தலையில் அடித்த படி வண்டியை ரிஷி எடுக்க, லாவண்யா கண்களாலேயே ஆரபியிடம், " என்ன பிரச்சனை??"... என்று கேட்க, அவளோ, " கோபம் என் மேல".. என்பது கண்களை உருட்டி காட்ட இவர்களின் பேச்சை எல்லாம் கண்ணாடி வழியே கண்டவன்,
" இப்போவே இப்படி பேசிக்கோ அந்த காட்டுக்குள்ள போயிட்டா போன் எல்லாம் ஒர்க் ஆகுமோ ஆகாதோ யார் கண்டா இந்த மேடம் தான் சொன்னா கேட்க மாட்டாங்களே??".. ..என்று மீண்டும் அவள் மீது கோபம் கொள்ள, ஆரபியோ மௌனியானாள்..
ஆனால் லாவண்யாவோ , " ரிஷி அவளுக்கு அவ காதலனை பார்க்கனும்ன்னு ஆசை போறா அது அவளோட வாழ்க்கை அதை நீ ஏன் தடுக்கிற?? ".. என்று தன் தோழிக்கு சப்போர்ட் செய்ய ரிஷியோ ஒரு முறை முறைத்து சாலையில் கவனமானான்..
என்ன தான் இவர்கள் இப்படி எல்லாம் சொன்னாலும் தன் தோழியின் இந்த போக்கு அவனுக்கு துளியும் விருப்பமில்லை..அவன் மனம் வேறு அவளுக்கு பிரச்சனை வர போகிறது ஏதோ ஆபத்தில் மாட்டி கொள்ள போகிறாள் என கூறிக்கொண்டே இருக்க அதிலும் அவன் கண்ட கனவு வேறு யாரோ ஒருவன் கிட்டத்தட்ட மனிதன் உருவத்தில் இருக்கும் மிருகம் அவளை கொடுமையிலும் கொடுமை செய்வது போன்ற காட்சிகள் அவன் கண்டது கனவே என்றாலும் அது வேறு அவனை வாட்டிக் கொண்டே இருந்தது..
அதை தன் தோழியிடம் கூறியது போது அவளோ சிரித்து , "அதெப்படி ரிஷி மனுஷ ரூபத்தில் மிருகமா ?? நீ இங்கிலிஷ் படம் பார்த்து கேட்டு போய்ட்ட "..என்று கூறி சிரிக்க ,
அவனோ, " ஆரபி நான் சொல்றதை கேளு..இங்கே இருந்தே ஏதாவது செய்யலாம்" ..என்று அவள் மறுத்தான் ..அவளோ , " இல்லை ரிஷி எனக்கு போயே ஆகனும் பாரு நான் நெனைச்சது போலவே நான் வேலை செய்யற கம்பெனி மூலம் எனக்கு அங்கே வேலை கிடைச்சி இருக்கு...இதெல்லாம் பார்க்கும் போது என்னவோ எனக்கு நல்லது நடக்க போகுதுன்னு தான் தோணுது.. " என்று ஆரபி தன் நண்பனை சமாதானம் செய்ய ரிஷியோ அவளது சமாதானத்தில் அடங்க மறுத்தான்..
ஆனால் ரிஷியின் மனம் கூறி கொண்டிருப்பது போலத்தான் நடக்க போகிறது என்று இந்நேரம் ஆரபி அறியவில்லை..அவள் மாட்டி வதைபட போவது மனித உருவில் உள்ள மிருகமா இல்லை மிருக ரூபத்தில் இருக்கும் மனிதனா?? இல்லை இந்த இரண்டு வகையிலும் சேராத ஒரு அரக்கனிடம் தான் வசமாக தன் தோழி மாட்ட போகிறாள் என்று அவர்கள் அனைவரும் இந்நேரம் அறியவில்லை..
ஆரபி ..வயது 22 ..கறந்த பாலை கரைத்து குடித்தவள் போன்ற நிறத்தை உடையவள்..அழகானவள், அன்பானவள்..நல்ல மெத்த படிப்பு படித்தவளும் கூட..
தனக்கு என்ன நடந்தாலும் தான் நேசித்தவர்களுக்கு நல்லதே நடக்க வேண்டும் என்ற கருத்தை கொண்டவள்.. தாய் , தந்தை என யாருமில்லா ஒருவள் தான் ஆரபி..தந்தை என்ற கதாபாத்திரம் அவளுக்கு நினைவு வருவதற்கு முன்பே இல்லை ..தாய் அவள் வளர்ந்து சொந்தக்காலில் நிற்கிறாள் என மகிழ்ச்சி அடையும் முன் மரணத்தை தழுவ, யாருமில்லாத அவளுக்கு படிக்கும் காலத்தில் இருந்தே ரிஷி மற்றும் லாவண்யா என்ற இரண்டு உயிர் நண்பர்கள் உள்ளனர்..அவர்கள் தான் அவர்கள் வாழ்வை அழகாக்கி கொண்டிருந்தவர்கள் என ஆரபி எண்ணி கொண்டிருக்க அதை மேலும் அழகாக்க வந்தவன் தான் எழில்..
பெயருக்கு ஏற்றது போல மிகவும் அழகானவன், சாந்தமானவன் வேலை தேடி கொண்டிருந்தவனுக்கு பார்த்ததும் அவளை பிடித்து போக அவள் பின்னால் பல முறை சுற்றி அவள் மனதை கொள்ளை கொண்டவன் தான் எழில்.. அவன் ஒருவனால் மட்டுமே அவளது வாழ்க்கையை அழகாக்கிட முடியும் என ஆணித்தரமாக எண்ணி கொண்டிருக்கிறாள்..மாயமாக அவள் வாழ்க்கைக்குள் வந்தவன் மாயமாகி போனான்..
"உனக்கு ஒரு சப்ரைஸ் காத்திருக்கு எனக்காக காத்திரு "..என்று கூறி சென்றவன் தான் அவனை பற்றிய எந்த விவரமும் இல்லை..அவள் தேடாத இடமில்லை எல்லா இடங்களில் அவர்கள் சந்தித்து கொண்ட அனைத்து இடங்களிலும் தேடி விட்டாள்.. நித்தம் அங்கே எல்லாம் தேடுவது அவளது வாடிக்கையாகி போக இன்று கூட அவனை தேடித் தான் செல்கிறாள்..
அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தது முதல் அவளுக்கு அவனை காண வேண்டும் என்ற ஆவலில் இதோ நண்பர்கள் எதிர்ப்பையும் மீறி அவளது வேலையை காரணம் காட்டி அவள் செல்கிறாள் ..
ஆம் அவளுக்கு வேலை கிடைத்து இருக்கிறது அதுவும் கடம்பஞ்சோலையில் ..கடம்பஞ்சோலை ஒரு தீவாகும்..
இதுவரை அவள் இந்திய நாட்டை விட்டு எங்கேயும் சென்றது கிடையாது ..முதன் முறையாக ஒரு அந்நிய நாட்டில் அவளுக்கு வேலை கிடைத்து இருக்க அவள் செல்கிறாள்..
நல்ல சம்பளம் அவளது படிப்புக்கு ஏற்ற வேலை தான் அதுவும் அத்தீவின் தகவல் தொலைத்தொடர்பு பிரிவில் தான் அவளுக்கு வேலை அதையெல்லாம் அவள் எண்ணி கூட பார்க்கவில்லை ...அவள் மனம் தன்னவனை தான் தேடிக் கொண்டிருக்கிறது..அவனை கண்டு அவன் மார்பில் தன்னை புதைத்து இந்த நீண்ட பிரிவை எண்ணி சிறு துளி கண்ணீர் சிந்தி அவன் மார்பில் ஆறுதல் தேட அவள் மனம் துடித்து கொண்டிருக்கிறது..
என்ன தான் நண்பன் ரிஷி அவளை போக வேண்டாம் என தடுத்தாலும் அவள் செக் இன் செய்வது வரை கூடவே இருந்து அவளை வழி அனுப்பி வைத்து விட்டு தான் வந்தான்..பல முறை ஆரபியும் அவர்கள் இருவரையும் திரும்பி பார்த்து கொண்டு செல்ல அவர்களும் தன் தோழியின் சிரித்த முகத்தை தங்கள் மனதில் நிறைத்து கொண்டனர்..இதுவே அவர்கள் இருவரும் தன் தோழியை கடைசியாக மலர்ந்த முகத்தோடு அவர்கள் காண்பது..இனி அவர்கள் காணும் போது தன் தோழியின் நிலை எவ்வாறு இருக்க போகிறது என நினைத்தால் அவர்கள் ஒரு வேளை வழி அனுப்பி வைத்திருக்க மாட்டார்களோ என்னவோ ஆனால் விதி யாரை விட்டது...
இதோ விமானத்தில் தன் பயணத்தை துவங்கி விட்டாள்.. விமானம் வானத்தில் உயர உயர அவள் மனதில் அவளது காதலை குறித்து எதிர்பார்ப்புகள் கூடிக் கொண்டே சென்றது அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்ன ???
