மான்ஸ்டர் 10
அத்தியாயம் : 10
வார்த்தைகள் தடுமாற அவனது அருகாமை அவளை விதிர்விதிர்க்க செய்ய கைகளைப் பிசைந்து கொண்டு இருந்தாள்..
அவனோ அவளை கவனித்து கொண்டே, " என்ன பேசவே மாட்டேங்கிற??".. என்று அவன் மென்மையாக கேட்க ,
அவளோ அதற்கு மேல் முடியாமல் உடைந்து விட்டாள் மேலும் அவனது மென்மையை தாங்கி கொள்ள முடியாமல், "உனக்கு என்ன பிடிக்கலையா?? ஏன் என்கிட்ட இப்படி எல்லாம் நடந்துக்கிற?? இன்னிக்கி என்ன கருப்பு நாளா சொல்லு?? ஏன் அப்படியெல்லாம் நடந்துகிட்ட ??ரொம்ப வலிக்குது எழில்!! உன்ன ஆசையா உன்னை தேடி வந்தேன் ரொம்ப வலிக்குது!! உன்னை இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு!! எங்க என் காதல் செத்துடுமோன்னு எனக்கு பயமா இருக்கு எனக்கு என்னோட பழைய எழில் வேணும் எழில் நீ என்னை திட்டுவ என்னை விரட்டி விடுவியோன்னு நினைச்சு தான் வந்தேன் ஆனால் நீ இவ்ளோ மென்மையா பேசும் போது நான் உன்கிட்ட என்னை இழந்துட்டு இருக்கேன் எழில்..எழில்ன்னு சொல்ல கூடாதுன்னு சொல்ற?? என்னை பார்க்கும் போது உன் கண்ணில் நான் பார்த்த காதல் இல்லை எழில்..பேசாமல் நீ நான் வந்த அன்னிக்கே என்னை விரட்டி இருக்கலாம் எதுக்காக கல்யாணம் பண்ணி என்னை இப்படி பண்ற?? நீ மதியம் பேசினது நிஜமா இல்லை இப்போ மென்மையா பேசுறியே அது நிஜமா எதுவென்று புரியாமல் குழம்பி இருக்கேன்..இந்த நாலு நாள் ரொம்பவே வலி அனுபவிச்சுட்டேன்..என்ன ஆச்சுன்னு சொல்லு எழில் உனக்கு ஏதாவது பிரச்சனையா??".. என்று அவள் தன் மனதில் உள்ள பாரம் முழுவதையும் இறக்கி வைத்து விட்டு அவனை பார்த்து கேட்க,
அவனோ அவளது பேச்சைக் கேட்டு சிரித்தான் ..அது சிரிப்பா இல்லை விஷமா சிரிப்புக்குள் விஷத்தை கக்கினானோ என தெரியவில்லை.. இருந்தாலும் அவளது முகத்தை கைகளில் ஏந்தி அவளது கண்ணீரை மெல்ல துடைத்தவன் சிவந்த அவளது முகத்தைப் பார்த்து, " நான் இப்படி சிரிச்ச முகமாய் இருக்கிறது பார்க்கவா உனக்கு கஷ்டமா இருக்கு ?? "..என்று கேட்க,
அவளோ அவனது பதிலில் மென்மையாக அவனை பார்த்து சிரித்தாள்.. அவளை மெல்ல தோளில் கை போட்டு அஞ்சது அவளது தோளை அழுத்தத்துடன் பிடிக்க அவளோ அவன் ஏதோ சொல்ல போகிறான் என நினைத்து அவனைப் பார்த்தாள்..
" அபி இந்த நொடி அது மட்டும் தான் உண்மை அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ எனக்கு மனைவி நீ மட்டும் தான் எனக்கு ஒரு உதவி செய்வியா?? " என்று அவன் கேட்க,
அவளோ அவளது மென்மையான பேச்சு போதாதா அவளது மூளையை மழுங்கடிக்க, அ
"என்ன செய்யணும்னு சொல்லுங்க".. என்று கண்ணீரை துடைத்தவள்,மேலும் அவனிடம்" உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க எழில்".. என்று கூற,
"அபி இந்த கடம்பஞ்சோலைக்கு வாரிசு வேணும் அதுவும் கூடிய சீக்கிரமே வேணும் அது உன்னால மட்டும் தான் முடியும் இந்த உதவியை நீ எனக்கு செய்வியா??".. என்று அவளது முகத்தை கைகளில் ஏந்தி அவளை கூர்மையாக கவனித்து கொண்டே அவள் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்காமல் அதே நேரம் அவளை வேறு திசையில் அவன் நயவஞ்சகமாக பயணிக்க வைத்து அவன் கேட்க,
அவன் கூறியதை கேட்டு அவளது காதல் கொண்ட மனம் சம்மதமாக தலையாட்ட முனிந்து வெட்கப்பட்டவள், " இதற்காகவா என்னை நீங்க இப்படி படுத்துனீங்க?? ஏன் என்னை விட்டு போனீங்க எழில்??".. என்று கேட்கவும்,
அவனது முகம் மாறியது அவளோ, " அதை கண்டு ஏதாவது பிரச்சனையா??".. என்று கூற
அவனோ சட்டென, "இப்போதைக்கு நீ தான் என்னுடைய பிரச்சனை".. என்று அவன் ஒரு மாதிரி குரலில் பதிலளிக்க,
அவளோ, " என்ன சொல்றீங்க எழில்".. என்று கூற
அவனோ, " அபி என்னை கடம்பன்னு கூப்பிடு..நான் ஒரு விஷயத்தை கேட்டேன் அதுக்கு நீ இன்னும் சம்மதம் சொல்லவே இல்லை "...என்று முகத்தை திருப்பி கொண்டு அவனது அறையை ஒட்டி உள்ள பால்கனிக்கு சென்று நின்று கொண்டான்..
அவனது உடல் கூட விறைத்தது அவனோ வேகமாக தன் கோபத்தை கட்டுப்படுத்த தனது பாண்ட் பாக்கெட்டில் உள்ள சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து கொண்டிருக்க அதை கண்டவள் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டதோ என்றெண்ணி அவன் சென்ற இடத்துக்கு அவளும் சென்று , "கடம்பா"... என்றழைத்து நெருங்கி நின்று அவனது தோளைத் தொட அவன் சட்டென்று திரும்பி, " என்ன??".. என்று கேட்க ,
அவளோ அவனை பார்த்து, " அதுக்குள்ள கோபமா இப்போ எல்லாம் உங்களுக்கு ரொம்ப கோபம் வருது "..என்று கூற அவனோ மீண்டும் தன் கையில் உள்ள சிகரெட்டை எடுத்து புகைத்து திரும்பி நின்று கொள்ள ,
வெளியே வேறு அந்த பால் நிலா இவர்கள் இருவருக்கும் வெளிச்சத்தை வாரி வழங்கி கொண்டிருக்க ஊதை காற்று கூட அவர்களது கேஷத்தில் மோதி தள்ளி கொண்டிருக்க ,இயற்கை சூழ் நிறைந்த இடத்தில் அவனது அரண்மனையில் இருந்து தொலை தூரத்தில் கடல் அலையின் சத்தம் கூட அந்த நிசப்த இரவில் தெளிவாக கேட்டது..
மிக ரம்மியமான அழகான இரவு தன் மனம் கவர்ந்தவனின் கோபத்தை எப்படி போக்குவது என்று அவளுக்கு தெரியவில்லை..கோபம் கொள்ளும் வளர்ந்த குழந்தை போல தான் அவளது காதல் மனம் கூற அவனை எண்ணி சிரித்தவள் மெல்ல அவனை நெருங்கி நின்று அவனது இடையை பின்னால் இருந்து அணைத்தாள்..
அவனுக்காக நான் இருப்பேன் உன்னில் எனை தொலைக்க காத்திருக்கிறேன் நீயின்றி நான் ஏதடா ?? என் காதலை உணர்ந்து கொள்!! நீ கோபப்படும் ஒவ்வொரு நொடியும் அவனுள்ளே புதைய தான் அவள் மனம் துடிக்கிறது..அவனது மனதில் இருக்கும் காயத்திற்கு மருந்து நானென்றால் இப்போதே என்னை எடுத்து கொள் என்பது போல அவள் அணைக்க அவனோ சட்டென்று அவளது சில்லென்ற கை அவனை வளைத்ததில் அவனது உடல் விறைத்து நிற்க , அடுத்த நொடி அவள் அவனது கைகளில் இருந்தாள்..
அவளுக்கு காதல் இருக்க அவனுக்கு பழி உணர்வு இருக்க இரண்டுக்கும் இடையில் இவர்களின் அழகிய சங்கமம் துவங்கியது..
ஆம் அவளை படுக்கையில் கிடத்தியவன் திரை சீலைகளை ஒதுக்கி விட்டு பால் நிலவின் எழில் அவனது படுக்கையை தீண்டும் படி ஒதுக்கியவன் படுக்கையில் அந்த பால் நிலவே போட்டி போடும் எழிலில் அவள் படுத்திருக்க, மெல்ல அவள் அருகே வந்து படுத்தவன் அவளது நெற்றியில் தன் இதழ்களை பதித்தான்.. பின் மெல்ல அவள் தலையில் சூடியிருந்த நெற்றி சுட்டியை அகற்றியவன் அங்கே அவனது இதழ்களை பதித்தான்..
அவனது அருகாமை தந்த கூச்சத்தில் அவள் நெளிய அவனோ தனது விரல்களால் அவன் முகத்தில் கோலமிட்டான்.. அதில் கூச்சம் உச்சம் பெற்றவள் கண்களை மூடி கொள்ள அந்த விழிகளிலும் தன் இதழ்களை பதித்து துடிக்கும் அவளது அதரங்களிலும் அவனது இதழ்களை பதித்தான்..பின் மெல்ல கழுத்துக்கு கீழ் வர அவள் அணிந்து இருந்த ஆபரணங்களை ஒவ்வொன்றாக அவிழ்த்தவன் கூடவே அவள் அணிந்து இருந்த புடவையின் மாராப்பையும் அகற்றி அவளுள் புதையுண்டான்..
காதல் அவளது கண்ணை மறைக்க அவன் என்ன செய்தாலும் என்னவன் என்ற எண்ணம் இருக்க அதே போல அவனுக்கும் ஒரு இலக்கு இருக்க அதை தேடி அவளுள் மூழ்கினான்...விடிய விடிய அவனது தேடல் இருக்க விடிந்தாலும் அவளை விட மனமின்றி தேடினான்..
அவன் அவளுக்கு சொர்க்கத்தின் வாயிலை காட்ட அதில் சொர்க்கத்தை கண்டவள் அவன் செய்த காதல் களியாட்டத்தின் அயர்வில் அவன் மார்பிலே துயில் கொண்டான்..அவனோ உறக்கமின்றி தவித்தவன் சீரான மூச்சு காற்று அவளிடம் இருந்து வருவதை உணர்ந்து அவளிடம் இருந்து விலகிவன் மெல்ல எழுந்து தன் உடைகளை சரி செய்தவன் ஆடைகளின்றி எழில் ஓவியமாக படுத்திருக்கும் அவள் மீது ஒரு போர்வையால் அவளை மூடியவன் பின் தனது தொலை பேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்..
கிட்டத்தட்ட விடியற்காலை ஆறு மணி என கடிகாரத்தில் காட்ட அவன் அழைத்த நபர் போனை எடுக்க அவனது குரலை கேட்டதும் அந்த குரல் சீறி பாய்ந்தது..
"ஆரபி எங்கே ?? அவளை என்ன செஞ்ச?? எங்கே டா அவ?? "...என்று அந்த குரல் கேட்க
மறுமுனையில் அந்த குரலின் பதட்டத்தை உணர்ந்த கடம்பனோ பலமாக சிரித்து அவளா , "இத்தனை நேரம் என்னோட வலது பக்க மார்பில் என்னோட மூச்சு காத்து அவ உடலை தீண்டுற அளவுக்கு என்னை அணைச்சிட்டு படுத்து இருந்தா?? அப்படி அணைச்சு படுத்திட்டு இருந்தா?? என்ன செஞ்சேன்னு கேட்காத ??உன் மனசில இந்நேரம் ஓடிட்டு இருக்கிறது எல்லாம் முடிஞ்சிடுச்சு அவளை பார்க்கணும்ன்னு ரொம்ப துடிக்கிற போல?? ".. என்று கடம்பன் கேட்க,
மறுமுனையோ, " அவளுக்கு ஏதாவதுனா உன்னை சும்மா விட மாட்டேன் டா".. என்று கூற,
"ரொம்ப கத்தி பேசி என்னை மேலும் ஏதாவது செய்ய வெச்சிடாத ஆரபி இப்போ என்கிட்ட மறந்துடாத உன் பூட்டோட சாவி இப்போ என் கையில்"..என்று கூறிய கடம்பன்," ரொம்ப முயற்சி பண்ணுனியே வந்து பார்த்துட்டு போ அவளுக்கு விருப்பம்னா அவளை கூட்டிட்டு போ"... என்று கூற
அதை கேட்ட மறுமுனையோ, " இப்போவே வரேன்".. என்க
"உன்னை வா ன்னு சொல்லி தான் அனுமதி அளிச்சு இருக்கேன் எப்போ வரணும்னு சொல்லல ..மதியம் பன்னிரெண்டு மணிக்கு உனக்கான சமயம் அப்போ வா "...என்று கூறிவிட்டு போனை வைத்தவன் மெல்ல அவள் அருகே சென்று அவளது முகத்தை பார்த்து சிரித்தவன் அவள் மீது போர்த்தப்பட்டிருந்த போர்வையை விலக்கி அதனுள் தன்னையும் அவளோடு இணைத்து கொண்டான்..
கடம்பன் சொன்ன அதே நேரத்தில் கடம்பனின் அரண்மனை வாயிலில் அதே கருப்பு நிற கார்களின் அணிவகுப்பு வந்து நின்றது..அதே நேரம் கடம்பனின் உத்தரவு படி அரண்மனை நுழைவாயிலும் திறக்கப்பட்டது... கார்கள் சீறிக்கொண்டு உள்ளே வரிசையாக நுழைந்தன..
மான்ஸ்டர் வருவான்..
