மான்ஸ்டர் 11
அத்தியாயம் : 11
மான்ஸ்டரும் மான்விழியும்
கருப்பு நிற கார்கள் அரண்மனைக்குள் நுழைந்தது.. அரண்மனையின் பாதுகாவலர்களும் பல பிரிவு பாதுகாப்பு படையினரும் அங்கு வரிசையாக குழுமியிருந்தனர்... அதில் குறிப்பிட்ட எண் கொண்ட வாகனத்தை மட்டும் சூழ்ந்த பாதுகாப்பு படையினர் மற்ற வாகனங்களை அவர்களின் கார் கண்ணாடியை கூட திறக்க கூட அனுமதிக்கவில்லை..
அந்த குறிப்பிட்ட எண்ணுள்ள வாகனத்தின் கதவு மட்டும் திறக்கப்பட அதிலுருந்து கருப்பு நிற சூட் அணிந்து ஒருவர் ஆவேசமாக இறங்கினார்..
அவரை பல பரிசோதனைகளுக்குப் உட்படுத்த அவருக்கு இவர்களை எல்லாம் கொல்லும் ஆத்திரம் வந்தாலும் அவரது தேவை என்பதால் அமைதியாக அவர் ஒத்துழைப்பு அளிக்க பின் அவரை விருந்தினர் மாளிகைக்கு அழைத்து சென்றனர்..
அங்கேயும் அவருக்கு பல பரிசோதனைகள் எல்லாம் செய்யப்பட்டது அவருக்கு அவரிடம் ஏதேனும் ஆயுதங்கள் உள்ளதா எனவும் பரிசோதனை செய்தனர் ஒன்றுமில்லை என ஒன்றுக்கு மூன்று முறை உறுதி செய்த பின்னரே அவரை உள்ளே அனுமதித்தனர்..
அவர் பெயர்தான் களங்கண்டான்.. வயதோ அறுபது... 60 வயது உடையவர் என்று கூறினார் எவரும் நம்ப மாட்டார்கள் 40 வயது இளைஞன் போல இன்றும் அதே முறுக்கோடு மிடுக்கோடு இருந்தார்..கடம்பன் எவ்வளவு தூரம் கோபமாக இருக்கிறானோ அதே போல கோப முகம் கொண்டவர் தான் இவர்..சுருக்கமாக சொன்னால் கடம்பன் குடும்பத்தின் எதிரி...
அவர் முகம் கடுகடுவென இருந்தது யாரை வெட்டலாம் குத்தலாம் என்பது போல அவர் காத்துக் கொண்டிருந்தார்... அவர் அந்த விருந்தினர் மாளிகையில் அமர்ந்து இருந்தாலும் அவரது பார்வையோ கழுகு பார்வை போல அந்த விருந்தினர் மாளிகையையே வட்டமடித்துக் கொண்டிருந்தது...
அதையெல்லாம் கேமராவில் இருந்து கண்காணித்து கொண்டிருந்த கடம்பன் மெல்ல சாவதானமாக வெளியே வந்து அறையின் பால்கனிக்கு வந்தான்
அங்கே தூரத்தில் தெரியும் கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவியிடம் அருகில் வந்தவன் அவள் எதிர்பாராத வண்ணம் அவளை பின்னாலிருந்து அணைத்து அவளது கழுத்து வளைவில் புதைந்து அவளது வாசத்தை தன் நாசியில் நிரப்பினான்.. அவளும் அவனுடன் இயைந்து கொடுத்து அவனுள் புதைந்து போக அவனோ மெல்ல அவளை தன் பக்கம் திருப்பி ,
" உன்னை தேடி ஒருத்தர் வந்து இருக்காங்க நீயே போய் பாரு "..என்று ஒரு மாதிரி குரலில் கூற,
அவளோ, "என்ன சொல்றிங்க??" என்று கேட்க , "ஆமா உன்னை தேடி ஒரு உறவு வந்திருக்கு".. என்று நக்கலான குரலில் கூறினான்..
"என்ன உறவா எனக்கு இருக்கிற ஒரே உறவு நீங்க மட்டும் தான்?? இதில் யாரு அந்த புது உறவு "...என்று காதலோடு ஆரபி கூறினாள்.. ஏனெனில் காலையில் எழுந்த அவளை மையலுடன் அணுகினானே..
இத்தனை காதலையும் அவன் எங்கே புதைத்து வைத்திருக்கிறான் என்றே அவளுக்கு தெரியவில்லை ஆனால் எப்போதும் அவனது கை வளைவில் புதைந்து போக தான் அவளது உள்மனம் ஏங்கியது..அதனால் , "எனக்கு இந்த உலகத்தில் இருக்கும் ஒரே உறவு நீங்க மட்டும் தான் "..என்று காதலோடு கூற
அவனோ , "என்ன விட உன்ன பார்க்க வந்தவருக்கு தான் உரிமை அதிகம் னு சொல்றாரு நீ போய் பார் "..என்று கூற
அதைக் கேட்ட அவளோ நம்ப முடியாமல் சிரித்து, " எனக்கு யாரும் இல்ல அதுவும் இந்த நாட்டில் உங்களை தவிர எனக்கு யாருமே தெரியாது "..என்று மீண்டும் அவள் கூற,
" நீ போய் தான் பாரேன்"... என்று கூறியவன் அவளது முகத்தை சற்று ஏந்தி அவளது இதழோடு தன் இதழை பொருத்தி முரட்டு முத்தம் ஒன்றை கொடுத்தான்...
அவளோ அதிர்ந்து அவனும் அவளது இடையை பற்றி இழுத்து மூச்சுக்காற்று தடைபடும் அளவுக்கு வன்மையாக முத்தமிட்டவன் அவனது அந்த முத்தத்தில் அவளது உயிரைக் கூட உறிஞ்சி எடுத்து விடுவான் போல, அது போல அவரது நாவில் தேன் உறிஞ்சும் வண்டாக தேனை உறிஞ்சி எடுத்தவன் அவனது இந்த வன்மையான முத்தத்தால் அவளது உதடு சிவந்து போயி அவளோ மூச்சுக்காக அவனிடம் ஏங்கி நிற்க, அத்தனை வேகத்தில் உன் மூச்சை நான் வாங்கி விடமாட்டேன் என நினைத்தானோ என்னவோ அவளை விட்டவன் , "இப்ப போ என் பொண்டாட்டிய போ "...என்று குதற்க்கமாக கூற ,
அவளோ புரியாமல், "நீங்க வரலையா ?? "..என்று அவள் கேட்க,
அவனோ, " நான் வரல எனக்கு சந்திக்க விருப்பமில்லை".. என்று மட்டும் கூறி அனுப்பினான்..
அவளோ வந்திருப்பது யாரோ என நினைத்து அவள் செல்லும் போதே அவன் முத்தமிட்டது நினைவு வர அவளுள் வெட்கம் பூத்து மிக சந்தோசமாக அவள் இறங்கி சென்றாள்..
ஏனோ அவனது அருகாமை அவளுக்கு இவ்வளவு அழகாக இருக்கும் என அவள் நினைக்கவேயில்லை.. நேற்று இரவு முதல் இன்று காலை வரை ஆனால் அவளுக்கு என்னவோ வானமே அழகாக மாறியது போல ஒரு உணர்வு அப்படி தன் கணவனை விட்டு தான் கீழே வந்து பார்க்க அந்த பெரிய ஹாலில் ஒருவர் மட்டும் அவளுக்காக காத்து இருந்தார்..
அவரை இதற்கு முன் அவள் பார்த்ததுமில்லை அவர் யார் என்று அவளுக்கு தெரியாது அவளோ குழப்பமான முகத்தோடு வந்து அவரை அறிமுகமில்லா பார்வையை பார்க்க அவரோ அவளைக் கண்டதும் சட்டென்று எழுந்து , "ஆரபி மா".. என்று குரல் உடைந்து கூற அவளோ யார் என்று புரியாமல் விழித்தாள்..
அவரோ, "நான் உன் அப்பாடா அப்பா உன்னோட அப்பாடா "..என்று அவர் தழுதழுத்த குரலில் கூற ,
அவளோ அவர் அப்பா என்று கூறிய போது அவரை அந்நிய பார்வை தான் பார்த்தாள்..
திடீரென ஒருவர் வந்து தான் உன் அப்பா என்று கூறும் போது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவளுக்கு இல்லாமல் போனது என்னவோ உண்மைதான் ஏனெனில் அவளது தாய், தந்தை என்று ஒரு உறவே அவளுக்கு இல்லாதது போலத் தான் அவளை வளர்த்து இருந்தார் ..
அப்பா என்ற ஒரு வார்த்தை கூட அவள் வாயிலிருந்து வரக்கூடாது வந்தால் அவளுக்கு அடி பலமாக இருக்கும் அதனால் ஆரபி தன் தாயின் அடிக்கு பயந்து முதலில் அப்பா என்ற வார்த்தையை கூறாமல் இருப்பாள்..
பின் அப்பா என்ற சொல்லையே அவள் வெறுத்துப் போனாள்.. ஆனால் அவளது அம்மா , அப்பா உயிரோடு இருக்கிறாரா என்று யாரேனும் கேட்டால் , "இல்லை".. என்று அவர் பலமுறை கூறுவதை அவள் கேட்டிருக்கிறாள்..
அப்படி இருக்க அவளும் தந்தை இறந்து விட்டார் போலும் என இது நாள் வரை நினைத்துக்கொண்டு தான் இருந்தாள்..
திடீரென ஒருவர் அப்பா என்று வர அதை பார்த்து அவளுக்கு எந்த மாதிரியான உணர்வை எதிரே இருக்கும் நபருக்கு அளிக்க வேண்டும் என தெரியவில்லை...
அதனால் முழித்து, " அப்பாவா எனக்கு அப்பான்னு யாருமில்ல".. என்று அவள் இயல்பாக களங்கண்டானிடம் கூற,
"பெத்த அப்பா முன்னாடி இப்படி சொல்றியே டா ?? "..என்று அவர் குரல் கம்ம கூறவும்,
அவளோ மென்மையாக சிரித்து, " என்ன சொல்றீங்க?? புது கதையா இருக்கு என்னோட அப்பா இறந்துட்டேன்னு தான் என் அம்மா சொல்லி இருக்காங்க"... என்று புரியாமல் அவள் கூற
அதைக்கேட்ட களங்கண்டானோ விரக்தி புன்னகையோடு, " உன் அம்மா மானஸ்தி மானம் உள்ளவ அப்படித்தான் சொல்லுவா "...என்று கூறியவர் தான் பெற்ற மகளை நம்ப வைக்க அவரது சட்டைப்பையில் இருந்து ஒரு போட்டோவை எடுத்து காட்டி , "இது யாருன்னு தெரியுதா உன் அம்மா இது நான்.. இது எங்க ரெண்டு பேரோட கல்யாணம் அன்னிக்கு எடுத்த போட்டோ".. என்று காட்டியவர்,
மேலும் அவளது அம்மா கோமகள் மாசமாக இருப்பது போன்ற புகைப்படத்தையும் அவரது மேடிட்ட வயிற்றை பிடித்துக்கொண்டும் அதே சமயம் அவரது தாயை அணைத்த படி களங்கண்டான் இருப்பது போன்ற புகைப்படத்தையும் அவளுக்கு அவர் காட்ட ,
அதை கண்டவள் குழம்பி , "என்ன சொல்றீங்க இது என்ன ஒரு புது கதை இதை பார்க்கும் போது என்னால நம்பமால் இருக்க முடியல.. எங்க அம்மா உனக்கு அப்பான்னு யாரும் இல்லை.. அப்பா பேரு தெரியாதுன்னு சொல்லித்தான் வாழ்த்தி இருக்காங்க..என்னோட சர்ட்டிபிகேட்ல கூட அம்மா பேர் மட்டும் தான் இருக்கும் அப்பா பேர் இருக்காது".. என்று கூறினார்...
