மான்ஸ்டர் 12
அத்தியாயம் : 12
அவரோ தன் மகளுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல், "அது தான் நான் சொன்னேனே உங்க அம்மா ரோஷமுள்ளவ அவ அப்படித்தான் சொல்லுவா அவ ரொம்ப நல்லவ என்ன உயிருக்குயிராக காதலிச்சா நான் அந்த காதலுக்கு துரோகம் பண்ணிட்டேன் அவ சொன்ன சொல்ல நான் காப்பாற்றல நான் அதை மீறிட்டேன் அதனால தான் எல்லாமே என்ன நடந்ததுன்னு நான் தெளிவா சொல்றேன்.. ஆனா நீ என் கூட வரணும் இங்கே இருக்காதே உன் உயிருக்கு ஆபத்து "..என்று அவர் கூற,
அவளோ புரியாமல் விழித்தாள், " என் உயிருக்கு ஆபத்தா?? நான் என் புருஷன் கூட சந்தோஷமா இருக்கேன்" என்று கூற,
அவரோ, "புருஷனா அவன் உன் புருஷனே கிடையாது..இதெல்லாம் ஒரு நாடகம்..ஊரை ஏமாத்த அவன் போடும் வேஷம்.. உன்ன கொலை பண்ண தான் இங்க கூட்டிட்டு வந்திருக்கான்..அந்தஸ்துக்காக பதவிக்காக என்ன வேணும் என்றாலும் செய்யும் கூட்டம் "..என்று அவர் கூற,
அந்த நேரம் பார்த்து மாடியிலிருந்து இறங்கி வந்தான் கடம்பன்.. ஒவ்வொரு அடியும் இடி போல் மாடி படிகளில் எடுத்து வைத்து முகத்தில் தீவிரமான அதே சமயம் அழுத்தமாக இறுகிய பாறை போல இருந்த அவனது முகத்தில் எதிரே உள்ள தன் எதிரியான களங்கண்டான் மற்றும் அவரது மகளான ஆரபியையும் கொன்றே தீர வேண்டும் என்ற வெறி கொண்ட வேங்கையாக அவன் படியிறங்கி கொண்டிருக்க,
களங்கண்டானோ அவனை கண்டும் இப்போது அவனை ஏதாவது செய்தால் தன் மகள் தன்னுடன் வர மாட்டாள் என கருதி மேலும் அவருக்கு பாசம் அவருடைய கண்ணை மறைக்க, " ஆரபி நான் சொல்றதை கேளு நீ இங்க இருக்குறது சரியில்ல உன்னை இவன் கொன்னுடுவான் இவன் நல்லவன் கிடையாது".. என்று கூற,
அவளோ மேலே இருந்து இறங்கி வரும் தன் கணவனை குழப்பமாக பார்க்க அவனோ அந்த நொடி அவளை தீவிரமாக ஆராய்ந்து , "என்ன உன்னுடைய உறவுக்காரர் என்ன சொல்றாரு என்ன கொலைகாரன் சொல்கிறாரா??".. என்று கேட்க,
அவளோ அவனை பார்த்து மென்மையாக சிரித்து, "அவர் எனக்கு யாருனே தெரியாது ஒருவேளை அம்மா கூட இருக்கிற போட்டோவை பார்த்தா என்னோட அப்பாவாக கூட இருக்கலாம் ஆனா இத்தனை நாள் அப்பா அப்படிங்கிற ஒரு கேரக்டர் என்னோட வாழ்க்கையில நுழைஞ்சதில்லை திடீர்னு ஒருத்தர் அப்பா என்ன தேடி வந்து கூப்பிட்டார் நான் போய் விடுவேனோ ??"...என்று தன் கணவனை பார்த்து கூற,
அவனோ எதிராளியை பார்த்து நக்கலாக சிரித்தான்..பார் உன் அருமை மகளை பார் என்பது போல இருந்தது அவனது அந்த சிரிப்பு ஆனால் அதை கண்டு கொண்டிருக்க அவர் வரவில்லையே,
"ஆரபி சொன்னா கேளு நான் கெட்டவன் தான் நல்லவன்னு சொல்லல ஆனா நீ நெனச்சிட்டு இருக்க மாதிரி இவன் ரொம்ப நல்லவன் கிடையாது.. கெட்டவன் அவன் எந்த எல்லைக்கும் போவான்.. அவனோட தேவை நிறைவேறனும்னா அவன் என்ன வேணாலும் செய்வான் "..என்று களங்கண்டான் கடம்பனை பற்றி தெள்ளத்தெளிவாக கூற அது ஒன்றும் காதல் போதையில் ஊறித்திளைத்த ஆரபிக்கும் புரியவில்லை...
என்ன செய்தால் தன் மகள் தன்னுடன் வருவாள் என்று புரியாமல் , "இங்கே பேசிட்டு இருக்க சமயம் இல்ல ஒரு தடவை நான் உன்னோட அம்மாவை நான் இழந்துட்டேன் அது மாதிரி உன்னையும் இழக்க எனக்கு மனசு இல்ல என்னோட பொண்ணு ..எனக்கு வேணும் "..என்று குரலில் பதைபதைப்புடன் கூற ,
அதை கேட்டு சற்றும் இளகாத ஆரபி தன் கணவனை பார்க்க அவனோ அழகாக இவர்களின் பேச்சை ரசித்துக்கொண்டே அங்கே மேஜையில் வைத்திருந்த ஆப்பிளையும் கத்தியையும் எடுத்து ஒவ்வொரு துண்டாக கட் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் கடம்பன்..
எனக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தம் இல்லை என்பது போல இருந்தது அவனுடைய செய்கை அவளோ தந்தையையும் பார்த்து அதேபோல அவனையும் பார்த்து, " இதோ பாருங்க நீங்க என்னமோ சொல்றீங்க எனக்கு புரியுது ஆனா நான் உங்களை இதுக்கு முன்னாடி பார்த்ததில்லை பழகினது இல்லை பேசினது இல்ல ஆனா இதெல்லாம் இவருடன் செஞ்சிருக்கேன்.. இவரு கூட பழகி இருக்கேன் பார்த்திருக்கேன் ..பேசி இருக்கேன்.. அதனால அவர பத்தி எனக்கு நல்லா தெரியும்.. என்னை உயிர்க்குயிராய் நேசிக்கிற ஒரு மனுஷன் அதனால நீங்க சொல்றத என்னால நம்ப முடியாது அதை ஏற்றுக்கொள்ள கூடிய எனக்கு மனசும் என்கிட்ட இல்லை "..என்று ஆரபி தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ள
அதைக்கேட்ட களங்கண்டானோ, " ஆரபி நான் உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல.. இவன் போட்டது எல்லாமே வேஷம் ,பொய் இவங்க குடும்பத்தையும் நம்பாதே என் மேல இருக்கும் பகையை வெச்சு உன்னை ஏதாவது பண்ணிடுவாங்க "..என்று அவர் இயன்ற வரை தன் மகளை புரியவைக்க முயல,
அதைக்கேட்ட அவனோ அமைதியாக களங்கண்டானை பார்த்துக் கொண்டிருந்தான்... அவன் உள்ளே தீ ஜுவாலை கொந்தளித்து எரிந்து கொண்டிருந்தது... இப்போது அவன் நினைத்தால் கூட அவனால் அவனது கையில் இருக்கும் கத்தியால் களங்கண்டானின் உயிரை எடுக்க முடியும்...
ஆனால் அவனுக்கு அதில் விருப்பம் இல்லை இதோ இவள் இருக்கிறாளே இவள் தன்னிடம் படும் பாட்டை பார்த்து அதில் நொந்து ,வெந்து அவர் சாக வேண்டும் என்பதே கணவனின் எண்ணமாக இருக்க கடம்பன் அமைதியாக வேடிக்கை பார்த்தான்.
அவனுக்கு தெரிய வேண்டியது அவள் என்ன பதிலளிக்க போகிறாள் என்பதே ஆகும்.. அவளோ தன் கணவனைப் பார்த்து, " என்னோட உயிர் போனாலும் பரவால்ல நான் இவர் கூட தான் இருப்பேன் இவரு தான் என்னோட கணவர் திடீர்னு அப்பான்னு சொல்லி ஒருத்தர் வந்ததும் உங்க பின்னாடி வர நான் ஒன்னும் முட்டாள் கிடையாது அவர் எனக்காக காத்திட்டு இருந்தவர்..அவரையே தப்பா பேசும் உங்களை நான் வெறுக்கிறேன் " என்று அவள் கூற ,
மேலும் அவரிடம், "இது நாள் வரைக்கும் பொண்ணுன்னு சொல்லி என்ன தேடி வராதவர் இப்ப எதுக்கு தேடி வந்திருக்கீங்க ??எனக்கு இனியும் அப்பா அப்படிங்கிற ஒரு கேரக்டர் எனக்கு தேவையே இல்லை... எனக்கு எல்லாமே என் புருஷன் மட்டும் தான் அதனால தயவு செஞ்சு என தேடி வந்து தொல்லை செய்யாதீர்கள்... எனக்கு உங்கள பாக்கணும்னு தோணல... உங்களைப் பார்க்கும்போது எனக்கு வெறுப்பா தான் இருக்கு... எங்க அம்மா பட்ட கஷ்டம் தான் ஞாபகத்துக்கு வருது
. அதனால தயவு செஞ்சு இங்கிருந்து கிளம்புங்க.."என்று ஆரபி கூற
" ஆரபி நான் சொல்றத கேளு..உன்னை அவனோட வலையில் வசமா சிக்க வைச்சு இருக்கான் அதில் இருந்து காப்பாற்ற தான் நான் வந்து இருக்கேன்"... என்று களங்கண்டான் கூறவும்,
அதை கேட்ட அந்த மடச்சியோ, " என்ன சொல்ல போறீங்க?? இவர் என்ன கொலை பண்ண தான் இங்க கூட்டிட்டு வந்து இருக்காரு அதை தானே சொல்லப்போறீங்க ..போதும் நிறுத்துங்க..அப்படி இவரு என்னை கொன்னாலும் பரவாயில்லை என் புருஷன் கையால சாகிறது எனக்கு சந்தோஷம் தான் நீங்க கிளம்புங்க ".. என்று தன் கணவன் மீது இருக்கும் அதீத நம்பிக்கையில் அவள் கூற அதைக் கேட்ட கடம்பனின் விழிகள் ஒரு நொடி விரிந்தது..
அதற்குள் அவனது பழிவாங்கும் வெறி மேலோங்கி தன் கை முஷ்டியை முறுக்கி கொண்டு இருந்தான்..
அவரோ சொன்னதையே கூறி கொண்டு இருக்க அவளோ தன் கணவனை பார்க்கவும் அடுத்த நொடி அவனது பாதுகாவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டார் களங்கண்டான்...
சிறு துளி உணர்வும் அவர் மீது எழாமல் அவர் சென்றதும் தன் கணவன் அருகில் வந்து அவனது மடியில் அமர்ந்தவளை தன் கைகளால் அவளது இடையை இறுக்கி வளைத்த கடம்பெழிலன் தன்னுடன் ஒட்டி பிறந்த தன் அண்ணனை ஒரு நொடி எண்ணி பார்த்தவன், " உன் சாவுக்கு காரணமான எல்லோரையும் தீர்த்து கட்டுவேன் கடம்பா..அதுவரைக்கும் இந்த நாடகம் தொடரும்.. " என்று சபதமிட்டான் கடம்பெழிலன்...இதையேதும் அறியாத ஆரபி அவனது மார்பில் சுகமாக சாய்ந்து படுத்தாள்...
மான்ஸ்டர் வருவான்..
