மான்ஸ்டர் 13
அத்தியாயம் : 13
மான்ஸ்டரும் மான்விழியும்
கடம்பன் அவனது அறையில் கடம்பன் அமர்ந்து அலுவலக பணிகளை பார்த்துக்கொண்டிருந்தான்... அந்த சமயம் பார்த்து இரவு உடையில் சிறு ஜிப்பா போன்ற உடை அதுவும் கால் முட்டி வரை மட்டுமே பளிங்குச் சிலையென தன் வாழைத் தண்டு கால்கள் தெரியும் படி மிகவும் கவர்ச்சியாக ஆரபி நடந்து வந்து கொண்டிருந்தாள்..அவனோ அவளை கவனிக்காமல் வேலையை செய்தவள் பின்னாலிருந்து ஆரபி அணைக்க,
அவனோ சட்டென்று திரும்பி பார்க்க அவனோ, " என்ன இன்னைக்கு நல்ல மூடில் இருப்ப போல ??"...என்று அவளது உடையை பார்த்து கேட்டான்..
அதற்கு அவளோ அவன் அமர்ந்து இருக்கும் சூழலும் நாற்காலியை ஒரு சுழற்று சுழற்றி விட்டு அவன் மடியில் அமர்ந்தவளின் உடை முட்டு கால்களில் இருந்து தொடைக்கு ஏறி கொள்ள அவனது கையோ பிடிமானத்திற்கு அவளது தொடையை தாங்கி கொண்டது...முதலில் அவள் விழ கூடாது என தாங்கியவன் பின் அவளது கால்களின் மென்மையில் அழுத்தமாக தன்னை தொலைத்து ஒரு மோக கீற்றுக்குள் நுழைந்தவனின் கைகள் மெல்ல அவளது கால்களை வருட துவங்கியது..
அவள் இன்று ஏதோ ஒரு முடிவில் வந்து இருப்பாள் போல அவனது கழுத்தை தனது கையால் இறுக்கி அவனது முகத்தை குனிய வைத்து இவளது மூக்கோடு மூக்கு உரசி அப்படியே தன் கன்னங்களால் அவனது முகம் முழுவதும் உரசினாள்..
பின் அப்படியே அவனது இதழில் அவளது கன்னத்தை வைத்து உரச அவனுள் ஹார்மோன் மாற்றம் ஆகி இருந்தது..
இவர்களின் திருமணம் முடிந்து ஒரு மாதம் கழிந்து விட்டன.. இந்த ஒரு மாதத்தில் அவன் அவளிடம் எப்போதும் சீரும் சிங்கமாக தான் இருந்திருக்கிறான் கட்டிலில் மட்டும் அவளை பெண் வேங்கையாக மாற்றி எடுத்திருக்கிறான்...
அவளும் அவனது காதல் அவனது முத்தம் என அனைத்திற்கும் அவள் மகுடி தான் ..அவளை கிட்டத்தட்ட மனதாலும் உடலாலும் அவன் பின்னால் சுற்றி வரும் நாய் குட்டி போல மாற்றி எடுத்து விட்டான்..
அவர்கள் இருவரும் அவனுடைய கே பேலசில் அதில் தான் தங்கியிருக்கின்றனர் ஆம் அவளை முதன் முதலாக மூன்று நாட்கள் எங்கு வைத்து இருந்தானோ அதில் தான் இப்போது அவர்களின் வாசமும்... அவர்கள் இருவர் மட்டுமே உதவிக்கு என பணியாளர்கள் சிலர் அடங்க அவர்களின் வாழ்க்கை ஒரு மாதமாக இங்கே தான் ...
ஆம் களங்கண்டான் வந்து சென்ற பிறகு விஷயம் அரண்மனை முழுவதும் பரவத் தொடங்கியது பணியாளர்களுக்கு விஷயம் தெரிந்தாலும் அது அரண்மனையை விட்டு வெளியே செல்லக்கூடாது சென்றால் அவர்களின் உடலில் உயிர் இருக்காது என்பது அவர்களுக்கே தெரியும்...அதனால் அவர்கள் காதில் பஞ்சை வைத்து கொண்டு ஒன்றும் அறியாத பாவத்தில் சுற்றுவர்..
ஆனால் குடும்ப உறுப்பினர்களோ அப்படி இருக்க மாட்டார்களே என்ன தான் கடம்பனின் மீது அவர்களுக்கு பயம் இருந்தாலும் அவர்கள் அவன் வந்த போது அவன் முன்னே கூடினர்...
இலந்தரையர், தாமரை விழியாள் மற்றும் மீயாழ் மூவரும் அவன் முன்னே நிற்க ,அவனோ தனது கைகளை கோர்த்துக்கொண்டு அரண்மனைக்குள் நுழைந்த மனையாளை பார்த்து, " நீ மேலே போ"... என்று கூற ,
அவளோ அவர்களின் முகம் சரி இல்லாததை கண்டு ஒரு வேளை அவளது அப்பா வந்தது அவர்களுக்கு பிடித்தம் இல்லையோ என நினைத்து அவன் பேச்சுக்கு கட்டளை பட்டும் அவள் உள்ளே சென்றாள்..
அவள் உள்ளே சென்று விட்டாள் என்பதை உறுதி செய்துகொண்டு, " இப்ப சொல்லுங்க என்ன விஷயம்??".. என்று கேட்க ,
இலந்தரையரோ, " அந்த பொண்ணா?? களங்கண்டான் பொண்ணு??".. கேட்க ,
"ஆமாம்".. என்று கூறினான் கடம்பன்,
அதைக்கேட்ட தாமரை விழியாளோ, " எல்லாம் தெரிஞ்சு நீ இப்படி இவளை கல்யாணம் பண்ணி அரண்மனைக்கு கூட்டிட்டு வந்தியா நான் இதை உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கல".. என்று கூற,
" எல்லோரும் எதிர்பார்க்கறதை என்னால செய்ய முடியாது.. எனக்கு எது விருப்பமோ அதை தான் செய்ய முடியும் அதனால தான் இதெல்லாம் பண்றேன்..மேலும் என் மேல நீங்க எந்த அபிப்பிராயத்தையும் வைக்காதீங்க அதற்கு அப்பாற்பட்டவன்னு உங்களுக்கே தெரியும்..உங்க விருப்பத்தை செய்யறவன் ஒருத்தன் இருந்தான் அவன் இப்போ இல்லை நான் மட்டும் தான் இருக்கேன் "... என்று தன் தாய்க்கு திருப்பி பதிலளித்தான்...அதை கேட்ட தாமரை விழியாளோ , " அதுக்குன்னு நீ செய்யறது எல்லாம் சரியா??"..
அவரை அந்த கேள்வியில் அவரை அழுத்தமாக பார்த்தவன், " சரி, தப்புன்னு, நியாயம், தர்மம் இதெல்லாம் என் அகராதியிலேயே கிடையாது..நல்லதை மட்டும் செய்ய நான் நல்லவன் கிடையாது " என்று தாய்க்கு திருப்பி கொடுக்க அதை கேட்ட அவர் சலித்து நின்றார்..
ஆனால் மியாவோ, " நீ எனக்கு துரோகம் தான் செஞ்சே அதை கூட நான் பொறுத்துகிட்டேன் ஆனால் நீ இப்போ செத்து போன நம்ம அண்ணனுக்கும் சேர்ந்து நீ துரோகம் பண்ணிட்டு இருக்க உன்னை போய் அவன் தலையில் தூக்கி வெச்சி ஆடினதுக்கு நல்ல மரியாதை கொடுத்திட்ட".. என்று அவள் கடம்பனின் முகத்தின் மீது காரி உமிழ்வது போல கூற,
அவனோ அவள் பேசிய பேச்சில் கோபம் கொண்டவன் சட்டென்று தங்கை என்று கூட பார்க்காமல் அவளது கழுத்தை பிடித்து நெருக்கியவன் , " நீ எல்லாம் என்கிட்ட பேசற ரொம்ப சந்தோஷம் நான் என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் .. நீயாவது எனக்கு அப்புறம் தான் பிறந்த உனக்கே அண்ணன் பாசம் தூக்குது..நான் அவன் கூடவே ஒட்டுக்கா பிறந்திருக்கேன் அதுவும் ஒரே நேரத்துல வயித்துக்குள்ள இருந்தே நாங்க ஒன்னா இருந்தவங்க...
உன்ன விட எனக்கு அவன் மேல பாசம் அதிகம் புரியுதா?? அதை இங்கே உங்க கிட்ட எல்லாம் எனக்கு தெளிய வைக்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை.. இனி இந்த பேச்சு நீ பேசக்கூடாது மீறிப் பேசினா தண்டனை வேறயா இருக்கும் "...என்று அவர்களை எச்சரித்து விட்டு வலியால் துடித்து கொண்டிருந்த மீயாழின் கழுத்தை அவன் சென்று விட்டான்..செல்லும் அவனை பார்த்த அனைவரும் பேயரைந்தது போல இருந்தனர்..தாமரை விழியாள் மட்டும் தன் மகனை எண்ணி கூடுதலாக வருத்தப்பட்டார்..
சில குடும்ப ரகசியங்கள் ரகசியங்கள் ஆகவே போகும் அது போன்று கடந்த கடம்பனின் அரண்மனையிலும் பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.. அவையெல்லாம் குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது ரகசியங்கள் ரகசியங்கள் ஆகவே இருக்கும் ...அந்த ரகசியங்களை வெளியே உள்ளவர்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்வர்.. அரச குடும்பத்தினரும் அந்த ரகசியங்களை தங்கள் கண்ணின் மணி போல பார்த்து கொள்வர்..
ஆரபி அங்கு இருந்தால் அவளுக்கு பாதிப்பு வரும் தேவையில்லாத விஷயங்கள் அவள் காதில் விழுந்தால் என்ன செய்வது, மற்றவர்கள் மீதுள்ள கோபத்தில் அவளை வார்த்தையால் சாடினால் என்ன செய்வது என நினைத்தவனுக்கு அவளை வதைக்க வேண்டும் என்றாலும் நான் தான் வதைக்க வேண்டும்..
அவளை மட்டுமல்ல கடம்பனின் மறைவில் யார் எல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் நான் மட்டுமே தண்டிக்க வேண்டும் என்ற கொள்கையை கொண்டுள்ளவன் தான் கடம்பன் அதனாலேயே ஆரம்பத்திலேயே அவளை இங்கு அழைத்து வந்து விட்டான்..
அவளை ஏமாற்றி இங்கு அழைத்து வந்த கடம்பன் கல்யாணமும் செய்திருக்க இந்த ஒரு மாத காலமும் அவளை யோசிக்கக் கூட விடாமல் காதல் புரிந்தான்...அவளை அவனது காதல் அடிமையாக்கி வைத்திருந்தான் என்றே கூற வேண்டும்..
