மான்ஸ்டர் 47
அத்தியாயம் : 47
மான்ஸ்டரும் மான்விழியும்
அந்த பாறையின் மீது அமர்ந்து இருப்பவன் அருகில் சென்றவள், " இவ்ளோ சொல்றியே நீ மட்டும் நல்லவனா என்ன??? நீயும் கேடுகெட்டவன் தானே???? சொந்த அண்ணனோட மனைவியை கல்யாண பண்ணினவன் தானே??? என்று கூற ,
அதைக்கேட்ட கடம்பன் அவளை ஒரு பார்வை பார்த்தான்...அவனது மனம் மெல்ல மெல்ல ஆறிக்கொண்டிருக்க மேலும் இவள் இவ்வாறு கேட்கவும் ,அவனது முகத்தில் பல விதமான மாற்று உணர்வுகள் உணர்வுகளின் கொந்தளிப்பில் இருந்தவன் அவளைப் பார்த்து, " யாருக்கு யாரு டி பொண்டாட்டி??? ..நீ என் பொண்டாட்டி நான் தான் உன் புருஷன்...நீ யார காதலிச்சேன்னு தெரியுமா முதல்ல???"..என்று அவன் சூடாக கூற அவளோ முழித்தாள்...
"இல்ல ஒருவேளை நீ அவனைத் தான் காதலிச்சு இருக்கியா ?? "... என்று கேட்க ,
அவளோ திருதிரு என்று முழித்தாள்.."இல்லை உன்னால அடையாளம் கண்டு பிடிக்க முடியலையா அபி "...என்று வருத்தத்துடன் கேட்க
அவளோ அதிர்ந்து அவனைப் பார்த்ததும் அவனது கண்களில் என்ன தெரிகிறது இது நாள் வரை கடம்பனின் கண்களை அவள் பார்த்ததில்லை போல புதிதாகப் பார்ப்பது போல அவள் பார்க்க,
அவனோ , "என் அண்ணன் பேர் கடம்பெழிலோன் என் பேர் கடம்பெழிலன் எந்த எழிலை நீ விரும்பின??".. என்று கேட்க,
"என்ன சொல்ற??" என்று மேலும் அதிர்ந்து கேட்டாள் அவள் அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை...தான் யாரை காதலித்தோம் என்று அவள் குழம்பி நிற்க ஒரு வேளை இவன் பொய் சொல்கிறானோ என அவள் பார்வையிட்டு ,
" நான் தான் உன்னை காதலிச்ச எழில்..ஆனால் நீ என்னை காதலிச்சியான்னு நீ தான் சொல்லணும் "... என்று கடம்பன் கூற
"என்ன நடிப்பு இது?? உன்னை துளியும் நம்ப தயாராக இல்லை ஏதோ உன் குடும்பத்துக்கு இளைச்ச தூரோகத்துக்கு களங்கண்டான் அனுப்பவிச்சான் அதை பொறுத்துகிட்டேன் ஆனால் நீ செய்ததை பொறுத்துக்க மாட்டேன் இப்போ பேச்ச மாத்த பார்க்கறியா?? நீ எந்த விஷயத்தையும் எப்போ வேணாலும் மாத்தி பேசுவ செத்தவன் இல்லையே உன் பேர் என்னனு கேட்க??", என்று காரமாக கூற
அதை கேட்ட அவன் சற்று பொறுமை இழந்தான், " ஓ உன்னால நான் சொல்ல போறதை நம்ப முடியாது ன்னு எனக்கு தெரியும் அப்போ நீ என்னை காதலிச்ச மாதிரி நடிச்சு அவனை காதலித்து அவன்னு சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டியா??? அப்படியா ...சொல்லுடி சொல்லு??? உண்மையா உன் மனசில் இருந்தவன் யார்ன்னு தெரிஞ்சிக்க நானும் விருப்படுறேன் அப்போ தான் என் காதல் உண்மையா இல்லையான்னு எனக்கே தெரியும் "என்று கூற அதை கேட்ட ஆரபியோ அதிர்ந்தாள்...
கடம்பனுக்கு தெரியும் அவளை இப்படி கேட்டால் தான் அவள் வலிக்கு வருவாள் என்று இத்தனை நாள் வேறொரு விஷயத்தில் மனதை ஒரு நிலை படுத்தியவன் இப்போது சாந்தம் அடைந்து இனி இவளை சரிக்கட்ட வேண்டியது தான் என எண்ணி தான் அவளிடம் இந்த கேள்வியை முன் வைக்க..
"இல்ல நீ என்னை காதல் அப்படிங்கிற பேர்ல ஏமாத்தி இருக்க... இல்லை அவன் வந்து மோதிரம் போட்டுதும் நீ அவனை தான் லவ் பண்ண தொடங்கினியா??..இதுல எது நடந்தது நீ யாரை காதலிச்ச?? என்னையா இல்லை அவனையா??? "... என்று தெளிவாக அவளை குழப்பி விட்டு அவன் கேட்க ,
அவளோ அவன் கேட்ட கேள்வி எதுவுமே விளங்காமல் அவளுக்கு தலைசுற்றுவது போல இருக்க, "என்ன சொல்ற ஒன்னும் புரியல???..நீ தான் என்னை காதலிச்சேன்னு சொல்றியா??"... என்று அவனை நம்ப முடியாது பார்வை பார்த்தாள் ஆரபி...
"இப்பவும் உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை ரொம்ப சந்தோஷம் நானே சொல்றேன் ...எனக்கு உன் மேல நம்பிக்கை அதிகம் அபி....நான் தான் உன்னை முதல்ல காதலிச்சேன்...மன்னிக்கவும் உன்னை நான் தான் முதலில் பார்த்தேனு நெனைக்கிறேன்...இதில் என்னோட பகுதியை மட்டும் சொல்றேன்...இதுல எது உண்மை பொய்ன்னு நீயே முடிவு பண்ணிக்கோ..
நான் முதலில் உன்னை முதலில் பார்த்தது உன் பிரென்ட் ரிஷி பிறந்த நாளுக்கு நீ கேக் வெட்டிட்டு இருந்த ஏர்போர்ட் வாசலில்... அது நம்ம பிரஸ்ட் மீட்...தென் நான் தான் உன்னை காப்பாத்தினேன் .. நான் தான் உன் கிட்ட முதல்ல காதலை சொன்னேன்..நீயும் என்னை காதலிச்ச.. உனக்காக வேலை தேடிட்டு வரேன்னு சொல்லி போனதும் நீயும் சந்தோஷமா என்னை வழி அனுப்பி வைச்ச ஆனால் அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு சுத்தமா தெரியல..நான் வேலை தேட கொஞ்சம் லேட் ஆகிடுச்சு... திரும்ப உன்னை தேடி வந்தா அவன் கூட நீ சிரிச்சு பேசிட்டு இருக்க...அவன் உன் விரல்ல இந்த மோதிரத்தை போட்டுட்டு இருக்கான் நீயும் சந்தோசமாக இருக்க அப்போ நான் என்ன நினைக்கிறது தெரியாமல் வெறுத்து அந்த இடத்தை விட்டே போயிட்டேன் என் மனசு சொல்லுச்சு உனக்கு என்னை தான் பிடிக்கும்னு ஆனால் ஒரு வேளை அவனையும் பிடித்து இருக்குமோன்னு மூளை குழம்பி போச்சு இப்போ சொல்லு நீ யாரை காதலிச்ச என்னையா இல்லை அவனையா???"... என்று அவளிடமே அவன் கேள்வி கேட்டான்...
"நீங்க என்னை பார்த்தீங்களா என்கிட்ட பேசுவீங்களா?? உங்களுக்கு என்னை தெரியுமா?? எப்படி நாம மீட் பண்ணினோம் நான் உன்னை எப்படி காதலிச்சு இருக்கேன்னு நீ சொல்லி நான் கேட்க எனக்கு பிடிக்கும் ஆரபி அதான் கேக்கறேன் சொல்லு ஆரபி "...என்று எழில் இடையிடையே பேசியது ஞாபகத்துக்கு வர, அவளுக்கு குழப்பமாக இருந்தது...ஆனால் யாருக்கும் இந்த கஷ்டம் வர கூடாது என எண்ணிக்கொண்டாள் அவன் கூறுவதை அவளால் நம்ப கூட முடியவில்லை...
அவனை நம்பாத பார்வை பார்க்க அதை கண்ட அவனோ, " அப்படி பார்க்காத அபி வலிக்குது நீ என்னை காதலிக்கல சொன்னா கூட பரவாயில்லை ஆனால் இப்படி பார்க்காத"... என்று கூறியவன் மேலும் அவளை பார்த்து,
"உனக்கு பிடிச்சது மழை, கடல் உனக்கு அழனும் தோணினா கடற்கரைக்கு வருவ உனக்கு சிரிக்கனும் தோணினா நீ மழைக்காக ஏங்குவ... உனக்கு அழுகை வந்தா சாக்லேட் சாப்பிடுவ கோபம் வந்தா யார்கிட்டயும் பேச மாட்ட ..நீ ரொம்ப சந்தோஷமா இருந்தா சமைப்ப அப்படி எனக்கு உன் கையால ஒரு பாஸ்தா பண்ணிட்டு வந்த அது மட்டும் தான் உனக்கு சமைக்க தெரியும் ..வேற எதுவும் உனக்கு சமைக்க தெரியாது...உனக்கு பைக்கில் லாங் டிரைவ் போகணும்னு என்கிட்ட எப்போவும் சொல்லுவ இது மாதிரி நெறைய இருக்கு..."... என்று அவளை பற்றி அவன் காதலித்த போது நடந்த விஷயத்தை எல்லாம் மிக சரியாக அவன் கூற அவளோ மறு வார்த்தை பேசாமல் அதிர்ந்து விழித்தாள்..
மேலும் அவன் கடற்கரையில் பழகிய குழந்தைகளை தற்போது அவன் தான் படிக்க வைக்கிறான் அவர்களை பார்த்து கொள்வதும் அந்த ஆயா தான் இவன் தான் அவர்களின் காப்பாளர் இந்த விஷயம் யாருக்கும் தெரியாது அதையும் அவளிடம் கூறி அவர்களுடன் அவன் முன்பு எடுத்த புகைப்படம் மற்றும் தற்போது எடுத்த புகைப்படம் அனைத்தையும் அவளிடம் காட்ட அவளுக்கு தெளிவாக புரிந்தது இவன் தான், தான் காதலித்த காதலன் என்று இருந்தாலும் ஏதோ ஒன்று அவளை சுழற்றி கொண்டிருக்க ,
அவனோ வீடியோ கால் செய்தான் அந்த பிள்ளைகளுக்கு போனை ஸ்பீக்கரில் இட, அந்த சிறுவர்களோ, " என்ன அண்ணா அக்கா சொல்லாமல் போய்ட்டாங்கலாமா ஆயா சொன்னாங்க ??..குட்டி பசங்க எப்படி இருக்காங்க?? அக்காவை சீக்கிரம் கூட்டிட்டு போயிடு அண்ணா அக்கா பாவம் " என்று கூற அதை கேட்ட அவளுக்கு விளங்கியே விட்டது அது அவன் தான் என்று காதலனை தன் காதலனாக கணவனாக முதன் முறையாக தெளிவாக அவனை கண்டவளுக்கு அழுகை முட்டியது..
"அப்போ நீ தானடா அது ??"...என்று கண்ணீர் மல்கக் கேட்டாள் ஆரபி...
" ஏன் டி அது கூட உனக்கு தெரியலையா டி ??"...என்று அவனும் கலங்கிய விழிகளுடன் கூற ,
அவளோ, "எத்தனை தடவை கேட்டிருப்பேன் நீ வாயை தொறக்கலையே டா ...நீ இந்த விஷயத்தை சொல்லாமல் இருந்து இருந்தா உனக்கு அண்ணன் இருந்ததோ இல்லை அவனை நான் பார்த்ததோ கூட எனக்கு தெரிஞ்சு இருக்காதே டா ஏன் டா?? ஏன் டா?? இப்படி பண்ணின?? அவனை நான் காதலிக்கவே இல்லை டா நான் நீ ன்னு நினைச்சு தான் டா வேன் கூட பழகினேன்"...என்று கண்ணீரோடு கேட்டாள் ஆரபி...
அவளோ முடியாமல் அவனை கட்டியணைத்து கொள்ள அவனும் அவளை அணைத்து கொண்டான் ..அவள் முகமெங்கும் முத்தங்களால் கோலமிட்டு தனது உணர்ச்சிகளை அவளுள் புதைக்க முயற்சி செய்தான் அவளோ அவனது காதலில் கரைந்து உருகி நின்றாள்...
அவள் கூறுவதிலும் நியாயம் உள்ளது தானே அவன் அவளிடம் இதை கூறாமல் இருந்து இருந்தால் அவளுக்கு தெரிய வாய்ப்பு இல்லையே...அவளை தன் கை வளைவுக்குள் வைத்து,
அவனும் , "என்னால முடியல டி இந்த வாழ்க்கையை வாழவே பிடிக்கல டி ஒரு பக்கம் இத்தனை நாள் நான் வாழ்ந்த இருண்ட வாழ்க்கை.. இன்னொரு பக்கம் அண்ணன் நான் காதலிச்ச பொண்ணை என் கண் முன்னாடி அவ கூட அவன் இருக்கும் அந்த பொண்ணும் அவன் கூட சிரிச்சு பேசிட்டு இருக்கா நான் என்ன நினைக்கறது?? சொல்லு அப்போ கூட எனக்கு உன் மேல சந்தேகம் வரலடி அப்போவும் என் அண்ணன் மேல தான் சந்தேகம் வந்துச்சு அப்போவும் நான் குடும்பம்னு சொல்லி ஒதுங்கி வாழ தான் நினைச்சேன்.... ஆனா என் அண்ணன் அவனே எனக்கு துரோகம் பண்ணிட்டானே என நினைக்கும் போது அவனை விட்டுக்கொடுக்கவும் முடியாமல், அவன் கூட சண்டை போடவும் முடியாமல் உன்கிட்டேயும் கேட்க முடியாமல் நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும்...
அப்படி நான் தவிச்ச அப்போ தான் அவனோட மரணம் உன்னோட நினைப்பு கூட எனக்கு பின்னுக்குத்தள்ளி போயிடுச்சு ..அதுவும் அவனோட ஒரு கொடூரமான மரணம்...
நாங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்துல பொறந்து ஒரே மாதிரி வளர்ந்து ஒரே இடத்தில் நாலு சுவத்துக்குள்ள ஒன்றல்ல இரண்டல்ல 28 வருஷமா இருந்திருக்கோம்.. அதுவும் அவனோட மரணம் என்னை மிருகமா மாத்திடுச்சு அமைதியாய் இருந்த என்னை இப்படி ஆகிடுச்சு ...உன் மேல கூட எனக்கு வெறுப்பு வந்துச்சு... நீ அவருடைய பொண்ணுன்னு தெரிஞ்சதும் உன்னையும் சேர்த்து வதைக்கனும்னு நினைச்சேன்... ஆனா நான் உன்மேல வெச்ச காதல் என்ன அப்படி செய்ய விடல... இதுக்கு பேரு என்னன்னு எனக்கு தெரியல என்னால முடியலடி... அப்பவும் எனக்கு உங்க அப்பா மேல இருக்கிற கோபம் உன் மேல திரும்பிச்சு...என் அண்ணா தான் உன்னை ஏமாற்றினானா இல்ல நீ தான் என் அண்ணனை ஏமாற்றினியான்னு நினைச்சேன்... அண்ணனையும் என்னையும் ஏமாற்ற வந்த ஆள் தான் நீன்னு நினைச்சேன்...அப்போ நான் உன் மேல வெச்ச காதல் எங்கே போச்சுன்னு எனக்கு தெரியல... அதுக்காகத்தான் அவன் கல்லறையை காட்டி நீ காதல்ன்னு பேர்ல ஏமாத்தின ஒருத்தனை பார் செத்து கிடக்கிறானே பார்ன்னு உனக்கு காட்டினேன்... ஆனா நீ நித்தமும் வாடின அதை பார்த்து எனக்கு ஒரே குழப்பம் ஆனாலும் என் மனசு சொல்லிச்சு அவ உன்னை தான் காதலிக்கிறான்னு நீயா சொன்னா உன்னை ஏத்திட்டு வாழலாம்னு இருந்தேன் நானா சொல்ல மாட்டேன்னு அந்த நேரத்தில் அப்படி ஒரு மனநிலையில் இருந்தேன்... ஆனா நீ சொல்லவே இல்லை.. அப்ப நான் நினைச்சேன் என்னை விருப்பம் இல்லை நீ என் அண்ணனை தான் காதலிச்சு இருக்கன்னு அப்போ தான் உன்னை விட்டு "... என்று கூறிக் கொண்டு இருக்க
"விருப்பம் இல்லனா விட்டுட்டு போயிடலாம் நினைச்சியா?? இல்ல எப்படியோ போகட்டும் தலைமுழுகலாம்ன்னு நினைச்சியா??"... என்று அவள் கேட்க
அவனோ அவள் கூறியதில் மென்மையாக சிரித்து, "அப்படி நினைச்சிருந்தா உன்ன வர வைத்திருக்கவே மாட்டேன் டி... உன் முன்னாடி கெட்டவங்கிற பேரோட வாழ்ந்துட்டு இருக்க மாட்டேன் நீ சொல்லு...என்னை நம்பறியா??"... என்று கடம்பன் பாவமாக கேட்க,
அவன் அருகே நின்று கொண்டிருந்தவள் அவனை அணைத்துக் கொண்டாள் ஆரபி... அவள் கண்ணில் மீண்டும் கண்ணீர் வழிந்தது," ஏன் டா நீயும் கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டப்படுத்தி நம்ம எல்லாத்தையும் கஷ்டப்படுத்திட்டு இருக்க ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே "... என்று அவள் கூற,
" நான் சொல்லியிருந்தாலும் நீ நம்பி இருக்க மாட்ட டி ...எனக்கு முன்ன களங்கண்டான் வந்து இருந்தான்னா நீ அவன் சொல்றதை தான் நம்பி இருப்ப அவனை பத்தி உனக்கு தெரிஞ்சி இருக்கோமோன்னு நினைச்சேன் அது தான் நான் அவன் வருகைக்காக காத்திருந்தேன்...
அப்போ தான் புரிஞ்சது உனக்கு அவனை தெரியல நீ அவனை பார்த்ததே இல்லைன்னு எனக்கு ஒரே லட்சியம் அவனோட உயிர் அதுக்காக என்ன வேணாலும் செய்யலாம்னு நினைச்சேன்... அந்த சமயம் நீ , நான் உன் மேல வெச்ச காதல் எதையும் உணரவும் முடியல,உணராமல் இருக்கவும் முடியல ஒரு வேளை என் அண்ணன் காதலியா இருப்பியோன்னு சந்தேகமும் வேற, இதை எல்லாம் விட நீ களங்கண்டானோட பொண்ணு அதை என்னால ஏத்துக்கவே முடியல ரொம்ப தவிச்சேன் தெரியுமா ??? "...என்று கூற
அவளோ, " இவ்வளவு பேசுறியே என்னோட தவிப்பு நீ புரிஞ்சுக்கவே இல்லையா?? அந்த மனுஷனோட பொண்ணா பொறந்தா நான் அந்த ஆள் மாதிரி தான் இருப்பேன் நீ எப்படிடா நினைக்கலாம்?? "... என்று அவள் வினவ
"நான் தான் சொன்னேனே ஒரு பக்கம் எல்லாம் புரியும் மறுபக்கம் நீ என்கிட்ட நடிக்கிறேன் தான் நினைச்சுட்டு இருந்தேன் அதுவும் களங்கண்டான் அனுப்பி தான் நீ வந்து இருப்பனு நினைச்சேன் பல வித குழப்பங்களில் இருந்தேன் அபி அதுல இதுவும் ஒன்னு ஆனால் உன்னை கஷ்டப்படுத்தும் வதைக்கணும் என்னென்னவோ நினைச்சேன் ஆனா எதுவுமே என்னால உன் முகத்தை பார்த்தா செய்ய முடியலடி செய்ய முடியல... உன் கண்ண பார்த்தா நான் கரைந்து விடுவேன் அது உனக்கே தெரியும் ... அப்படி தான் ஒவ்வொரு நொடியும் கரைஞ்சிட்டே இருந்தேன் "... என்று கூற,
அதைக் கேட்ட போது அவளோ உருகினாலும், "அப்புறம் ஏன்டா என்ன குழந்தை பிறந்ததும் தவிக்கவிட்ட???"... என்று கேட்டாள் ..
"நீ தானடி குழந்தைகளை பாவ மூட்டை பாவ மூட்டை என்று சொன்ன அது தான் உனக்கு உன்னோட தாய்மையை உணர வைக்கணும்னு சொல்லித்தான் நான் அப்படி செஞ்சேன்..மேலும் நீ அவனை தான் நினைச்சு இருக்கியோன்னு நினைச்சு தான் விலகினேன்"... என்று கூற
"இப்ப சொல்லு அபி..நான் உன் கிட்ட தப்பு பண்ணி இருக்கேன் என்னோட சூழ்நிலை நான் அப்படி நடந்து கிட்டேன்...இப்போவும் இந்த பதவி மேல எல்லாம் எனக்கு விருப்பம் இல்லை ..அதே மாதிரி இந்த கடுமையாக இருக்கணும்னு நான் நெனைச்சது இல்லை...ஆனால் நான் இப்போ போட்டு இருக்கிறது ஒரு விதமான மாஸ்க் அதை என்னால கழட்ட முடியாது... நான் உன்னை தொல்லை செய்து இருக்கேன்..அதுக்கான விளக்கத்தை கொடுத்து இருக்கேன்னும் நெனைக்கிறேன் நீ இந்த நிலையிலும் நீ லவ் பண்றியா இல்லை இப்போவும் ரிங் போட்டவன் தான் புருஷன்னு சொல்லிட்டு இருக்க போறியா ?? "...என்று கேட்க
"நான் இப்பவும் அப்பவும் எப்பவும் லவ் பண்ணினது நான் முதன்முதலில் பார்த்த எழிலை தான் என் கையை புடிச்சிட்டு என்ன காப்பாத்தின எழில் சுண்டல் வித்திட்டு திரிஞ்ச எழிலை தான் நான் உணர்வு பூர்வமா காதலிச்சேன் ..உன் அண்ணன் மட்டும் இப்போ உயிரோட இல்லை அவன் இருந்து இருந்தா அவனை நான் கொலை பண்ண வேண்டி இருந்து இருக்கும் அவன் செஞ்ச வேலைக்கு தப்பிச்சுட்டான் "... என்று கூற அதை கேட்ட அவனும் அவளை அணைத்துக்கொண்டான்..
வீட்டிற்கு வந்ததும் அவளது குழந்தை செல்வங்களை வாரியெடுத்து உச்சி முகர்ந்து அவர்களுக்கு அமுது ஊட்டிய பின் தான் அவள் சமாதானம் அடைந்தாள்...
மான்ஸ்டர் வருவான்..
