Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 46

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 46

மான்ஸ்டரும் மான்விழியும்

கடம்பனின் கையில் உள்ள துப்பாக்கி வழியாக பாய்ந்த தோட்டா தான் களங்கண்டானின் கையைத் துண்டாக்கியது ..அந்த துப்பாக்கியின் மாயமா இல்லை அந்த தோட்டாவின் மாயமா தெரியவில்லை... கை துண்டாக்கி விட்டது...

ஏற்கனவே ஒரு கையை இழந்த அவர் இப்பொழுதும் மறு கையையும் இழந்து வலியால் துடித்து கதறினார்...அவருக்கும் நொடி பொழுதில் என்னவென்று அவரால் கிரகிக்க முடியவில்லை..அவன் இருக்கும் இடத்தில் இருந்து இவர் இருக்கும் இடத்திற்கு வந்தால் கூட கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணம் இருக்கும் இருந்தும் நான் குறுங்செய்தி அனுப்பிய அடுத்த நொடி வந்து நிற்கிறானா என யோசிக்க கூட அவகாசம் இல்லாமல் அவரது கை மிகவும் வலியை அவருக்கு கொடுத்தது..

ஆரபியோ அதிர்ச்சியில் உறைய அவளை பார்த்துக்கொண்டே அந்த மரத்தின் மறைவில் இருந்து மெல்ல வெளியே வந்தான் கடம்பன்...உண்மையில் ஆரபிக்கும் தன்னை தன் தந்தை கொன்று விடுவார் என தான் நினைத்து கொண்டிருக்க அங்கு கடம்பனை கண்டதும் மேலும் அவளுக்கு அதிர்ச்சி தான்...மேலும் இவ்வளவு நாள் அவன் மீது வைத்திருந்த வெறுப்பு நொடி பொழுதில் கரைவது போல உணர்ந்தான் தன் உயிர் தன்னை தேடி வருவது போல உணர்ந்தாள்..அதுவும் தன்னை காப்பாற்ற வந்திருக்கிறான் என அவளது உள்மனம் அந்த அதிர்ச்சியிலும் அவளிடம் கூறியது..

அவளை பார்த்துக் கொண்டே நடந்து வந்தவன் கண்ணில் அங்கேயே வலியால் துடித்துக்கொண்டிருந்த களங்கண்டான் தனது செயற்கை கை மூலம் எழ முயல அதற்குள் அங்கே வந்து சேர்ந்தான் கடம்பன்...

ஆரபியோ என்ன நடந்தது என்று விளங்காமல் அதிர்ச்சியில் உறைந்து நிற்க அவளை பார்த்துக் கொண்டே மேலே ஏறி வந்த அவனோ அவள் அருகே போய் நின்றான்..அவளோ பேயறைந்தது போல நிற்க அவளை கண்களாலேயே அவளுக்கு ஒன்றும் இல்லையே என ஒரு நொடி ஆராய்ந்தவன்,

கீழே துடித்து கொண்டிருக்கும் களங்கண்டான் முன் நின்று , "என்னை இந்த நேரத்தில் எதிர்பார்க்கல போல நான் வருவேன்னு எதிர்பார்க்கவே இல்லைன்னு உன் இருண்ட முகமே சொல்லுதே நீ இங்கே வரும் போது நான் எந்த இடத்தில் தான் இருக்கேன் அது உனக்கு தெரியல...அது உன் விதி...நீ இப்படி தான் அதுவும் நான் முடிவு பண்ணின மாதிரி தான் சாகணும்னு இருக்கு...

என்ன செய்யறது பேசாமல் இன்னிக்கே செத்திடு ...உனக்கு நான் சான்ஸ் கொடுத்திருந்தேன் ஆனா உனக்கு அதை யூஸ் பண்ணிட்டு தப்பிச்சு போக தெரியல ஒரு கையை மட்டும் எடுத்து உன்ன விட்டு வெச்சி இருந்தா நீ தப்பிச்சு போகாமல் மறுபடியும் என் வலையில சிக்கி இருக்க..இதுல என் பொண்டாட்டியை கொல்ல ட்ரை பண்றியா?? நீ இதை தான் செய்வேன்னு எனக்கு நல்லா தெரியும் டா அது தான் நான் அழுத்தி அழுத்தி சொன்னேன் உன் ரத்தம் வயிற்றில் என் ரத்தம்ன்னு ...நான் நினைச்ச மாதிரியே அவளை கொல்ல முடிவு பண்ணிட்ட அப்படி என் பொண்டாட்டியை விட்டுட்டு போயிடுவேனு நினைப்பா??..உன் மெசேஜ் பார்த்து நான் பதறி துடிச்சு வருவேன்னு எதிர் பார்த்தியா?? அந்த பிக்சர் இங்கே இல்லை.. " என்று கடம்பன் கூற..

அவரோ கதறிக் கொண்டிருக்க அதை கண்டவன் , " நீ துடித்து துடித்து சாகணும் அதுவும் இவ முன்னாடி "... என்று கூறிய கடம்பன் , "என்ன நீ பண்ணின வீர சூர பராக்கிரம வேலையெல்லாம் உன் பொண்ணு கிட்ட சொல்லி பெருமைப்பட்டு இருந்த போல??? உன் பொண்ணு பெருமைப்பட்டாளா "...என்று கூற,

களங்கண்டானோ அந்த வலியிலும், " என்னோட இன்னொரு கையையும் துண்டித்த உன்னை நான் சும்மா விட மாட்டேன் டா "... என்று கூறி அவரது செயற்கை கையில் அவர் பொருத்தப்பட்டிருந்த ஐந்து விரல்களிலிருந்து ஏதோ ஒரு பட்டன் போல இருந்த ஒன்றை அழுத்த அதிலிருந்து மிகப்பெரிய ஐந்து ப்ளேட் போன்ற நீண்ட கத்திகள் வெளியே வந்தது...

அதை வேகமாக கையை அசைப்பது போல அவர் அசைக்க அது கடம்பனின் காலில் கீறிக்கொண்டு ஆரபியின் காலில் பதம் பார்க்க போக அதற்கும் ஆரபியின் இடையை வளைத்து அவளை தூக்கி இருந்தான் கடம்பன்..அவன் சட்டென்று இடையை தூக்கி வளைக்கவும் அவளோ பிடிப்புக்காக அவனது சட்டையை முறுக்கி பிடித்தவள் ஒரு நொடி அவனது முகத்தை அருகில் கண்டவளுக்கு அவன் கண்களில் காண்பது என்ன அவளுக்கு புலப்படவில்லை..தனக்கு என்ன ஆனாலும் உன்னை பாதுகாப்பேன் என அந்த கண்களில் அவன் உணர்த்தி கொண்டிருந்தான் அது அவளுக்கு விளங்கவில்லை அவனுக்கும் அவளை இறக்கி விட மனமில்லை அதற்குள் வந்த வேலையை பார்க்க வேண்டும் என கருதி அவளை இறக்கி விட

அவளோ அவனது காலில் வழியும் ரத்தத்தை காண அவனிடம் அவள் ஏதோ கூற போக அவனோ , "ஒன்றும் பேசாமல் இங்கேயே நில்லு..உன் அப்பன் இப்போ சாக தான் போறான் அதுவும் என் கையில்.. "...என்று கூறியவன் நொடி பொழுதில் அவனது கையில் இருக்கும் துப்பாக்கியால் களங்கண்டானின் கால்களையும் சுட அவரோ துடித்தார் ...

அவருக்கு நா வறண்டு விட்டது...வலி தாளாமல் மீண்டும் கதறினார்... அவரோ வலியால் மயக்கமாக போக , "நீ அவ்ளோ சீக்கிரம் சாகக்கூடாது டா ...உனக்கு சாவு இப்படி வர கூடாது டா "...என்று கூறியவன் என்னவோ வெறி பிடித்தவன் போல காணப்பட்டான் கடம்பன்..அவனது செயல்கள் எல்லாம் மிக மிக ஆக்ரோஷமாக இருந்தது...அவனது கண்ணிலும் செயலிலும் ஒரு துளி இரக்கம் இல்லை..

அவரை ஒரு மரத்தின் கிளையில் தலைகீழாக கட்டி தொங்க விட்டான்.. அவரோ உயிருக்கு ஊசலாடி கொண்டிருக்க ஏதோ முனகல் மட்டும் தான் வந்து கொண்டிருந்தது அவருக்கு அவனோ, " இதே மாதிரி தான நீ என் அண்ணன் கடம்பெழிலோனை பண்ணின??? அவனும் இதே மாதிரி தானே துடிச்சு இருப்பான் அவனுக்காவது நீ மயக்க மருந்து கொடுத்த நான் உனக்கு நினைவு இருக்கும் போதே உன்னை அறுக்கிறேன் "... என்று கத்தி கூற,

ஆரபிக்கோ இந்த கொடூரம் காண பிடிக்காமல் கண்களை மூடிக்கொள்ள அவனோ விடாமல் " ஏன் டி கண்ணை மூடிட்டு இருக்க திற திறந்து பார் ".. என்று கத்தினான்..

அவளால் தன் முன்னால் ஒரு உயிர் போராடிக் கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை... என்ன தான் சற்றுமுன் அவள் வீர வசனம் பேசிக் கொண்டிருந்தாலும் தன்னை கொலை செய்ய அவளது தந்தை முயன்று இருந்தாலும் அவள் கண் முன்னே உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதை காண சகிக்காமல், " ப்ளீஸ் அவர விட்டுருங்க"... என்று கூற ,

அதைக் கேட்டதும் எங்கிருந்து தான் ஆத்திரம் சிலிர்த்துக் கொண்டு அவனுக்கு எழுந்ததோ தெரியவில்லை , "உனக்கு ஏன் பார்க்க முடியலையோ.. உன்னை பெத்த அப்பன்னு உனக்கு பாசம் பொங்குதோ அப்போ என் குடும்பத்தை என் வீட்டு மூன்று பேரையும் கொன்னு இருக்கான் அதுவும் துடிதுடிக்க கொன்னு இருக்கான் ...

அப்போ நான் இதையெல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்கனுமா சொல்லுடி சொல்லு இவனை விட்டு வைக்கணுமா சொல்லு இவனை விட்டு வைக்கவே கூடாது டி "...என்று கத்த அவனுக்கு ஆத்திரம் இவ்வளவு நடந்தும் அவளுக்கு அவன் மீது ஈரம் சுரக்கிறதே என்று அதுவும் களங்கண்டானே உண்மையை கூறியும் அது புரியாமல் இருப்பவளை என்னவென்று சொல்வது என நினைத்த கடம்பன் ஆத்திரத்துடன், " இதோ பார் இதுக்காக தான் நான் காத்திருந்தேன் அந்த நாள் இப்போ தான் வந்திருக்கு இல்லை இவனை எப்போவோ கொன்னு இருப்பேன்... ஆனால் உனக்கும் இந்த விஷயம் எல்லாம் உனக்கும் தெரியும்ன்னு சொல்லித்தான் காத்திருந்தேன் அது அவன் வாயால சொல்லன்னும்னு தான் காத்து இருந்தேன்... அதுவும் இப்போ நடந்துருச்சு உன் அப்பன் லட்சிணத்தை பார் ...இவனை சும்மா விட்டு பூஜை பண்ண சொல்றியா இல்லை எனக்கு பொறந்த குழந்தைகளையும் இவனுக்கு தாரை வார்க்க சொல்றியா?? "... என்று கூற, அவளோ இவனை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணறினாள்...

அவனோ களங்கண்டானின் ஒற்றை செயற்கை கையை மட்டும் விட்டு வைத்தவன் அதில் விரலில் நீட்டி கொண்டிருந்த கத்தியை பிடுங்கி அவரது வெட்டுப்பட்ட கையை அனைத்தையும் தூக்கி மீனுக்கு இறையாக போட்டான்...

மேலும் அதேபோல அவரது இரண்டு கால்களையும் விசிறி எறிந்தவன் இப்போ, " நீயும் மீனுக்கு இரையாக போ "...என அவனது கால்கள் அதையும் நீருக்குள் இட்டவன் விழி பிதுங்கி கண்கள் சொருகி இருக்கும் களங்கண்டானிடம், " அப்போ அடுத்த டாஸ்க் என்னன்னு பாக்கறியா??"... என்று அவன் கையில் வைத்திருந்த சிறு பாட்டில் பெட்ரோலை அந்த சதைப் பிண்டமாக இருக்கும் அவரது உடலில் ஊற்றினான்..

அவன் கத்தியதில் அமைதியாக கண்ணையும் வாயையும் மூடி கொண்டு இருந்தவளுக்கு இந்த காட்சியை காணும் தைரியம் துளியும் இல்லை...அவளோ கதறி , " வேண்டாம் வேண்டாம் "...என்று கூற அவனோ கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் அவள் கண் முன்னே அந்த உடலில் பெட்ரோலை ஊற்றியவன், " நீ எப்படி மத்தவங்களை கொன்னியோ அந்த வலியை நீயும் அனுபவிக்க வேண்டாமா "... என்று கூறி களங்கண்டானின் உடலையும் கொளுத்தினான்...

அவரோ தன் உடல் பற்றி எரிய அந்த எரிச்சல் தாளாமல் அவர் துடித்த அந்த சத்தம் அந்த கானகம் முழுவதும் கேட்டது அதன் எதிரொலியாக வனத்திலுள்ள அனைத்து மிருகங்களும் சத்தங்கள் எழுப்பின...தன் கண் முன்னே
உடல் ஒரு உயிர் உயிரோடு அவர்கள் முன்னே கருகி கொண்டிருந்தது..

பழி வெறி என துடித்த களங்கண்டான் பிறர்க்கு என்ன எல்லாம் தீங்கு செய்தானோ அந்த தண்டனை எல்லாம் அவன் பெற்று துடி துடித்து நகரித்து மறித்தான்... அவன் உடல் கருகி கொண்டிருப்பதை ஒரு வித வெறியோடு பார்த்து கொண்டிருந்த கடம்பனின் மனதில் மெல்ல மெல்ல அவனது வெறியும் அடங்கி கொண்டிருந்தது...

தன் முன்னால் ஓர் உடல் கருகி கொண்டு இருப்பதை காண முடியாமல் கதறியவள் வேகமாக கடம்பன் அருகே வந்து அவனது முகத்திலும் மாரிலும் மாறி மாறி அறைந்தாள்... அவளோ அடிக்க அவனோ களங்கண்டான் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருந்தான்..

"உனக்கு இப்போ உனக்கு திருப்தியா இருக்கா?? ஒரு உயிரை எப்படி டா இப்படி நோகடிச்சு சாகடிக்கிறீங்க???..உங்களுக்கு யார் மனுசன்னு ஒரு பட்டம் கொடுத்தா மிருகம் மாதிரி நடந்துக்கறீங்க அவன் என்ன டா கொலைக்கு மேல கொலை செஞ்சு இப்படி எரிஞ்சிட்டு இருக்கான் இனி அவனை உயிரோட கொல்ற அதுவும் நகர வேதனையை அவனுக்கு கொடுத்து கொல்ற"... என்று அவள் வெடிக்க,

"என்ன உன் அப்பன் என்ன பண்ணினாலும் பரவாயில்லைன்னு சும்மா விட சொல்றியா?? "...என திருப்பி கேள்வி கேட்க,

அவளிடம் பதில் இல்லை , "அதுக்கு இது தான் தீர்வா ?? "...என்று கேட்க,

" நான் இப்போ அவனை கொலை செய்யலனா இன்னிக்கு நீ நாளைக்கு நீ பெத்த குழந்தைகள் இப்படி எரிஞ்சிட்டு இருப்பீங்க..இப்போ சொல்லு அவனை சும்மா விட சொல்றியா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னியே மனித உருவில் உள்ள மிருகமான அவனை சும்மா விட சொல்றியா???"... என்று கூற,

அதைக் கேட்கும் போதே அவளது மனம் பதறியது...கடம்பன் குழந்தைகளை பற்றி கூறியதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை ...

"என்ன உன்னால நினைச்சு பார்க்க முடியலையா அப்படி தான் என் அப்பா என் சித்தப்பா என் அண்ணன் எல்லோரும் வரிசையா இறந்தாங்க இப்படி தான் எங்க பரம்பரையே அழிஞ்சிட்டு இருக்கு ..நீ இப்போ தவிச்ச பார்த்தியா இது மாதிரி தான் எங்க அம்மாவுக்கும் தவிச்சாங்க நானும் தவிச்சேன் "...என்று கூற ,

மேலும் கடம்பன் அவளை பார்த்து,"நான் இப்படி எல்லாம் ஒருத்தனை டார்ச்சர் பண்ணி பார்க்கனும்ன்னு நெனைச்சதே இல்லை ..ஒரு உயிரை வதைக்க நான் என்னிக்கும் நினைச்சது இல்லை...இது என்னோட வாழ்க்கை முறையே இல்லை இருந்தாலும் நான் இப்படி ஆகிட்டேன் அதற்கு காரணம் இவன் "...கடம்பன் கூற ,

அது மறுக்கப்படாத உண்மை தானே களங்கண்டான் செய்த செயல் அத்தகையது தானே இவர் என்னையே சற்று முன் கொலை செய்ய பார்த்தவர் தானே இவருக்கு இந்த தண்டனை தேவை தான் என நெனைத்தவளுக்கு அவரது மரணத்தில் (கொலையில்) சற்று அவளாக அவன் கூறுவதையும் தந்தையின் செயலையும் வைத்து கொடியவனுக்கு கொடிய தண்டனை தேவை தான் என அவளது மனம் ஆறினாலும் இதை எல்லாம் செய்ய இவன் ஒன்றும் நல்லவன் இல்லையே என்று நினைத்தவள் அவனை பார்க்க அவனோ ஒரு பாறையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தான்...அவன் முகத்தில் எந்த விதமான உணர்ச்சிகளையும் அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை...

அவளுக்கு அவனை காணும் போது பாவமாக தோன்றினாலும் இவனும் தன்னை ஏமாற்றியவன் தானே இப்போது இவன் களங்கண்டானை தண்டிக்க என்ன உரிமை அவனுக்கு இருக்கிறது என நினைத்து அவன் இருக்கும் திசை நோக்கி சென்றவளுக்கு அவனை காணும் ஆத்திரம் தாளவில்லை...செய்வதை எல்லாம் செய்து விட்டு இவன் நல்லவன் போல நடக்கிறானா?? என நினைத்தாள்...

மான்ஸ்டர் வருவான்....



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top