மான்ஸ்டர் 45
அத்தியாயம் : 45
"அம்மா உங்ககிட்ட இருந்து பிரிந்து போனதற்கு இதுதான் காரணமா??".. என்று கேட்க,
" மிக சரியா கண்டுபிடிச்சிட்டியே இதுதான் காரணம் கடம்பனோட அப்பா கதம்ப ராஜாவை நான் தான் கொன்னேன்.. அதுக்காக பிளான் எல்லாம் போட்டேன்.. அந்த பிளானை உங்கம்மா கேட்டுட்டு என்கிட்ட பிரச்சனை பண்ணினா என்கிட்ட அந்த கொலையை செய்யக்கூடாது அவங்களுக்கு பாவம் பண்ணாதீங்க அப்படின்னு என்ன என்னமோ சொன்னா.. நான் காதில் கூட வாங்காமல் கொலை பண்ணிட்டேன்.. அந்த கோபத்தில் தான் என்னை விட்டு போயிட்டா ..
அதுக்கு முன்னாடி ஒரு கொலை பண்ணினேன் அதையும் உன் அம்மாக்கு தெரிஞ்சு போச்சு அதுக்கும் கேள்வி கேட்டா நான் சமளிச்சேன்..அது கடம்பனுடைய சித்தப்பா... அதுக்கு அப்புறம் காலம் சுழன்றுச்சு...எனக்கு என்னோட இலக்கை அடையனும் அதுக்காக நான் என்ன வேணா செய்வேன்...
விஷயத்தை தெரிஞ்ச கதம்ப ராஜா என் கிட்டேயே அவனோட சித்து விளையாட்டை காட்டினான் அவனை கொன்னேன்...
ஆனா அவன் அவனுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளை மறைச்சு ஒரு குழந்தை தான் பிறந்து இருக்குன்னு சொல்லி ஊர்ல சொல்லி வச்சிட்டான் சும்மா விடுவேனா??? அதுவும் குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருந்தான் ..திரும்ப தான் அதில் ஒருத்தனை அதோ அங்க தூரமா தெரியுது பார்த்தியா அந்த ஊற்று அதுக்கு அப்புறம் ஒரு கடல் இருக்கு அந்த கடலில் வெச்சு தான் அவனோட இரண்டு கை இரண்டு காலை அறுத்து பண்ணி மீனுக்கு போட்டுட்டு வெறும் முண்டமாக அவனை படுக்க வச்சு இருந்தேன்..துடிச்சிட்டு இருந்தான்..சரி இறந்துட்டான் அரச வம்சம் அழிந்து விட்டதுன்னு பார்த்தா புதுசா கடம்பன்னு சொல்லி ஒருத்தன் முளைச்சு வரான்...அப்புறம் தான் விஷயத்தை என்னால கணிக்க முடிஞ்சது..என்னையே ட்ரிகர் பண்றானாம்... இதுல எல்லாம் தப்பிச்சுது உன்னோட புருஷன் தான்...அதுவும் உன்னை அவன் கஸ்டடியில் வெச்சு இருந்தான் அதான் என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன் சரியா நீ சிக்கிட்ட ".. என்று கூற
விஷயத்தை அறிந்து கொண்டாள்...முழு ராக்சியத்தையும் தெள்ளத் தெளிவாக தெரிந்து கொண்ட அதுவும் திருடனின் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்கு வீரியம் அதிகம் தானே.. அதை உணர்ந்து கடம்பன் தன்னை எதற்காக அழிக்க துடித்தான் எனவும் புரிந்துகொண்டாள்...யார் புறம் நியாயம் என்பதையும் புரிந்து கொண்டாள்..
ஆனால் அவனும் அவனது வீட்டாரோ அவளை உடல் அளவிலோ அல்லது மனதளவிலோ எந்த விதமான தொல்லையும் செய்யவில்லை கடம்பனை தவிர...அவர்கள் அனைவரும் இங்கிருந்து சென்று விடு என்று தான் அவளிடம் கூறினர் அவர்களுக்கு இருக்கும் இரக்கம் கூட பெற்ற தந்தைக்கு இல்லையே என நினைத்தாள்... இருந்தும் பெற்ற தந்தையே மகளை கொல்ல துடிப்பது பெருத்த வருத்தமான விஷயம் தான்...
"அப்போ நீ என்னை பாசத்தோடு எல்லாம் கூட்டிட்டு வரலையா??? கொலை செய்யத்தான் கூட்டிட்டு வந்தியா???" என்று அவள் கேட்க
களங்கண்டானோ, " உன்னை அவங்க கிட்ட இருந்து பாதுகாக்கணும்ன்னு நினைச்சேன் அதுவும் எப்போ உன்ன தேடி வந்தேனோ.. அந்த சமயம் என் கூட நீ வந்து இருந்த அப்படின்னா இந்த இந்த தவறெல்லாம் நடந்து இருக்காது...ஆனால் நீ என் கூட வர மறுத்து விட்டாய்... அப்போ கொஞ்சம் பாசம் இருந்துச்சு ...ஆனா இப்போ பாசம் இல்லை ஒன்னும் இல்லை ...
ஏன்னா நீ இப்போ கடம்பனோட பொண்டாட்டி அந்த அரண்மனையோட தற்போதைய மகாராணி எப்படி உன்னை பாசமா வரவேற்க சொல்ற??? உன் அப்பனுக்கு அந்த அளவுக்கெல்லாம் நல்ல மனசு இல்லை எனக்கு நான் போடற தான் சட்டம் நான் சொல்வதுதான் சரி அதை விட்டு வேற எங்கேயும் நான் மாறமாட்டேன்"... என்று கூற
அதைக்கேட்டு அவளோ இடியென அதிர்ந்தாள் ...அதற்கு மேலும் அவளுக்கு பொறுமை இல்லை...களங்கண்டான் முகத்திலேயே காரி உமிழ்ந்தாள்..
"ஏண்டா இப்படி எல்லாம் பண்றீங்க உங்க பழி வெறிக்கு நான் தான் கிடைச்சேனா ஒருத்தன் என்னடானா உன்னை பழிவாங்க என்னை கல்யாணம் பண்ணினான் உன்னை பழிவாங்க புள்ள கொடுத்தேன்னு சொல்றான்... நீ என்னடான்னா பெத்த பொண்ண கூட கொலை பண்ற அளவுக்கு பழி வெறியில் ஊறி இருக்க...அப்படி என்னடா உங்களுக்கெல்லாம் பழி வெறி உங்க உடம்புல ஊறி கிடக்கு...
அப்படி என்னடா நீங்கெல்லாம் ரத்தத்தில் ஊறி திளைத்து போய் நிக்கிறீங்க??? உங்களுக்கு எல்லாம் பகடை காயாக நான் தான் கிடைச்சேனா ?? ஒவ்வொருத்தனும் பழிவாங்க?? அதென்னடா நீங்கலும் மனுசங்க தானே ...நீங்க பெரிய ஆளாக சுத்திட்டு இருந்தா உங்களுக்கு சாவு வராதா என்ன?? ஏன் பழி வாங்கிட்டு இருக்கிறவங்களுக்கு சாவு வராதா? உங்களுக்கு ஒரு நாள் சாவு வரத்தானே செய்யும்... அது ஏன்டா உங்களுக்கு புரிய மாட்டேங்குது... உங்க பழி வெறியால் எத்தனை பேரு இக்கட்டில் மாட்டி இருக்காங்க அதெல்லாம் உங்களுக்கு தெரியுதா ஏன்டா இதெல்லாம் நீங்க புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க "...என்று கேட்க
அதை எல்லாம் கேட்ட களங்கண்டானோ, "பரவால்ல உன் அம்மா உன்ன நல்லா தான் வளர்த்து இருக்கா இதே மாதிரி தான் அவளும் என்கிட்ட கேள்வி கேட்டா அவளை நான் பாசத்தால அடக்கி வச்சுட்டேன் உன்கிட்ட எனக்கு பாசத்தை காட்ட முடியல ஏன்னா நீ அந்த கடம்பனோட மனைவி... என்னோட ரத்தம் உன் உடம்புல இருந்துச்சுன்னா நீ அப்படி அவன் கூட போய் படுத்து இருக்க மாட்டா" என்று கூச்சமே இல்லாமல் கூற ,
அதைக்கேட்டு வெகுண்ட அவளோ களங்கண்டானின் என் சட்டையைப் பிடித்து அவரது முகத்தில் ஓங்கி அறை விட்டு , "என்னடா சொன்ன பெத்த அப்பான்னு சொல்லி அமைதியாக இருந்த பொண்ணுகிட்ட என்ன வார்த்தை சொல்ற?? கேட்க கூடாது வார்த்தை எல்லாம் சொல்றியா??.. நான் ஒன்னும் எவனோ ஒருத்தன் கூட படுத்து புள்ள பெத்துக்கல என்னை தொட்டு தாலி கட்டின புருஷன் கூட தான் டா படுத்தேன் இந்த விஷயம் மட்டும் அவனுக்கு தெரிஞ்சது உன்னோட இன்னொரு கையையும் துண்டு ஆக்கிடுவான் டா ".. என்று ஆத்திரத்தில் கத்த
அவனோ அவள் பேசியது எல்லாம் கண்டுகொள்ளாமல் , "ஆமா எனக்கு நான் என்ன நினைக்கிறேனோ அது நடக்கணும் நான் நடத்தி காட்டுவேன்"... என்று கூறிய களங்கண்டான், " நீ ரொம்ப பேசுற என்னால கேட்க முடியல மத்தவங்க எல்லாம் டைரக்ட்டா விசயமே தெரியாமல் சைலண்ட்டா கொன்னுடுவேன்... உன்கிட்ட சொல்லாம இருக்க முடியல அதனால சொன்னேன்.. உன்னோட ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு பார்த்தா நீ எனக்கே அட்வைஸ் பண்ற எனக்கு அட்வைஸ் பண்றவங்களை பிடிக்காது...நீயும் உன் அம்மா கூட போய் சேரு "... என்று கூறிய களங்கண்டான் அவரது நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கும் அவரது கையால் தன் மகளை தள்ளிவிட போக ,
நொடிப்பொழுதில் அவரது கை துண்டு துண்டாக அந்த ஆற்றுக்குள் விழுந்தது , "ஐயோ அம்மா"... என்ற சத்தம் மட்டும் தான் ஆரபிக்கு கேட்க, அங்கே வலியால் கதறி கீழே படுத்துக் கிடந்தார் களங்கண்டான்...
இத்தனை நேரம் வீரவசனம் பேசிய களங்கண்டான் தன்னுடைய மறு கையையும் இழந்து படுத்து இருக்க அவரது கையில் தோட்டா பாய்ந்து இருந்தது... தோட்டா பாய்ந்து வந்த திசையை திரும்பி பார்த்த அவளுக்கு அங்கே கடம்பன் முழு உருவமாக நின்று கொண்டிருந்தான்...
மான்ஸ்டர் வருவான்...
