மான்ஸ்டர் 44
அத்தியாயம் : 44
மான்ஸ்டரும் மான்விழியும்
தன் மகள் தன்னை முழுமையாக நம்பி விட்டாள் என உறுதி செய்துகொண்டார் களங்கண்டான்... அவளும் அவருடன் உண்மையாகவே பாசத்துடன் அவருடன் பழக தொடங்கினாள்..
அவளுக்கும் தனக்கு ஒரு உறவு கிடைத்து விட்டதே இந்த உறவாவது உண்மையாக இருக்கக் கூடாதா என ஏங்கினாள் அந்த பாவம் பெண்...ஒரு வழியாக அவள் இங்கே வந்து ஒரு வாரம் கடந்து விட்டது...அவளுடைய நண்பர்களை அழைத்து நான் இங்கே பத்திரமாக இருக்கிறேன் என்று கூறி அவர்களுடைய டென்ஷனை குறைத்தாள்...
கடம்பன் பணியில் அமர்த்திய ஆயாவோ ஆரபி சென்றதும் விஷயத்தை கடம்பனுக்கு தெரிவிக்க கடம்பனும் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறி அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தான்...
மேலும் தந்தையும் மகளும் அந்த தீவில் தினமும் நடை பயிற்சி செய்வது வழக்கம் அதுபோல இன்றும் நடை பழகிக் கொண்டே இருவரும் பேசிக் கொண்டிருந்தனர் ...
மேலும் களங்கண்டானோ, , "ஆரபி மா இங்கு ஒரு அருமையான அருவி இருக்குமா வா நான் உனக்கு காட்டறேன் இந்த மாதிரி ஒரு இடத்தை இதுக்கு முன்னாடி நீ உன் வாழ்க்கையில் பார்த்திருக்கவே முடியாது இனி பார்க்கவும் மாட்ட வா நான் உனக்கு காட்டுகிறேன்".. என்று கூறி அழைத்து சென்றார் ..
மகளோ , "வேணாம்ப்பா எனக்கு எதுலயும் நாட்டமில்லை பேசாமல் வீட்டுக்கே போகலாம்"... என்று கூற
அவரோ, "ஆரபி மா நீ இப்படி சொல்லக்கூடாது உன்னுடைய வருத்தத்தை எப்படி மறக்க வைக்கணும்னு அப்பாக்கு தெரியும் இனி நீ வருத்தப்பட மாட்ட அப்பா சொல்லி இருக்கேன்ல உனக்கு தேவையானதை அப்பா கண்டிப்பா செய்வேன்னு அப்பாவை நம்பு மா".. என்று கூறினார்..
இப்படி தான் தன் மகளை நடை பயிற்சிக்கு அழைத்து செல்லும் போதெல்லாம் ஏதாவது ஒரு விஷயத்தை பேசி கொண்டே வருவார் களங்கண்டான்..
மகளும் தந்தையின் பேச்சுக்கு மறுப்பு அளிக்காமல் அவருடன் சென்றாள்... அப்போதும் அவனது எண்ணமே...இங்கே இந்த மண்ணை மிதித்தது முதல் அவனுடைய எண்ணமே அவளை வாட்டி கொண்டிருந்தது... நான் வந்த விஷயம் அவனுக்கு தெரியுமா?? தெரியாதா??? யாருக்கு தெரியும்??? என்னை ஒரேடியாக கழுவி விட்டான் போல அவனது தேவை முடிந்ததும் அவன் என்னை விட்டு விட்டான்!! என் குழந்தைகளையாவது பார்த்துக்கொள்வானோ என்னவோ??? என நினைத்து வருந்திக் கொண்டே,
தன் தந்தையுடன் செல்ல தந்தையோ தன்னை குறுகுறுவென பார்த்துக் கொண்டே வருவதை கவனித்தவள் அவரது நோட்டத்தை மாற்றும் விதமாக ஒரு கேள்வியை அவர் முன் வைத்தாள்...
"உங்களுக்கும் அம்மாவுக்கும் என்ன சண்டை ??? ஏதோ ஒரு காரணத்திற்காக தான் நீங்க இரண்டு பேரும் பிரிஞ்சு இருக்கீங்கன்னு எனக்கு புரியுது... ஆனால் என்ன காரணமும் என்கிட்ட அம்மா சொன்னது இல்லை... உங்கள பத்தி பேச்சு எடுத்தாலே எனக்கு அடி தான் விழும் அப்பான்னு ஒரு வார்த்தை கூட சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்காங்க "...என்று கூற அதைக் கேட்ட களங்கண்டனோ,
தன் மகளிடம் , "நான் உங்க அம்மாகிட்ட ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன்னு சொல்லி இருந்தேன்... ஆனா என்னால செய்யாமல் இருக்க முடியல... அதனால உங்க அம்மா என் மேல கோபம்பட்டு என்னை விட்டு போயிட்டா நான் அவளை தேடாத இடம் கிடையாது எல்லா பக்கமும் தேடினேன் ஆனா எனக்கு அவ விரலை விட்டு என் கண்ணுல குத்தின மாதிரி அவள் செய்த செயல் இருந்துச்சு...
நானும் தேடி தேடி கலைச்சு போய் தான் விட்டுட்டேன் ஆனா உங்க அம்மாவோட வாக்கை நான் காப்பாற்றல அப்படிங்கறது உண்மைதான் ஆனா உங்க அம்மாவுக்கு பிறகு உங்க அம்மாவோட இடத்தில நான் வேற யாரையும் வைக்கல எனக்கு அதிலெல்லாம் நாட்டமும் இருந்ததில்லை எனக்கு எப்பவுமே உங்க அம்மா மட்டும்தான் அது அவளுக்கும் தெரியும் என்று நான் நினைக்கிறேன் "...என்று கூற
"என்ன விஷயம் பா அது உங்களுக்கு விருப்பம்னா என்கிட்ட சொல்லுங்க".. என்று கேட்க,
"உன்கிட்ட சொல்லாமலா சொல்றேன் மா ஆனால் நடந்துகிட்டே சொல்றேன் மா நீ உன் அம்மா மாதிரி மா அவளை பார்த்த மாதிரியே இருக்கு மா.. அவ ஏன் என்னை தவிக்க விட்டு போனா மா"..என்று மனைவியை எண்ணி வருந்தி கூற,
அதைக்கேட்ட ஆரபியோ தன் தந்தையின் காதலில் நெகிழ்ந்தவள், " உங்க கூட அம்மா இருந்திருக்கலாம்ன்னு தோணுது பா நீங்க சொல்றத வச்சு பார்த்தா உங்க காதல் ரொம்ப அற்புதமானதுன்னு தோணுது... ஆனா அதை அம்மா உணரல போல ... எனக்கும் உங்களை போல காதல் கல்யாண வாழ்க்கை சரியா அமையல அப்பா "... என்று தானும் அதே நிலையில் தான் இருக்கிறோம் என்பதை மறந்து தன் தந்தையிடம் கூற,
அவரோ, "ஆரபி மா நான் யாருடைய சொந்த வாழ்க்கையிலும் ஈடுபடமாட்டேன் ஆனாலும் என்னோட பெண்ணோட வாழ்க்கையில ஈடுபடக்கூடிய எல்லா தகுதியும் எனக்கு இருக்கும் என்ற நம்பிக்கையில் நான் ஒரு கேள்வி கேட்கிறேன் நீ அந்த கடம்பனை எப்படி பார்த்த மா?? "... என்று வினவ
அவளோ நடந்த விஷயங்களையும் அவனை எவ்வாறு சந்தித்து காதலித்தாள் என்பதையும் தீடீரென அவன் விட்டு சென்றதையும் கூறியவள் மேலும் தானாக தான் தன் காதலை தேடி வந்ததாக கூறினாள் மேலும் தன் தந்தையிடம் , "ஆனா நான் தேடி வந்த ஆள் இவன் இல்லப்பா".. என்று கூற
கேட்டுக்கொண்டே வந்த களங்கண்டானுக்கு தெளிவாக விளங்கியது மகள் ஆள் மாறி தேடி வந்து விட்டாள் என நினைத்தவர் அப்படியே யோசித்து கொண்டு வந்த இருவரும் அவர் சொன்ன அருவி இருக்கும் இடத்தையும் அடைந்தனர்...
அந்த அருவி பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது மரங்கள் அனைத்தும் குடைகள் போல மூடி கீழே சிறு ஊற்று ஊன்றிக்கொண்டு இருந்தது...அருகே ஒரு மலை அதில் இருந்தும் நீர் பெருக்கெடுத்து ஓடி அந்த நீர் ஏதோ ஒரு பள்ளத்துக்குள் செல்வது போல அவ்வளவு அருமையாக இருந்தது அந்த அருவி..
"அருவியை பார்த்தா மனசில் இருக்கிற பாரம் எல்லாம் போனது போல ஒரு பீல் அப்பா அருமையா இருக்கு".. என்று ஆரபி கூற,
"நான் தான் சொன்னேன்ல மா வா இந்த அருவி பக்கத்துல ஒரு மலை இருக்கே அங்கே போவோம் வா என்றழைக்க அந்த மலை மேலே ஏறினா இன்னொரு ஊற்று இருக்கு வா அதையும் உனக்கு நான் காட்டறேன் ".. என்று அழைத்தவர் மெல்ல தன் மகளை அழைத்து சென்றார் ...
கூடவே தனது எதிரியான தன் மகளின் கணவனுக்கு ஒரு செய்தியும் அனுப்பினார் அதே நேரம் கடம்பனது மொபைலுக்கு ஒரு செய்தி வர அதை எடுத்து பார்த்தான் கடம்பன்..
அதிலோ, " உன் மனைவி இன்னும் ஒரு சில நிமிஷத்துல இந்த உலகத்தை விட்டு போக போறா என்ன சொன்ன அன்னைக்கு??? முதுகுக்குப் பின்னாடி குத்திகிட்டு இருக்கும் கோழை நான்னு தானே ...இப்போ சொல்லிட்டே செய்யறேன்... எப்படி இருந்தாலும் நீ என்னை கொன்னுடுவேன்னு எனக்கு நல்லா தெரியும் அதுக்கு முன்னாடி உனக்கு சொந்தமான ஏதாவது ஒன்னை கொன்னா தான் எனக்கு திருப்தியாகும்...
என் கையை எப்படி என்கிட்ட இருந்து பறிச்சியோ அதே மாதிரி உன்னோட மனைவியை உன்கிட்ட இருந்து பறித்து எடுப்பேன்"... என்ற குறுஞ்செய்தியை கண்டவன் அந்த இடத்தில் தான் இருக்கிறான் என அவருக்கு தெரியவில்லை ...
ஆம் ஜிபிஆர்எஸ் மூலம் அவளை கண்காணித்துக் கொண்டே இருந்தவனுக்கு அவள் ஏதோ ஒரு வனப்பகுதிக்குள் செல்வது புரிந்தது அப்பொழுதே அவன் அங்கு விரைந்து விட்டான்... இதோ கண்ணுக்கு எட்டும் தொலைவில் ஒரு மரத்திற்கு பின்னால் தான் ஒளிந்திருக்கிறான் கடம்பன் வனப்பகுதி என்பதால் அதிலும் மரங்கள் அனைத்தும் மூடி இருப்பதால் வெளிச்சம் சற்று குறைவாகத்தான் அங்கு இருந்தது... அதனால் இவன் பதுங்கி இருப்பது களங்கண்டானுக்கு தெரியவில்லை..
அவளும் சிறிது தூரம் நடந்தவள், " என்னப்பா போயிட்டே இருக்கு"... என்று சலித்து கூற ,
"இன்னும் கொஞ்ச நேரம் தான் மா மேலே ஏறிடுவோம்... வயசான நானே உன்கூட வர ரெடியா இருக்கேன் ஆனா நீ இப்படி இருக்கியே மா... ஸ்ட்ராங்கா இருக்க வேண்டாமா??".. என்று ஒரு அட்வைசையும் தட்டிவிட்டு அழைத்துச் சென்றார்..
இதோ அவர் கூறியபடி அந்த மலையின் மீது ஏறிவிட அவளோ அந்த எழிலையும் ரசிக்க துவங்கினாள்.., " அதோ தூரமா தெரியுது பாருமா அந்த ஊற்று அழகா இருக்கு இல்லையா??"... என்று கூற,
அவளும், " ஆமாம் பா அழகா இருக்கு"... என்று வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள் தன் மகளின் பின்னால் நின்று கொண்டிருந்த களங்கண்டான்..
தன் மகளிடம் , "ஆரபி எனக்கு ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லணும்"... என்று கூற ,
மகளோ மெல்ல திரும்பி தந்தையைப் பார்தாள் அவரது முகம் ஏதோ சீரியசாக இருப்பது போல இருக்க அவளோ, " என்னப்பா ".. என்க,
" ஒன்னுமில்ல மா நீ அங்கேயே பார் " என்று மகளை மெல்ல தன் கைகளால் திருப்பி மீண்டும் கண் முன்னே தெரியும் அந்த ஊற்றை காண சொன்னவர், " நான் உன்ன இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்து இருக்கேன் தெரியுமா??"...என்க
அவளோ அந்த தூரத்தில் தெரியும் எழிலை பார்த்து கொண்டே, " எதுக்கு அப்பா " என்றாள் மென்மையாக
"உன்னை கொலை செய்யத்தான்".. என்று அவர் அதே மென்மையில் கூற ஆரபியோ அதிர்ந்து திரும்பினாள்...
அவரோ தன் கையை மகளின் தோளை பற்றியபடி , " ஆமா மா எதுக்கு இந்த அதிர்ச்சி நான் உண்மையை தான் சொல்றேன் ".. என்று கூறியவர் தனது செயற்கை கையையும் அவள் மற்ற தோளில் இட்டவர்,
" இந்த கையை பார்க்கும் போதெல்லாம் உன் புருஷன் செஞ்சது தான் எனக்கு ஞாபகத்துக்கு வருது..அதிலும் அவன் பேசிய வார்த்தைகள் தான் என்னை வாட்டி எடுக்குது.. என் மகளா பொறந்துட்டு அந்த குடும்பத்திற்கு இரண்டு வாரிசு பெற்று கொடுத்திருக்க?? அவங்க நாளைக்கு வளர்ந்து அந்த நாட்டை ஆள வா?? எனக்கு கிடைக்காத அந்த ஆட்சி அவங்க யாருக்குமே கிடைக்கக் கூடாது அப்படின்னு நான் பாடுபட்டா நீ அவங்களுக்கு வம்சத்தை விருத்தி பண்ணி கொடுத்திட்டு வந்திருக்க?? அதற்கான தண்டனையை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும் ஆரபி "... என்று கூற ,
அவளோ திருதிருவென முழித்த அவள் நொடிப்பொழுதில் தைரியமாக தன் தந்தையை பார்த்து, " என்னை கொண்ட உங்க பழி வெறி அடங்குமா??"... என்று கேட்க ,
அவரோ, "சத்தியமா அடங்காது எனக்கு உன் புருஷன் குழந்தைகள் அவங்களையெல்லாம் அழித்தால் தான் அடங்கும் "...என்று கூற
தான் இவரை நம்பி இவருடன் வந்த மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டவள் மேலும் கடம்பனும் இவர் மீது இருக்கும் பழி வெறியால் தான் தன்னை வருத்தினான்... ஆனால் இவரோ அதே பலி வெறிக்காக பெற்ற மகளையே கொல்ல துணிந்து விட்டார் அப்படி இருக்க யாரு மேலே யாரு கீழே யார் நல்லவர் யார் தீயவர் என கணிக்க முடியாமல் தவித்தாள் ஆரபி...
