Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 43

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 43

கிட்டத்தட்ட ஒரு மாதம் மருத்துவமனையில் படுத்தவர் செயற்கை கைகள் பொருத்தப்பட்டு வெளியே வந்தார்... அப்போதும் அவர் மனதுக்குள் கடம்பன் கூறிய வார்த்தையான உன் பொண்ணு என்ற வார்த்தை அவரது கோபத்தை மேலும் கிளறிவிட அவருடைய இரத்தமான என் இரத்தம் அவனோட காலில் விழுந்து கிடப்பதா என நினைத்து தன் சொந்த மகளையே கொல்ல சதி திட்டம் தீட்டினார்...

ஆம் இந்த உலகத்தில் யாரும் யோசிக்க கூட முடியாத விஷயத்தை களங்கண்டான் எனும் அரக்கன் யோசித்தான்... பெற்ற மகளை கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு பார்த்தவனுக்கு கொஞ்சம் பாசம் அவள் மீது வந்தாலும் , அதை விட அதிகமாக அவனது பழி வெறி அவனுள் திளைத்திருக்க,

அவனுக்கு தன் மகளை கொல்ல வேண்டும் என தோன்றியது அதற்காக மகளை நயமாகப் பேசி அழைத்து வந்துவிட்டான் யாரும் எந்த விஷயமும் அவளிடம் கூறாமல் இருக்க ஆரபியை பகடைக்காயாக இரு பக்கமும் சுழன்று கொண்டிருக்கின்றாள்... ஒருவன் அவளது உயிரில் ஒரு பகுதியை எடுத்தான் என்றால் பெற்ற தந்தையை அவளது மொத்த உயிரையும் எடுக்க துணிந்து விட்டான் இது தான் தர்மம் என்பதோ தர்மத்திற்கும் அதர்மத்திற்கு இவர்கள் இருவருக்கும் வித்தியாசம் தெரியாது போல...

இதற்கிடையே தாமரை விழியாளோ இதுவரை தன் மகனிடம் எதுவும் கேட்டதில்லை தன் மூத்த மகன் இறந்ததும் இரண்டாவது மகனின் கடுமையான சட்ட திட்டங்களுக்குள் மூழ்கியவர் தன் மூத்த மகனின் மரணம் கொடூரமாக இருக்க அதனால் தங்களுக்கும் பாதிப்பு வரக்கூடாது என அவன் நினைத்தானோ என்னவோ தெரியவில்லை ....

கடம்பன் தனக்கும் தன் மகளுக்கும் பயங்கர கட்டுப்பாடு விதித்து இருக்க அவனது ஒவ்வொரு செயலிலும் கண்டிப்பு அதிகமாக இருந்தது என்ன கேட்டாலும் கடுமையாக கடம்பன் பதிலளிக்க அவனிடமிருந்து விலகிய தாமரை அவன் என்ன செய்தாலும் கண்டு கொள்ளலாமல் இருந்த தாமரை இதோ இப்பொழுது மகனின் முன்னால் நிற்கிறார் ...

அவனோ அவனது குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்க குழந்தைகளோ உறங்கிக் கொண்டிருந்தது போலும் அவனோ அவர்களது முகத்தையே கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான் இப்படி தான் அவனது குழந்தைகளை அவன் கவனித்து வரும் முறை ஒரு நொடி கூட அவர்களை விட்டு அவன் நகர மாட்டான்...

அதை கண்ட அவரோ, "இப்படி அம்மாவையும் குழந்தைகளையும் பிரித்து வைக்கிறது தப்பு அதுவும் பால் குடிக்கிற குழந்தைகளுக்கு அவங்க அம்மாவோட ஸ்பரிசம் ரொம்ப தேவை குழந்தை பிறந்து ஒரு மாசம் ஆயிடுச்சு குழந்தைகளுக்கு ஆரோக்கியம் இது ரொம்ப முக்கியமான விஷயம் அவ களங்கண்டான் பொண்ணுன்னு எங்களுக்கு தெரியலைனாலும் உனக்கு தெரிஞ்சிருக்கும்னு எனக்கு தெரியும்.... இருந்தும் நீ அவளை கல்யாணம் பண்ணி இருக்க கூடாது... கல்யாணம் பண்ணினா நல்லபடியா வாழனும் அது தான் இந்த அரண்மனைக்கு நீ கொடுக்கிற மதிப்பு எந்த பொண்ணையும் மனசளவுல நோகடிக்க கூடாது நம்ம மக்களை நாம எப்படி பார்த்துக்கறோம் அவங்க நிம்மதிக்கு வேண்டி பாடுபடுறோமோ அது போல தான் நம்ம குடும்பத்தோட சந்தோஷத்தையும் நீ பார்த்துக்கனும் "... என்று கூற

அதைக்கேட்ட அவனோ, " அது குடும்பமா சந்தோஷமா இருக்கிறவங்களுக்கு நம்ம குடும்பத்தில் என்னைக்கு சந்தோஷம் வந்து இருக்கு சொல்லுங்க ??? "...என்று கேட்க

அதற்கு அவரிடம் பதில் இல்லை இருந்தாலும் , "நான் உன்னோட வாழ்க்கையை பத்தி பேசிட்டு இருக்கேன் "...என்று கூற,

" என்னோட வாழ்க்கையில ஒவ்வொரு நொடியும் நீங்க தான் செதுக்கி இருக்கீங்க நீங்கனா நீங்க இல்ல நீங்களும் அப்பாவும் சேர்ந்து தான்... நான் என்ன பண்ணனும் இந்த இடத்தில் உட்காரனுமா இந்த இடத்தில் நிக்கனுமா இந்த இடத்துல படுக்கனுமான்னு இது போல பல விஷயங்கள் எனக்கு மட்டுமல்ல இதேதான் அவனுக்கும் செஞ்சு இருக்கீங்க இப்படி இருக்கிற எங்க வாழ்க்கையில எங்களுக்கு எப்படி சுயமா இருக்க முடியும் அதுக்கு பதில் சொல்லிட்டு நீங்க வேற கேள்வி கேளுங்கள் "...என்று தாயை பார்த்து பல நாட்களாக கேட்க துடித்த கேள்வியை கூற,

"அதெல்லாம் உங்க பாதுகாப்புக்கு தான் அப்பா செஞ்சாரு"... என்று கூற

" என்ன பாதுகாப்பு அதுதான் ஒருத்தன வாரி கொடுத்தீங்களே கையும் காலும் இல்லாம ஒரு முண்டமா"... என்று அவன் கொந்தளித்து கூற ,

அந்த சமயம் அவனது கண்களில் ஆத்திரம் சுடர் விட்டு எரிந்தது அதை தாயிடம் காட்ட மனமின்றி தன் கோபத்தை அடக்கியவன் , "என்ன உங்களுக்கு வேணும் அவள் தானே... அவ வருவா எங்கேயும் போகமாட்டா என்ன தேடி வருவா கவலைப்படாதீங்க அவளுக்கு சில விஷயங்கள் அவளாகவே தெரிஞ்சுகனும் அதுக்கு தான் அவளை அனுப்பி இருக்கேன்... அதே மாதிரி எல்லாம் கைக்கூடி வரும் போது அவ வருவா எனக்கு தெரியும் அதனால கொஞ்சம் நீங்க அமைதியா இருங்க... எனக்கு அந்த களங்கண்டானை சூரசம்ஹாரம் செய்யாமல் நான் அடங்கமாட்டேன்...

அவனை இவ்வளவு நாள் விட்டு வைத்தது ஒரு சில காரணத்துக்காகத்தான் அந்த காரணங்கள் தான் இப்போ நடந்துட்டு இருக்கு அது எல்லாம் முடிஞ்சதும் இந்த வீட்டு மருமக வருவா அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க"... என்று கூறினான் மான்ஸ்டர்..

அதை கேட்டதும் கொஞ்சம் அமைதி அடைந்த தாமரை விழியாளோ, "உன்கிட்ட மாமா சொன்னாருன்னு என் கிட்ட சொன்னாரு அந்த களங்கண்டான் ஆரபியை இங்க கூட்டிட்டு வந்துட்டான் தெரியுமா?? "... என்று கூற,

அவனோ, " தெரியும் அவரோட பொண்ணு அவர் கூட்டிட்டு வருவாரு இதுல என்ன இருக்கு அதிசயம் "....என்று கேட்க ,

ஒரு முறை அவள் வருவாள் என்றும் மறுமுறை அவளை அங்கே இருக்கட்டும் என்று கூறுபவனிடத்தில் என்ன சொல்வது என்று நொந்தவர் இவனிடம் என்ன பேசினாலும் இப்படியே தான் பேசிக் கொண்டிருப்பான் என்னவோ செய்யட்டும் என நினைத்து , தாமரை விழியாள் தன் பேரக் குழந்தைகளை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்...அவனும் அந்த நேரம் அதைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தான்...

அவனுக்கு நன்றாக தெரியும் தன் மனைவியை அவன் அழைத்து வருவான் என அதற்காகத்தான் அவனும் காத்திருந்தான் அதற்காகத்தான் தன் மனைவியின் மீது போடப்பட்ட பாதுகாப்புகள் எல்லாம் மெல்ல தளர்த்தி களங்கண்டானுக்கு வழி வகுத்துக் கொடுத்தான்...

அவன் நினைத்தது போல அந்த கயவனும் வந்தான் கடம்பனின் மனைவியை நயமாக அழைத்துக்கொண்டு தீவிற்கும் வந்துவிட்டான்... தன் மனைவியிடம் தான் இந்த நிலையில் என்ன கூறினாலும் அவளுக்கு விளங்காது என்பது தெள்ளத்தெளிவாக கடம்பனுக்கு தெரியும்...

அதனால் குற்றவாளியே தன் குற்றங்களை கூறட்டும் என பொறுமை காத்தான் கடம்பன்...என்ன தான் இருந்தாலும் அவனது ஒரு கண் அவனது மனைவி மீது எப்போதும் இருக்கும் என அவள் இந்நேரம் அறியவில்லை..

தன் தந்தையுடன் இருப்பதை மிகப்பெரிய அவளது ரணத்திற்கு உள்ள அருமருந்தாக எடுத்தவள், தன் தந்தையை தேவையில்லாமல் அவரது கையை வெட்டி இக்கட்டில் வீழ்த்தி விட்டானே என நினைத்து வருந்தினாள் ...

இதற்கிடையே அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என ஒரு ட்ரோன் வழி கண்காணித்துக் கொண்டு தான் இருந்தான் கடம்பன்... மேலும் அவள் விமானத்தில் ஏறும் பொழுது அவள் உண்ணும் உணவில் ஒரு சிப் போன்ற ஜிபிஆர்எஸ் இருந்தது...அது அவள் அறியாமல் அவளது உடலுக்குள் சென்றுவிட்டது ...

அதனால் அவள் இந்த நொடி எங்கே இருக்கிறாள் என அவனுக்கு தகவல் நொடிக்கு ஒரு முறை வந்து கொண்டே இருக்கும்..

இவ்வளவு தூரம் எதற்கு அவளை பாதுகாத்துக் கொண்டிருக்கிறான் அவள் மீது அவன் கொண்ட காதல் இன்னும் அவன் மனதில் இருப்பது தான் காரணமா இல்லை ...அவள் தான் தொட்டு தாலி கட்டிய மனைவி என்பதனால் அவளுக்கு இந்த பாதுகாப்பு அளித்து கொண்டிருக்கிறானோ...

ஒரு பக்கம் தன்னை அவள் இன்னும் கண்டுபிடிக்காமல் என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாளே என்ற வருத்தமா இல்லை மறுபக்கம் எதிராளியின் மகளை தன் காதலியாக அவனது மனைவியாக காண முடியாமல் தவிக்கிறானோ எது என்று தெரியவில்லை ஆனால் பாவம் ஆரபி என்ற ஒரு மந்திரத்துக்கு அவன் கட்டுப்பட்டவன் தான் அது அவளுக்கும் தெரியவில்லை அவனுக்கும் தெரியவில்லை ...காலம் அவர்கள் இருவருக்கும் அவர்கள் இருவரின் ஆழ் மனது நேசத்தை புரிய வைக்கும்...

மான்ஸ்டர் வருவான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top