Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 42

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 42

மான்ஸ்டரும் மான்விழியும்

களங்கண்டானோ , " உன் புருஷன் என் கையை வெட்டிட்டான் அதுவும் இங்கே ஒரு புலியை கொண்டு வந்து என்னுடைய வேலைக்காரங்களை எல்லாம் அடிச்சு போட்டு அந்த புலியால என்னோட கையை மட்டும் கரெக்டா கடிக்க வைச்சு நான் கதறிட்டு இருக்கும் போது அவன் இரக்கமே இல்லாமல் போயிட்டான் தெரியுமா??" என்று வருத்தமாக கூறுவது போல களங்கண்டான் நடிக்க ,

அதைக் கேட்ட ஆரபியோ நொடி பொழுதில் தன் கணவனை மனிதன் என்ற நிலையில் இருந்து கீழிறக்கி அவனை மேலும் வெறுத்தவள், " உங்களுக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை ஏன் இப்படி நடந்து கொள்கிறார் "... என்று அவள் புரியாமல் கேட்க ,

அவளது கேள்வியை எண்ணி அவருக்கு புரிந்து போனது தன் மகளுக்கு எதுவும் தெரியாது என அது அவருக்கு மேலும் வசதியாக போக மேலும் அவர், " அதெல்லாம் பரம்பரை பரம்பரையாக இப்படி தான் மா நடந்திட்டு இருக்கு..அவன் குடும்பமே சரி இல்ல மா.. நம்ம குடும்பம் தான் ஆட்சியில் இருந்து இருக்க வேண்டியது ஆனால் நம்மல கழுத்தை பிடிச்சு வெளியில தள்ளிட்டாங்க மா தெரியுமா?? அதுவும் பதவி வெறிக்காக என்ன வேணா செய்யும் வர்க்கம் மா"...பொய்யும் உண்மையும் கலந்து அவர் கூற ,

அவளுக்கும் அவர் கூறுவது சரி என்று தான் தோன்றியது ஏனெனில் இரட்டையர்களை மறைத்தவர்கள் ஆகிற்றே மேலும் இரட்டை குழந்தைகளையும் மறைத்தவர்கள் ஆயிற்றே ...

இவளையும் ஏமாற்றியவர்கள் ஆகிற்றே என்று எண்ணியவள் அதற்குள் களங்கண்டானோ விட்டால் அழுது விடுவார் போல அது போல நல்ல நயமான நடிப்பை மகளிடம் வெளிப்படுத்தினார்..

அதையும் இவள் நம்பி விட்டாள் பாவம் எப்போதும் அவள் ஒரு அன்புக்காக ஏங்கும் குழந்தை தானே ஆரபி தாய் சென்ற துக்கம் தாளாமல் எழில் என்கிற கடம்பனிடம் அன்பை பெற்றவள் இப்போது அது எல்லாம் பொய் என்பது போல அவளை பொறுத்தவரை அவனுடைய பழி வெறிக்கு பலியாகிய பின் தந்தை அன்பை பொழிய அதில் அவள் கரைவது ஒன்றும் வினோதம் இல்லையே...

களங்கண்டானிடம் கோமகளே சிக்கியவர் ஆகிற்றே தன் மகளை எப்படி வளைக்க வேண்டும் என அவருக்கு தெரியாதா?? குழந்தையின் பெயரை கூறியதும் பாவம் அவருடன் நாய் குட்டி போல ஓடோடி வந்து விட்டாள்.. உண்மையில் ஆரபியின் நிலைமை கொஞ்சம் மோசம் தான்...

மேலும் அவர் ஒன்றும் பாசத்தோடு ஒன்றும் தன் மகளை இங்கே அழைத்து வரவில்லையே கடம்பனிடம் விட்ட சவாலுக்கு தானே தன் மகளை அழைத்து வந்திருக்கிறார்...அந்த நாளை இப்போது நினைவு கூர்ந்தார் களங்கண்டான்...அதே போல அதே நேரம் கடம்பனும் அதை தான் யோசித்து கொண்டிருந்தான்...

ஆரபிக்கு குழந்தை பிறக்க போகும் அந்த சமயம் கடம்பன் எதற்காக இத்தனை நாள் காத்திருந்தானோ அந்த நாள் தான் அவன் வேட்டையாட துவங்க போகும் நாள் என்றே கூற வேண்டும்...

ஆம் களங்கண்டானின் மகளின் வயிற்றில் அவரது ஜென்ம விரோதியாக என்னும் கடம்பனின் வாரிசு எப்பொழுதும் இந்த வாரிசுகளை அழிக்க என்னும் களங்கண்டான் இப்பொழுது சொந்த மகளின் குழந்தைகளை அழிப்பானா என்ற கேள்விக்கு பதிலே இதோ பிரசவ அறையில் படுத்திருக்கும் ஆரபி...

உன் சொந்த மகள் தானே ஆரபி அவள் வயிற்றில் என் வாரிசு வளர்கிறது இனி உன்னால் என்ன செய்ய முடியும் என நினைத்தான் கடம்பன்...அதுவும் ஒரு வித பழி வாங்கும் வெறி களங்கண்டானை தானே தவிர ஆரபியை அல்ல..ஆரபி இருவருக்கும் ஒரு பகடைக்காய் மட்டுமே...

மேலும் கடம்பனை பொறுத்தவரை அவனுக்கு என்று ஒரு உயிர் பாக்கியிருக்கிறது... அந்த உயிரை ஒரேடியாக எடுப்பதில் மகிழ்ச்சி இல்லை போலும்...அணு அணுவாக அவனை வதைக்க வேண்டும் அதற்கான முதல் முயற்சியில் இதோ களம் இறங்கிவிட்டான் அவனுக்கு வேறு ஆரபிக்கு பிரசவ வலி வந்து விட்டது என்று கூறியதும் கடம்பன் களங்கண்டானை வதைக்க முடிவு செய்து விட்டான்...விஷயமறிந்த இலந்தரையரோ அவனை தடுக்க அதையெல்லாம் கேட்காமல் அவன் சென்றுவிட்டான்...

மான்ஸ்டருக்கு அவனது குழந்தைகள் இந்த பூமியில் ஜனிக்கும் போது அந்த கயவன் வலியால் துடித்துக் கொண்டிருக்க வேண்டும் என கருதி கடம்பன் தீவின் தொலைவில் அவர்களின் வன பிரதேசத்துக்கு சொந்தமான ஒரு புலியை அழைத்து வந்தான்...அந்த புலியோ இவனது நண்பனை போன்ற புலி...

அதுவும் அந்த களங்கண்டானுக்கு சொந்தமான தீவுக்கு நேரடியாகவே சென்று விட்டான்... அங்கே பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்க அதையெல்லாம் ஒரு நொடியில் தகர்த்து எறிந்தான்...

எதிரே வரும் எதிராளிகளை எல்லாம் அடித்து நொறுக்கி களங்கண்டான் இருக்கும் இடத்துக்குள்ளேயே நுழைந்து விட்டான்...

அதிலும் ஒரு சிலர் அவனது கையில் இருக்கும் புலியைக் கண்டு பயத்தில் தெறிக்க மேலும் அந்த புலி வேறு கடம்பன் வளர்த்து வரும் புலி ஆனதால் அவனை விடுத்து பாக்கி உள்ள அனைவரையும் வேட்டையாட துவங்கியது...அதுவும் அவன் அதன் கயிற்றில் போடப்பட்டு இருக்கும் சங்கிலியை விட்டதும் அது எதிராளிகளின் மீது பாய, அதைக் கண்டு அவர்கள் அஞ்சி ஓட ,

ஒரு சிலர் மட்டும் அந்த புலியையும் அவனையும் தங்கள் கைகளில் உள்ள துப்பாக்கியால் சுட முனைந்தனர்...ஆனால் அதை எல்லாம் தகர்த்து எறிந்து உள்ளே நுழைந்தனர் அவனும் அவனது நண்பனான டைகரும்...

களங்கண்டானின் கோட்டைக்குள் சென்றவன் களங்கண்டான் முன் நின்றான்.... களங்கண்டான் அவனை பார்த்து ஒரு நொடி அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டாமல், " எப்போவோ உன்னை எதிர்பார்த்தேன் இப்ப வந்து நிற்கிற??? உங்க அப்பா எனக்கே ஒரு டெஸ்ட் வச்சான்...இரட்டைகளை மறைச்சு வெச்சு என்கிட்ட கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினான்...ஆனால் இப்போ என்ன நடந்துச்சு ஒருத்தன் செத்துட்டான் இனி பாக்கி நீ உன்னோட சகாப்தத்ததை முடிச்சிட்டா ".... என்று பெருமையாக கூற

அதைக்கேட்ட கடம்பனோ , "அதுக்கு நீ மறுபடியும் பொறக்கணும் ".... என்று கடம்பன் கூற,

"என்ன ஒரு புலியை கொண்டு வந்தா நான் பயந்திடுவேன்னு நினைப்பா??? என்ன உன்னோட பரபரப்பு எல்லாம் பார்த்தா என்னை கொல்ல வந்திருப்ப போல "...என்று களங்கண்டான் வினவ

கடம்பனோ, "கொல்லவா உன்னையா ச்சை ... எனக்கு இப்போ உன்ன கொல்ற மூடுல நான் வரல... நான் உன்னை கொல்லனும்னா நேருக்கு நேரா சொல்லிட்டு தான் செய்வேன் முதுகுக்கு பின்னாடி குத்துற பழக்கம் எனக்கு இல்லை... இருந்தாலும் உன்னை கொன்னுடுவேன் அது வேற விஷயம்... அதில ஒரு சிக்கல் இருக்கு... ஏனா நீ என் குடும்பத்துல மூன்று கொலைகள் பண்ணியிருக்க அதுவும் சாட்சியமே இல்லாமல்...புத்திசாலித்தனமா ஒன்னு என் சித்தப்பா, இரண்டாவது என் அப்பா ,மூன்றாவது என் அண்ணன் அதுல என் சித்தப்பாவை கொன்ன மாதிரியான வலியை தான் இப்போ உன்னை அனுபவிக்க வைக்கலாம்னு நெனைக்கிறேன் ஏனென்றால் அப்போ தானே வரிசையா ஒவ்வொருத்தரா நீ எப்படி கொன்னியோ அதே மாதிரி கொல்ல முடியும்... இப்போ ஒரு சின்ன டெமோ உனக்கு காட்டிட்டு போலாம்னு வந்தேன்"....என்று கூற,

அவரோ அவனை குழப்பமாக பார்க்க,
"நீ இன்னைக்கே கஷ்டப்பட்டு சத்தியமா சாக மாட்ட அதுக்கு நான் கேரண்டி"... என்று கூறியவன் ,அவனது கையில் சீறி பாய்ந்து வாயில் ரத்தத்துடன் நின்று கொண்டிருந்த புலியிடம் அதன் செவியில் ஏதோ சொல்ல அதுவும் அவனது மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல, " கையை மட்டும் உன் நகத்தால் பிராண்டி அந்த வலது பக்க கையை மட்டும் கட் பண்ணிட்டு வா "... என்று கூற ,

களங்கண்டான் சுற்றும் முற்றும் பார்த்தார் அவருடைய அடியாட்களை வீழ்த்தி விட்டு தான் வந்திருப்பான் என நெனைத்தவருக்கு ஒரு சிறு துளி பயம் எட்டிப்பார்க்க அவரோ தன்னை காப்பாற்றி கொள்ள, " வேண்டாம் வேண்டாம் "...என அந்த வீட்டில் அங்கும் இங்கும் ஓடினார்... அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவனது புலியும் அவர் பின்னால் ஓடி மிகச் சரியாக அவரது கையை மட்டும் கடித்து அவரது உடலில் இருந்து பியர்த்து கொண்டு வந்தது..

ஒரு பக்கம் களங்கண்டான் வலியால் துடித்துக் கொண்டிருக்க அதை மெல்ல சாவதானமாக ரசித்த கடம்பனுக்கு அப்பொழுது தான் போன் வந்தது மனைவி வலியால் துடித்து கொண்டிருக்கிறாள் என்று அவனும் வருகிறேன் என்று கூறியவன் கதறி கொண்டிருக்கும் களங்கண்டானை பார்த்து , "பார்த்தியா என்னோட பசங்க அதுவும் நீ பெத்த பொண்ணு வயித்தில் இருந்து வெளியே வராங்க அப்ப அவங்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டாமா இது தான் அவங்களோட பரிசு...

உன்னோட இறப்பு இதே மாதிரி தான் நிகழும் எனக்கு எப்போதேல்லாம் தோணுதோ அப்போதேல்லாம் வருவேன்...ஒன்னா நீயே செத்துப் போயிடு இல்ல நானே கொன்னுடுவேன் "... என்று கூற அதைக்கேட்ட களங்கண்டான் அந்த உயிர் போகும் வலியிலும் அவரது மனதில் ஒரு கொடூரமான எண்ணம் தோன்றியது என்னவோ உண்மைதான்....மானசீகமாக உன் குடும்பத்தை அழிக்காமல் நான் சாக மாட்டேன் டா அது என் பொண்ணாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி கொல்லாமல் விட மாட்டேன் என சூளுரைத்து கொண்டார்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top