Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 40

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 40

மான்ஸ்டரும் மான்விழியும்

ஒரு மாதங்களுக்கு பிறகு

ஆரபி கண்ணாடியில் தன் பொலிவு இழந்த முகத்தை பார்த்து கொண்டிருந்தாள்... அவளுக்கு வாழ்க்கையே வெறுத்ததுப் போல தோன்றியது... வாய்க்கு வாய் அவள் சுமந்த குழந்தைகளை பாவ மூட்டை பாவ மூட்டை என கூறியவளுக்கு அந்த குழந்தைகளின் முகத்தை கூட பார்க்க கொடுத்து வைக்கவில்லை...

குழந்தைகள் நல்லபடியாக இருக்கிறார்களா என்று கூட அவளுக்கு தெரியவில்லை...அவன் கூறியது போல ஆண் குழந்தைகள் தானா பிறந்தார்கள் என்று கூட அவளுக்கு தெரியவில்லை...எந்த விவரமும் அவளுக்கு கிடைக்கவில்லை...அவளுக்கு தன் குழந்தைகளை காண வேண்டும் என்ற ஆவல் அவளுள் கிளர்த்து கொண்டு எழுந்தது...

அதனால் மிகவும் கலையிலந்து காணப்பட்டாள்..அவளுக்கு எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என யோசித்து பார்த்தவளுக்கு எந்த விதத்திலும் தெளிவே கிடைக்கவில்லை...தான் என்ன பாவம் செய்தேன் என்று கூட அவளுக்கு தெரியவில்லை...காலன் என்னும் அரக்கன் தன்னை தன் தாய் செல்லும் போதே அழைத்து சென்று இருக்க கூடாதா என்று கூட நினைத்தாள் பாவம்...

இந்த காதல், திருமணம் , குழந்தைகள் எல்லாமே கடம்பன் என்ற ஒருவனின் பழி வாங்கும் வெறிக்காக நடத்தப்பட்டதா என்று நினைக்கும் போதே அவளுள் ஒரு வெறுமையை உணர்ந்தாள்...

ஒரு வேளை அவன் தன்னை பார்த்தது முதல் குழந்தை பிறப்பு வரை எல்லாமே நாடகமாக இருக்குமோ என்று நெனைத்தவளுக்கு மீண்டும் அந்த பிரசவ அறையில் நடந்த நிகழ்வுகள் நியாபகத்துக்கு வந்தன..

ஆம் அன்று மதியம் முழுவதுமே அவளுக்கு இலேசான வயிற்று வலி இருந்து கொண்டே இருக்க அவளை கண்காணித்து வந்த செவிலியர்கள் கண் முன்னே அவளது பனிக்குடம் உடைய அந்த நேரத்தில் அவளுக்கு பதற்றம் தொற்றி கொண்டது கூடவே கயவனே ஆனாலும் கணவனை காண வேண்டும் என்ற எண்ணம் அவளுள் தோன்றியது ..

உடனே , "சார் கிட்ட விஷயத்தை சொல்லிடுங்க"... என்று அவள் கூற அந்த பெண்களும் அவனை அழைத்து விஷயத்தை கூற அவனும் வரேன் என கூறினான்..ஆனால் அவளை பிரசவ அறைக்கு அழைத்து சென்று அவள் முதுகு தண்டில் ஊசி போட்டு அவள் மயக்கத்தை அடையும் வரை அவன் வரவில்லை...இறுதி இறுதியாக அவளுக்கு தான் சுயநினைவை இழக்கும் சமயம் கூட அவன் வந்து விடுவானோ என தேட அவன் வரவே இல்லை....பிறகு அவள் கண் திறந்து பார்க்கும் போது அவள் இங்கே இருக்கிறாள் அவள் மனம் கண்ணை திறந்தும் கூட அவனை தான் தேடியது...பிறகு தான் குழந்தைகளை தேடியது... ஆனால் அவன் தான் இல்லையே என நினைத்தவளுக்கு தான் அழுகை முட்டியது மேலும் சுய இரக்கம் பட்டு அழுது கரைந்து கொண்டிருந்தாள்...அது இன்று வரையும் தொடர்கிறது...

காலை ஆயா தயார் செய்து வைத்த இட்லி அப்படியே காற்றில் வறண்டு போய் இருந்தது...மதியம் பனிரெண்டு ஆகி இருந்தது..இன்னும் காலை உணவை அவள் உண்ணவில்லை...

அவளுக்கு இந்த வீட்டிலேயே அடைந்து கிடப்பது மூச்சு முட்டியது...அதிலும் அவளது கணவனோ அவளது காதலன் கொடுத்த டெடி பொம்மை முதல் அவள் உபயோகித்த ஹேர் பின் வரை அவள் கொண்டு சென்ற அனைத்தும் அவளோடு அவளாக அவளது உடமைகளும் கொண்டு வர வைக்கப்பட்டிருக்க அதை பார்த்தவளுக்கு, " நான் எப்படி போனேனோ அப்படியே என்ன விட்டதா நினைப்பா??"... என்று நினைக்கும் பொழுதே அவளுக்கு ஆத்திரம் எழுந்தது...மேலும் அந்த டெடியை பார்க்கும் போது எனோ அதை பார்க்க இயலாமல் தவித்தாள் ஆரபி...கடம்பனின் அழுத்தம், பிள்ளைகளை பார்க்க இயலாமல் இருப்பது மேலும் இந்த சமயத்தில் இருக்கும் பிரச்சனை என அனைத்து விதத்திலும் அவளை அழுத்தம் சூழ்ந்து கொண்டிருக்க அவளால் அதில் இருந்து விடுபட முடியாமல் போராடி கொண்டிருந்தாள்...

அதிலும் ஒவ்வொரு நிமிடமும் அவளது மார்பில் அவள் எப்போதெல்லாம் குழந்தைகளை எண்ணி கொண்டிருக்கிறாளோ அப்பொழுதெல்லாம் பால் சுரந்து கொண்டே இருக்க , அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது தாயாகும் முன்பு குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கும் போது குழந்தைகளை வேண்டாம் என கூறியவளால் இப்பொழுது அப்படி கூற முடியவில்லை பேசாமல் அவனிடமே சென்று விடலாமா என்று கூட நினைக்கத் தொடங்கிவிட்டாள்..

இப்படி யோசித்துக் கொண்டிருக்க, " என்ன கண்ணா நீ இன்னும் சாப்பிடலையா???"... என ஒருவித அக்கறை கலந்த கண்டிப்புடன் வந்த ஆயா அவளைப் பார்த்து அதிர்ந்தார்..

அதுவும் அவளது கோலத்தை ஆம் அவளது மார்பிலிருந்து பால் சுரந்து கொண்டிருக்க அதை கண்ட அவரோ, " என்ன கண்ணு இப்படி நின்னுட்டு இருக்க பால் எல்லாம் இப்படி வீணா போகுதே...பேசாம இந்த பால் வீணா போவதற்கு பதிலா நான்கு பச்ச குழந்தைகளுக்கு கொடுக்கலாமே "... என்று கூற ,

அவளோ ஆயாவை கேள்வியாக ஏறிட்டுப் பார்த்தாள் அவரோ, "ஆமா கண்ணு இதுவும் ஒரு வகை தானம் தான்... நீயும் குழந்தை இறந்து போச்சுனு சொல்லி சங்கடப்படாதே அதுக்கு பதிலா நீ நான்கு குழந்தைகளுக்கு பசியாற்றும் போது அந்த முகம் அறியா குழந்தைகளும் உன் பெயரை சொல்லி பசியாறும் இல்லையா "...என்று கூற ,

அதைக் கேட்டவளோ, " சரி ஆயா "...என்று தலையாட்டினாள்... பின் அவளது தாய்ப்பால் உபகரணங்களுடன் எடுக்கப்பட்டு தாய் பால் சேவை மையத்துக்கு அவள் கொடுக்கத் தொடங்கினாள்... அதன் பிறகு தான் அவள் கொஞ்சம் நிம்மதி அடைந்தாள்..

இதற்கிடையே நேரிடையாக அவளை பார்க்க அவளது நண்பர்கள் ரிஷி மற்றும் லாவண்யா வந்தனர்... தனது தோழியை இந்த நிலையில் பார்க்க அவர்களுக்கு உயிரே இல்லை...

மீண்டும் ரிஷி தான் தொடங்கினான்..."நான் தான் அன்னிக்கே சொன்னேனே அங்க போகாத போகாதன்னு இப்ப பார் நீ அந்த ராஜாவோட மனைவின்னு ஊர் முழுவதும் தெரிஞ்சு போச்சு அதுவும் உங்க கல்யாணம் முடிஞ்சதும் அந்த நியூஸ் வேர்ல்டு ஃபுல்லா வந்துச்சு தெரியுமா?? விஷயம் கேள்விப்பட்டதும் நான் உன்னை ரீச் பண்ண எவ்வளவோ ட்ரை பண்ணினேன் ஆனால் கிடைக்கவே இல்லை அது ஏன் எனக்கு தெரியல "... என்று ரிஷி கூற,

"அதுக்கு காரணம் எல்லாம் என் புரு... அவன் தான் காரணம் அங்கே போனதும் என்னோட போன் டெட் ஆகிடுச்சு...டெட் ஆக வெச்சிட்டான்...என்னை பக்காவா பிளான் பண்ணி அங்கே வர வச்சிருக்கான்"... என்று ஆரபி பொங்கி வழியும் கண்ணீரை துடைத்து கொண்டு கூற,

லாவண்யாவோ, " நீயா தானடி போன அதில் அவர் எப்படி பிளான் பண்ணி வர வைக்க முடியும்??"... என்று அதிமுக்கியமான கேள்வி கேட்க



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top