மான்ஸ்டர் 39
அத்தியாயம் : 39
ஆனால் அவனுக்கு நன்றாக தெரியும் அவள் காதலிப்பது தன்னை தான் என்று ஆனால் இவன் இடையில் புகுந்து அவளை கைபற்றி விட்டான் என்பதையும் கடம்பனுக்கு புரிந்துபோனது...
அண்ணன் தன் காதலியை காதலிக்கிறான் என்று விட்டுக்கொடுக்கும் மனமின்றி அவளை விட்டுச் செல்லவும் மனமில்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக இருந்தான்...
கிட்டத்தட்ட ஒரு வாரமாக அவன் இதே நிலையில் இருக்க எங்கேயும் செல்லவில்லை சிறுவர்களுடன் வியாபாரத்துக்கும் செல்லவில்லை அந்தப் படகிலேயே சுருண்டு படுத்துக் கொண்டான்... அந்த சிறுவர்கள் கூட பலமுறை வந்து அவனிடம் கேட்க அவர்கள் யாருக்கும் அவன் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை ...
யோசித்து யோசித்து பார்த்தவனுக்கு ஒரு விடயம் கிட்டியது இங்கே இருந்தால் தானே எனக்கு அவளது ஞாபகம் வருகிறது வேறு எங்காவது சென்று விடலாம் என நினைத்தவன் தான் செலவழிக்காமல் கையில் வைத்திருந்த பணத்தை வைத்துக்கொண்டு யாரிடமும் பதில் அளிக்காமல் அவன் அங்கிருந்து தலைமறைவாகி விட்டான்...
எங்கே சென்றான் என யாருக்கும் தெரியவில்லை அவனோ இலங்கைக்கு சென்று இருந்தான்... அங்கே இருக்கும் மனிதர்களுடன் மனிதர்களாக ஐக்கியமாகி போனான்.. அவனுக்கு மறுபடியும் அவனது நாட்டுக்கு செல்ல வேண்டும் என நினைப்பும் இல்லை...அவனால் தன் காதலியை அவன் அருகில் பார்க்க இயலாமலே இறுகி போனான் கடம்பன்...
அதற்குள் கடம்பஞ்சோலையில் களங்கண்டானின் வெறி இன்னும் அடங்கவில்லை போலும் இளவரசர் அன்னிய நாட்டிற்கு சென்று இருக்கிறான் என்பதை அறிந்து கொண்டான்...
அவனது கூலிப் படைகளை ஏவி விட அவனுக்கு சிறு துப்பு ஒன்று கிடைத்தது...இளவரசர் கடம்பன் இந்தியாவில் தான் வலம் வந்து கொண்டிருக்கிறான் என தகவல் கிடைக்க, " உன் ஒற்றை வாரிசும் மரணமடைய போகிறது கதம்ப ராஜா..நான் காண கூடாது என பொத்தி பொத்தி வைத்திருந்தியே இதோ கண்டு பிடிச்சுட்டேன் பார்"... என வாய்வழி கூறிய களங்கண்டான்... இளவரசரை கண்காணிக்க சொன்னான்...
அந்த கூலி படைகளோ , "ஏதோ ஒரு பெண்ணுடன் சுற்றிக் கொண்டிருப்பதாக தகவல் அவர்கள் கொடுக்க கடம்பெழிலோனும் ஒரு பெண்ணும் இருக்கும் புகைப்படம் ஒன்று களங்கண்டான் எண்ணுக்கு வந்தது..அதை கண்ட களங்கண்டான் அதிர்ந்தான்...
ஏனெனில் அந்த முகம் கோமகளை ஒத்திருந்தது... மேலும் அந்த பெண்ணை பற்றிய விசாரணையையும் பலப்படுத்திய களங்கண்டானுக்கு கிடைத்த பதிலோ அது அவரது மகள் ஆரபி தான் என புரிந்து கொண்டார்..
"என்னை கொல்ல என் மகளை வைத்து என்னை தாக்க முயற்சிக்கிறீர்களா அது நடக்காது உங்க வம்சத்தை அழித்து தான் என் பொண்ணு நான் கூட்டிட்டு வருவேன்"... என சபதம் எடுத்து கொண்ட களங்கண்டான்,
இரவோடிரவாக ரோட்டில் தன்னந்தனியாக நடந்து கொண்டிருந்த எழிலை முகம் தெரியாத ஒரு சில குண்டர்கள் கடத்தினர்...கடத்தியதும் அவனுக்கு மயக்க ஊசி போடப்பட்டது... கிட்டத்தட்ட எங்கே செல்கிறான் என்று தெரியாமல் மயக்க மருந்து கொடுத்து மயக்கமாக்கி அவனை ஒரு தீவிற்கு அழைத்துச் சென்றனர்...
அவனுக்கு இரண்டு நாட்களாக தான் எங்கே இருக்கிறோம் என புலப்படவில்லை கிட்டத்தட்ட ஒரு கடலின் நடுவே ஒரு பாறைக்கு மேலே அவன் படுக்க வைக்கப் பட்டிருந்தனர்...
அவன் படுக்க வைக்கபட்ட இடம் ஒரு தீவு சுற்றிலும் கடல் அந்த ஒற்றை பாறையின் மீது அவன் படுத்திருந்தான் ...அதற்கு எதிர் புறம் மீது ஒரு கும்பல் இருந்தது அந்த கும்பல் வேறு யாருமல்ல களங்கண்டானின் கும்பல் தான்...
அவனோ மயக்கம் தெளிய முடியாமல் ஏதோ போதையில் படுத்திருக்க அவன் தப்பித்து செல்ல முடியாத படி அந்த பாறையை சுற்றி இரண்டு போட்டுகளில் ஒரு சில கூலி படைகள் இருந்தனர்...
மறுபக்கம் இருந்து களங்கண்டானோ, "என்ன இளவரசரே நாளைய ராஜா கடம்பஞ்சோலைக்கு மாற்றம் கொண்டு வர போகும் கடம்ப ராஜா இப்படி படுத்து இருக்கியே உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா என் பொண்ணு பின்னாடி சுத்துவ அது மட்டுமில்லாமல் கதம்ப ராஜாவோட பையனா பொறந்திருக்க இவனை என்ன செய்யலாம் "...என கூறிய களங்கண்டான் ஏதோ யோசிப்பவர் போல பாவ்லா செய்து , " மொதல்ல அவன் கை விரலை கட் பண்ணுங்க".. என்று கூற அவனது பகுதி சுய நினைவில் இருக்கும் போதே அவனது இரண்டு பக்க கையின் விரல்கள் முதலில் துண்டிக்கப்பட்டன...கடம்பெழிலோனோ வலியால் துடிக்க அதை பார்த்து ரசித்த களங்கண்டான் அவனது கைகளை மாமிசத்தை அறுப்பது போல அறுக்க சொன்னான் ...
மேலும் அவன் துடிக்க சற்று நேரத்தில் அவனது கால்களையும் துண்டிக்க எழில் வெறும் சதை உள்ள பிண்டமாக இருக்க அவனை அங்கேயே படுக்க வைக்க சொன்ன களங்கண்டான் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.. செய்தியை மறவாமல் அரண்மனைக்கு கூறவும் களங்கண்டான் மறக்கவில்லை..
விஷயமறிந்த இலந்தரையரோ இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் எழிலை தன்னந்தனி ஆளாக தூக்கிக் கொண்டு வந்தார்...அவர் செல்லும் முன்னே கடம்பெழிலோன் இறந்து இருந்தான்...
எழில் இறந்த செய்தியை இலந்தரையர் பல முறை கடம்பனுக்கு கூற முயல கடைசி நிமிடத்தில் அவன் அவரது அழைப்பை ஏற்று விஷயத்தை அறிந்தவன் அடுத்த நொடி அரண்மனையில் இருந்தான்... வந்தவனிடத்தில் விஷயத்தை கூற ஏற்கனவே விஷயம் அறிந்தவனுக்கு ரத்தம் சூடாக இப்போதே அவனை வதைக்க துடிக்க ,
இலந்தரையரோ தடுத்து விட்டார்...நீ அரசர் பதவியில் ஏறிய பின்னே அவனை கொல்ல வேண்டும் என்று கூற அவனோ மனமே இல்லாமல் சம்மத்திக்க களங்கண்டானுக்கு மட்டும் தான் கூலி படைகள் உண்டா அவனுக்கு இருக்காதா நொடி பொழுதில் அவன் தன் மாமாவின் மூலம் களங்கண்டானின் சரித்திரத்தை நோண்ட துவங்க அதில் அவனுக்கு கிடைத்த விடயம் கோமகள் மற்றும் ஆரபி...கோமகள் இறந்து விட்டார் ஆனால் ஆரபி உயிரோடு இருக்கிறாராளே..
ஆரபி அந்த கயவனின் மகள் என்பதே கடம்பனுக்கு அதிர்ச்சி தான் இருந்தாலும் தன் ஆசை பாசம் அனைத்தையும் ஒதுக்கி வைத்தவனுக்கு பழி வெறி மட்டும் அவன் நெஞ்சில் குடியேறி இருக்க,
களங்கண்டான் தன் மகளை காண செல்ல முயலும் எல்லா வகையான செயல்களையும் தடுத்து நிறுத்த துவங்கினான் கடம்பன்.. அவளை சுற்றி அவளே காணாத வகையில் ஒரு பாதுகாப்பை உருவாக்கி அவளை சிறை செய்து வைத்திருந்தவன் தான் அவளை இங்கே கொணர்ந்ததும் அவள் மூலம் இரண்டு வாரிசை பெற வைத்ததும் எல்லாமே கடம்பனின் யுக்தி தான்...
இதில் நல்ல மனிதனாக இருந்த கடம்பன் இப்போது மான்ஸ்டராக உருவாகி இருக்கிறான் என பழைய நினைவுகளை நினைத்து கொண்டிருந்தான் மான்ஸ்டர்...
மான்ஸ்டர் வருவான்...
