மான்ஸ்டர் 38
அத்தியாயம் : 38
அதை கண்டவள் அவன் அருகே, " என்ன இப்படி பார்க்கிறீங்க எழில் உங்களுக்கு எல்லாமே விளையாட்டா போச்சு எப்போ பார்த்தாலும் உங்களுக்கு இதே வேலை தான் எழில்..சார் நான் உங்க காதலி இப்போவாச்சும் என்னை தெரியுதா " என்று சிரித்து பேச ,
அவளது எழிலில் நொடிப்பொழுதில் அவள் அழகில் மயங்கிய அண்ணன் எழிலை பார்த்து, " என்ன புதுசா பாக்குற மாதிரி பாக்குறீங்க ??"...என்று கேட்க ,
அவனோ, " என்ன சொல்றீங்க?? என்ன இதுக்கு முன்னாடி பார்த்து இருக்கீங்களா??"... என்ன கேள்வி கேட்டான்,
அதை கேட்டவள், " உங்களுக்கு இதே விளையாட்டு தான் ஒரு சில சமயம் நீங்க காதலிக்கிற பொண்ணு கிட்ட வந்து ஐ லவ் யூ சொல்றது அதுக்கு அப்புறம் வந்து என்ன பார்த்திருக்கீங்களான்னு கேட்கிறது நல்லா இருக்கு எழில்" .... என்று அவள் கூறவும்,
ஒரு நொடி அதிர்ந்த கடம்பெழிலோன், " அப்போ நான் காதலை சொன்னேன் சொல்றீங்களா??"... என கேட்டான்..அவனுக்கு அவளை அன்று கோவிலில் வைத்து பார்த்த போதே அவள் முகம் அவனுக்கு பிடித்து இருந்தது..மேலும் அவளாக அவனை தேடி வந்து பேசுவதை பார்க்க அவன் மனம் அவள் புறம் சரிவதை அவனால் தடுக்க இயலவில்லை..
"இதுல என்ன சந்தேகம் நீங்க தானே சொன்னீங்க காதலை "... என்று ஆரபி அவன் முகத்தை ஆராய்ந்து பார்த்து கூறும் போதே கடம்பெழிலனுக்கு புரிந்தது தன் தம்பி இங்கே தான் இருக்கிறான் என்று தம்பி காதலிக்கும் பெண் இவள் தான் என்றும் அவனுக்கு புரிந்தது...
ஆனால் இவளின் அழகு அவனை என்னவோ செய்தது..அவளின் எழிலில் மதி மயங்கி போனான் கடம்பெழிலோன்..
அதாவது தம்பியின் காதலியை தன் காதலியாக எண்ணத் தொடங்கினான் ஆரபியின் மீது மையல் கொண்டு எழில் இப்பொழுது அவளது காதலில் மூழ்கினான்... அவனுக்கு அவளைப் பிடித்திருந்தது தம்பியின் காதலி என தெரிந்தும் அவளிடம் நான் தான் எழில் என காதலன் போல பழக தொடங்கினான்... தம்பி அவளை தூக்கி செல்வதற்கு முன் இவளை நான் திருமணம் செய்ய வேண்டும் என நினைத்த கடம்பெழிலோன் அவளிடம் அவளைப் பற்றி விசாரித்தான்...
அவளும் அவளைப் பற்றிக் கூற அவனுக்கு எல்லாமே புரிந்து போனது அவளுக்கு யாரும் இல்லை என்று அவள் மீது மையல் கொண்ட அண்ணன் எழிலோ அவள் பின்னாலேயே சுற்றி தொடங்கினான்..மேலும் அண்ணன் அவள் அறியாமலே தன் தம்பி எப்படி எல்லாம் காதலித்தான் என கேட்டு அறிந்து அது போல நடந்து கொண்டவன் மறந்தும் அவளை கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கவில்லை...
இப்படியே நாட்கள் செல்ல கடம்பெழிலனுக்கு(தம்பி) தன் காதலியை காணாமல் அவனால் என்னவோ முடியவில்லை..ஒரு வேலை கூட தயார் நிலையில் இருந்தது இந்த விஷயத்தை அவளிடம் கூறி அவளை காண வராததுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என எண்ணி அவளை காண சென்றான்...என்ன தான் காதலி என்றாலும் இலந்தரையர் கொடுத்த போனில் இருந்து அவளை அழைக்க மாட்டான் ..அவளை ஏதாவது பொது தொலை பேசியில் இருந்து தான் அழைப்பான்..இன்று கூட அவளை அழைக்காமல் சப்ரைஸாக அவளை காண செல்வோம் என நினைத்து அவளது அலுவலக அருகில் இருக்கும் பார்க்கிற்க்கு செல்ல
அங்கே அவளோ தன் அண்ணனுடன் சிரித்துப் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தான் ...அதை கண்டவனுக்கு என்னமோ சரியில்லை என தோன்றியது ...மேலும் தன் அண்ணன் இங்கேயே தான் இருக்கிறானா ???என அவன் யோசிக்க அவனோ ஏதோ ஒரு ஜோக் சொல்லி அவளை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான்... அவளும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்க இந்தக் காட்சியைத்தான் அவன் பார்த்தது...
என்னவோ அவர்களின் நெருக்கம் அவன் மனதுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்ற அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என அவன் கேட்ட போது அவனது அண்ணனோ, "ஆரபி எனக்கு ஒரு சில காலம் அவகாசம் தா நான் உன்ன இதை விட அருமையான ஒரு ராஜ வாழ்க்கை வாழ வைக்கிறேன் அந்த நம்பிக்கை எனக்கிருக்கு ஆனா அதுக்குள்ள உன்ன இழந்திடுவேனோன்னு எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு ".. என்று கூற,
அவளோ, " நீங்க என்னை எப்போ காப்பாத்தீனிங்களோ அப்போ இருந்து நான் உங்க சொத்து தான் எழில் உங்கள அப்பவே எனக்கு பிடிச்சிருந்தது... உங்க எழிலான முகம் அதைத்தான் நான் ரசிக்கிறேன் உங்க அளவு கடந்த அன்பு என்னை பல அழுத்தத்தில் இருந்து வெளிக்கொண்டு வந்துச்சு அதான் நான் உங்களை ரொம்ப விரும்புறேன் நான் உங்களை விட்டு எங்கே போயிடப் போறேன் உங்க கூட தானே இருக்கிறேன் "...என்று ஆரபி கூற,
அதைக் கேட்ட அண்ணன் எழிலோ, " அப்போ நான் சொல்லுறத கேட்பியா??".. என்க ,
"சொல்லுங்க எழில் "...என்று கூற தன் பாக்கெட்டில் இருந்து ஒரு மோதிரத்தை எடுத்தவன் அவள் கைகளில் எதிர்பாராத விதமாக அணிவித்தான் ,
"இதுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு நீ எனக்காக காத்திரு "..என்று கூறியவன், " இன்றிலிருந்து நீயும் நானும் கணவன் மனைவி இது வெளியுலகத்துக்கு தெரிய வேண்டாம் அது ஏன் எதற்கு நான் பின்னாடி சொல்லறேன் அப்போ நான் சொல்லும் போது நீ ரொம்ப சந்தோஷப்படுவ அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இரு "... என்று கூற,
அவளோ நெகிழ்ந்து அவனை பார்க்க அவனோ, " இது உனக்கான வேலி நம் காதலுக்கு கிடைத்த பரிசு இந்த மோதிரம் கைகளிலே எப்போதும் இருக்கட்டும்".. என்க,
அவளும், " சரி எழில் நீங்க கட்ட போற தாலிக்கு பதிலாக இந்த மோதிரத்தை போட்டு இருக்கீங்க இது எப்போதும் என் விரலையே இருக்கும் "...என்று கூறி இருவரும் ஒரு போட்டோவும் எடுத்துக் கொண்டனர் ...
இதை எல்லாம் ஒரு மரத்துக்கு பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் தம்பி எழில்...
அவனுக்கு எல்லாமே சூனியமாகி போனது போல தோன்றியது தன் உடன் பிறந்த அண்ணனே தன் வாழ்க்கையை இப்படி கெடுத்து விட்டானே என எண்ணினான்..
ஓடிச்சென்று தன் அண்ணனின் சட்டையை பிடிக்க வேண்டுமென அவனுக்கு தோன்றியது ஆனால் அவன் செய்ய மாட்டான்..ஏனெனில் கடம்பஞ்சோலையின் இரு இளவரசர்கள் ஒரு பெண்ணுக்காக அன்னிய நாட்டில் சண்டை போட்டுக் கொண்டனர் என நாளை ஏதாவது ஒரு பேச்சு வந்து விடுமோ அது தன் நாட்டிற்கு கரை ஏற்பட்டு விடுமோ என அவன் தன் காதலை மனதில் வைத்துப் பூட்டிக் கொண்டான்...
