Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 37

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 37

மான்ஸ்டரும் மான்விழியும்

தன்னை தேடி தான் கடற்கரையில் சுற்றி கொண்டிருக்கிறாளோ என கடந்த ஐந்து நிமிடமாக கடம்பெழிலனுக்கு சந்தேகமாக இருக்க அவளோ ஒவ்வொரு சுண்டல் பாத்திரம் எடுத்து செல்லும் நபர்களை பார்த்து தேடி கொண்டிருந்தாள்...

அவனோ ஒரு வேளை நாம தானா என நினைத்து அவள் முன்னே சென்று,

"என்னங்க என்னை தேடுறீங்களா என்ன எழில்??? " .. என அவள் முன் நின்று கேட்க,

அவளோ மூச்சை இழுத்து விட்டு தன்னை நிலைப்படுத்தி கொண்டவள் அவனை பார்த்து முறைத்து, " ஆமா உங்கள தான் தேடினேன் நான் உங்கள நேத்து கோவிலில்ல உங்களை பார்த்து சிரிச்சா நீங்க பார்த்தும் பார்க்காத மாதிரி போறீங்களா???"... என்று கூற,

எழிலோ, " நானா கோவிலுக்கா??".. என்று யோசித்தவனுக்கு அப்போது அவனுக்கு ஞாபகம் வந்தது அவனது சிறுவர் பட்டாளத்தில் ஒருவனின் பிறந்தநாள் இல்லை இல்லை அவனை அனாதை விடுதியில் கொண்டு வந்து சேர்த்த நாள்... அந்த நாளை கொண்டாட அவர்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று இருந்தது என்னவோ உண்மை தான்...

அப்போது இவளை பார்த்த மாதிரியே தெரியவில்லையே என யோசித்தவன், ஒரு வேளை ஆரபி தன்னை பார்த்து நான் கவனிக்கமால் விட்டு இருப்பேனா என யோசித்தவன், "நான் நீங்க வந்ததை கவனிக்கலையே என்னை மன்னிச்சிடுங்க ஆரபி "...என்று கூற,

அவன் மறுப்பான் என நினைத்து வந்தவளுக்கு பல்ப் ஆகிப்போனது ஆனால் அங்கு வந்திருந்ததோ பெரிய எழில்(கடம்பெழிலோன்)..

அவன் தான் கோவிலுக்கு வந்து இருக்க அவனை தான் ஆரபி , "எழில் எழில்"... என்று அழைக்கவும் அவனோ அவளை ஒரு நொடி பார்த்தவனுக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது..

இவளுக்கு எப்படி என் பேர் தெரியும் ஒரு வேளை அந்த களங்கண்டானின் ஆளாக இருப்பாளோ என நினைத்து அவள் அழைக்கும் முன்னே மூத்த எழில் அந்த இடத்தை விட்டு வேகமாக காலி செய்து விட்டான்..

ஆரபியிடம் வேறு கடம்பெழிலன் இவ்வாறு கூறவும் அவளோ சிரித்து சமாதானம் அடைந்தவள் அவனை பார்த்து, " என்ன படிச்சிருக்கீங்க எழில் நீங்க?? நல்ல இங்கிலீஷ் எல்லாம் பேசறீங்க நானே பார்த்தேன் இரண்டு பேர் கிட்ட பேசிட்டு இருந்தீங்க பேசாம ஏதாவது வேலைக்கு போலாமே இந்த சுண்டல் வித்திட்டு இருக்கீங்களே உங்களுக்கு கஷ்டமா இல்லையா??".. என அவள் கேட்க ,

அவனோ இதில் எந்த கஷ்டம் எல்லாமே தொழில் தான் என்று கூறியவன், " ஆமாம் உங்களுக்கு வருத்தமெல்லாம் போயிடுச்சா "...என்று கேட்க ,

"அது எப்படிங்க அவ்வளவு சீக்கிரம் போகும் என்னோட அம்மா இல்லையா எப்பவுமே எங்க அம்மாவை கட்டி பிடிச்சு தான் தூங்குவேன் எப்பவுமே எங்க அம்மாதான் எனக்கு சாப்பாடு ஊட்டி விடுவார்கள் திட்டினாலும் எங்க அம்மா அம்மா தாங்க"... என்று கூற,

அதைக் கேட்ட எழிலுக்கு அந்த நொடி அவனது தந்தையின் எண்ணம் தோன்றியது அவரும் இப்படித்தான் இவன் ஏதாவது முகத்தை தூக்கி வைத்துக் கொண்டால் போதும் உடனே அவரே அவரது கைப்பட உணவை தயார் செய்து தன் மகனுக்கு ஊட்டி விடுவார் அதை எண்ணி கொண்டவன்,

தன் தந்தையை அழித்த அந்த களங்கண்டானை அழிக்காமல் விட மாட்டேன் என எண்ணி கொண்டவன் தன்னவளை பார்த்து, " ஒரு நிமிஷம் நீங்க இங்கேயே இருங்க நான் வரேன்"... என்று கூறிவிட்டு ஓடிச்சென்றவன் அவளது உயரத்துக்கு ஒரு ஆளுயர டெடி பொம்மையை வாங்கி வந்தான்...

வாங்கி வந்தவன் அதை அவள் கையில் கொடுத்து, " உங்களுக்கு எப்போ எல்லாம் கஷ்டம் வருதோ உங்களுக்கு எப்ப எல்லாம் மனசை போட்டு அழுத்துதோ யார்கிட்டயும் சொல்லாத ரகசியம் ஏதாவது சொல்லனும்னு தோணுதோ அப்போ எல்லாம் இந்த பொம்மை பார்த்து அதுகிட்ட சொல்லுங்க இந்த பொம்மையை உங்க அம்மாவா உங்க பிரண்டா நினைச்சுக்கோங்க பொண்ணுங்களுக்கு தான் இந்த மாதிரி டெடி ரொம்ப பிடிக்கும் இது என்னோட கிப்ட் ஆஹ் வச்சுக்கோங்க "... என்று கூற ,

அந்த பொம்மையையும் அவனது அன்பை கண்டு நெகிழ்ந்தவள், "எனக்காக நீங்க எதுக்கு இவ்வளவு செலவு பண்றீங்க எழில் பொம்மை ரொம்ப அழகா இருக்கு ஆனால் உங்களுக்கு ஏன் சிரமம்.."...என ஆரபி இதில் கேட்க,

அவனோ, "எனக்கு என்ன செலவு ஆரபி எல்லாம் உங்களுக்காகத்தானே??..ஒரு பொம்மை வாங்கி தர அளவுக்கு எல்லாம் என்கிட்ட வருமானம் இருக்கு ஆரபி "... என்று கூறி அவளிடம் இருந்து விடை பெற்றான்...ஆனால் அவளுக்கோ, " நான் சொன்னதை நினைச்சு அவருக்கு வருத்தமாக போயிடுச்சோ".. என எண்ணிக்கொண்டாள்...

அவனுக்கு அவள் மீது வருத்தம் எல்லாம் இல்லை காதல் தான் நிறைந்து இருந்தது... கடம்பெழிலின் மனதுக்குள்ளுள் ஆரபி எப்படி வந்தால் என அவனுக்கு தெரியவில்லை... அவள் அவனின் மனதை வெகுவாக சோதித்துக் கொண்டு இருந்தாள்...

நித்தமும் அவளை பார்க்க வேண்டும் அவளிடம் பேச வேண்டும் என அவன் நினைப்பு முழுவதும் ஆரபி ஆக மாறி போக அவனோ அவளை தேடி அலைய துவங்கினான்...அவளோ ஒரு சில நாட்களாக கடற்கரைக்கும் வருவது இல்லை அவளுக்கு என்ன ஆகிற்றோ என பதறினாள்...

அப்படி ஒரு நிலையில் தான் அவளை கடற்கரைக்கு அருகில் ஒரு பார்க்கில் வைத்து சந்தித்தான்...

நண்பர்களுடன் வந்திருந்தவள் நண்பர்கள் சென்றதும் அவனை காண தான் கடற்கரைக்கு செல்லலாம் என எண்ணி கொண்டிருந்தவள் முன் அவன் வந்து நிற்க ஆரபிக்கோ இன்ப அதிர்ச்சி அடைந்தவள் அவனை பார்த்து, "என்ன செய்யறீங்க எழில் உங்களை பார்க்க தான் வரலான்னு இருந்தேன்?? "..என சினேகமாக அவனுடன் உரையாட ,

அவனோ அவளைப் பார்த்து, " சத்தியமா என்னால முடியலைங்க நீங்க என்ன ரொம்ப பாதிச்சிட்டு இருக்கீங்க.. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சு இருக்குங்க...எனக்கு தெரியும்ங்க என்கிட்ட எதுவுமே இல்லை பணம் , காசு , சொத்து, சுகம் எதுவும் இல்லை... நான் ஒருத்தன் மட்டும் தான் என்கிட்ட இருக்கிறது சொந்தம்னு சொல்லிக்க என்னோட உயிர் மட்டும் தான் இருக்கு ஆனால் அந்த உயிரை விட அதிகமா உங்கள நான் நேசிக்கிறேன்னு எனக்கு தோணுது இது நான் உங்க கிட்ட சொல்ல தகுதி இல்லாத ஒரு ஆள் தான்...

உங்க கூட கம்பேர் பண்ணும்போது எனக்கு வேலை வெட்டி எதுவும் இல்லை ஆனா அதெல்லாம் நான் சம்பாதித்து விடுவேன்னு எனக்கு தோணுதுங்க நீங்க எங்க கூட இருந்தீங்கன்னா அப்படின்னா..இதை எல்லாம் நான் சம்பாதிச்சுடுவேங்க ..என்னோட காதலை நீங்க அக்ஸ்ப்ட் செய்வீங்களா???..இல்லை சுண்டல் விக்கிறவன்னு சொல்லி என்னை வேண்டாம்னு சொன்னாலும் பரவாயில்லைங்க "...என அவன் தன் காதலைக் கூற அவளோ அவன் முகத்தை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்...

அவளோ அவனை பார்த்து, "எழில் நீங்க மட்டும் அன்னைக்கு வந்து என்னை காப்பாற்றல அப்படின்னா நான் என்ன ஆகி இருப்பேன் எனக்கே தெரியல இந்த உயிர் நீங்க கொடுத்தது தான் அப்புறம் என்னை பல சமயங்களில் என் தனிமையிலிருந்து நீங்க விரட்டி இருக்கீங்க எனக்கும் இந்த பணம் சொத்து இது மேலே எல்லாம் ஆசை இல்லை ஆனா ஒரு வேலை மட்டும் நமக்கு முக்கியம் எழில்".... என்று கூற,

அவனோ, " அப்போ என்னோட காதல் ஆரபி " என்று கேட்க,

"நான் உங்கள காதலிக்கிறேன் எழில் "... என்று கூற இருவருக்கும் சந்தோஷம் தாளவில்லை..சந்தோஷ மிகுதியில் இருவர் கண்ணிலும் சிறு கண்ணீர் கீறல் கூட அவர்களின் முகத்தில் இருந்து வெளிப்பட்டது..

ஆரபிக்கு உண்மையில் அந்த சாதா மனிதனை ஏனோ பிடித்து இருந்தது அந்த சுண்டல் விற்பவனை அவள் நேசித்தாள்.. அவளும் உண்மையில் காதலை சொல்ல தான் அவள் அங்கு வந்திருக்க அவன் வந்து அவளிடம் அவன் மனதை வெளிப்படுத்தியது அவளுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது...இப்படியே அவர்களின் காதல் வாழ்க்கை துவங்கியது..கடம்பெழிலன் முடிவே செய்து விட்டான் இனி கடம்பஞ்சோலைக்கு செல்ல போவதில்லை என்று ஏதாவது ஒரு வேலை வாங்கி ஆரபியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் சிரத்தையாக வேலை தேட துவங்கி இருந்தான் கடம்பெழிலன்...அவளிடமும் அதை கூறியவன் அவள் உதவி செய்கிறேன் என்று கூறிய போதும் அதை மறுத்து விட்டான்...

இதற்கிடையே ஓரிரு முறை பெரிய எழிலை ஒரு காபி ஷாப்பில் கண்ட ஆரபி தன் காதலன் இங்கே சுற்றி திரிந்து கொண்டு இருக்கிறானே என நினைத்தவள் அவனை அழைக்க அவனோ அறிமுகமே இல்லாத பார்வை பார்த்தான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top