Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 36

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 36

நாலு சுவற்றிலேயே வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்த அவனுக்கு வெளியுலகத்தில் எப்படி வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என சுத்தமாக தெரியவில்லை இருந்தும் அவன் படித்து கொண்டிருந்தான் என்றே கூற வேண்டும்..

இப்படியே கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடி விட திடீரென ஆரபியின் அம்மா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்து விட, அவளின் தைரியம் வேரோடு நொடி பொழுதில் சரிந்து போனது...

அவள் தனிமரம் ஆகிவிட்டாள்.. அவளால் தாய் இழந்த சோகத்தை தாங்கி கொள்ள முடியவில்லை நண்பர்கள் தான் அந்த சோகத்தில் அவளை மீட்டெடுக்க முனைந்து கொண்டிருந்தனர் ...

என்ன செய்தும் அவளால் அந்த துயரத்திலிருந்து மீள முடியாமல் போக நண்பர்கள் வேறு அவளுடன் இருக்க அதை கூட அவள் என்னவோ போல நினைக்கத் துவங்கி விட்டாள் அவளுக்கு தனியாக இருக்க வேண்டுமென தோன்றியது ...

அதனால் நண்பர்களிடம், " எனக்கு கொஞ்சம் தனியா இருக்கணும் நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்"... என்று கூறி கடற்கரைக்கு வந்தாள்..

நண்பர்களை விட்டு தன்னந்தனியே அந்த கடற்கரையில் தனிமையில் அமர்ந்து கொண்டு ஆழ் கடலை வெறித்து கொண்டிருந்தவளுக்கு தன் தாய்க்கு பின் யார் தனக்கு உள்ளது என்ற கேள்வி வெகுவாக மனதை குடைந்தது ஆனால் தாயோ அவளை மிக தைரியமாக தான் வளர்த்திருந்தார்..

இருந்தாலும் தாய் இறந்த சோகம் தாளாமல் அவளோ தாயிடமே சென்று விட்டால் என்ன என்ற கேள்வியும் அவள் முன் வர என்னவோ ஒரு தைரியத்தில் கடற்கரையில் இருந்து அப்படியே எழுந்து கடலை நோக்கி நடந்து விட்டாள் ஆரபி...

அங்கே சுண்டல் விற்றுக்கொண்டிருந்த கடம்பனுக்கு இந்த காட்சி பட வேகமாக சென்ற கடம்பெழிலன் கடலுக்குள் செல்ல அதற்குள் அவளின் பகுதி உடல் தண்ணீருக்குள் சென்று இருந்ததது...இவனோ நொடி பொழுதில் பதறி அவள் அருகே சென்று அவளது கையை பிடித்து இழுத்து வர அவளோ அவனது கையை விட எவ்வளவோ முயன்று முடியாமல் தோற்று அவனுடன் நடந்து வந்தாள்...

தண்ணீரில் இருந்து வெளியே வந்த அவளோ இரண்டு பெரிய மூச்சை இழுத்து விட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள் எழிலை பார்த்து, " எதுக்கு என்னை காப்பாத்தீனிங்க"... என்று அவனிடம் கொதிக்க,

அவனோ அவளின் பால் போன்ற முகத்தை பார்த்து தன்னை அந்த நொடியிலும் தொலைத்தவன், "ஏங்க சாகவா இப்படி போறீங்க உங்க உயிரை நீங்கள் ஏன் அழிச்சுக்க இப்படி துடிக்கறீங்க???"...என்று கேட்டான்...

அவளோ அவனை பார்த்து கோபத்துடன் , " அது என்னோட இஷ்டம் எனக்கு யாரும் இல்ல அதனால தான் சாக முடிவு பண்ணினேன் "...என்று கூற

"என்னங்க உங்களுக்கு யாரும் இல்லைன்னு சொல்றீங்க ஆனா பார்த்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க நீங்களே இப்படி தற்கொலை பண்ணிக்கலாமா? தற்கொலை எதுக்கும் தீர்வு இல்லைங்க...உங்களை மாதிரி நெறைய பேருக்கு யாரும் இல்லைங்க... அதோ அங்க பாருங்க பார்த்தீங்களா அந்த சின்ன பசங்க அவங்களுக்கு கூட தான் யாரும் இல்ல ஆனா டெய்லியும் ஏதாவது செஞ்சு அவங்க வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்காங்க அவங்கள விட வாங்க உங்களுக்கு வாழ்க்கை கஷ்டமா போயிடுச்சு வாழ்க்கை?? என்று கடம்பெழிலன் கூற,

ஆரபிக்கோ, அவன் சொன்ன கூற்றில் உள்ள உண்மையை புரிந்து கொண்டவள் மணலில் அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்...அதை கண்டவன் அவளுக்கு ஒரு அடி இடைவேளை விட்டு, " நமக்கு பிடிச்சவங்க நம்மல விட்டு போன நாமலும் அவங்க கூட போகணும்னு இல்லைங்க அவங்க கூட வாழ்ந்த வாழ்க்கையில் இருக்கிற அழகான எண்ணங்களே நம்ம வாழ்க்கையே போதுமானது அதனால வாழ்க்கை அழகா பாருங்க...உங்களுக்கு அழகா இருக்கும் .. என்று கூற,

அதை கேட்டதும் வேகமாக கண்ணைத் துடைத்துக் கொண்டாள் ஆரபி மேலும் அவனை பார்த்து, " இவ்ளோ நல்லா பேசுறீங்களே யார் நீங்க... நீங்க என்ன செய்றீங்க??"... என்று கேட்க,

" ஹ்ம்ம் இப்போ பாருங்க எவ்ளோ நல்லா இருக்கு மனசு விட்டு பேசுங்க மனசில் பாரம் இருக்காது... நான் ஒரு வேலையில்லா பட்டதாரிங்க வேலை தேடி சுத்திகிட்டு இருக்கேன் பொழுதுபோக்கா அந்த பசங்க கிட்ட தான் எம்பிளாயியா வேலை செஞ்சிட்டு இருக்கேன் இப்போதைக்கு அவங்க தான் என்னோட பாஸ் "...என்று அந்த சிறுவர்களை பார்த்து கூற ,

அவர்களை கண்டும் அவன் கூறிய விதத்தில் சிரித்தாள் ஆரபி.. "ஏன் சிரிக்கிறீங்க இதுவும் தொழில் தாங்க தினமும் இரண்டு நேரம் சாப்பிடுகிறேன் 10 ரூபாய் கிடைக்குது இதைவிட என்னங்க வேணும்"... என்று எழில் கூற ,

ஆரபியோ அவனை பார்த்து , " உங்க சேர்ட்டிபிகேட்ஸ் எல்லாம் தாங்க நான் வேணா எங்க ஆபீஸ்ல வேலை ஏதாவது இருந்தா சொல்றேன்.. என்ன படிச்சிருக்கீங்க?? எங்கே இருக்கீங்க ...".. என்று அவனைக் குறித்து வினவ போக,

அவனோ , "அதெல்லாம் வேண்டாம்ங்க நான் பாத்துக்கிறேன் தெரிஞ்சவங்க கிட்ட ரெக்மண்டேஷன் வாங்க கூடாதுங்க"... என்று கூறி மறுத்து விட்டான்...

அதை கேட்டு அவனை செல்லமாக முறைத்த ஆரபியோ , "உங்க பேராவது சொல்லுங்க"... என்று கூற,

அவனோ , "எழில்".. என்று மட்டும் கூறினார் , "எழில் அழகான பெயர்"... என்று கூறிய ஆரபியை பார்த்து அவனது மனதில் அந்த நொடியில் தோன்றிய கேள்வியை கேட்டே விட்டான் எழில்.." ஏங்க லவ் பெயிலரா??".. என்று கேட்க,

"எனக்கு லவ்வர் எல்லாம் இல்லைங்க.. அம்மானா எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு இருந்த ஒரே உறவு அவங்களும் இல்லையா அதான் இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்துட்டேன் "... என்று அவள் கூற,

"பொய் சொல்லாதீங்க உங்களுக்கு பாய் பிரண்ட் கூட இல்லையா ".. என்று அவனது சந்தேகத்தை முன் வைக்க,

அவள் அவனை பார்த்து சிரித்து லவ்வா அப்படி எல்லாம் இல்லைங்க அதெல்லாம் எனக்கு செட்டாகாது என்னை யாருங்க லவ் பண்ண போறா?? பாய் பிரண்ட் இருக்கு அது பிரண்ட் மட்டும் தான்"... என்று அவள் கூற,

அவள் கூறியதில் மகிழ்ந்தவன் , " உங்கள யாரு லவ் பண்ணுவான்னு தானே கேட்டீங்க எவ்வளவு அழகா இருக்க்கீங்க தெரியுமா விட்டா நானே உங்களை லவ் பண்ணுவேன்ங்க..ஆனால் என்கிட்ட வேலை இல்லையே".. என்று எழில் கையை விரிக்க

அவனது செய்கை அவளை ஈர்த்து, " ரொம்ப நல்லா பேசறீங்க ...நான் வரேன் ".. என்று கூறி அவனிடம் இருந்து விடைபெற்றாள்...அவளுக்கும் அவனிடம் பேசியது ஆறுதலாக இருந்தது அவனது பேச்சில் தன்னை தொலைத்தாள்... யார் என தெரியாமலேயே தன்னை காப்பாற்றியவன் என்ற நிலையில் அவனிடம் தன் மனபாரத்தை இறக்கியவளுக்கு கொஞ்சம் அவள் மனம் ஆறுதல் அடைந்தது என்னவோ உண்மை தான்...

அவள் சென்ற மூன்றாம் நாள் அவனை தேடி கடற்கரைக்கு மீண்டும் வந்தாள் ஆரபி..அவள் முகம் கோப மூலாம் பூசி இருந்தது...கோபத்தில் செங்கொழுந்தாய் சிவந்து போயிருந்தாள்...

மான்ஸ்டர் வருவான்.



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top